சென்ற இதழ் தொடர்ச்சி...
சித்தர்கள் கூறிய தமிழ் ஜோதிடமுறையில் ஒரு ஆண் அல்லது பெண்ணின் திருமணம் பற்றிய சில உண்மைகளின் தொடர்ச்சியை அறிவோம்.
சித்த ஜோதிடமுறையில், ஆண்- பெண் திருமண கால சமயத்தில் பிறப்பு ஜாதகத்தினைக் கொண்டு லக்னம், ராசி, பத்துப்பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம் உட்பட எதனையும் பார்க்கத் தேவையில்லை. எனவேதான் உதாரண ஜாதகங்களில் லக்னம், ராசி, நட்சத்திரம் என எதனையும் குறிப்பிடப்படவில்லை.
உதாரண ஜாதகம் 1-ல் ஜாதகரைக் குறிப்பிடும் உதாரண கிரகமான குருவுக்கு 2-ஆவது வீட்டில் அவரின் மனைவியைக் குறிக்கும் உதாரண கிரகமான சுக்கிரன் உள்ளது.
இதுபோன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக் கட்டங்களில் எந்த ராசியிலும் குருவுக்கு 2-ல் சுக்கிரனும், சுக்கிரனுக்கு 12-ல் குருவும் இருந்தால் அவர் தன் மனைவியைத் தேடிச்சென்றுதான் மணம்புரிய வேண்டும்.
இந்த ஜாதகரின் பெற்றோர் விரும்பியபடி, இவர் விருப்பம்போல் பெண் அமையாமல், ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் தடை யாகிக்கொண்டே போகும். இவர்களும் திருமணத் தடை நீங்க கோவில், பூஜை, பரிகாரங்களைச் செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால் எந்த பலனும் இல்லாமல் பணம்தான் செலவாகும்.
ஜீவநாடியில் இவரின் திருமணத்தடைக்கு, சித்தர்கள் கூறும் காரணத்தை அறிவோம். இவரின் முற்பிறவியில் அல்லது வம்ச முன்னோர் கள் காலத்தில், இவர் குடும்பத்து ஆண்கள் தான் கட்டிய மனைவிக்குச் செய்யவேண்டிய கர்ப்பதானம், அன்னதானம், வஸ்திரதானம், சொர்ணதானம் போன்றவற்றைத் தந்து காப்பாற்றாமல், ஒரு கணவனுக்குரிய கடமை களைச் செய்யாமல், தன் சுகமே பெரிதென வேசிகளுக்கும், தனக்கு வேண்டியவர்களுக்கும் தன் விருப்பம்போல் பொருள், சொத்துகளை அழித்து, மனைவியை மதிக்காமல் வாழ்ந்ததால், கணவனால் சுகமடைய முடியாத அந்தப் பெண், மனம் வெறுத்து சாபமிட்டு, வீட்டைவிட்டு வெளியேறியிருப்பாள். அந்தப் பெண்ணின் சாபம், இப்பிறவியில் ஒரு பெண் இவருக்கு மனைவியாக அமையாமல் தடுத்து திருமணத்தடையை உண்டாக்கி விடும். பெண் சாபம் 18 வகையான நிலையில் குடும்பத் தில் பாதிப்பை ஏற்படுத்தி சிரமம் தரும். அதில் திருமணத் தடையும் ஒருவிதப் பெண் சாபநிலைதான்.
இவரின் திருமண கால சமயத்தில் பெண் இவரைத் தேடிவரமாட்டாள். பெண்ணையும், பெண் வீட்டாரையும் இவர்கள்தான் தேடிச்செல்ல வேண்டும். திருமணம் நடந்து மனைவி அமைந்தவுடன், இவர் தன் மனைவிமீது அதிக பாசத்துடன் இருப்பார். ஆனால் மனைவிக்கு இவர்மீது பாசம் அதிகம் இராது. முற்பிறவியில் இவர் தன் மனைவியை அலட்சியப் படுத்தியதன் பலனாக, இப்பிறவியில் மனைவி இவரை அலட்சியப்படுத்துவாள். அதன் காரணத்தைப் புரிந்து மனைவியின் அன்பைப்பெற முயலவேண்டும்.
திருமணத்தடைக்கு இன்னும் ஒரு காரணத்தை அறிவோம். இன்றைய நாளில் சில ஆண்கள் குடும்பத்தைக் காப் பாற்றுமளவு பொருளாதார வசதி இல்லாமல் திருமணம் செய்யத் தயங்கிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் நிறைய சம்பாதித்து, வீடு, சொத்து, வாகனம் அமைந்த பின்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று திருமணத்தடையைத் தனக்குத் தாங்களே உருவாக்கிக் கொள்வார்கள். இதுபோன்றவர்களின் ஜாதக அமைப் பினை ஒரு உதாரண ஜாதகம்மூலம் அறிவோம்.
உதாரண ஜாதகம் 2-ல் ஜாதகரின் தொழில், உத்தியோகம், வருமானம், பணம் ஆகியவற்றைக் குறிப்பிடும் உதாரண கிரகமான சனியுடன் இவரின் மனைவியைக் குறிக்கும் உதாரண கிரகமான சுக்கிரன் ஒரே ராசியில் இணைந்தோ அல்லது மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளில் சனி, சுக்கிரன் ஒன்றுக்கொன்று 1, 5, 9-ஆமிடங்களில் ஒரே நட்சத்திர மண்டலத்தில் அமர்ந்தி ருந்தாலோ இவர் மனைவியால் யோகமடையும் ஜாதகர் ஆவார்.
இதேபோன்று ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் மனைவியைக் குறிப்பிடும் சுக்கிரனுக்கு 1, 5, 9, 7, 2, 12-ல் சனி இருந்தாலோ அல்லது சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 7, 2, 12-ல் சுக்கிரன் இருந்தாலும் அவர் மனைவியால் யோகமடையும் ஜாதகர் ஆவார்.
இதுபோன்று சனி, சுக்கிரன் அமைப்பு ஜாதகத்தில் உள்ளவர்களுக்கு, இவரின் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துகளால் எந்தவிதமான நன்மையும், உயர்வும் இராது. மனைவி வந்தபின்தான் இவருக்கு யோகம் செயல்பட்டு செல்வந்தராக்கிவிடும். இவர் தன் மனைவிக்கு துரோகம் செய்யாமல், அவளை மதித்து, மகிழ்வித்து வாழ்ந்தால் யோகம் பலமடங்கு செல்வம் தரும். இந்த ஜாதகர்கள் தெய்வமாக வணங்க வேண்டியது மனைவியைதான்.
இதுபோன்று மனைவியால் யோகமடையும் அமைப்பில் பிறந் துள்ள ஆண்கள், முதலில் திருமணம் செய்து கொள்ளவேண்டும். அதன் பின்தான் செய்யும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வாழ்வில் உயர்வு கூடும். இவர்களுக்கு திருமணம் நடக்கும். ஆனால் மனபயத்தால் இவர்களாகவே தங்கள் திருமணத்தை தாமதப்படுத்திக் கொள்வார்கள். தங்கள் தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டால் செல்வத் திருமணம் நடக்கும்.
அன்றாடம் உழைத்தால்தான் சாப்பாடு என்று வாழ்ந்த கூலிக்காரர்களில் நிறையபேர், சாதாரண நிலையில் இருந்தவர்கள்கூட தன் திருமணத்திற்குப்பின் மிக உயர்ந்தநிலை வாழ்வை, உயர்பதவியை அடைந்துள்ளார்கள். நாட்டில் பிரபலமானவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால் அகத்தியர் கூறும் உண்மை புரியும். இவர்கள் வாழ்வில் உயர்வை அடையக் காரணம் இவர்களின் மனைவிதான்.
செல்: 99441 13267