Advertisment

பாதகாதிபதி! -முருகு பாலமுருகன்

/idhalgal/balajothidam/footman

வகிரகங்கள் நம்மை வழி நடத்துகின்றன. ஜனன காலத்தி லுள்ள கிரகங்களின் நிலைக்கேற்ப நற்பலனும் தீய பலனும் ஏற்படுகிறது. பொதுவாக கேந்திர திரிகோணாதிபதிகள் யோகத்தை அளிக்கின்றனர்.

Advertisment

3, 6, 8, 12-க்கு அதிபதிகள் கெடுதல்களை வழங்குகிறார்கள். இதைத்தவிர சில லக்னக்காரர்களுக்கு சில கிரகங்கள் கெடுதல்களை ஏற்படுத்துகிறார்கள். அவை எவையென்று பார்த்தால் பாதகாதிபதியும், பாதக ஸ்தானத் திலுள்ள கிரகங்களும் எதிர்பாராத கெடுதல்களை உண்டாக்குகின்றனர்.

பன்னிரண்டு லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயமென பிரித்துள்ளார்கள். சரலக்னமான மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவற்றுக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீடு பாதக ஸ்தானமாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர லக்னங் களுக்கு 9-ஆம் வீடு பாதக ஸ்தானமாகும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய உபய லக்னங்களுக்கு 7-ஆ

வகிரகங்கள் நம்மை வழி நடத்துகின்றன. ஜனன காலத்தி லுள்ள கிரகங்களின் நிலைக்கேற்ப நற்பலனும் தீய பலனும் ஏற்படுகிறது. பொதுவாக கேந்திர திரிகோணாதிபதிகள் யோகத்தை அளிக்கின்றனர்.

Advertisment

3, 6, 8, 12-க்கு அதிபதிகள் கெடுதல்களை வழங்குகிறார்கள். இதைத்தவிர சில லக்னக்காரர்களுக்கு சில கிரகங்கள் கெடுதல்களை ஏற்படுத்துகிறார்கள். அவை எவையென்று பார்த்தால் பாதகாதிபதியும், பாதக ஸ்தானத் திலுள்ள கிரகங்களும் எதிர்பாராத கெடுதல்களை உண்டாக்குகின்றனர்.

பன்னிரண்டு லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயமென பிரித்துள்ளார்கள். சரலக்னமான மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவற்றுக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீடு பாதக ஸ்தானமாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர லக்னங் களுக்கு 9-ஆம் வீடு பாதக ஸ்தானமாகும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய உபய லக்னங்களுக்கு 7-ஆம் வீடு பாதக ஸ்தானமாகும்.

dd

Advertisment

பொதுவாக பாதக ஸ்தானாதிபதி, பாதகஸ்தானத்தில் அமையும் கிரகங் களின் தசாபுக்திக் காலத்தில் பாதக மான பலன்கள் உண்டாகும். குறிப்பாக தொழில், பொருளாதாரரீதியாக நஷ்டம், எதிர்பார்த்த லாபம் கிடைக்க இடையூறு, எதிர்பாராத இழப்புகள் என பாதகாதிபதியின் தசாபுக்திக் காலத்தில் கெடுதிகள் ஏற்படும்.

குறிப்பாக சர லக்னத்திற்கு 11-ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதால் மூத்த சகோதரவழியில் சோதனைகள், சகோதர தோஷம் உண்டாகிறது. குறிப்பாக 11-ல் அமையும் கிரகங்களும், 11-ஆமதிபதியும் சில கெடுதல்களை ஏற்படுத்துகிறார்கள். கெடுதல்கள் என்றால் முழுமையான கெடுதல் அல்ல. சில சின்னச்சின்ன கெடுதல்கள் ஏற்பட்டாலும் ஒருசில வகையில் அனுகூலப் பலன்கள் உண்டாகின்றன.

ஸ்திர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9-ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதால் தந்தைவழியில் அனுகூலமற்ற பலன்கள் உண்டாகின்றன. உற்றார்- உறவினர்கள்வகையிலும் ஒற்றுமையில்லாத நிலை ஏற்படுகிறது. பொதுவாக 9-ஆமதிபதி ஸ்திர லக்னத்திற்கு பெரும்பாலும் கெடுதிகளைச் செய்வதில்லை.

