தற்காத்து உயர்வடைய பரிகாரங்கள்!
பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை
விகாரி வருடம், ஐப்பசி 11-ஆம் நாள் (28-10-2019) திங்கள் இரவு 3.42 மணிக்குமேல் (29-102019) குரு பகவான் மூல நட்சத்திரம் 1-ஆம் பாதம் தனுசு ராசிக்கு மாறுகிறார் என்பது ஏகோபித்த செய்தி. இதில் கடகம், சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிகள் போதிய பலன் தராதவை என்பதால், அந்த ராசியினரின் விவரத்தை சுருக்கமாகக் காண்போம்.
குரு பகவான் எவரிடமும் பகையுணர்வோடு செயல்படுபவரல்ல. இருப்பினும், மேற்கண்ட ராசியினர் பரிகாரத்தால் பக்குவப்படுத்திக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல; 2020 மார்ச், மே, ஜூன், செப்டம்பர், நவம்பர், 2021 ஜூலை ஆகிய மாதங்களில் குரு வக்ரம், வக்ர நிவர்த்தி நிகழும் என்பதையும் மனதில் கொள்வோம்.
குருவின் மகத்துவம்
நவகிரகங்களில் மிகமிக நல்லவர், வல்லவர் என்று பிரசித்தி பெற்றவர் பிரகஸ்பதி எனும் வியாழ பகவான். இவர்தான் தேவர்களுக்கே குருவாக இருந்து பாராட்டு பெற்றவர். குரு பகவான் காசியில் கடுந்தவம் புரிந்து சிவன் அருளால் தேவகுரு என்ற உயர்பதவியை மட்டுமல்ல; கிரகப்பதத்தையும் பெற்றவர். நவகிரக நாயகர்களில் அதிசுபராகப் பெருமைப்படுத்தப்படுபவர். ஒரு ராசியை ஓராண்டுக் காலத்தில் கடப்பார். ராசி மண்டலத்தில் 9, 12-ஆம் ராசிகளான தனுசு, மீனத்தில் ஆட்சியும், கடக ராசியில் உச்சமும் பெறு பவர். மகரத்தில் நீசமாகிவிடுகிறார். இவர் இருக்கும் ராசியிலிருந்து 5, 7, 9-ஆம் ராசிகளைப் பார்க்கும் சக்தி படைத்தவர்.
குருப்பெயர்ச்சியும் கடக ராசியும்
ஜோதிட அபிமானிகளே, இத்தனை நாள் விருச்சிகத்தில் இருந்த குரு பகவான் தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். அது உங்கள் ராசிக்கு 6-ஆவது இடம்.
அங்கு சனி இருக்கிறார். இவருடன் கேது இருப்பார்.
அத்துடன் குருவும் இணைகிறார். மார்கழியில் சூரியனும் இணைவார். இதன் நன்மை- தீமைகள், அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை மிகச்சுருக்கமாகக் காண்போம்.
பொதுவாக குரு பகவான் 6-ஆம் இடத்தில் இருந்தால், கலையார்வம், இசையின்மேல் ஆசை, அழகிய மனைவி, எதிரியை ஆற்றலால் கட்டுப்படுத்தும் தன்மை, வாகன சுகம், சுதந்திரமாக- எவரிடமும் அடிபணியாத வேலைவாய்ப்பு, வியாபாரம், மகன், பேரன், அண்டை அயலாருடன் நெருக்கமான உறவு, எதிர்பாரா பல நன்மைகள் தருபவர்.
இந்த ஆறாவது இடப

இந்த ஆறாவது இடப்பெயர்ச்சி தரும் பின்னடைவுகள்: உடம்பில் சோம்பல் தொற்றிக்கொள்ளும்.
ஜலதோஷம், மூக்கடைப்பு போன்ற உடல் உபாதைகள், திடீர் கவலைகள், பிறர்மீது இனம்புரியா வெறுப்புணர்ச்சி, தாய்ப்பாசம் குறைதல், எதையுமே நம்ப இயலாத மனநிலை, தாயார் உடல்நிலை பாதிப்பு, அண்ணன்- தம்பி உறவில் விரிசல், எதிரிகளின் தொல்லை, கல்வியில் நாட்டமின்மை போன்றவை நம்மை நாடிவரும்.
