வகிரகங்களின் ஆதிக்கத்தால் நாம் அன்றாடச் செயல்களைச் செய்கிறோம். சிலருக்கு சொந்த ஊரில் வசிக்கும் யோகம் இருக்கும்; சிலருக்கு சொந்த ஊரில் இல்லாமல் வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

ஒருவர் ஜாதகத்தில் அமையும் கிரகங்கள் இதற்கு மிகமுக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக ஒருவருக்கு லக்னாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி பலமாக இருந்தால் சொந்த ஊரில்- பூர்வீகத்தால் அனு கூலம் ஏற்படும். அதுபோல நடக்கும் தசாபுக்திகளின் ஆதிக்கமும் மிக முக்கிய பங்குவகிக்கிறது. கேந்திர திரி கோணத்தில் அமையும் கிரங்களின் தசாபுக்தி நடைபெற்றால் அவர்கள் சொந்த ஊரில் நன்மையடைய முடியும்.

ஒருசில ஜாதகங்களில் லக்னாதி பதி வலுவிழந்து, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி வலுவிழந்திருக்கும். அவர்களுக்கு சொந்த ஊரில் எது செய்தாலும் அது அனுகூலத் தைத் தராது. அவர் சொந்த ஊரை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு களுக்குச் செல்லும்போது வாழ்வில் வெற்றிபெறமுடியும். சரி; வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்றால் வெற்றியடையலாமா என்றால், அதற்கு ஒருசில அமைப்புகள் நன்றாக இருக்கவேண்டும்.

Advertisment

london

குறிப்பாக 12 பாவங்களில் ஜென்ம லக்னத்திற்கு 3, 6, 9, 12-ஆம் வீட்டைக்கொண்டு பயணங்களைத் தீர்மானம் செய்யலாம். 3, 6-ஆம் வீட்டைக்கொண்டு குறுகிய தூரப் பயணத்தையும், 9, 12-ஆம் பாவங்களைக் கொண்டு வெகு தூரப் பயணம், வெளிநாட்டுப் பயணங்களையும் தீர்மானிக்கலாம்.

நமக்கு நடக்கும் தசாபுக்தி களும் பயணங்களை முடிவுசெய்கின் றன. நவகிரகங்களில் பயணங் களுக்குக் காரகன் சந்திரன் ஆவார். சந்திரனின் தசாபுக்தி நடைபெறுகின்ற சமயங்களில், சந்திரன் நட்சத்திரத்தில் அமைந்த கிரகங்களின் தசாபுக்தி நடைபெறும் காலங்களில்தான் பயணங்கள் அதிகம் ஏற்படுகிறது. நடைமுறையில் நீங்கள் கவனித்துப் பாருங்கள். சந்திர தசை, புக்தி நடைபெறும் நேரங்களில் அடிக்கடி பயணங்கள் ஏற்படும்.

அடுத்து நீண்டநாட்கள் வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு எப்போது ஏற்படுகிறதென பார்த்தால், ஒருவர் ஜாதகத்தில் 3, 6-ல் அமைந்த கிரகங்களின் தசை அல்லது 3, 6-ஆம் வீட்டதிபதியின் தசை நடக்கும்போது வெளியூர், வெளிமாநிலங்களுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டாகிறது. அதுபோல 9, 12-ல் அமைந்த கிரகங்களில் தசை அல்லது 9, 12-ஆம் வீட்டதிபதியின் தசை நடக்கும்போது வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டாகிறது.

ஜென்ம லக்னத்திற்கு 3, 6-ல் சனி, ராகு போன்ற கிரகங்கள் அமைந்து அதன் தசை நடைபெற்றால் வெளியூர்மூலம் ஆதாயமும். 9, 12-ல் சனி, ராகு அமைந்து அதன் தசை நடைபெற்றால் வெளிநாடுமூலம் ஆதாயமும் ஏற்படுகிறது. அதுபோல கால புருஷப்படி 9, 12-ஆம் வீடுகளான தனுசு, மீனத்தில் கிரகங்கள் இருந்து அதன் தசை நடைபெற்றாலும், சந்திரனுக்கு 3, 6, 9, 12-ல் அமைந்த கிரகங்களில் தசை நடைபெற்றாலும் வெளியூர், வெளிநாடுகள்மூலம் நற்பலனை அடையமுடியும்.

ஜென்ம லக்னத்திற்கு 9, 12-க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், 9, 12-க்கு அதிபதிகள் பரிவர்த் தனை பெற்றாலும், 9, 12-க்கு அதிபதிகள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டாலும் வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை நீர் ராசிகளாகும். இவை 9, 12-ஆம் வீடுகளாக இருந்தாலும், 9, 12-க்கு அதிபதிகள் இந்த ராசிகளில் அமையப் பெற்றாலும் வெளியூர் செல்லும் வாய்ப்புண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு 9, 12-ஆம் அதிபதி தொடர்பு ஏற்படுவது மட்டுமல்லாமல், இத்துடன் ஜீவன ஸ்தானமான 10-ஆமதிபதி தொடர் ஏற்பட்டு, அந்த கிரகங்களின் தசை நடைபெற்றால் அயல்நாட்டவர் தொடர்பும், ஜீவனரீதியாக அயல்நாடு சென்று சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் பயணங்கள் ஏற்படுவதற்கான யோகங்கள் இருப்பது முக்கியமல்ல. அந்த யோகத்தை ஏற்படுத்திய கிரகங்களின் தசை, புக்தி நடைபெற்றால்தான் பயணங்கள் ஏற்படும். அதுவும் ஜென்ம லக்னத்திற்கு யோகத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகமாக இருந்தால்தான் அந்த தசையில் பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும். அதுமட்டுமின்றி கோட்சாரரீதியாக ஏழரைச்சனி, அஷ்டமச்சனி போன்ற சங்கடமான காலமாகவும் இருக்கக்கூடாது. குறிப்பாக கோட்சார நிலையும் தசாபுக்தியும் நன்றாக இருந்தால் வெளியூர் மூலமாக யோகங்களும் ஏற்றங்களும் பொருளாதார மேன்மையும் உண்டாகும்.