உபய லக்னத்திற்கு 7-ஆம் வீடு பாதக ஸ்தானமென்பதால் மண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமைவதில்லை. 7-ஆம் வீடு கூட்டுத்தொழில் ஸ்தானமென்பதால் பொதுவாக உபய லக்னத்தில் பிறந்தவர்கள் கூட்டுத் தொழில் செய்தால் கூட்டாளிகளால் நஷ்டம் உண்டாகிறது. குறிப்பாக மிதுனம், கன்னி லக்னத்தில் பிறந்த வர்களுக்கு தனகாரகன் குருவே 7-ஆமதிபதியாகி பாதகாதிபதியாவதால், பொருளாதாரரீதியாக சங்கடங்கள், நெருங்கியவர்களுக்குப் பணம் கொடுத்தால் திரும்பவராத நிலை, கூட்டாளிகளிடம் பண விஷயத்தில் தகராறு உண்டாகும்.

பொதுவாக பாதக ஸ்தானாதிபதி கெடுதல்களை உண்டாக்குவார் என்றாலும், சில நேரங்களில் பாதகாதிபதியும் கெடுதல்களைச் செய்வதில்லை. ஜென்ம லக்னத்திற்கு பாதகாதிபதி 3, 6, 8, 12-ல் மறைந்திருந்தாலும் திரிகோண ஸ்தானமான 1, 5, 9-ல் அமையப்பெற்றாலும் பாதகாதிபதி பாதகப் பலனுக்கு பதில் சாதகப் பலனை ஏற்படுத்துவார்.

பாதகாதிபதி திதி சூன்ய ராசியில் இருந்தால் பாதகப் பலன்களைச் செய்வதில்லை. அதுபோல பாதகாதிபதி பகை, நீச ராசிகளில் இருந்தால் கெடுதலைச் செய்வதில்லை. பாதகாதிபதி சூரியனுக்கு மிக அருகில் அமைந்து அஸ்தங்கம் பெற்றாலும் பாதகப் பலனைச் செய்வதில்லை. பொதுவாக பாதகாதிபதியின் காரகத்துவம் என்னவோ அவ்விஷயத்தில் ஜாதகர் கவனமாக இருப்பது உத்தமம்.

அதுபோல பாதக ஸ்தானத்தில் ஒரு கிரகம் இருக்கிறதென்றால், அது எந்த கிரகமானாலும் அந்த கிரகத்தின் காரகத்துவ விஷயத்தில் மிகவும் உஷாராக இருப்பது உத்தமம். குறிப்பாக 4-ஆமதிபதி பாதக ஸ்தானத்தில் இருந்தால் ஜாதகரின் பெயரிலுள்ள அசையும்- அசையா சொத்திற்கு ஆபத்து ஏற்படலாம். எனவே அதனை குடும்பத்திலுள்ள மற்ற நபர்களின் பெயர்களில் வைத்து உபயோகிப்பது மிகவும் உத்தமம்.

பாதகாதிபதி எந்த வீட்டில் இருந்தாலும் அந்த பாவப் பலன் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக 4-ல் இருந்தால் சொந்த வீடு அமைய இடையூறும், 5-ல் இருந்தால் புத்திர தோஷமும், 9-ல் இருந்தால் தந்தை வழியில் பகையும் உண்டாகிறது.

அதுபோல பாதகாதிபதி சாரம்பெற்ற கிரகங்களின் தசாபுக்தியில் சாதகமற்ற பலன்கள் உண்டாகின்றன. குறிப்பாக 10-ஆமதிபதி பாதக ஸ்தானத்தில் இருந்தாலும், 10-ல் உள்ள கிரகங்கள் பாதகாதிபதி சாரத்தில் இருந்தாலும் அந்த ஜாதகர் சொந்தத் தொழில் கண்டிப்பாக செய்யவேகூடாது.

அப்படிச் செய்தால் நஷ்டங்கள்தான் ஏற்படும். குறிப்பாக பாதகாதிபதியின் தசாபுக்திக் காலங்களில் பொருளா தாரரீதியாக வரவுகள் ஏற்பட்டால் அதனைப் பாதுகாப்பாக- நம்பிக்கையான நபர்கள்மீது முதலீடு செய்வது மிகவும் உத்தமம்.

bala130522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe