னித வாழ்வில் அனைத்தையும் தீர்மானிக்கக்கூடிய கிரகங்கள் பயணிக்கும் 27 நட்சத்திரக் கூட்டமைப்பில் 14-ஆவது நட்சத்திரமாக விளங்குகிறது சித்திரை.

மங்கள காரகன், பூமிகாரகன், சகோதர காரகன் என்றழைக்கப்படும் செவ்வாயின் நட்சத்திர வரிசையில் இரண்டாவது நட்சத்திரமாக அமையப்பெறுகிறது.

இது ஆறு நட்சத்திரங்களின் கூட்டமாக அறியப்படுகிறது. இந்த நட்சத்திரத்தை வெறும் கண்களிலேயே பார்க்கமுடியும்.

இதன் அதிதேவதை தேவதச்சன் என்றழைககப்டும் விஸ்வகர்மா ஆகும். எதையும் உருவாக்கும் ஆற்றலும், அதை அழிக்கும் ஆற்றலும் பெற்ற ஆளுமைத்திறன் கொண்டது.

Advertisment

இதைப்போலவே இந்த நட்சத்திரக் காரர்கள் கலையாற்றலையும், உருவாக்கும் ஆற்றலையும் உடையவர் களாக இருப்பார்கள். அதேபோல் இவர்கள் உருவாக்கியதை இவர்களே அழிக்கும் தன்மை படைத்தவர்களாக வும் இருப்பார்கள்.

இவர்களுக்கு இளமைக்காலம் அவ்வளவு சிறப்பானதாக அமையப் பெறுவதில்லை. 25 வயதுக்குமேல்தான் இவர்கள் வாழ்வுக்கு வசந்தம் வாய்ப் பளிக்கும்.

இந்த நட்சத்திரத்தை சமஸ்கிருதத் தில் சித்ரா என்றும், கிரேக்கத்தில் ஸ்பைஸ்சா என்றும், தமிழில் சித்திரை, நடுநாள், நேர்வால், தச்சன், துவட்ட நாள், சுவை என்ற பல பெயர்களிலும் அறியப் படுகின்றது.

Advertisment

இவர்களின் ராசிநாதனாக சித்திரை 1 மற்றும் 2-ஆம் பாதமென்றால் புதனாகவும், மூன்று மற்றும் நான்காம் பாதமென்றால் சுக்கிரனாகவும், நட்சத்திரநாதன் செவ்வாயாக வும், நவாம்ச நாதர்களாக சித்திரை ஒன்றாம் பாதமென்றால் சூரியன், இரண்டென்றால் புதன், மூன்றென்றால் சுக்கிரன், நான்கென் றால் செவ்வாயும் அமையப்பெறுவார்கள்.

இதுவொரு ராட்சச கண நட்சத்திரம். நமது ஜோதிடவியலில் சாந்தி முகூர்த்தத்திற்கு உடைபட்ட நட்சத் திரங்கள் பரிந்துரை செய்யப்பட மாட்டாது.

ஆனால் உடைபட்டி ருந்தா லும் இந்த சித்திரை நட்சத்திரத்தைக் கையாள்கிறார்கள். தமிழ் ஜோதிட நிகண்டுகள் "கலவியின் தாகம் அதிகமுடைய நட்சத்திரம் சித்திரை' என்று கூறுவதனால் இந்த நட்சத்திரம் முகூர்த் தத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இவர்களுக்கு புரட்டாசி ஆகாத மாதம். பெரும்பாலும் நாம் புரட்டாசியில் திருமணம் செய்வதில்லை. வீடு, கடை கட்டுதல், தொழில், புதிய பணி போன்றவற்றை இந்த நட்சத்திரக்காரர்கள் இந்த மாதத்தில் தவிர்ப்பது மிகவும் நல்லது.

"சித்திரை அப்பன் தெருவிலே' என்ற பழமொழி வழக்கத்தில் உண்டு. அதற்கான காரணம், தேரோட்டம் நடக்கும் சிவாலயங் களில் சித்திரை மாதத்தில் வீதியுலா நடைபெறும். அங்கு சிவனை அப்பன் என்றும் பார்வதியை தாயார் என்றும் அழைப் பார்கள். தேரோடும் வீதியில் அப்பன் திரு வீதியுலா வருவதையே இப்படிக் கூறியிருக்கின் றார்கள். அது நாளடைவில் மருவிவிட்டதாகக் கூறுகின்றனர்.

cc

மேலும் இந்த சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தால் தந்தைக்கு ஆகாதென்பது எதற்காக வென்றால், இவர்களுக்கு இளம்வயதில் வரும் ராகு தசையால்தான். இதற்காகதான் நம் முன்னோர்கள் தவிடு கொடுத்து குழந்தையை மாற்றி தவிட்டுக்கு வாங்குவது என்னும் பரிகாரம் செய்துகொண்டார்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் ஆண்- பெண் கூடினால் அவர்களை இறுதிவரை பிரிக்கவேமுடியாது என்னும் நம்பிக்கையும் உண்டு. இந்த நட்சத்திரக் காரர்கள் நடக்கும் நடை பிறருக்கு ஓட்ட மாகத் தோற்றமளிக் கும். அதீத காம இச் சையும், எதிர்பாலின ஈர்ப்பும், ஆண்- பெண் இருவருக்கும் இயல்பாகவே அமைந்து விடுகிறது. இவர்களுக்கு பொருந்தாத உறவு களையே இயற்கை அமைத்து வேடிக்கை பார்க்கிறது.

இது செவ்வாயின் நட்சத்திரம் என்பதனால் பொதுவாக ஆளுமை, அதிகாரம், படபடப்பு, விவேகமற்ற வீரம் போன்ற குணங்கள் இயல்பிலேயே இவர்களை சார்ந்திருக்கும்.

சித்திரை ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்சத்தில் சூரியனின் வீடான சிம்மத்தில் அமரும். இந்நிலை ராசிநாதனுக்கு ஐந்தாம் வீடென்று வருவதால் எண்ணிய எண்ணம் ஈடேறுதல், காதல் திருமணம், பூர்வீகத்தில் சுமூகமான நிலை, அதிகாரம், ஆட்சி, அரசு, அரசு சம்பந்தப் பட்ட துறையில் சம்பாத்தியம் போன்ற யோக பாக்கியங்கள் இவர்களுக்கு அமையும். பொதுவாகவே சித்திரை சுக்கிரனின் கர்மப் பதிவினைக்கொண்ட நட்சத்திரம் என்பதால், இவர்கள் பெண்களின் விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. இவர்களின் தொழிலைப் பொருத்தவரை அதிகாரமிக்க தொழில்களாகவும், அரசு சம்பந்தப்பட்ட தொழில்களாகவும், கலைநயம் மிகுந்த ஆர்க்கிடெக்ட், ஓவியம், பெயின்டிங் போன்ற துறைகளிலும் சிறப்பு பெறுவதற்கு வாய்ப்புகள் மிகுதியாக உண்டு. இவர்கள் புரட்டாசி மாதங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

சித்திரை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்சத்தில் கன்னி வீட்டில் அமையப்பெறும். இங்கு செவ்வாய், புதன் என்ற கூட்டு நிகழும் பொழுது சற்று இடர்ப்பாடான நிலையையே சந்திக்கவேண்டிய சூழல் ஏற்படும். கன்னி, ராசிநாதனுக்கு ஆறாம் வீடென்று வருவத னால் தோல் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் தாய்மாமன்வழியில் சிறு பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டிய சூழல் ஏற்படும். பொதுவாகவே சித்திரை நட்சத்திரம் சுக்கிரனின் கர்மப் பதிவைக் கொண்டதனால், அத்தைவழியில் சில இடர்ப்பாடுகளை சந்திக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும். இவர்களுக்கு கமிஷன் ஏஜென்ட், ஆர்கிடெக்ட், பத்திரப்பதிவு, ரெஜிஸ்டர் ஆபீஸ் சம்பந்தப்பட்ட தொழில்கள், தரகு, விவசாயம், கூலித்தொழில் போன்றவற்றில் இவர்களது பிரதிபலிப்பைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

சித்திரை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் துலாத்தில் அமையப்பெறும். இதனால் கலையினால் வருமானம் ஈட்டக்கூடிய சூழ்நிலை, அதிகாரம்மிக்க தொழில், தன்னை அழகியலுடன் வெளிப்படுத்துவது போன்ற சூழ்நிலைகள் உருவாகும். இவர்களின் தொழிலானது காஸ்மெட்டிக்ஸ், அழகியல் சம்பந்தப்பட்ட பொருட்களின் விற்பனை, மால் கலையரங்கம், கலைத்துறையில் சாதிப்பது, கதை, கவிதை எழுதுவது போன்ற தொழில்களின்மூலம் தன்னை உயர்த்திக் கொள்வார்கள்.

சித்திரை நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்சத்தில் விருச்சக வீட்டில் அமையப்பெறும். இந்த வீடானது காலபுருஷனுக்கு எட்டாமிடமாக வருவதாலும், இது சந்திரன் நீசமடையக் கூடிய இடமென்பதனாலும் மன உளைச்சல், மனம் சார்ந்த பிரச்சினைகள், எண்ணியது ஈடேறாமல் தவிப்பது போன்ற சூழ்நிலை களில் இவர்களை நிறுத்தும். தாய்வழி உறவில் பிரச்சினைகள், தாயாதிவழி சொத்துகளில் பிரச்சினைகள் போன்றவற்றை உருவாக்கும். பூமி சம்பந்தப்பட்ட தொழில், கன்ஸ்ட்ரக்ஷன், இன்ஜினியரிங், ஆர்க்கி டெக்ட், ஏஜென்ட் போன்ற தொழில்களில் தன்னை சிறப்படையச் செய்துகொள்வார்கள்.

சித்திர நட்சத்திரத்தின் சின்னம் புலியாக வருவதனால், தாங்கள் பணிபுரியும் இடங் களில் புலியின் படத்தை வைத்திருப்பது, தொழில் மற்றும் பணிகளில் சிறப்படைய வழிவகுக்கும். மேலும் புலியின் உருவத்தை தங்களால் இயன்ற அளவு வரைந்து வர, மனம் சார்ந்த பிரச்சினைகள் அகலுதல், அறிவுத் தெளிவு போன்றவை ஏற்படும்.

வணங்கக்கூடிய தெய்வம்: சுப்பிர மணியர்.

வணங்கவேண்டிய தலம்: பழனி.

வணங்கக்கூடிய விருட்சம்: வில்வம்.

அணியக்கூடிய ரத்தினம்: மரகதம்

(அடுத்த இதழில் சுவாதி)

செல்: 80563 79988