மானுட வளர்ச்சிக்கு வழிகாட்டுகின்ற அநேக ஆசிர்வாதங்களில் மனம் மலரச் செய்யும் இந்த மலர் மருத்துவமும் ஒன்று.
ஜீவிதத்தின் அசாத்திய உயர் நிலையில் பயணிக்கும் மனிதன் மனம் சார்ந்து பயணிக்கும் ஒரு உயிரி ஆவான்.
இந்த மனம் சார் பயணத்தில் இன்ப- துன்பங்களை அனுபவிக்கும் தன்மையானது மனதை பொருத்தே அமைந்து விடுவது நிச்சயமாகின்றது.
அதனால்தான் மனம்போல் வாழ்வு என்று பெரியோர்கள் பறைசாற்றினார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/malar_0.jpg)
இதனைத்தான் மலர் மருத்துவத்தின் தந்தை பாச் அவர்கள் மானுட எதிர்மறை உணர்வு நிலை ஏழு வகைப்படும் என்று பகுத்தறிந்து இதன் வழியாகத்தான் மனநிலையில் சமன்பாடு உலுக்கப்பட்டு உடல் மற்றும் மனம் சார் நோய் களுக்கும் காரணமாவதாக எடுத்துரைக்கின் றார்.
இந்த ஏழு வகையான எதிர்மறை உணர்வுகள் என்னவென்று பார்க்கலாம்.
1. பயம்
2. சஞ்சலம்
3. நிகழ்காலத்தை மறந்து கனவுலகில் வாழ்தல்
4. தனிமை உணர்வு
5. மற்றவர் செல்வாக்குக்கு உட்படல்
6. மனச்சோர்வு நிராசை
7. மற்றவர் நலனில் அதிக அக்கறை
போன்ற எதிர்மறையான உணர்வு களின் மூலம்தான் மனித இனம் அனுபவிக் கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரண மென்று டாக்டர் கூறுகின்றார்.
அதோடு இந்த ஏழு எண்ணங்களுக்கு கீழ் 38 வகையான மனநிலையை கண்டறிந்து அதற்கு 38 வகையான மலர் மருந்துகளையும், அதீத நெருக்கடிகளைச் சந்திக்கும் தருவாய்க்கு 39 ஆவது கூட்டு மருந்தாக ஒரு மருந்தையும் கண்டுபிடித்து மனிதர்களின் வாழ்வுக்கு மாபெரும் ஜீவன் ஒளிரும் ஜோதியை ஏற்றியுள்ளார்.
மனம் என்றதும் ஜோதிடவிய-ன் வழியே பயணிக்கும் நமக்கு நினைவுக்கு வருவது சந்திரனும், ஐந்தாம் பாவகமும்தான். இதனால்தான் சந்திரன் ராகு, சந்திரன், கேது, சந்திரன் சனி போன்ற இணைவுகள் அதீத உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாகவும், எடுத்த எடுப்பில் எடுத்தெறிந்து பேசுபவர்களாகவும், தன் உண்மையான உயர்ந்த மனநிலையை எடுத்துரைக்க முடியாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.
அதேபோன்று ஐந்தாம் பாவகாதிபதியின் நிலையும் நாம் அறிந்து செயல்பட வேண்டியது கட்டாயமாக அமைகின்றது.
சரி; ஒரு சிறிய சிந்தனைக்குள் செல்வோம்.
ஒரு கிரகம் எங்கிருந்து திசை நடத்துகின்றது? எதன் வழியே திசை நடத்துகின்றது? எதனால் ஒருநாள் இருப்பது போன்று மனநிலையோ அல்லது உடல் நிலையோ நமக்கு இருப்பதில்லை. எதன்பொருட்டு நமக்கு நோய் வருகின்றது, கிரகத்திற்கும் நம் உடலுக்கும் உள்ள தொடர்பு என்ன? ஒரு தசை புக்தி நன்மையும் அடுத்த தசா புக்தி தீமையும் ஏன்? ஒருவருக்கு நின்று நிகழ்த்துகின்றது என்ற கேள்விகள் உங்களில் யார் யாருக்கெல்லாம் தோன்றியது என்று தெரியாது. ஆனால் இதற்கான விளக்கத் தையும், விடையும் காணும் பொழுது பல இடர்களி-ருந்து வெளிவருவதற்கும் அநேக தேவைகளை பூர்த்தி செய்வதற்குமான விடைகள் நம்மிடையே கிடைக்கும்.
கேள்விகளுக்கான பதிலை என் நிலையில் இருந்து என்னுடன் பயணித்து, நான் கூறும் முறையில் காணலாம்; வாருங்கள்.
ஒரு கிரகம் அண்டத்தில் தன்னுள் என்னென்ன கனிமங்களை புதைத்து சுழன்றுகொண்டு இருக்கின் றதோ, அதே கனிமங்களுடனும், தன்மையுடனும், நமுள் மற்றும் வெளியே அவயங்களிலும் சுழன்று நம் பரிமாணத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது. எவ்வாறு என்றால் சூரியன் தன் வெப்பத்தில் ஆளுமை செய்வதுபோல் உட-லுள்ள தட்பவெப்பம் மற்றும் வலது கண் தலை சார்ந்த இடங்களின்மூலம் தன்னை வெளிப் படுத்தி திசையின் பாதையில் இந்த அவையங் களில் ஜாதகத்திற்கு ஏற்ப பலமோ அல்லது பல வீனத்தையோ அணுகி மனதின்மூலம் முடிவெடுக்கும் தன்மையை அளித்து விடுகின்றது.
சந்திரன் உட-லுள்ள ரத்த ஓட்டம் இடது கண் கருப்பை. புதன் மூளையின் முழு செயல்பாட்டின் நியூரான்களாக செயல்படுகின்றது.இதேபோன்று சனி நடுமுதுகில் பயணிக்கும் சி.எஸ்.எப் என்கின்ற திரவத்தின்மூலம் மனித உட-ல் ஆளுமையை செலுத்துகின்றது. கேது மனித மூளையின் நினைவு கிடங்காக செயல் படுகின்றது இப்படிதான் ஒவ்வொரு கிரகமும் மனிதனின் உடல்நிலையில் அமர்ந்து தனது செயல்பாட்டினை நிகழ்த்திக்கொண்டி ருக்கின்றது. இப்பொழுது கூறுங்கள் கிரகங் கள் எங்கிருந்து திசைகளை நடத்துகின்றன என்ற கேள்விக்கு மனித உட-ல் பூரணமாக அமர்ந்து மனதின் வழியே கிரகங்கள் திசைகளை நடத்துகின்றது என்பதே உண்மை.
அதை எடுத்து மனநிலையை சரி செய்யும்பொழுது பல வெளிநிலை சார்ந்த சூழலும் மாறும். அதோடு உள்நிலை சார்ந்த சூழலும் இணக்கமான தன்மையை அளிக்கும் என்பது இதி-ருந்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு கருத்தாக அமைகின்றது.
மேற்கூறிய 39 வகையான மலர் மருந்தில் முதல் மருந்தான அக்ரிமோனி என்கின்ற மருந்து பேசாத அழுத்த சுபாவமுள்ள தன்மையையும், சண்டை, சச்சரவுகள் என்றால் ஒதுங்கி செல்லும் தன்மையையும், கேள்வி கேட்டால் பிடிக்காதவர்களாகவும், என் பிரச்சினை என்னோடு இருக்கட்டும் என்றும், கடந்தகால அவமானம் அல்லது அப்படி நடந்துவிட்டது என்பதை நினைத்து துன்பமடையும் சூழலையும், கவலையை மறக்க அடிக்கடி சிரிப்பு நகைச்சுவை செய்தல் எந்த சூழ்நிலையையும், மன அழுத்தத்தை வெளிகாட்டாத தன்மையையும், தீர்க்கக்கூடிய மாபெரும் வல்லமை நிறைந்தது மலர் மருந்தாக அமைந்துள்ளது.
ஜாதகத்தில் இரண்டு மற்றும் ஐந்தாம் பாவகங்கள் பலவீனமாக உள்ள நபர்களுக்கு இந்த மருந்து மாபெரும் துணையை வழங்கும்.
சில இடர்பாடுகளைத் தீர்க்கும் மருந்து களின் கூட்டுகளை ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரங்கள் சார்ந்து வழங்கும்பொழுது இந்த பிரச்சினைகளில் இருந்து வெளிவரும் தன்மையை வழங்கும் என்பது உறுதி.
இந்த மனநிலைக்கு எதிரான மருந்து ஹீதர் என்ற மருந்து.
கல்வி, கணவன்- மனைவி சார்ந்த பிரச்சினைகள், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் என்று மனித தேவைகளின் அனைத்தையும் பூர்த்திசெய்யும் அற்புதமான கற்பக விருட்சம் இந்த மலர் மருந்தாகும்.
தொடர்ந்து சந்திப்போம்!
செல்: 80563 79988
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-06/malar-t_0.jpg)