Advertisment

நண்பர்களும் பகைவர்களும்! -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/friends-and-foes-s-vijayanarasimhan

"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

நண்பனே நண்பனே!

இந்த நாள் அன்று

போல் இன்பமாய் இல்லையே

அது ஏன் ஏன் நண்பனே!'

-கண்ணதாசன்

ஆழமான பரஸ்பர அன்பைப் பரி மாறிக்கொள்வதே சிறந்த நட்பாகும். நம்மில் சிலரை சந்திக்கும்போது அவர் களோடு ஒன்றிப்போய், மிக சந்தோஷங் களையும் துக்கங்களையும் பகிர்ந்து கொள்ளும் அளவுக்குப் பழகி நட்பின் எல்லையைத் தொட்டுவிடுகிறோம். மாறாத நட்பு மலர்ந்துவிடுகிறது. சில நேரங்களில் உங்களுக்கு பரிச்சயம் இல்லாத வர்களோடு பரம விரோதம் ஏற்பட்டு விடுகிறது. இது எங்ஙனம் ஏற்படுகிறது? ஆம்; அது கிரகங்களின் லீலையன்றோ! நட்புக்கும் பகைக்கும் இவையே காரண மாகின்றன.

மிக நெருக்கமான நட்பு

Advertisment

உதாரணமாக, கும்ப லக்ன ஜாதகர் ஒருவர் கல்லூரி நாட்களில், தனது சக மாணவியிடம் நட்பாக இருந்தார். இந்த நட்பு நீண்டநாட்களுக்கு நிலைத்தது. ஆனால், திடீரென காரணம் ஏதுமின்றி மனஸ்தாபத்தில் அப்பெண் பிரிந்துவிட்டாள். தற்போது அவர்கள் பிரிந்து 20 வருடங்கள் ஓடிவிட்டன. இந்த கும்ப லக்னக்காரருக்கு, இந்த மேஷ லக்ன தோழிக்கு கும்பத்தில் ராகு, செவ்வாய், சுக்கிரன் மற்றும் குரு இருந்ததால், அவளின் ராகு தசைக் காலத்தில் அவர்களின் முதல்நட்பு மலர்ந்தது. அவர்கள் இருவரும் இணைந்து பாசமிக்க நண்பர்களாகி மகிழ்ந்தனர். ஏனெனில் மேஷ லக்ன ஜாத கருக்கு, நட்பு ஸ்தானம் மற்றும் லா

"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

நண்பனே நண்பனே!

இந்த நாள் அன்று

போல் இன்பமாய் இல்லையே

அது ஏன் ஏன் நண்பனே!'

-கண்ணதாசன்

ஆழமான பரஸ்பர அன்பைப் பரி மாறிக்கொள்வதே சிறந்த நட்பாகும். நம்மில் சிலரை சந்திக்கும்போது அவர் களோடு ஒன்றிப்போய், மிக சந்தோஷங் களையும் துக்கங்களையும் பகிர்ந்து கொள்ளும் அளவுக்குப் பழகி நட்பின் எல்லையைத் தொட்டுவிடுகிறோம். மாறாத நட்பு மலர்ந்துவிடுகிறது. சில நேரங்களில் உங்களுக்கு பரிச்சயம் இல்லாத வர்களோடு பரம விரோதம் ஏற்பட்டு விடுகிறது. இது எங்ஙனம் ஏற்படுகிறது? ஆம்; அது கிரகங்களின் லீலையன்றோ! நட்புக்கும் பகைக்கும் இவையே காரண மாகின்றன.

மிக நெருக்கமான நட்பு

Advertisment

உதாரணமாக, கும்ப லக்ன ஜாதகர் ஒருவர் கல்லூரி நாட்களில், தனது சக மாணவியிடம் நட்பாக இருந்தார். இந்த நட்பு நீண்டநாட்களுக்கு நிலைத்தது. ஆனால், திடீரென காரணம் ஏதுமின்றி மனஸ்தாபத்தில் அப்பெண் பிரிந்துவிட்டாள். தற்போது அவர்கள் பிரிந்து 20 வருடங்கள் ஓடிவிட்டன. இந்த கும்ப லக்னக்காரருக்கு, இந்த மேஷ லக்ன தோழிக்கு கும்பத்தில் ராகு, செவ்வாய், சுக்கிரன் மற்றும் குரு இருந்ததால், அவளின் ராகு தசைக் காலத்தில் அவர்களின் முதல்நட்பு மலர்ந்தது. அவர்கள் இருவரும் இணைந்து பாசமிக்க நண்பர்களாகி மகிழ்ந்தனர். ஏனெனில் மேஷ லக்ன ஜாத கருக்கு, நட்பு ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானமான 11-ஆமிடம் கும்பமாகி, தசாநாதன் அங்கே இடம்பெற்றார். ராகு தசை முடிந்தபோது அவர்களின் நட்பு அழிந்து மறைந்தது. இருப்பினும், அவர்களுக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடோ, சண்டை, சச்சரவோ ஏற்படவில்லை.

பின் ஏன் இந்த நிலை? ஏனெனில், லக்னாதிபதி செவ்வாய் மற்றும் இயற்கை சுபர்களான குரு மற்றும் சுக்கிரன்மீதான தசாநாதன் ராகுவின் தாக்கமே அவர்களுக் குள்ளான நட்பை நிலைநாட்டியது. அதன் பின் குரு, ராகுவால் பாதிக்கப்பட்ட கார ணத்தால் அவர்களின் நட்புக்கு குரு முடிவு கட்டிவிட்டார். அவர்களின் நட்புமலர் கருகி மண்ணோடு மண்ணானது. இதுபோல் இன்னும் சில ஜாதகங்களைப் பார்ப்போம்.

ff

Advertisment

ஒரு ஜாதகத்தில், விருச்சிகத்தில் குரு இருக்க, மற்றொருவர் ஜாதகத்தில் விருச்சிகத் தில் சந்திரன் இருக்க, இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. அவர்களின் நட்பு எப்போதும் மதிப்புக்குரியதாகவும், கட்டுப்பாடு மிக்கதாகவும், விசுவாசம் மிக்கதாகவும் மலர்ந்தது. ஏனெனில், இருவரின் ஜாதகத்தி லும் ஒரே ராசியில் சுபர்கள் இடம்பெறுவதே யாகும். நீண்ட நெடுநாளைய நட்புக்கு, இணை பிரியா நட்புக்கு இதுவே காரணமாயிற்று. இன்னொரு நிகழ்ச்சியைப் பார்க்கையில், இருவரின் ஜாதகத்திலும் லக்னாதிபதி ஒரே ராசியில் இடம்பெற்றதால் அவர்களின் நட்பு பரிணமித்தது எனலாம்.

அதேபோல், மகர லக்ன ஜாதகரின் ராசிநாதன் சிம்ம ராசியிலும், மற்றவரின் கும்ப லக்னாதிபதி சனி சிம்மத்திலும் இடம் பெற்றதால் அவர்களின் நட்பு பரஸ்பர புரிதலுக்கும், நம்பிக்கைக்கும் அடையாள மாக மிகச்சிறந்த நட்பானது. அதேபோல் எதிரெதிர் ராசிகளில் லக்னம் அமையக்கூடிய வர்களுக்கு, இத்தகைய நட்பு சாத்தியமானதாகும். அவர்கள் அடிக்கடி சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையாவிட்டாலும், அவர் களுக்கிடையேயான கருத்தொருமித்த அன்பு ஏற்படுவது உறுதி.

திடீர் விரோதம்

மேலும் சில நிகழ்வுகளை ஆராயும் போது, எவ்வாறு- ஏன் திடீர் விரோதங் கள் ஏற்படுகின்றனவென இரு ஜாதகங் களைக்கொண்டு ஆராய்வோம். இருவரின் ஜாதகத்திலும் ஒரே ராசியில் லக்னம் அமைகிறது. ஒருவரின் ஜாதகத்தில் ராகு லக்னத்தைக் கடந்தபோது, அவர் எவ்வித தெளிவான காரண முமின்றி மற்றவர்மேல் ஆத்திரத்தில் அறிவிழந்து நட்பை முறித்து, திடீர் விரோதியானார். ஏனெனில், பரஸ்பர புரிதலின்றி, கருத்து வேறுபாடு காரணமாக, ஒருவர் மற்றவர்மேல் சந்தேகம்கொண்டு, அவரை ஏளனம் செய்ததன் காரணமாகப் பிரியநேர்ந்தது. மேலும், இந்த நிலை ராகு அந்த ராசியைவிட்டு நகர்ந்து செல்லும் வரை நீடித்தது. ஒரு நல்ல நண்பனை வெறுத்த அந்தக் கோபம், பொறாமை குணமுடைய நண்பன், பச்சாதாபத்துக்கு உரியவனாகவும், குற்றவுணர்வு உடைய வனாகவும் இருந்தான்.

இருவர் ஜாதகத்திலும் ஒரே ராசியில் நின்ற அல்லது எதிரெதிர் திசையில் நின்ற தசாநாதர்களின் தசாக் காலத்தில் இருவரின் நட்பும் வளர்ந்து விருட்சமாகி விடுகிறது. அதிலும், ஒரே கிரகத்தின் தசாக் காலமானால் இருவரிடையே அந்த நட்பு பலம்பெற்று, இருவருக்கிடையேயும் அமைதியைத் தருகிறது. அதேபோல், பகை கிரகங்களின் தசாக் காலங்களில் இருவரிடையே வேற்றுமையுணர்வு ஏற்பட்டு நட்பு விரிசலடைகிறது.

இருவர் ஜாதகத்திலும் பலம்மிக்க தீயகிரகம் ஒரே ராசியில் இருக்க, அந்த இருவரும் நகமும் சதையும்போல் ஆரம்ப காலத்தில் இருந்தாலும், அவர்களின் நட்பு வெகுசீக்கிரமே இருவருக்குள்ளும் ஆழமான வெறுப்பை ஏற்படுத்தி, கோபமுடன் பிரியும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது. அதேபோல் இருவருக்கும் ஒரே ராசியிலுள்ள கிரகத்தின் தசாக் காலத்தில், அந்த ராசிமீது கோட்சாரத்தில் சனி அல்லது ராகு அல்லது கேது கடந்து செல்லும்போது, நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடும், தான்தான் பெரியவன் என்ற கர்வமும், போட்டியும் நட்பைக் குப்பையாக்கிவிடுகிறது.

இருவரின் லக்னமும் ஒன்றுக்கொன்று அனுகூலமற்ற ராசிகளிலோ அல்லது 6, 8-ஆக இருந்தாலோ இவர்களிடையே நட்பென்பது எப்போதும் ஏற்படாத ஒன்றாகிவிடும்.

ஆனால், வேறேதேனும் சாதக மான கிரக நிலைகள் இருவர் ஜாதகத்திலும் இருந்தால் நட்பு ஏற்பட வாய்ப்புண்டு.

உதாரணமாக, தனுசு லக்ன ஜாதகரும், கடக லக்ன ஜாதகரும் ஒருவருக்கொருவர் அனுசரித் துச்செல்வது கடினம். அதைப்போலவே கன்னி மற்றும் கும்ப லக்ன ஜாதகர்கள் காலாகாலத்திற்கும் முரண்பட்டவர்களாக நட்பின்றி இருப்பர்.

மேலும் ஒருவருடைய நடப்பு தசா நாதன், மற்றவரின் லக்னத்திலிருந்து அனுகூல மற்ற ஒரு ராசியில் இடம்பெற்றாரானால், இருவரிடையே ஏற்பட்ட நட்பு கரடுமுரடான தாக இருக்கும். அதேபோல் இருவருக்கும் ஒரே தசா காலமானால், இருவர் ஜாதகத்திலும் அந்த தசாநாதர்களும் வெவ்வேறு ராசிக்கு உடையவர்களாயின், இருவர் மனதிலும் நட்பு துளிர்விட ஆரம்பிக்கும்.

ஒருவரின் லக்னாதிபதி மற்றவரின் லக்னத் தில் இருந்தால் அப்போது இருவரின் நட்பும் பலப்படும். உதாரணமாக, ஒருவருக்கு சூரிய தசை நடந்து, மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்றிருக்க, மற்றவருக்கு துலாத்தில் நீசம் பெற்று தசை நடக்க, இருவருக்குமிடையே அவிழ்க்கமுடியாத நட்பு முடிச்சு விழுந்து, இரண்டறக் கலந்துவிடுவர்.

இருவரது ஜாதகத்திலும் ஒரே ராசியில் லக்னாதிபதி, சந்திரன் அல்லது 11-ஆமதிபதி இடம்பெற "நண்பேன்டா' என நீடித்து நிலைக் கும். சீரான நட்புக்கு, லக்னாதிபதி மற்றும் புதன், சுக்கிரன், குரு ஆகிய சுபகிரகங்கள் தங்களுக்குள் ராசிகளைப் பங்கிட்டுக் கொண்டு நிற்கவேண்டும். அப்படிப்பட்ட நிலை கிரகங்களுக்குள் அதிகமாக ஏற்பட, ஆழமான, பிரிக்கமுடியாத, கருத்து வேறுபாடு ஏற்படுத்தாத, நீடித்து நிலைக்கும் நட்பாக அமையும் என்பது உறுதி.

செல்: 97891 01742

bala290722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe