நான்காமிடம் தாயாரைக் குறிக்கும் ஸ்தானம். தாயானவள் எத்தனைப் பிள்ளைகள் பெற்றாலும் அத்தனைப் பேருக்கும் அன்பை சரிசமமாகக் கொடுப்பாள் என்பது, நம் தாயாரை உயர்த்திப் பேசுவதற்காக சொல்லப்படுவதுதான். நிஜத்தில் பலர், ""என் தாயாருக்கு என்மேல் அன்பில்லை; எல்லாம் என் சகோதரத்தின்மீதுதான்'' என தாய்மீது சரமாரியாகக் குற்றச்சாட்டுகளைச் சொல்லி, தாயாரை நம்மிடம்விட்டு கவனிக்கவைத்து விடுவார்களோ என பயந்து தாயாரைப் பழிப்பார்கள்.
அதேபோல் சிலர் தன் தாயார்மீது எவ்வளவு அன்புவைத்து கவனித்துவந்தாலும், ""என்னத்த கவனிச்சிட்டான்'' என பிள்ளையைக் குறைசொல்லிக்கொண்டே இருக்கும் தாயும் உண்டு. ""அவனாவது எனக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்தான். அவனாவது எனக்கு...'' என எதையாவது சொல்லி பிள்ளைகளுக்குள் சண்டை ஏற்படுத்தி வாழ்பவர்களும் உண்டு. மருமகளைப்பற்றி மகனிடம் கோள்சொல்லிக் குடும்பத்தைக் கெடுத்த தாய்களும் உண்டு.
இன்று பல பெற்றோர்கள் தனக்கு வேண்டியதை பிள்ளைகள் செய்தாலும் திருப்தியில்லாமல் பேசுவதை வழக்கமாக்கி விட்டார்கள். முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளுக்கு இருக்கும் மதிப்பு உடனிருந்து கவனிக்கும் பிள்ளைகளுக்கு இருப்பதில்லை. தான் பெற்ற மகளை வாழவைக்க, மருமகள்களின் வாழ்க்கையைக் கெடுத்த தாயார்களும் பலருண்டு.
நான்காமிடம்
நான்காமிடத்திற்கு பாவகிரகங்களால் பாதிப்பு, நான்காமதிபதி மூன்று, ஆறு, எட்டு, பன்னிரண்டில் மறைந்தால் தாயார் இழப்பு, தாயாரால் அவமானம், தாயாரே எதிரியாதல், தாயார் நோயில் விழுந்து அதனால் விரயம் என பலவகைத் தொல்லைகள் ஏற்படும். பொதுவாக பாவகிரகங்கள் சுக ஸ்தானமான நான்கில் இருப்பது நன்மைகளைத் தராது.
நான்காமிடம், நான்காமிடத்ததிபதி நல்ல நிலையிலிருந்தால் தாயின் பூரண அன்பு, தாயாரின் ஒழுக்கமான நடத்தை, உயர்கல்வி கற்றல், ஆடம்பர வீடு, வாகனம், சொகுசான வாழ்க்கை, புகழ், செல்வச் சேர்க்கை என அனைத்து சுகங்களும் கிடைக்கும். நான்காமிடம் பெறும் சுபத்தன்மையைப் பொருத்து சுகத்தின் உயர்வான நிலையின் அளவீடு இருக்கும்.
நான்காமிடம் நல்ல நிலையிலிருந்து அதன் தசாபுக்திக் காலங்கள் வந்தால் குடிசையில் இருப்பவனையும் மாளிகையில் வாழவைக்கும். பணக்காரனாகிவிட்டாலே உறவினர்கள் ஒட்டிக்கொள்வர். சொந்தங்களிடம் மதிப்பு, மரியாதை கூடும். தாயாருக்குப் பெருமை சேரும். நான்காமிட கிரகம் பத்தாமிடத்தைப் பார்ப்பதால் மாமியார் ஆதரவு ஏற்படும். மருமகன் தன் மகளை சந்தோஷமாக வைத்துக்கொண்டால் எந்த மாமியாரும் மருமகன
நான்காமிடம் தாயாரைக் குறிக்கும் ஸ்தானம். தாயானவள் எத்தனைப் பிள்ளைகள் பெற்றாலும் அத்தனைப் பேருக்கும் அன்பை சரிசமமாகக் கொடுப்பாள் என்பது, நம் தாயாரை உயர்த்திப் பேசுவதற்காக சொல்லப்படுவதுதான். நிஜத்தில் பலர், ""என் தாயாருக்கு என்மேல் அன்பில்லை; எல்லாம் என் சகோதரத்தின்மீதுதான்'' என தாய்மீது சரமாரியாகக் குற்றச்சாட்டுகளைச் சொல்லி, தாயாரை நம்மிடம்விட்டு கவனிக்கவைத்து விடுவார்களோ என பயந்து தாயாரைப் பழிப்பார்கள்.
அதேபோல் சிலர் தன் தாயார்மீது எவ்வளவு அன்புவைத்து கவனித்துவந்தாலும், ""என்னத்த கவனிச்சிட்டான்'' என பிள்ளையைக் குறைசொல்லிக்கொண்டே இருக்கும் தாயும் உண்டு. ""அவனாவது எனக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்தான். அவனாவது எனக்கு...'' என எதையாவது சொல்லி பிள்ளைகளுக்குள் சண்டை ஏற்படுத்தி வாழ்பவர்களும் உண்டு. மருமகளைப்பற்றி மகனிடம் கோள்சொல்லிக் குடும்பத்தைக் கெடுத்த தாய்களும் உண்டு.
இன்று பல பெற்றோர்கள் தனக்கு வேண்டியதை பிள்ளைகள் செய்தாலும் திருப்தியில்லாமல் பேசுவதை வழக்கமாக்கி விட்டார்கள். முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளுக்கு இருக்கும் மதிப்பு உடனிருந்து கவனிக்கும் பிள்ளைகளுக்கு இருப்பதில்லை. தான் பெற்ற மகளை வாழவைக்க, மருமகள்களின் வாழ்க்கையைக் கெடுத்த தாயார்களும் பலருண்டு.
நான்காமிடம்
நான்காமிடத்திற்கு பாவகிரகங்களால் பாதிப்பு, நான்காமதிபதி மூன்று, ஆறு, எட்டு, பன்னிரண்டில் மறைந்தால் தாயார் இழப்பு, தாயாரால் அவமானம், தாயாரே எதிரியாதல், தாயார் நோயில் விழுந்து அதனால் விரயம் என பலவகைத் தொல்லைகள் ஏற்படும். பொதுவாக பாவகிரகங்கள் சுக ஸ்தானமான நான்கில் இருப்பது நன்மைகளைத் தராது.
நான்காமிடம், நான்காமிடத்ததிபதி நல்ல நிலையிலிருந்தால் தாயின் பூரண அன்பு, தாயாரின் ஒழுக்கமான நடத்தை, உயர்கல்வி கற்றல், ஆடம்பர வீடு, வாகனம், சொகுசான வாழ்க்கை, புகழ், செல்வச் சேர்க்கை என அனைத்து சுகங்களும் கிடைக்கும். நான்காமிடம் பெறும் சுபத்தன்மையைப் பொருத்து சுகத்தின் உயர்வான நிலையின் அளவீடு இருக்கும்.
நான்காமிடம் நல்ல நிலையிலிருந்து அதன் தசாபுக்திக் காலங்கள் வந்தால் குடிசையில் இருப்பவனையும் மாளிகையில் வாழவைக்கும். பணக்காரனாகிவிட்டாலே உறவினர்கள் ஒட்டிக்கொள்வர். சொந்தங்களிடம் மதிப்பு, மரியாதை கூடும். தாயாருக்குப் பெருமை சேரும். நான்காமிட கிரகம் பத்தாமிடத்தைப் பார்ப்பதால் மாமியார் ஆதரவு ஏற்படும். மருமகன் தன் மகளை சந்தோஷமாக வைத்துக்கொண்டால் எந்த மாமியாரும் மருமகனைப் புகழவே செய்வார்.
பெரிய மாளிகைவீடு, சொகுசான கார், தேவையான பணம் என அனைத்து சுகமும் ஒருவனுக்குக் கிடைத்துவிட்டால் அவனைப் புகழாமல் இருப்பார்களா? அந்த யோகத்தை நான்காமிடத்தின் தன்மையை வைத்தே அறியமுடியும். நான்காமிடத்தில் அமரும் சுபகிரகங்கள் நன்மையையும், பாவகிரகங்கள் தொல்லை யையும் தரவே செய்யும். சிலருக்கு நான்காமிட சுபகிரகம் தீமைசெய்யும். அவரவரின் லக்னத்தைப் பொருத்து நான்கில் நின்ற கிரகங்களின் பலன் இருக்கும்.
சூரியன்
உஷ்ண கிரகமான சூரியன் நான்கில் இருப்பது சுகத்தைக் கெடுக்கும். தந்தையால் நன்மைகள் குறைவு. பெற்றோர்களுக்கு பாதிப்பைத் தரும். வீடு, வாகனங்களால் அடிக்கடி தொல்லைகளை அனுபவிக்கநேரும். ரிஷப லக்னத்திற்கு சூரியன் ஆட்சிபெற்று பலமாக இருந்தால் அரசாங்கத்தால் நன்மை கிடைக்கும். கடக லக்னத்திற்கு சூரியன் நீசம்பெற்றால் அரசாங்கத்தால் வரும் ஆதாயத்தில் குறைவுண்டு. தந்தையுடன் மன சங்கடங்களைத் தரும். மகர லக்னத் திற்கு நான்கில் சூரியன் உச்சம்பெறுவது உடல்ரீதியான தொல்லைகளை அனுபவிக்கச் செய்யும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தைத் தந்துவிடும். தலைமைக் கோளான கேந்திர சூரியன் பெரும்பாலும் நன்மைகளையே செய்வார். பெண்களுக்கு சூரியன் நான்கில் அமைவது நல்லதல்ல. கருத்தங்கவிடாமல் தடுப்பார். சுபகிரகப் பார்வை இருந்தால்தான் பாதிப்பைக் குறைக்கும்.
சந்திரன்
குளிர்ச்சியான கிரகமான சந்திரன் நான்கில் இருப்பது தாயாருக்கு நன்மை தராது. காரக கிரகமான சந்திரனுக்கு சுபகிரகப் பார்வை ஓரளவு நன்மைதரும். சுபத்தன்மை பெற்ற சந்திரன் குருச்சந்திர யோகம், சந்திரமங்கள யோகத்தைத் தருவார். மேஷ லக்னத்திற்கு சந்திரன் ஆட்சி பெறுவது அதிர்ஷ்ட யோகத்தைத் தரும். கும்ப லக்னத் திற்கு உச்சம்பெறுவதால் சில தடைகள் வந்தாலும் நல்ல வீடு, வாகன சுகத்தையே தரும். சிம்ம லக்னக்காரர்களுக்கு சந்திரன் நீசமடைவது நன்மையைத் தரும். சுக ஸ்தானமான நான்கில் சந்திரன் இருப்பது அடிக்கடி ஏற்ற- இறக்கத்தைத் தரும். நிலையற்ற தன்மை தரும். பாவகிரக சம்பந்தம், பார்வை, சேர்க்கையானது தாயாரின் சந்தோஷத்தைக் கெடுக்கும். தாயார் அவப்பெயர், நோய், எதிரி, கடனால் பலவிதத் துன்பத்தை அனுபவிப்பார். சொந்தவீட்டில் இருப்பவர் வாடகைவீட்டிற்கும், வாடகைவீட்டில் இருப்பவர் சொந்தவீட்டிற்கும் செல்லக்கூடிய வாழ்க்கையைக் கொடுக்கும். நல்ல நிலையில் இருந்தால் சொகுசான வாகனங்கள், கற்பனை செய்தது போன்ற வீடு கிடைத்தல், நல்ல புகழ், செல்வச் சேர்க்கையைத் தரும்.
செவ்வாய்
நான்கில் செவ்வாய் இருப்பது தோஷத்தைத் தரும். குடும்ப வாழ்க்கையில் சுகத்தைக் கெடுக்கக்கூடியதாக இருக்கும். வீடு, வாகனம் சரிவர அமையாது. பிடிக்காத வீட்டில் குடியிருக்க நேரும். நெருங்கிய உறவினர், சொந்த பந்தங்களுடன் பகையைக் கொடுக்கும். வாழ்க்கைத்துணையை அடிக்கடி பிரியநேரும். அனைத்தும் இருந்தும் அனுபவிக்கமுடியாத சூழல் ஏற்படும். மேஷ லக்னத்திற்கு செவ்வாய் நீசம்பெறுவது நிலம் சம்பந்தமான பிரச்சினை, வீடு, வாகனத்தால் நஷ்டத்தை ஏற்படுத்தும். சிம்ம, மகர லக்னத்திற்கு பாதகாதிபதி செவ்வாய் நான்கில் பலம்பெறக் கூடாது. துலா லக்னக்காரர்களுக்கு நான்கில் செவ்வாய் உச்சம்பெறுவது நல்லதல்ல. நான்கில் செவ்வாய் கெட்ட பெயரை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்கள் பழக்க வழக்கத்தில் கவனமுடன் இல்லையென்றால், கணவருடன் மனஸ்தாபத்தையே தரும். புகழைக் கெடுக்கும். பாவகிரகச் சேர்க்கை, பார்வை குணக்கேட்டைத் தந்துவிடும். இல்லற சுகம் கிடைக்காது. குரு பார்வை, சேர்க்கை ஓரளவு நன்மை தரும். குருமங்கள யோகத்தால் திடீர் பெயர், பணம், புகழ் கிடைக்கும்.
புதன்
நான்கிலுள்ள புதன் அனைத்துவிதமான கலைகளையும் கற்றுத்தரும். உயர்கல்வி யோகமுண்டு. பல்கலை வித்தகர். ஆழ்ந்த சிந்தனைத் திறன் படைத்தவர். படித்ததை நடைமுறைப்படுத்த எண்ணுவார். யாரிடம் எப்படிப் பேசவேண்டுமென்னும் நுணுக்கத்தை செயல்படுத்துவார். கல்வியால் யோகமுண்டு. வீடு, மனையால் அதிர்ஷ்டம் பெறுவார். தாயாருக்கு நற்பலன் உண்டு. நல்ல அறிவாளியான, குடும்பத்தை நடத்தும் ஆற்றல்பெற்ற, அடுத்தவர் மனம்புரிந்து நடக்கக்கூடிய தாயார் கிடைப்பார். சொகுசான வாகனம், நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். மீன லக்னக்காரர்களுக்கு புதன் நான்கில் பலம்பெறுவது நல்லதல்ல. மிதுன லக்னக் காரர்களுக்கு புதன் நான்கில் ஆட்சி, உச்சம் பெறுவது புகழைத்தரும். தனுசு லக்னத்திற்கு புதன் நீசம் நன்று. புதனுக்கு பாவகிரகப் பார்வையால் தீமை அதிகம் நடக்காது. விபரீத ராஜயோகத்தால் நன்மைகள் நடக்கும்.
குரு
நான்கில் குரு இருப்பது நல்ல கல்விஞானத்தைக் கொடுக்கும். பள்ளிக்குச் செல்லவில்லையென்றாலும் அறிவாளி. எதையும் யோசித்துப் பேசுவார். நல்ல வீடு, வாகனம், தாயார், சுகம், புகழ், உறவினர் கள் என அனைத்தும் தரும். கன்னி லக்னத் திற்கு நான்கில் இருக்கும் குரு நன்மை செய்யமாட்டார். ஞானத்தைக் கொடுத்தாலும் பயன்படுத்தத் தெரியாத முட்டாளாக இருப்பர். தனுசு லக்னத்திற்கு குரு நல்ல வீடு, வாகன சுகத்தைத் தருவார். நல்ல கல்வி, தொழில், பெயர், புகழ் பெற்றுத்தருவார். துலா லக்னக்காரர்களுக்கு நான்கில் குரு நீசம்பெற்று அதன் தசையில் நன்மையே தருவார். மேஷ லக்னக்காரர்களுக்கு நான்கில் குரு உச்சம்பெறுவதால் ஜாதகர் நல்ல புத்திசாலியாக இருப்பார். ஆனால் கொஞ்சம் தடுமாறினா லும் வீண் விரயங்களை சந்திக்கநேரும். மற்ற லக்னக்காரர்களுக்கு குரு நான்கில் இருப்பது பெரும்பாலும் நன்மையே.
சுக்கிரன்
சுக்கிரன் நான்கில் அமர்வது ஆடம்பரமான வாகனம், அலங்கார வீடு, உறவினர்கள் ஒற்றுமை, ஆதரவு, தாயாரால் நன்மை, தாயாருக்கு நன்மை, பெண்களால் அனைத்து வித சந்தோஷங்கள், ஊர்போற்றும் மக்கள் ஆதரவு, மக்களால் விரும்பப்படுதல், கலைகளால் லாபகரமான தொழில், எதிர்பாராத அதிர்ஷ்டம், திடீர் முன்னேற்றம், சுகபோக வாழ்க்கை, மாமனார்- மாமியார் ஆதரவு, கல்வியில் நல்ல தேர்ச்சி, கலைக்கல்வியால் நல்ல தொழில், புகழ் கிடைக்கும். துன்பங்கள் குறைவே. பாவகிரகப் பார்வையால் வெளிநாட்டுத் தொடர்பு, வெளிநாடு சென்று வரக்கூடிய யோகம் கிடைக்கும். கும்ப லக்னத்திற்கும், கடக லக்னத் திற்கும் பாதகாதிபதி சுக்கிரன் ஆட்சிபலம் பெற்றாலும், மிதுன லக்னத்திற்கு சுக்கிரன் நீசம்பெற்றாலும், தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் உச்சம்பெற்றாலும் பெரிய கெடுதல் செய்யாது. ஆனால் தாய்- தந்தையை ஏதாவதொரு வகையில் பாதிக்கும். செவ்வாய், சுக்கிரன் இணைவு, பார்வை போன்ற பாவகிரகத் தொடர்பானது சமூகத்தில் கெட்டபெயரைக் கொடுத்துவிடும்.
சனி
நான்கில் சனி இருப்பது தாயாருக்கு அதிக கஷ்டத்தையே தரும். நிலையில்லாத வீடு, அடிக்கடி இடமாற்றம், தாயாருக்கு நெருக்கடி, தாயாருக்கு கண்டம், தாயாரின் புகழுக்குக் களங்கம், உயர்கல்வியில் தடை , பட்டக்கல்வியில் மந்தம், பட்டயக் கல்வி படித்தல், தொழிற்கல்வி கற்கும் யோகம் பெறுவர். சுகக்குறைவு ஏற்படும். வயிறு சம்பந்தமான நோய் ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகள், அறுவைசிகிச்சை உண்டாகும் வாய்ப்பும் ஏற்படும். உறவினர்களால் நெருக்கடி, நன்றியில்லாத சொந்தபந்தம், தொழில்தொடர்பான தொல்லைகள் ஏற்பட்டு நாய்படாத பாடு படவைக்கும். வீடு, மனைகள் சம்பந்தமாக நீதிமன்றத் தைத் நாடவேண்டிவரும். வாகனங்கள் அடிக்கடி பழுதாவது, விபத்துக்குள்ளாவது தேவையற்ற வீண் செலவுகளையும், மன உளைச்சலையும் தரும். துலா லக்னத்திற்கு நான்கில் உள்ள சனி, எதிர்பாராத அதிர்ஷ்ட யோகத்தால் வீடு, வாகனம், புகழ், அந்தஸ்து, பணத்தைத் தந்துவிடுவார். விருச்சிக லக்னத் திற்கு நற்பலனையும், மகர லக்னத்திற்கு சனி நான்கில் நீசமாவது தீமையையும் தரும். கடக லக்னத்திற்கு நான்கில் சனி உச்சமாவது பெரிய நன்மை தராது.
ராகு
நான்கில் ராகு தந்தையின் தந்தையை பாதிக்கும். தாய்- தந்தைக்கு நினைத்த வாழ்க்கை கிடைக்காது. கடும் மனப்போராட்டத்திற்கு ஆளாவார்கள். நான்கில் ராகு இருந்தால் தாயாரை அசிங்கப்படுத்தும். எவ்வளவு நல்லவராக, திறமையானவராக, ஒழுக்கமானவராக தாய் இருந்தாலும், தேவையற்ற சின்னச்சின்ன விஷயத்திற்கெல்லாம் "சிடுமூஞ்சி'யென்று பெயரெடுப்பார். வீடு, மனையில் வில்லங்கம் ஏற்படும். தாயாரிடம் நற்பெயரெடுக்க முடியாது. காரணமின்றி கோபித்துக்கொண்டு விசேஷ காலங்களில் நோயாலோ, சண்டையாலோ சந்தோஷத்தை இழப்பார். தேவையான நேரத்தில், தேவையான சுகத்தை இழக்கநேரும். கல்வித் தடையுண்டு. ராகுதசை நடக்கும்போது திடீர்ப்பயணம், செல்வம், புகழைக் கொடுத்து, தசை முடியும்போது கெடுப்பார். கும்ப லக்னக்காரர்களுக்கு தீமையும், சிம்ம லக்னக் காரர்களுக்கு சோதனைகளையும் தருவார். பொதுவாக நான்கில் ராகு இருப்பது நல்ல தல்ல. வீடு, மனை, வாகனம், உற்றார்- உறவினர், பெயர், புகழ், அந்தஸ்தைக் கொடுத்து, ஏதாவது ஒருவகையில் கெடுத்துவிடுவார்.
கேது
நான்கிலுள்ள கேது கெட்டபிறகு ஞானத்தைத் தருவார். சுபகிரகப் பார்வை இல்லையென்றால் பெண்களுக்கு திருமணத்திற்கு முன்போ, பிறகோ கருச்சிதை வைத் தரும். கர்ப்பப்பை பாதிப்பேற்பட வாய்ப்புண்டு. பெண்கள் பழக்கவழக்கத்தில் கவனமாக இருக்கவேண்டும். உயர்கல்வியைக் கெடுக்கும். எல்லாம் தெரிந்தவராக காட்டிக் கொண்டாலும், எதுவும் தெரியாதவராக மாற்றி, கெட்டவரிடம் ஏமாறச் செய்யும். தாயாருக்கு பாதிப்பு, தாயாருக்கு ஜுரம், அதீத உடல் உபாதைகள் ஏற்டும். தாயாரின் பெயர் கெடுவது, தாயார் நோயால் பாதிக்கப்படுதல் நடக்கும். வீடு, மனையால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகி சரியாகும். பெயர், புகழ், அந்தஸ்து தாமதமாகவே கிடைக்கும். சுகக்குறைவு உண்டாகும். வீடு, வாகனம் தொல்லை கொடுக்கும். எல்லாம் கொஞ்ச காலத்திற்குப்பிறகே கிடைப்பதால், முன்பே கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என எண்ணத் தோன்றும். நான்கில் கேது உச்சம்பெற்றாலும், நீசம்பெற்றாலும் முதலில் தொல்லை தந்து பின்பே நன்மை தருவார். கேதுதசையானது சுகக்கெடுதல், வயிற்றுப்பகுதி- உணவுக் குழாயிலிருந்து ஆசனவாய்வரை தொல்லையே அதிகம் தருகிறது. வெகுசிலருக்கே நன்மைகளையும், சுபகிரகப் பார்வையால் கோடீஸ்வரராகவும் மாற்றியிருக்கிறது.
செல்: 96003 53748