இன்றைய நாளில் ஏராளமான ஆண்களும் பெண் களும் திருமணம் செய்யவேண்டிய பருவத்தில் செய்ய முடியாமல், தடை, தாமதமாகி, தனக்குத் திருமணம் நடக்குமா? நடக்காதா என்ற கேள்வியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பருவவயதில் நடைபெற வேண்டிய திருமணம் அவர்களின் பெற்றோர்களாலும், தவறான பலன்கூறும் சில ஜோதிடர்களாலும்தான் தாமதமாகின்றது என்பதே அகத்தியர் ஜீவநாடி வாக்காகும்.
பெற்றோர்கள் தங்கள் குடும்ப கௌரவம், அந்தஸ்து, பணம், படிப்பு, அழகிற்குத் தகுந்த மாப்பிள்ளை, பெண் அமைய வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன், தாங்கள் விரும்பியபடி மாப்பிள்ளை, பெண் அமையும்வரை பருவவயதில் திருமணம் நடக்காமல் தாமதப்படுத்தி விடுகின்றனர். பெற்றவர்கள் ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் வினைப்பதிவு அவர்கள் பிள்ளை களுக்கு இருக்கவேண்டுமே?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramar_2.jpg)
ஒரு ஆண் தன் வருங்கால மனைவி எப்படி இருக்கவேண்டும் என்றும்; ஒரு பெண் தன் வருங்காலக் கணவன் எப்படி இருக்கவேண்டும் என்றும் தன் மனதில் கற்பனை, கனவுகளை வளர்த்துக்கொண்டு, அதுபோன்று கிடைக்கும்வரை தங்களின் திருமணத் திற்குத் தாங்களே தடை, தாமதத்தை ஏற்படுத்திக் கொண்டு, முதிர்கன்னியாய், காளையாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இன்னும் சிலர் நல்ல உத்தியோகம், வேலையில் சேர்ந்தும், சிலர் வியாபாரம் செய்து நிறைய சம்பாதித்து, வீடு, கார், சொத்து என அமைத்துக்கொண்டபின் தான் திருமணம் செய்துகொள்வேன் என்று தங்கள் திருமணத்தைத் தள்ளிப்போட்டு வருகிறார்கள்.
இன்னும் பலரின் வாழ்க்கையில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவரையொருவர் பிடித்திருந்து, அந்த இரண்டு குடும்பங் களுக்கும் கௌரவம், அந்தஸ்து, பணம், படிப்பு, பதவி என பெற்றோர் எதிர்பார்த்த படி அமைந்திருந்தும், அந்த ஆண்- பெண் இருவர் ஜாதகங்களையும் ஜோதிடரிடம் கொடுத்துப் பலன் பார்க்கும்போது, சில ஜோதிடர்கள் இருவர் ஜாதகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, பத்து பொருத்தங்கள் இல்லையென்றோ அல்லது இருவர் ஜாதகமும் பொருந்தவில்லை அல்லது லக்னத்திற்கு 7-ல் ராகு, 8-ல் கேது, செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் என ஏதாவது ஒரு தோஷத்தைக் கூறிவிடுகிறார்கள்.
இருவருக்கும் திருமணம் செய்தால் கணவனுக்கு ஆகாது; மனைவிக்கு சரியில்லை; குழந்தைகள் பிறக்காது; குடும்ப வாழ்க்கை நிலைக்காது என்று பெற்றவர்களை பயமுறுத்தி, பூஜை, யாகம், வழிபாடு செய்தால் தடை நீங்கி, திருமணம் நடைபெறும் எனக்கூறி எங்காவது யாரிடமாவது அனுப்பிவிடுகிறார்கள் சில வினையறியா ஜோதிடர்கள்.
அதன்படி சென்று ஏராளமான பணம் செலவு செய்து, பரிகாரங்களைச் செய்தும் பலன் கிட்டாமல் லைந்துகொண்டிருப்பவர்களுக்கே உண்மை தெரியும்.
சித்தர்கள் கூறிய தமிழ் ஜோதிடமுறையில் ஒரு ஆண் அல்லது பெண்ணின் திருமணம் பற்றிய உண்மை விளக்கங்களை அறிவோம்.
உதாரண ராசி சக்கரத்தில், "குரு' என்று குறிப்பிடப்பட்டுள்ள கிரகம், இந்த ஜாதகரைக் குறிக்கும் உதாரண கிரகமாகும்.
"சுக்கிரன்', இந்தப் பிறவியில், இவருக்கு மனைவியாக வரும் பெண்ணைக் குறிப்பிடும் உதாரண கிரகமாகும்.
தமிழ்முறை ஜோதிடத்தில் ராசிக்கட்டத் திலுள்ள கிரகங்களுக்குப் பலன் கூறுவதில்லை. சூரியன்முதல் சனிவரை கூறப்பட்டுள்ள ஏழு கிரகங்களையும், குடும்ப உறவுகளுக்கு உதாரண மாகக்கூறி, உறவுகளின் நிலைக்குத்தான் பலன் கூறியுள்ளார்கள். அதேபோன்று லக்னத்தைக் கொண்டும் பலன் கூறவில்லை.
பிறப்பு ஜாதகத்தில் ஜாதகரைக் குறிப்பிடும் உதாரண கிரகமான குருவும், அவரின் இப்பிறவி மனைவியைக் குறிப்பிடும் உதாரண கிரகமான சுக்கிரனும் ஒரே ராசியில் இருந்தாலும் அல்லது குருவும் சுக்கிரனும் ஒன்றுக்கொன்று 1, 5, 9-ஆம் இடங்களில், ஒரே நட்சத்திர மண்டலத் தில் அமர்ந்திருந்தாலும் இந்த ஜாதகருக்கு முற்பிறவியில் யார் மனைவியாக இருந்தாளோ, அவளே இந்தப் பிறவியிலும் மனைவியாக அமைவாள். அந்த மனைவியும் ஜாதகர் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே வசிப்பாள்.
இதுபோன்று குரு, சுக்கிரன் அமைந்துள்ள ஜாதகருக்கு, இவர்கள் பெற்றோர் விரும் பியபடியோ அல்லது ஜோதிடர்கள் கூறும் பொருத்தம், தோஷங்கள் பார்த்தோ திருமணம் செய்ய முடியாது. திருமண சமயத்தில் பொருத்தம் பார்த்துப் பெண் தேடிக் கொண்டிருந்தால், திருமணம் தடைப்பட்டுக்கொண்டுதான் இருக்கும். எத்தனைப் பெண்ணைப் பார்த்தாலும் திருமணம் செய்ய முடியாது.
இந்த ஜாதகருக்கு, முற்பிறவியில் மனைவியாக இருந்தவரின் ஜாதகம் கிடைத்தவுடன் அல்லது அவளைப் பார்த்தவுடன் முற்பிறவியில் வாழ்ந்த உறவுத்தொடர்பால் ஒருவருக் கொருவர் ஈர்ப்பு ஏற்பட்டு, எந்த விதமான சாஸ்திர சம்பிரதாயமும், வரதட்சணை எதிர்பார்ப்புமின்றி கனவு கண்டதுபோல் சட்டென்று திருமணம் நடந்துவிடும்.
இன்றைய நாளில் மாற்று மொழி, மதம், இனம், சாதியைச் சேர்ந்தவர்கள், மற்றவர்களின் எதிர்ப்புகளையும் மீறி திருமணம் புரியும் ஆண்கள்- பெண்கள் அனை வரும் முற்பிறவியில் கணவன்- மனைவியாக வாழ்ந்து, தங்கள் வாழ் நாளை முழுவதுமாக வாழாமல் ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்தோ, இழந்தோ, இறந்தோ போனதால், அந்த விடுபட்டுப்போன வாழ் நாளை வாழ்ந்து முடிக்கவே பிறந்த வர்கள் என்பது ஜீவநாடியில் அகத் தியர் வாக்காகும்.
ஒரு ஆணின் பிறப்பு ஜாதகத்தில் குரு, சுக்கிரன் இதுபோன்று அமர்ந்துள்ள நிலையில், இவரின் திருமணத்திற்குப்பின் இல்லற வாழ்க்கையைப் பற்றி சூட்சுமமான பலன்கள் நிறைய உண்டு. இங்கு திருமணம் நடைபெறும் நிலைபற்றி மட்டுமே கூறியுள்ளேன்.
இன்னும் சில ஆண்- பெண் உதாரண ஜாதகங்களைக்கொண்டு திருமண நிகழ்வு பற்றிய இன்னும் சில உண்மை விளக்கங்களையும், ஒரு ஆணிற்கு முற்பிறவி வினையின் வழி மனைவி அமையும் நிலை யையும் அறிவோம்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-12/ramar-t.jpg)