சென்ற இதழ் தொடர்ச்சி...
வக்ர கிரகங்கள் ஏற்படுத்தும் விளைவு களைக் கடந்த இதழில் பார்த்தோம். அதை சில உதாரண ஜாதகங்கள்மூலம் இங்கு ஆய்வு செய்வோம்.
உதாரண ஜாதகம்-1
31-12-1978, இரவு 11.40 மணிக்குப் பிறந்த இந்த ஜாதகருக்கு 10-ஆம் பாவகத்தோடு சூரியன், செவ்வாய் சம்பந்தம் பெற்றதால் மத்திய அரசு ஊழியர்.
இந்த ஜாதகத்தில் குரு, சனி வக்ரம்.
குரு 4, 7-ஆம் அதிபதி.
சனி 5, 6-ஆம் அதிபதி.
நடப்பில் குரு தசை 7-4-2027 வரை.
சுக்கிர புத்தி 18-10-2021 வரை.
குரு நின்ற நட்சத்திரம் பூசம்.
சுக்கிரன் நின்ற நட்சத்திரம் அனுஷம்.
வக்ர கிரகமான குருவின் தசை; சாரநாதன் வக்ர சனி. அதாவது தசைநாதன் நின்ற நட்சத் திர ரீதியாகவும் வக்ர கிரகத்தின் ஆதிக்கம்.
புக்திநாதன் சுக்கிரன் நின்ற நட்சத்திரம் அனுஷம் என்பதால், மறைமுகமாக வக்ர சனியின் ஆதிக்கம் புக்தியிலும் சம்பந்தம் பெற்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/palans_0.jpg)
தசாரீதியாகவும் இயங்கும் பாவகம் 4, 5, 6, 7, 11, 12.
புக்திரீதியாகவும் இயங்கும் பாவகம் 2, 3, 4, 7, 9, 11.
ஆக, தசாபுக்திரீதியாக இயங்கும் பாவகம் 2, 3, 4, 5, 6, 7, 9, 11, 12.
குரு தசை, சுக்கிர புக்தியில் ஒன்பது பாவகங்கள் ஜாதகரை இயக்குகின்றன.
குரு 4, 7-ஆம் அதிபதியாகி வக்ரம் பெற்றதால், திருமண வாழ்வில் மனநிறைவில்லை. மனைவியுடன் உள்ள கருத்து வேறுபாட்டால் குழந்தையுடனும் மனம் ஒட்டவில்லை. சுக்கிரன் 2, 9-ஆம் அதிபதி. மனைவியின் சந்தேக புத்தியால் வேறுபெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, வீட்டுக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம்செய்து இருதலைக்கொள்ளியாக மன உளைச்சலை அனுபவிக்கிறார். சுக்கிரன் குடும்பாதிபதியாகி (2-ஆம் பாவகம்) புக்தி நடத்தியதாலும், 7-க்கு 3-ஆம் பாவகமாகிய 9-ஆம் பாவம் இயங்கியதால் (பாவாத்பாவம்) இரண்டாம் திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டது.
உச்சம் பெற்ற குரு வக்ரம்பெற்றதால் நீசப் பலனைத் தந்துவிட்டது. 7-ஆம் அதிபதி வக்ரம் என்பதால், திருமண வாழ்வில் மனக்கசப்பை ஏற்படுத்தியது. ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் வக்ரம் பெற்றால் யோகம் என்பது பலருடைய கருத்து. ஒன்றுக்கு மேற்பட்ட கிரக வக்ரம் அவயோகம்.
மத்திய அரசு ஊழியராகி, போதிய பொருளாதாரம் இருந்தும், வக்ரம் பெற்ற சனியால் வேலையிலும் பிடிப் பில்லாத மனவேதனை. பாவகம், காரகம், ஆதிபத்தியம் என அனைத்துவழிகளிலும் ஜாதகரை வக்ர கிரகங்கள் நிம்மதி யிழக்கச் செய்கின்றன. உச்சபலம் பெற்ற கிரகங்கள் வக்ரம் பெற்றால் எதிர்பாராத சம்பவங்களைத் தரும்.
உதாரண ஜாதகம்-2
31-10-1987, மாலை 3.43 மணிக்குப் பிறந்த இந்த ஜாதகர் வெளிநாட்டு அரசாங்கத்தில் வேலை செய்பவர்.
இந்த ஜாதகத்தில் புதன், குரு வக்ரம்.
புதன் 4, 7-ஆம் அதிபதி.
குரு 1, 10-ஆம் அதிபதி.
நடப்பில் குரு தசை 22-1-2022 வரை.
ராகு புக்தி 22-1-2022 வரை.
புதன் வக்ரம் பெற்றதால் சிறந்த அறிவாளி. சூரியனும் புதனும் நெருங்கிய பாகை என்பதால் சிறந்த கல்வி. ஆனால் படிப்பிற்கு சம்பந்தமில்லாத வேலை.