பரிகாரம்
வியாழனன்று மஞ்சள் நிற ஆடைக்கு முன்னுரிமை தாருங்கள். 35 வயதைக் கடந்தோருக்கு உச்சந்தலையில் முடி குறையும். தரமான எண்ணெய்களை உபயோகிப்பது நன்று. தத்தாத்ரேயரை வணங்குதல் சிறப்பு. கல்வி தந்த ஆசிரியரை தரிசிக்கலாம். இயன்றவர்கள் சுதர்சன ஹோமம் செய்வது சிறப்பானது. வியாழனன்று உபவாசம், ஏகாதசி விரதம் நன்று.
மஞ்சள் நிறப்பழங்கள் தரும் செடிக்கு நீர் பாய்ச்சலாம். அரச மரத்தை 18 முறை சுற்றுவதும் போதுமானது. வெள்ளைப்பசு, வெள்ளைத்துணி (காட்டன் சில்க்), நறுமணம் தரும் சந்தன எண்ணெய், மஞ்சள் பூவுக்கு முக்கியத்துவம் தருதல் நன்று. திருமணத்தடை நீங்க புஷ்பராக மோதிரம், டாலர் அணியலாம். வியாழனன்று தங்கத்தை தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரை அருந்துவதும் நல்லது. குங்குமப்பூ, மஞ்சள்தூள் இரண்டையும் கலந்து நெற்றியில் திலகமிடலாம். குடும்ப புரோகிதர்களுக்கு தானம், தர்மம் செய்யலாம். கருடபுராணம் வாசிப்பது நன்று. கடவுள் பெயரால் பணத்தை வசூலித்துப் பொது நிகழ்ச்சி செய்வதைத் தவிர்க்கவேண்டும். குடும்பத்தில் சிறுவயதில் உயிர்பிரிந்தோருக்கு வியாழனன்று அவர்கள் விரும்புவதைப் படையலாகச் செய்யலாம். பட்டுப்போகும் நிலையிலுள்ள செடிக்குத் தண்ணீர் ஊற்றுதல் மிக நல்லது.
குருப்பெயர்ச்சியும் சிம்ம ராசியும்
குருவானவர் உங்களுடைய ராசிக்கு 5-ல்- அதாவது தனுசில் இருக்கிறார். பொதுவில் ஜாதகத்தில் குரு 5-ல் இருந்தால் கிடைக்கப்பெறும் நன்மைகள்:
பார்ப்பதற்கு மன்மத ராஜாவாகவும், அதிபுத்தி சாலியாகவும் இருப்பார்கள். இளகிய மனது. தொடர்ச்சியாகப் பேசி பிறரைக் கவரும் தன்மை காணப்படும். தொலைக்காட்சி, வானொலியில் சரளமாகப் பேசும்- தடையின்றி கருத்துகளை அள்ளிவீசும் நபராக இருப்பார்கள். நல்ல செய்திகளை நயமாகச் சொல்லும் எழுத் தாளர்களாகவும் திகழலாம். பன்மொழிப் புலவர் பட்டம் பெறலாம். பிறருக்கு போதிக்கும் வல்லமை, கல்வியில் திறமை, நேர்மையான சம்பாத்தியம், பெற்ற மகனால் பெருமை, சிலருக்கு அதிக ஆண் சந்ததிகள், யோகா, தியானத்தில் தனித்தன்மை, ஆர்வம் என இத்தனையும் தரவேண்டிய குரு பகவான் 5-ல் சனி, ராகுவோடு சிலகாலம் இருப் பார். மகரத்திற்கும் இடையிடையே இடம் மாறுவார்.
ஆகவே இந்த குருப்பெயர்ச்சி மேலே தரப்பட்ட தனித்தன்மையில் தடம்புரளச் செய்யும். அதாவது பின்னடைவு வரும்.
அதற்குரிய பரிகாரத்தைக் கடைப்பிடித்தால் தப்பிக்கலாம்.
பரிகாரம்
விநாயகப் பெருமானைத் தவறாது வணங்கவேண்டும். கடவுளின் பெயரால் போலி ரசீது உருவாக்கி நன்கொடைகள் வசூலிப்பதும், இறைவனை மேற்கோள் காட்டி பாவச்செயல் செய்வதும் கூடாது. விரோதிகள் தொல்லை மிகுதியாகும். மன அமைதி கெடும். குருவுடன் கேது இருப் பதால் ஓரளவு நன்மை பெறலாம். கருப்பு, வெள்ளை கலந்த நான்குகால் பிராணிக்கு உணவூட்டல் மிக நன்று. வியாழக் கிழமை, வசதியில்லா திருமணமாகாத பெண்களுக்கு தாலி செய்ய உதவுவது நல்ல பரிகாரம். இயலாதோர் மஞ்சள்நிற பட்டு (முகூர்த்தப் பட்டு) தானம் செய்தால் குடும்பம் தழைக்கும்.
குருவைச் சார்ந்த விரதங்களை 5 அல்லது 11 அல்லது 43 நாட்கள் கடைப்பிடிக்கலாம். விஷ்ணுவின் பாதம்மீது தலைவைத்து வணங்குதல் மிக நன்று. வியாழனன்று மஞ்சள் நிற நூலில் மஞ்சள் துண்டை முடிந்து, குரு ஹோரையில் வலது கையில் கட்டுதல் நல்லது. மஞ்சள்நிறப் பொருட்களை தானமாகப் பெறுதல் கூடாது. வியாழனன்று துளசி இலையைத் தண்ணீரில் மிதக்கவிட்டு அந்த நீரில் குளிப்பது நன்று. தங்கம் அல்லது வெள்ளியில் குரு எந்திரம் உருவாக்கி அணிதலும் நன்று.
குருப்பெயர்ச்சியும் கன்னி ராசியும்
குரு பகவான் 4-ல் இருந்தால் புத்திக்கூர்மை, ஆராய்ச்சியில் வெற்றிகள், அரசு சார்ந்த பல நன்மைகள் கிடைத்தல், நல்ல குணம், நேர்மை, ஆன்மிக ஆற்றல், குடும்பத் தலைமைப் பொறுப்பு, குல கௌரவம், விரோதிகளை வசப்படுத்தல், பல வி.ஐ.பி.களுடன் தொடர்பு, நேர்மையான அசையா சொத்து, வாக்குவண்மை இத்தனையும் இருப்பதைக் காணலாம். உதாரணமாக, 25-12-1924-ல் பிறந்த வாஜ்பாய் ஜாதகத்தில் 4-ல் புதன், சூரியன், குரு இருப்பார்கள். 8-9-1887-ல் பிறந்த காமராஜருக்கு லக்னத்திற்கு 4-ல் குரு; துலாத்தில் சுக்கிரன் இருப்பார்.
இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசியினரின் நான்காவது இடம் தனுசு.
அங்கு கேது, சனியுடன் இவரும் இணைவார். பின்னடைவுகள்:
இந்தப் பெயர்ச்சி சில கெடுதலான முடிவுகளை எடுக்க மனம் தூண்டும். குடும்பத்தில் சூழ்ச்சி செய்து பணவரவைப் பெருக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். பெண்கள்மேல் சிற்றின்பத் தாக்கம் ஏற்படும். சிலர் வீட்டைவிட்டு, சூழ்நிலை காரணமாக சிலகாலம் பிரியநேரிடும். இளைஞர்கள் தாய்- தந்தையரின் பேச்சை உதாசீனம் செய்ய நேரிடும். மனதுக்கு உதவாத தீய எண்ணங்களின்மேல் நாட்டம் ஏற்படும். பூர்வீகச் சொத்து, முன்பு சம்பாதித்த சொத்துகள் வில்லங்கத்தை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட தன்மைகள் இருந்தாலும் பிற கிரகநாதர்களின் பார்வையால் சமநிலை அடையும்.
பரிகாரம்
இருக்கும் வீட்டில் இம்மாதம் பூஜையறை கட்டுவது, பூஜையறையை மாற்றுவது தவிர்க்கப்பட வேண்டும். நெடுநாள் வளர்ந்த அரசமரத்தைவிட சிறு அரசங் கன்றுக்குத் தண்ணீர் ஊற்றுதல் நன்று. மூத்தவர்களுக்கும், கடவுளுக்குப் பணிவிடை செய்வோருக்கும் கௌரவம் கொடுத்தல் நன்று. பஞ்சவர்ணகிளி, ஆடு ஆகியவற்றிற்கு உணவூட்டலைத் தவிர்க்கவேண்டும். மாடு வளப்போர் மாட்டை மேற்கு நோக்கி தொழுவத்தில் கட்டுவது நன்று. லாகிரி வஸ்துகளை சனிக்கிழமை உட்கொள்ளல் கூடாது. பாம்புக்கு பால் வார்க்கலாம். பாம்பு பராமரிக்கும் இடங் களுக்கு நன்கொடை தருதல் நன்று. இவை யாவும் கடைப்பிடிப்பதால் கெடுதல்களின் வேகம் தணியும்.
மகாவிஷ்ணுவை வணங்குவது, சுதர்சன ஹோமம், குரு மந்திரம், குருகவசம் கூறுதல் நன்று. 9 அல்லது 12 மல்லிகைப் பூக்களை வலது கையால் திருஷ்டிசுற்றி ஓடும் நீரில் போடுதல் மிக நன்று. மஞ்சள் பொடி, குங்குமப்பூ இரண் டையும் கலந்து பேஸ்டாக அரைத்து திலக மிடல் மிக நன்று. கருடபுராணம் படித்தல், வீட்டு வாசல் சுவரில் மஞ்சள் நிற வண்ணம் பூசுவது, பொருளாதார வசதியில்லா முதிர்கன்னிகளுக்கு உதவி, திருமாங்கல்யம் செய்து கொடுப்பது மிக நல்லது.
குருப் பெயர்ச்சியும் துலா ராசியும்
குரு பகவான் தங்கள் ராசிக்கு 3-ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். அதாவது தனுசில் ராகு, சனியோடு கூடுகிறார். இது நல்லதைச் செய்யுமா, பின்விளைவு உள்ளதா என சுருக்கமாகப் பார்ப்போம். பரிகாரமும் என்னென்ன செய்வது நன்று எனக் காண்போம்.
மூன்றாமிடத்தில் இருந்தால் நீண்ட ஆயுளைத் தருவார். பிறரை புத்திக்கூர்மையால் தன்வசப்படுத்தலாம். தான் மிகுந்த அறிவுடையவர் என பிறருக்கு வாய்ப்பு தரத்தயங்கும் சுபாவம் மேலோங்கும். சிலருக்கு வெண்கலக் குரலாக இருக்கும். புண்ணியத் தலங்களை நாடிச்செல்லும் ஆவல் நிறைந்தவர்கள். பெரியவர்களிடம் நீண்ட நட்பை விரும்புவர். சிலருக்கு கல்வி கற்கும் காலம் பல தடைகள் தொடர்ச்சியாகும். அண்ணன்- தம்பி ஆதரவு, மனைவிமேல் பிரியம் இவையெல்லாம் இருக்கப்பெறும். ஆனால் இப்போதைய குருப்பெயர்ச்சி சீராகத் தெரியவில்லை.
பின்னடைவுகள்: சொந்த புத்தி, யோசனைகள், திட்டங்கள் எல்லா வற்றிலும் தடுமாற்றம் ஏற்படும். சிலருக்கு தூக்கமின்மை தொடராகும். மனைவி, மக்கள்மீது இனம்புரியா வெறுப்பு, முன்கோபம் இவற்றோடு, கேது, சனியின் சேர்க்கையால், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறாமை- அதனால் விரக்தி வந்து மறையும்.
பரிகாரம்
துர்க்கையை வணங்குவது, வயதுக்கு வராத பெண் குழந்தைகளுக்கு கல்விக்கான உதவி- இவை நல்ல பரிகாரம். பத்து வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகட்கு இனிப்புகள் வழங்கி, அவர்களிடம் நன்மதிப்பைப் பெறுதல் நன்று. பொய் கூறுவதைத் தவிர்க்கவேண்டும். வியாழனன்று போதைப் பொருள் உட்கொள்வது கூடாது. நெருங்கிய நண்பர்களை சதிசெய்து பகைப்பது விரும்பத்தக்கதல்ல. இப்போது வயது 26 எனின், இனிமேல் நல்லவை நடக்கும். ராகுவும் சனியும் இருப்பதால் குழந்தைகளால் பேராதரவு அதிகம் கிடைக்கப்பெறும். டோபாஸ், எல்லோ சபையர், கனகபுஷ்பராக ராசிக்கல் மூன்று காரட் மோதிர விரலில் அணியலாம். இருக்கும்- வசிக்குமிடத்தில் கைக்கடிகாரம், வானொலிப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டியை, வடகிழக்குப் பாகத்தில் வைப்பதால் வாஸ்துக் குறை யிலிருந்து விடுபடலாம்.
மற்ற ராசியினருக்குப் பரிகாரமின்றி நல்லவை நடக்கும்.
வியாழக்கிழமையில் ஸ்ரீஅசிதாங்க பைரவர்
காயத்ரி மந்திரம் கூறுதல் கல்வியில் மேன்மை பெறச் செய்யும்.
"ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்...!'
ஸ்ரீபிராம்ஹி தேவி காயத்ரி மந்திரம்
"ஓம் ஹம்ஸத் வஜாயை வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ பிராம்மீ ப்ரசோதயாத்.'
வியாழக்கிழமை ராகு காலம் அல்லது மாலையில் கோவிலில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, மஞ்சள் நிற சம்பங்கி மாலை யிட்டு, சுண்டல் படையலிட்டு வணங்குதல் சிறப்பானது.
செல்: 93801 73464