Advertisment

12 பாவாதிபதிகள் தரும் லாபங்கள்! -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/gains-12-sinners-r-mahalakshmi

ரு ஜாதகத்தில் லாபஸ்தானம் என்னும் 11-ஆமிடமும், லாபாதிபதி என்னும் 11-ஆம் அதிபதியும் நன்றாக அமைதல்வேண்டும். அவ்வாறு அமைந்தால் வாழ்க்கையானது வசதியாக- நிறைவாக அமையும்.

Advertisment

11-ஆமிடம் என்பது லக்னத்திற்கு லாபஸ்தானம். இது லக்னாதிபதிக்கு- அதாவது ஜாதகருக்கு நன்மைசெய்யும் இடமாகும். ஜாதகத்தில் 12 பாவங்கள் உள்ளன. இதில் லக்னாதிபதி லாப ஸ்தானம் என்னும் பதினொன்றாம் இடத்தில் இருப்பது மிக நன்மையாகும். பழம்நழுவி நேராக வாய்க்குள் விழுந்த கதையாக, ஜாதகர் விரும்பிய செயல் மிக எளிதாக நிறைவேறும். "இவனுக்குன்னு ஒரு ராசி இருக்குப்பா' என்று எல்லாரும் வியக்குமளவிற்கு வாழ்வின் போக்கு அருமையாக அமையும்.

Advertisment

இதுபோல் மற்ற பாவகங்களின் அதிபதி களும் தங்கள் வீட்டிற்கு பதினொன்றில் அமைந்தால் அதுவும் ஒரு நல்ல அமைப்பு தான்.

இரண்டாம் அதிபதி

இரண்டாமிடத்தின் லாப ஸ்தானம் என்பது பன்னிரண்டாம் வீடு. இரண்டா மிடம் என்பது தன ஸ்தானம். 12-ஆமிடமோ விரய ஸ்தானம். அப்படியானால் பணம் கொடுக்கும் அதிபதி விரயத்தில் போய் நிற்கிறாரே என்று தோன்றும். ஒருவகையில் அது சரிதான். எனினும் தனாதிபதியின் லாப ஸ்தானத்தில் அவர் நின்றதால் பணம் வந்துகொண்டே இருக்கும்; செலவு செய்துகொண்டே இருக்கும் நிலை ஏற்படும். இறைக்க இறைக்க தண்ணீர் ஊறும் என்ற கதையாக, இவர்கள் செலவழிக்க செலவழிக்க பணம் வந்துகொண்டே இருக்கும். எனினும் சேமிப்பு என்னும் ஒன்று இருக்குமா என்பது சந்தேகமே.

மூன்றாம் அதிபதி

மூன்றாம் அதிபதியின் லாபஸ்தானம் லக்னம்தான். 3-ஆமிடம் என்பது தைரிய, வீர ஸ்தானம். எனவே ஊரே கொள்ளை போனாலும் இவர்கள் ஏதாவது அடித்துப்பிடித்து முன்னேறி விடுவார்கள். ஆட்டைத் தூக்கி குட்டியில்போட்டு, குட்டியைத் தூக்கி ஆட்டில்போட்டு என ஜெகஜ்ஜால வேலைகளையெல்லாம் செய்து நினைத்ததை நிறைவேற்றிவிடுவார்கள். இவர்கள்மீது புகார் கொடுத்தாலும், இவர்கள் செய்யும் சாதுர்ய வேலைகளில், "அட, நான்

ரு ஜாதகத்தில் லாபஸ்தானம் என்னும் 11-ஆமிடமும், லாபாதிபதி என்னும் 11-ஆம் அதிபதியும் நன்றாக அமைதல்வேண்டும். அவ்வாறு அமைந்தால் வாழ்க்கையானது வசதியாக- நிறைவாக அமையும்.

Advertisment

11-ஆமிடம் என்பது லக்னத்திற்கு லாபஸ்தானம். இது லக்னாதிபதிக்கு- அதாவது ஜாதகருக்கு நன்மைசெய்யும் இடமாகும். ஜாதகத்தில் 12 பாவங்கள் உள்ளன. இதில் லக்னாதிபதி லாப ஸ்தானம் என்னும் பதினொன்றாம் இடத்தில் இருப்பது மிக நன்மையாகும். பழம்நழுவி நேராக வாய்க்குள் விழுந்த கதையாக, ஜாதகர் விரும்பிய செயல் மிக எளிதாக நிறைவேறும். "இவனுக்குன்னு ஒரு ராசி இருக்குப்பா' என்று எல்லாரும் வியக்குமளவிற்கு வாழ்வின் போக்கு அருமையாக அமையும்.

Advertisment

இதுபோல் மற்ற பாவகங்களின் அதிபதி களும் தங்கள் வீட்டிற்கு பதினொன்றில் அமைந்தால் அதுவும் ஒரு நல்ல அமைப்பு தான்.

இரண்டாம் அதிபதி

இரண்டாமிடத்தின் லாப ஸ்தானம் என்பது பன்னிரண்டாம் வீடு. இரண்டா மிடம் என்பது தன ஸ்தானம். 12-ஆமிடமோ விரய ஸ்தானம். அப்படியானால் பணம் கொடுக்கும் அதிபதி விரயத்தில் போய் நிற்கிறாரே என்று தோன்றும். ஒருவகையில் அது சரிதான். எனினும் தனாதிபதியின் லாப ஸ்தானத்தில் அவர் நின்றதால் பணம் வந்துகொண்டே இருக்கும்; செலவு செய்துகொண்டே இருக்கும் நிலை ஏற்படும். இறைக்க இறைக்க தண்ணீர் ஊறும் என்ற கதையாக, இவர்கள் செலவழிக்க செலவழிக்க பணம் வந்துகொண்டே இருக்கும். எனினும் சேமிப்பு என்னும் ஒன்று இருக்குமா என்பது சந்தேகமே.

மூன்றாம் அதிபதி

மூன்றாம் அதிபதியின் லாபஸ்தானம் லக்னம்தான். 3-ஆமிடம் என்பது தைரிய, வீர ஸ்தானம். எனவே ஊரே கொள்ளை போனாலும் இவர்கள் ஏதாவது அடித்துப்பிடித்து முன்னேறி விடுவார்கள். ஆட்டைத் தூக்கி குட்டியில்போட்டு, குட்டியைத் தூக்கி ஆட்டில்போட்டு என ஜெகஜ்ஜால வேலைகளையெல்லாம் செய்து நினைத்ததை நிறைவேற்றிவிடுவார்கள். இவர்கள்மீது புகார் கொடுத்தாலும், இவர்கள் செய்யும் சாதுர்ய வேலைகளில், "அட, நான் கனவுதான் கண்டேன்; நிஜமல்ல' என்று, புகார் கொடுத்தவர்கள் தெறித்து ஓடிவிடுவர். இந்த கரைகண்ட சாமர்த்தியம் இவர்களை வாழ்வின் வெற்றிப் படிகளில் ஏறவைத்துவிடும்.

நான்காம் அதிபதி

நான்காம் அதிபதியின் லாப ஸ்தானம் இரண்டாமிடம். நான்காம் இடம் வீடு, மனை, வாகனம், தாய், சுகம் ஆகியவற்றைக் குறிப்பது. இந்த இடத்தின் அதிபதி தனது லாப ஸ்தானமான இரண்டாமிடத்தில் அமர்ந்தால், ஜாதகர்களின் லாபம், பணவரவெல்லாம் பேச்சுத் திறமையால் அமையும். இவர்கள் ரியல் எஸ்டேட், வாகன டீலர்கள், மனை விற்பனை, திரவ சம்பந்தமான வியாபாரம் என எந்தத் தொழிலை அடிப்படையாகக் கொண்டாலும், பேசிப்பேசியே எதிரில் இருப்பவர்களைக் கவிழ்த்து விடுவார்கள். இவர்கள் நிர்ணயித்த விலைக்கு, வாங்குபவர்களைத் தன் பேச்சினால் சம்மதிக்கவைத்து விடுவார்கள். ஆக, இவர்களது லாப வரவென்பது இவர்களது வாய் வார்த்தைகள்மூலமே இருக்கும். இன்னும் சொல்லப்போனால், தன் தாயாரிடம் அன்பாகப் பேசியே பணத்தை, சொத்தை வாங்கிவிடுவார்கள்.

ஐந்தாம் அதிபதி

ஐந்தாம் அதிபதியின் லாப ஸ்தானமென்பது மூன்றாம் இடமாகும். ஐந்தாமிடம் என்பது புத்திர ஸ்தானம். இவரது லாபாதிபதியின் மூன்றாமிடம் என்பது தைரிய ஸ்தானம். இதனால் ஜாதகர்கள் தங்கள் யோசனைகள் சரியோ தவறோ- கொஞ்சம்கூட பதட்டமில்லாமல், பயமில்லாமல் அடித்து தூள் கிளப்பிவிடுவார்கள். இவர்களது மகா தைரியம், இவர்களது மிகச்சாதாரண யோசனைகளைக்கூட அங்கீகரிக்கச் செய்துவிடும் சிலர் "உதார்' பேர்வழிகளாக இருப்பார்கள். பொழுதுபோக்கு, விளையாட்டு, கலைத்துறை, பங்குவர்த்தகம், காதல், குறிசொல்வது, கதைசொல்வது என இவர்களது அடிப்படைத் தொழிலில் தங்குதடையில்லாமல் பேசி செயலாற்றி, நிறைய லாபம் பார்த்துவிடுவார்கள். மற்றவர்கள் இவர்களது செப்பிடு வித்தையைப் பார்த்து வியந்து, விழிவிரிய மூச்சடைத்து நிற்பர். இதுவே இவர்களது வெற்றியாகும்.

12

ஆறாம் அதிபதி

ஆறாம் அதிபதியின் லாபவீடு நான்காம் இடமாகும். ஆறாமிடம் என்பது நோய் ஸ்தானம்; நான்காமிடம் என்பது சுக ஸ்தா னம். எனவே நோய்க்குரிய மருந்துகளை அடிப்படையாகக்கொண்டு லாபம் கிடைக்கச் செய்வர். ஆறாமிடம் வாடகை வீட்டினைக் குறிக்கும்; நான்காமிடம் வீட்டினைக் குறிக்கும். இதன்மூலம் பல வீடுகளை வாடகைக்குவிட்டுப் பணம் எண்ணுவார்கள். ஆறாமிடம் சேவை ஸ்தானம். நான்காமிடம் என்னும் தாய்க்கு சேவைசெய்து நல்லபெயரும், லாபமும் பெற்றுவிடுவார்கள். ஆறாமிடம் உழைப்பு ஸ்தானம். அதிகமாக உழைத்து அசையா சொத்துகளை வாங்கிச் சேர்ப்பார்கள். ஆறாமிடம் என்னும் உழைப்பு மற்றும் சேவைக்குரிய அதிபதி நான்காமிடம் என்னும் தனது லாப ஸ்தானத்தில் அமரும்போது, உழைப்பின்மூலம் வீடு, வாகனம், நிலம், நீர்வசதி, கல்விப்பயிற்சி, வயல், தோட்டம் போன்றவற்றையும், அவை சார்ந்த சுகத்தையும் தருவார்.

ஏழாம் அதிபதி

ஏழாமிடத்தின் லாபஸ்தானம் ஐந்தா மிடம். ஏழாமிடத்தின் அதிபதி அவரு டைய லாபஸ்தானத்தில் அமரும்போது, ஜாதகர் கலைத்துறையில் பிரகாசிப்பார். காதல் விஷயங்களில் கொடிகட்டிப் பறப் பார். காதல் திருமணமே செய்துகொள்வார். அதுவும் ஒன்றோடு நிறுத்திக்கொண்டால் நலமாகும். யூக வர்த்தகத்தில் பெரும்பங்கு வகிப்பார். ஏழாமதிபதி அனைவருடனும் தொடர்புகொள்ளும் நிலையைக் குறிப்பவர். அவரது லாப வீடான ஐந்தாமதிபதி கலை, புத்தி, கற்பனை, புது முயற்சிகள் போன்றவற்றைக் குறிப்பார். இதனால் இவர்கள் தொழில் சம்பந்தம் கொண்டோருடன் மிக சுமுகமாகப் பழகி தங்கள் நட்பு எல்லையை விரிவடையச் செய்வதனால்தான், வெகுஜன சம்பந்தம் பெருகி இவர்கள் பொதுத் தொடர்புத் துறையில் நல்ல வளர்ச்சி காண்பர். சிலசமயம் இது மிகவும் வேகமாகி, பல நபர்களைக் காதலும், சிலரைத் திருமணமும் செய்துகொள்வதுதான் சற்று பிரச்சினையாகும்.

எட்டாம் அதிபதி

எட்டாம் அதிபதியின் லாபஸ்தானம் ஆறாமிடம். ஜோதிட சாஸ்திரப்படி எட்டு மற்றும் ஆறாமிடங்கள் மறைவு, இருட்டு ஸ்தானங்களாகும். எனவே ஒரு மறைவு, துர்பாக்கிய அதிபதி இன்னொரு இருட்டான வீட்டில் மறையும்போது அதன் செயலாற்றல் மறைந்து முடங்கிவிடும்.

எனவே எட்டாமிடத்தின் காரகச் செயல்களான விபத்து, நஷ்டம் போன்றவை மறைந்து, மருந்துபோட்டு குணமடைந்து விடும் நிலைக்கு வந்துவிடுவர். ஒரு திருடனும் வழக்கறிஞரும் மிகவும் நட்பாகிவிட்டால் என்ன பயன்பெற இயலுமோ, அவ்வித பலன்கள் வந்தடையும். அல்லது இவ்வித அமைப்புடையோர் செய்யும் சில திருட்டுத்தனங்கள் வெளியே தெரியாமல், அவர்களுக்கு மிகப்பெரிய சமூக சேவகர்கள் என்னும் பெயரும் கிடைத்துவிடும் நிலையும் ஏற்படும். இது மிகப்பெரிய லாபம்தானே!

ஒன்பதாம் அதிபதி

ஒன்பதாமிடத்தின் லாபஸ்தானம் ஏழாமிடம். 9-ஆமிடம் என்பது தர்ம ஸ்தானம், அதிர்ஷ்ட ஸ்தானம். 7-ஆமிடம் என்பது திருமணம், வியாபாரம் ஆகியவற்றைக் குறிக்கும். இதனால் இவர்களது திருமணம் இவர்களுக்கு பேரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும். மேலும் இவ்வமைப்புள்ள ஜாதகர்கள் தங்கள் தொழில், வியாபாரத்தில் விலையைக் குறைத்து விற்பனை செய்வர். இதன்மூலம் இவர்களது விற்பனை அதிகரித்து நிறைய லாபம் காண்பார்கள். பிரம்மாண்ட கடைகளில் நெரிசல் ஏற்படு மளவுக்கு வியாபாரமாகிறது. அதற்கு அவர்களின் விலைக் குறைப்பும் ஒரு காரணம்.

ஆக, இவர்கள் ஒருவிதத்தில் தர்ம சிந்தனைகொண்டு செயல்படுவதால் வியாபாரம் நல்ல லாபத்தைக் கொடுக்கிறதென்று கூறலாம். இவர்களது தொழில், வியாபாரம்மூலம் நிறைய தர்ம ஸ்தாபனங்களுக்கும் உதவுவர். இதுவே ஒரு தார்மீக லாபம்தானே!

பத்தாம் அதிபதி

பத்தாமிடத்தின் லாபஸ்தானம் எட்டா மிடம். பத்தாமிடம் என்பது தொழில் ஸ்தானம். எட்டாமிடமோ ஒரு இருட்டு, மறைவு ஸ்தானம். இதுபோன்ற ஒரு மறைவு ஸ்தானத் தில் தொழிலதிபதி அமர்ந்துவிட்டால் எப்படி இருக்கும்? இதில் இருவித லாபம்வர வாய்ப்புண்டு. இவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவர்களது வேலையில் லஞ்சம் வந்துகொண்டே இருக்கும்.

இன்னொன்று, இவர்களது தொழிலே சட்டப்புறம்பாக நடக்கும் தொழிலாக அமைந்து, அதில் நல்ல லாபம் வரக்கூடும். இதில் இந்த இரு ஸ்தானாதிபதிகளின் சாரநாதர்கள் முக்கியமானவர்களாகி முடிவெடுப்பர்.

பதினொன்றாம் அதிபதி

இவரே லாபாதிபதி. இவரே இவர் வீட்டில் இருந்தால் மிகவும் நன்மை. லாபாதிபதியின் லாபஸ்தானம் ஒன்பதாம் வீடு. எனவே இவர்களது லாபம் இவர் களது தந்தையின்மூலமும், பரம்பரை சொத்துகள்மூலமும், நல்ல உயர்கல்வி மேன்மைமூலமும், வெளிநாடுகள்மூலமும், இவர்களது எண்ணப்படி- திட்டப்படி- விரும்பியபடி அருமையாக அமையும். இவர்களது லாபங்கள் தர்ம நீதிப்படியும் சட்டப்படியும் அமையுமென்பது ஒரு "பிளஸ் பாயின்ட்'தான்.

பன்னிரண்டாம் அதிபதி

பன்னிரண்டாமிடத்தின் லாபஸ்தானம் பத்தாமிடம். இவ்வமைப்புள்ள ஜாதகர்கள் எவ்வளவு தூரம் அலைகிறார்களோ அவ்வளவு லாபம் கிடைக்கும். வெளிநாடு இவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கச் செய்யும். தொழில் முதலீடுகள் நல்ல லாபம் தரும். இவ்வமைப்பு ஜாதகரின் தொழி-லில் வெளிநாட்டு சம்பந்தம் எவ்வகையிலேனும் இருப்பின், அதுவே நல்ல லாபத்தை ஈட்டித்தரும். சிலசமயம் இவர்களது சில செலவுகள் பன்மடங்கு லாபத்தைக் கூட்டிவரும். சில தொழில்கள் அடுத்த கட்டத்தைநோக்கி முன்னேறும்போது, பார்ட்டி கொடுப்பது போன்ற சிலபல செலவுகள் செய்வர். இந்த செலவுகள் இவர்களுக்கு விரயமல்ல; அது இவர்களுக்கு பன்மடங்கு லாபத்தைக் கொடுக்கும். அதனால் தொழிலதிபர்கள் பரிசுகள் கொடுப்பதை ஒரு வழக்கமாகவே வைத்துக்கொண்டிருக்கிறார் கள். அவ்வளவும் லாபமாகத் திரும்ப வருமல்லவா?

பொதுவாக, மனிதர்களுக்கு தாங்கள் எண்ணியதைவிட அதிகமாக வருவதுதான் மிகவும் பிடிக்கும். அது பணவிஷயம் மட்டுமல்ல; எல்லா விஷயங்களிலும் மனித மனம் கூடுதலாக என்ன கிடைக்கு மென்றுதான் எதிர்பார்க்கும். இந்த அதிகப் படியான நன்மைகள் எளிதாகக் கிடைக்கச் செய்யுமிடமே 11-ஆமிடம். எனவேதான் இது லாப ஸ்தானம் என்றழைக்கப்படுகிறது. லக்னம் மட்டுமல்லாமல், மற்ற 12 வீடுகளுக்கும் லாபம் கிடைப்பதென்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம்தானே!

செல்: 94449 61845

bala040621
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe