ஜோதிடம் பார்க்க வருபவர்கள் பலரிடம், வக்ர கிரகம் குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவுன்கிறன. பலர், வக்ர கிரகம் என்ன பலன் தருமென அறியாத நிலையிலேயே இருக் கிறார்கள். வக்ர கிரகம் குறித்து சில கருத்துகள்....

கிரகங்களை சுப, அசுப கிரகங்கள் என இரண்டாக வகைப்படுத்தலாம். சுபகிரகங்கள் சுபப் பலனையும், அசுப கிரகங்கள் அசுபப் பலனையும் தருமென்பது பலருடைய நம்பிக்கை. கிரகங்கள் லக்னரீதியான சுப- அசுபப் பலனையும், தான் நின்ற வீட்டின் ஆதிபத்தியம், காரகத்து வரீதியாக நின்ற நட்சத்திரத்தின் அடிப் படையிலுமே முழுப்பலனைத் தரும்.

ராகு- கேதுவைத் தவிர, அனைத்து கிரகங்களும் ராசிக்கட்டத்தில் கடிகாரமுள் சுற்றும் திசையில் சுற்றிவருகின்றன.

விண்வெளியிலுள்ள அனைத்து கிரகங்களும் சூரியனின் கதிர்வீச்சைப் பெற்றே இயங்குகின்றன. சூரியனின் கதிர்வீச்சிலிருந்து விடுபடும்போது கிரகங்களின் சுழற்சிவேகம் குறைந்து வக்ர கதியை அடைகின்றன. இதை மேலும் விளக்கமாகக் கூறுவதென்றால், சூரிய உதயம்முதல் சூரிய அஸ்தமனம் வரை மனிதர்கள் அன்றாடப் பணியில் ஈடுபடுகிறார்கள். சூரியன் மறைந்த வுடன் (அதாவது சூரிய ஒளி மறைந்த வுடன்) ஓய்வெடுக்கிறார்கள்.

Advertisment

அதேபோல கிரகங்களுக்கு சூரியனின் பரிபூரண ஒளிக்கதிர் கிடைக்காதபோது, கிரகங்கள் வக்ரகதியில் இருக்கும். கிரகங்களின் சுழல்வேகங்கள் நிலை யானவை. பூமிக்கும் கிரகங்களுக்கு மிடையிலான தூரவித்தியாசங்களால், ஒரு கிரகம் பின்னோக்கிச் செல்வதுபோல மாயத்தோற்றம் ஏற்படும்.

சூரியன், சந்திரனைத் தவிர, அனைத்து கிரகங்களுக்கும்- அதாவது செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கும் வக்ரகதி உண்டு. ராகு- கேதுக்கள் இயற்கையாகவே வக்ர கிரகங்கள். குரு, சனி ஆகிய கிரகங்கள் சூரியன் நிற்கும் ராசியிலிருந்து 5, 6, 7, 8, 9 ஆகிய ராசிகளில் நிற்கும்போது வக்ர கதியை அடைகின்றன. செவ்வாய்- சூரியன் நின்ற ராசியிலிருந்து 6, 7, 8-ஆவது ராசியில் நிற்கும்போது வக்ரமடையும்.

சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய மூன்றும் முக்கூட்டு கிரகம் என்பதால், சுக்கிரனும் புதனும் சூரியனுக்கு முன்- பின் ராசியில் 90 டிகிரிக்குள்ளாகவே இருக்கும். எனவே சுக்கிரன், புதனின் வக்ர கதியை பஞ்சாங்கத்தின் உதவியுடனே அறியமுடியும்.

Advertisment

கிரகங்கள் சூரியனுக்கு எந்த இடத்தில் இருந்தால், என்ன நிலை என்பதைக் காணலாம்.

கிரகங்கள் சூரியனோடு நெருங்கிய டிகிரியில் இருக்கும்போது அஸ்தங்க கதி.

2- 11-ல் சீக்கிர கதி.

3-ல் சம கதி.

4-ல் மந்த கதி.

5- 6-ல் வக்ர கதி.

7- 8-ல் அதிவக்ர கதி.

9- 10-ல் வக்ர நிவர்த்தி.

12-ல் அதிசீக்கிர கதி.

கிரகங்களின் வக்ர காலம்

புதன் சூரியனைவிட்டு ஒரு ராசிக்குமேல் விலகிச்செல்லாது.

புதன் மூன்று மாதங்களுக்கொரு முறை, சுமார் 24 நாட்கள் வக்ரகதியில் இருக்கும்.

சுக்கிரன் 18 மாதங்களுக்கு ஒருமுறை, சுமார் 50 நாட்கள்வரை வக்ரகதியில் சஞ்சரிக்கும்.

செவ்வாய் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை, சுமார் இரண்டு மாதம்முதல் ஆறு மாதம்வரை வக்ரகதியில் சஞ்சரிக்கும். ஸ்தம்பன கதி என்னும் நிலையில், ஒரே ராசியில் ஆறு மாத காலம்கூட இருப்பார்.

குரு வருடத்திற்கு நான்குமுதல் ஐந்து மாதங்கள்வரையில் வக்ரகதியில் சஞ்சரிக்கும்.

சனி வருடத்திற்கு நான்கு மாதம்முதல் ஐந்து மாதங்கள்வரை வக்ரகதியில் சஞ்சரிக்கும்.

குருவின் வக்ரப் பலன்

குருவின் தசாபுக்தி, அந்தரக் காலத்தில்- பொருளாதார நிலையில் பற்றாக்குறை நிலவும்.

முறையற்றவழியில் பொருளீட்ட நேரும். கடவுள் நம்பிக்கையற்று வாழ்தல் அல்லது சாமியார் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றிப் பிழைத்தல்.

கோவில் சொத்தை அபகரித்துவாழும் எண்ணம் மிகும்.

பிராமண சாபம் ஏற்படும்.

சுயகௌரவம் பாதிக்கும். மறைமுக விஷயங்கள் வெளிப்படும்.

காலதாமத புத்திர பாக்கியம் அல்லது குழந்தை பாக்கியமின்மை, குழந்தை களால் விரயம், பொருளாதார இழப்பு ஏற்படும்.

குழந்தைகளால் மனவேதனைப் படும் நிகழ்வுகள் மிகுதியாகும். தவறான முறையில் வாரிசு உருவாகும். கரு உருவாகிக் கலையும்.

சனியின் வக்ரப் பலன்

சனி தசாபுக்தி, அந்தரக் காலத்தில்- சோம்பல், மந்தத் தன்மை மிகுதியாகும்.

நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என எதைப்பற்றியும் கவலையில்லாமல், அடுத்தவர் உழைப்பில் உண்டுமகிழ்வர்.

பிடிவாதம், அகம்பாவம், சந்தேக புத்தி அதிகரிக்கும்.

நீசத்தொழில் செய்வதில் ஆர்வம் மிகும். வருமானத்திற்கு வழியில்லாது போகும்.

குறைந்த வருமானத்திற்கு அதிக நேரம் உழைத்தல், இரவு வேலை.

தொழில் முடக்கம், தொழில் கூட்டாளி களால் ஏமாற்றப்படுதல், தொழிலாளர் களால் மன உளைச்சல், வேலை இழப்பு, பங்காளிகளுடன் கருத்து வேறுபாடு.

குலதெய்வக் குற்றம் அல்லது சாபம் ஏற்படும்.

குலதெய்வக் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலை அல்லது குலதெய்வ வேண்டுதல் நிறைவேற்றுவதில் தடை, தாமதம்.

தனிமைப்படுத்தப்படுதல், சிறைப் படுதல், முறையற்ற நட்பு, முன்னோர்வழி கர்மவினைத் தாக்க நோய் ஆரம்பமாகும் அல்லது அதிகமாகும்.

மேலும் நீரிழிவு, ரத்த அழுத்தம், நீண்டநாள்- வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டிய நோய், மூட்டுவலி, மூட்டுத் தேய்மானம், மூட்டு அறுவை சிகிச்சை, உடல்வலி, கைகால் வலி, உடல் அசதி உருவாகும்.

ஆயுள் குறைபாட்டை ஏற்படுத்தும்.

செவ்வாயின் வக்ரப் பலன்

வக்ரம் பெற்ற செவ்வாயின் தசாபுக்தி, அந்தரக் காலங்களில்-முன்கோபம் மிகுதியாகும்.

திட்டமிடுதலில்- ஆலோசகராக இருப்பதில் சாதனைபுரிவர். ஆனால் செயல்திறன் இருக்காது.

உடன்பிறந்த சகோதரர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்காது.

வீடு, வாகனம், சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருக்கும்.

ரத்தம் தொடர்பன நோய்கள் எற்படும்.

வக்ர செவ்வாய் சனியுடன் சம்பந்தம் பெறும்போது விபத்து, அங்கஹீனம் ஏற்படும்.

பெண்களுக்கு திருமண வாழ்வில் மகிழ்ச்சியைத் தருவதில்லை.

புதனின் வக்ரப் பலன்

வக்ர புதனின் தசாபுக்தி, அந்தரக் காலங்களில்- நுண்ணறிவு, சமயோசித புத்தி மிகும். இதை ஆக்கலைவிட அழிவிற்கே மிகுதியாகப் பயன்படுத்து கிறார்கள்.

உயர்ந்த கல்வியும், நல்ல பேராற்றலும் தரும். ஆனால் கற்ற கல்விக்கு சம்பந்த மில்லாத தொழில் செய்யநேரும்.

தாய் மாமன் ஆதரவு குறையும்.

சுக்கிரனின் வக்ரப் பலன்

வக்ர சுக்கிரனின் தசாபுக்தி, அந்தரக் காலங்களில்- தங்கம், வெள்ளி நகைகள் அடமானத்திற்குப் போகும் அல்லது இழக்கநேரும்.

பொருளாதார நெருக்கடி மிகும். கணவன்- மனைவி உறவில் விரிசல் ஏற்படும். திருமண வாழ்வில் குழப்பங்களைத் தருவார்.

ஆண்களுக்கு காலதாமதத் திருமணம் அல்லது திருமணம் நடக்காத நிலை.

அதீத காம உணர்வு, வக்கிர எண்ணம் உண்டாகும். பலருடன் தொடர்பு, முறை தவறும் சூழ்நிலை ஏற்படும். சுகபோகத்திற்காக அதிக செலவு செய்வார்கள்.

பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும்.

pp

பாவகங்களில் வக்ர கிரகங்கள் நின்ற பலன்கள்

லக்னத்தில் வக்ர கிரகம் நின்றால் அல்லது லக்னாதிபதியுடன் வக்ர கிரகம் சம்பந்தம், லக்னத்தின் ஆரம்பப் புள்ளி வக்ர கிரகத்தின்மேல் நின்றால், ஜாதகருக்கு தோற்றப்பொலிவு, ஆன்மபலம் குறைந்து மனக்கவலை, துக்கம் மிகுந்தவராக இருப்பார். ஆயுள் பலம் குறைந்தவர்.

இரண்டாம் பாவகத்தோடு வக்ர கிரக சம்பந்தம்- குடும்பத்தில் குழப்பம் எற்படும்.

திருமணமே நடக்காத நிலை உருவாகும்.

பணவரவில் ஏற்ற- இறக்கம் மிகும். வலது கண் குறைபாடு உண்டு. நேரத்திற்கு உணவுண்ண முடியாது. வாக்கு பலம் குறைந்தவர்.

மூன்றாம் பாவகத்தோடு வக்ர கிரகம் சம்பந்தம் பெற்றால்- சிந்தனை, செயல் தடுமாற்றம், சகோதர- சகோதரி உறவு பாதிக்கும்.

நான்காம் பாவகத்திற்கு வக்ர கிரக சம்பந்தம் இருந்தால்- தாயன்பும் ஆதரவும் கிடைக்காது. மாற் றாந்தாயின் ஆதரவு கிடைக்கும்.

வீடு, வாகனம், சொத்து தொடர்பான சர்ச்சைகள் மிகும்.

விவசாயம், கால்நடை வளர்ப்பு பாதிக்கும்.

ஐந்தாம் பாவகத்திற்கு வக்ர கிரகம் சம்பந்தம் இருந்தால்- பூர்வீகத்தைவிட்டு வெளியேறி வாழ் வார்கள்.

குலதெய்வத்தை மறந்தவர்கள்.

பூர்வபுண்ணிய பாக்கிய பலமற்றவர்கள்.

குழந்தை பாக்கியம் இல்லாமை அல்லது குழந்தைகளால் பயன்பெற முடியாதவர். பெரிய பதவியில் இருந்தால் அசிங்கம், அவமானமே மிஞ்சும்.

6,8, 12-ஆம் பாவகத்தோடு சம்பந்தம்பெறும் வக்ர கிரகங்கள்

பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும், சில நேரங்களில் விபத்து, நஷ்டம், கடன், வழக்கை எற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

ஏழாம் பாவகத்தோடு வக்ர கிரக சம்பந்தம் இருந்தால்- திருமண வாழ்க்கை மனநிறைவைத் தருவதில்லை.

கணவன்- மனைவி கருத்து வேறுபாடு மிகுதியாக உள்ளவர்கள் நண்பர்களுடன் கூட்டுத்தொழில் செய்யக்கூடாது.

ஒன்பதாம் பாவகத்திற்கு வக்ர கிரகம் சம்பந்தமிருந்தால்- தந்தையின் ஆதரவு கிடைக்காது.

தர்ம சிந்தனை குறையும்.

மூன்று தலைமுறை முன்னோர்களின் முழு கர்மவினைத் தாக்கமும் ஜாதகரின் தலைவிதியோடு கலக்கும்.

பத்தாம் பாவகத்திற்கு வக்ர கிரக சம்பந்தம் இருப்பவர்கள் சொந்தத் தொழில் செய்தால் பெரும் இழப்பு ஏற்படலாம். அடிமைத்தொழிலில் இருந்தால் அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருப் பார்கள். கர்மம் செய்ய புத்திரன் இல்லாத நிலை அல்லது பயனற்ற புத்திரர்கள் கிடைப்பார்கள்.

பதினோறாம் பாவகத்திற்கு வக்ர கிரக சம்பந்தமிருந்தால்- பெரும் லாபம் கிடைக்காது.

மூத்த சகோதரரால் வஞ்சிக்கப்படுவார்கள்.

பங்குச் சந்தையில் வணிகம் செய்யக் கூடாது.

இரண்டாம் திருமணம் செய்தவர்கள் அவஸ்தையை உணர்வார்கள்.

வக்ர கிரகம் தொடர்பான ஜோதிட விதிகள்

வக்ர கிரகங்கள் பொதுவில் பலம் வாய்ந்தவை.

உச்ச கிரகம் வக்ரம் பெற்றால் உச்ச பலனைத் தரும்.

நீச கிரகம் வக்ரம் பெற்றால் நீசப் பலனைத் தரும்.

வக்ரம் பெற்ற கிரகம் லக்ன சுபர் எனில் சுபப் பலனையும், லக்ன அசுபர் எனில் அசுபப் பலனையும் தரும்.

வக்ரகதியிலுள்ள கிரகம் தான் கொடுக்கவேண்டிய பலனை சற்று தாமதமாகக் கொடுக்கும்.

6, 8, 12-ஆம் அதிபதிகள் வக்ரம் பெறும்போதும், பாதகாதிபதிகள் வக்ரம் பெறும்போதும் சில யோகங்களைத் தருவார்கள்.

சுபகிரகங்கள் வக்ரம் பெற்றால் சுபப் பலனையும், அசுப கிரகங்கள் வக்ரம் பெற் றால் அசுபப் பலனையும் தருவார்கள்.

இதுபோன்ற பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. என் அனுபவத்தில், வக்ர கிரகங்களின் தசாபுக்தி, அந்தரக் காலங் களில் ராகு- கேதுக்களுக்கு இணையாக ஜாதகரை பாடாய்ப் படுத்திவிட்டுதான் தசையை முடிக்கின்றன. இதை சில உதாரண ஜாதகங்களுடன் பார்க்கலாம்.

மேலே உள்ள விதிகளை கவனமாகப் படித்தால் மட்டுமே உதாரண ஜாதகத்தின் விளக்கம் புரியும் என்பதால், வாசகர்கள் கவனித்துப் படிக்கவும். தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406