வாரத்தின் ஆறாவது நாளான வெள்ளிக்கிழமை சுக்கிரனின் பூரணமான ஆளுமைக்குட்பட்ட நன்னாளாகும்.

இது பொன், பொருள், சுபிட்சம் போன்றவற்றை அள்ளி வழங்கும் மங்களகரமான சுக்கிர வாரமாக தமிழ் மக்களிடையே கடைப்பிடிக்கப்படுகின்றது.

மாபெரும் இந்த பிரபஞ்சம் உருவானதும், பின் பிரளயத்திற்கு உட்பட்டதும், இந்த வெள்ளிக்கிழமையில்தான் என்கின்றன புராணங்கள். இந்த நன்னாளில் திருமணம் சார்ந்த தடை, தாமதங்களையும், வாழ்வியல் பயணத்தில் செல்வச் செழிப்பையும் எவ்வாறு ஒருங்கே அடைவது என்பதை பரிகாரங்களுடன் காணலாம்.

வெள்ளிக்கிழமை, பரணி, பூரம், பூராட நட்சத்திரங்கள், ரிஷபம், துலாம், ராசி, லக்னங் கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த வர்கள் சுக்கிரனின் நேரடி ஆளுமைக்குக் கீழ் உள்ளவர்கள் ஆவர். பிருகு முனிவரின் புதல்வரும், மகாலட்சுமித் தாயாரின் சகோதரருமான, சுக்கிர பகவான் அசுர குலத்தின் ஆளுமைக்குரிய குலகுருவாகும்.

ஒருவருக்கு செல் வாக்கு, சொல்வாக்கு, அழகு, ஆற்றல், ஈர்ப்பு, ஆளுமை, கௌரவம் போன்றவற்றை அளிக்கும் ஆற்றல் காலபுருஷனுக்கு இரண்டு மற்றும் ஏழாம் இடத்திற்கு பொறுப்பேற்றுள்ள சுக்கிரனுக்கு உரித்தானதாகும்.

முகம், கண்கள், போன்றவற்றின் வசீகரத்தை தன்வயப்படுத்தி ஆளும் செல்வ கிரகம் சுக்கிரன் ஆகும்.

அதோடு சுக்கிரன் தான் களத்திரகாரகன் ஒரு ஜாதகத்தில் இந்த சுக்கிரன் நிலையை வைத்துதான் அவர்களுக்கு அமையப்போகும் இல்லறத் துணையைக் கணிக்கமுடியும். இதற்கு அவர்களின் இரண்டு மற்றும் ஏழாம் அதிபதியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வாமன அவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தி மூன்று அடி மண் தானமாகத் தருவதைத் தடுக்க முயன்ற சுக்கிரன், கமண்டலத்தின் துவாரத்தில் வண்டாக அடைத்து நீரை தடுத்து நின்றதால் கமண்டல துவாரத்தில் தர்ப்பைப் புல்லால் பெருமாள் குத்தியதாகவும், இதனால் சுக்ராச்சாரியாரின் கண் பழுதுபட்டு பார்வை இழந்ததாகவும் புராணங்களில் சான்றுகள் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ss

இதனால்தான் சுக்கிர மூடமாகும் நாளில் திருமணம் நடத்தப்படுவதில்லை.

மேலும் பழுதுபட்ட பார்வையை சரிசெய்ய திருவெள்ளியங்குடி ஆலயத்தில் சரணடைந்ததாகவும் அதன்மூலம் குணம் பெற்றதாகவும் புராணங்களில் கூறப் பட்டுள்ளன.

ஜாதகத்தில் மாந்தியானவர் சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் ஆகியவற்றில் பயணித்தாலோ, மாந்தி சுக்கிரன் இணைவு இடம்பெற்றாலோ, அந்தக் குலத்தில் பிறந்த பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களுக்கு அளவே இல்லை. அதோடு அந்த குடும்பத்திற்கு வாழ்க்கைப்பட்டு வரும் பெண்களின் நிலையும் கவலைக்கிடமாக அமைந்துவிடுகின்றது.

Advertisment

ஆண்களின் ஜாதகத்தில் இந்த இணைவானது பெண்களிடையே அவமானப் படும் சூழலையும், பெண்களால் பிரச்சினைகளை அனுபவிக்கும் சூழலையும் உருவாக்கி விடுகின்றது.

ஒரு ஜாதகத்தில் இந்த வெள்ளி என்கின்ற சுக்கிரன் ஆற்றல் அளப்பரியதாகும். இவரின் தசை ஒருவரை அற்புதமான செல்வ நிலைக்கு இட்டுச்செல்லும். இவரின் தசையான 20 வருடங்கள்தான் அதிகபட்ச தசையாகும்.

சுக்கிர தசை கடக ராசிக்கு மட்டும் முழு சிறப்பை அளிக்காமல் பாதகத்தையும், சேர்த்து அளிக்கின்றது. இதில் மீனம் மற்றும் தனுசுவும் உள்ளடக்கம்.

Advertisment

இந்த சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் நீசம், 6, 8, 12 பாதகம் போன்ற இடங்களில் தன்னை நிலைநிறுத்தும்பட்சத்தில், சுக்கிரன் வழங்கக்கூடிய திருமணம், செல்வ வளம் போன்றவை தடைப்பட்டு நிற்கின்றது.

இதை சமன்படுத்த, சில பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும் நமது ஜோதிட வியலில் அமைக்கப்பட்டுள்ளது.

செய்யக்கூடியவை

வீட்டிற்கான தானியங்களை வாங்கலாம்.

வெள்ளி மற்றும் தங்க நகைகள் வாங்கலாம்.

ஆடைகள் வாங்குவது சிறப்பு.

குலதெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.

ஊர் தெய்வங்களின் அபிஷேக ஆராதனைகளை இந்தநாளில் செய்து மகிழலாம்.

பெண்கள் எண்ணெய்க் குளியல் மேற்கொள்வது சிறப்பு.

செய்யக்கூடாதவை

நிச்சயமாக ஆபரணங்கள் கடன் கொடுக்கக்கூடாது.

ஆபரணங்களை அடகுக் கடையில் வைக்கக்கூடாது.

நகம் மற்றும் முடி வெட்டுதல் அறவே தவிர்ப்பது நல்லது.

வெள்ளி இரவு தயிர் பயன்படுத்தக் கூடாது.

வீட்டில் மாலை வேலையில் ஆறு நெல்லிக்கனிகளில் நெய்தீபம் போடுவது மகாலட்சுமியின் வரவை உறுதிப்படுத்தும்.

நெல்லிக்காய் சாதம் பிரசாதமாகப் படையல் இட்டு தானம் வழங்க வீட்டில் தடைப்பட்டுவந்த சுப நிகழ்வுகள் நடந்தேறும்.

அத்தி மரத்தின் அடியில் ஆறு நெய் தீபகங்கள் மொச்சையைப் பரப்பி 11 வெள்ளிக்கிழமைகளில் ஏற்றிவர திருமணம் சார்ந்த தடைகள் அகலும்.

ஆறு வெள்ளைத்துணிகளில், சோம்பு, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை சிறு மூட்டைகளாகக் கட்டி கல்லாப்பெட்டி மற்றும் பணப் பெட்டிகளில் வைக்க தன வரவு தாராளமாக இருக்கும்.

ஊரின் எல்லையில் அமையப்பெற்ற கன்னி தெய்வங்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வைத்துப் படையலிட்டு அங்கேயே தானம் செய்துவிட்டு வீடு திரும்ப நெடுநாள் தடைப்பட்ட திருமணம் நடக்கும்.

வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி திதி இணைந்து வரும்நாளில் இரவு எட்டு மணிக்குமேல் சமையலறையில் ஒரு வாழை இலையில் சர்க்கரைப் பொங்கல், மூன்றுவிதமான இனிப்பு ஆகியவற்றுடன் காதோலை கருகமணி, மருதாணி, வளையல், குங்குமம், மஞ்சள் ஆகியவற்றை வைத்து படையலிட்டு ஒரு பெரிய பாத்திரத்தை போட்டு மூடிவிடவேண்டும். இதை மறுநாள் காலையில் ஏரி அல்லது குளத்தில் போட்டுவிட வேண்டும். இதனால் ஜாதகத் தில் சுக்கிரன், மாந்தி இணைவு, சுக்கிரன் நீசம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள அந்த குலத்தில் பிறந்த பெண்கள் அனுபவிக்கும் இன்னல்கள், தடைகள், தாமதங்கள், அனைத் தும் நீங்கி பெரும் சுபிட்சமான தன்மை நிலவும்.

செல்: 80563 79988