இந்த ஜாதகத்தைப் பார்த்தவுடன், அனைவருக்கும் தெரிந்த குற்றம் காலசர்ப்ப தோஷம். லக்னத்தின் ஆரம்பப் புள்ளி 6.45 டிகிரி. லக்னத்தில் நின்ற ராகுவின் டிகிரி 6.44 என்பதால், இயற்கையாகவே வக்ர கிரக ராகுவின் சம்பந்தம். லக்னாதிபதி குரு வக்ரம் பெற்று, வக்ரம் பெற்ற புதனின் நட்சத்திர சாரம் பெற்றுள்ளது. 7-ஆம் அதிபதி புதன் வக்ரம். 7-ல் நின்ற கேது வக்ரம் என லக்னம், 7-ஆமிடம் இரண்டும் வக்ர கிரகத்தின் பிடியில் இருப்பதால், இவருக்கு திருமணம் எட்டாக்கனியாகவே இருக்கிறது.
இவருக்கு நடப்பில் குரு தசை, ராகு புக்தி. தசையும் புக்தியும் வக்ர கிரகப் பிடியில். தசாநாதன் குரு நின்ற நட்சத்திரம் ரேவதி.
அதாவது குரு நின்ற சாரநாதன் புதனும் வக்ரம் என்பதால், திருமணத்தை நடத்தித் தருவதில் மன உளைச்சல். அதாவது தசாநாதன் நின்ற நட்சத்திர ரீதியாகவும் வக்ர கிரகத்தின் ஆதிக்கம்.
ஒருவருக்கு திருமணம் நடக்குமா என்ற கேள்விக்கு குரு, சுக்கிரன்- சனி, சுக்கிரன்- செவ்வாய், சனியின் சம்பந்தமே பதில் கூறும்.
களத்திரகாரகன் சுக்கிரன் சனியை நோக்கிச் செல்வதால் திருமணம் நடக்கும் என்பது எல்லாருடைய எதிர்பார்ப்பு. சுக்கிரன் வக்ரம் பெற்ற குருவின் சாரத்திலும், சனி வக்ரம் பெற்ற புதனின் நட்சத்திரத்திலும் இருப்பதையும் மறக்கக்கூடாது.
குருவின் 9-ஆம் பார்வை சுக்கிரன், சனிக்கு இருப்பதால் திருமணம் நடக்கும் என்பது ஜோதிட விதி.
குரு வக்ரமாகி வக்ர புதன் சாரம்; சுக்கிரன் வக்ர குரு சாரம்.
இவருடைய மூன்று தலைமுறை முன்னோர் களின் கர்மா சாபமாகக் களமிறங்கி, இவருடைய திருமணத்தைக் கேள்விக்குறியாகிவிட்டது.
இவருக்கு 2021-ல்தான் திருமணம் நடை பெறும். அதற்குரிய பரிகார வழிபாட்டு முறைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குரு 10-ஆம் அதிபதிதானே? ஏன் தொழிலை பாதிக்கவில்லை என்ற கேள்வி சிலருக்கு எழும்.
10-ஆம் அதிபதி குரு வக்ரம் அடைந்ததால், உள்ளூர் சிறையில் வைப்பதற்கு பதிலாக வெளி நாட்டு வேலையில் வைத்துவிட்டது. வக்ரம் பெற்ற கிரகம் தான் பெற்ற நட்சத்திர சாரத் தின்மூலமும் ஜாதகரைக் கூண்டில் நிறுத்தும்.
உதாரண ஜாதகம்-3
5-9-1989 இரவு 9.33 மணிக்குப் பிறந்த இந்த ஜாதகருக்கு இதுவரை எந்தத் தொழிலோ வேலையோ நிரந்தரமாகச் செய்யமுடியவில்லை.
சனி 10, 11-ஆம் அதிபதி.
நடப்பில் சனி தசை 4-2-2026 வரை.
செவ்வாய் புக்தி 16-9-2020 வரை.
9-ல் வக்ர சனி- இவருடைய முன்னோர்கள் உழைத்த கூலியைக் கொடுக்காத குற்றம் இவரைப் பழிவாங்குகிறது.
பொதுவாக சனி வக்ரம் பெற்றவர்கள் தொழில், வேலையில் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும். இயன்றவரை சொந்தத் தொழில் செய்யக்கூடாது. அடிமைத் தொழிலே சிறப்பு. சனி வக்ரம் பெற்றால் சுபப் பலனைத் தரமாட்டார்.
குறிப்பு: வக்ர கிரகம் எல்லா காலத்திலும் பிரச்சினையத் தராது. தசாபுக்திக் காலத்தில் மட்டுமே கடுமையான பாதிப்பைத் தரும் என்பதால், வக்ர கிரக தசாபுக்தி, அந்தரக் காலத் தில் கவனமாக இருக்கவேண்டும். கிரகங்கள் தன் கடமையைச் செய்யும்; யாரையும் விட்டுவைப்ப தில்லை. வக்ரம் எனப்படுவதற்கு மாறுதலான இயக்கம் என்று பொருள். வக்ர கிரகங்கள் எதிர் மறையாகப் பலன் தரும். ராகு- கேதுக்களுக்கு இணையாக மாறுபட்ட பலன்களைத் தரும். சுபப் பலன் தரும் வாய்ப்பு மிகவும் குறைவே.
செல்: 98652 20406
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-10/palans-t.jpg)