ன்றைய தலைமுறையினரிடம் வெகுவாக ஒரு வியாதி தற்போது பரவி வருகிறது. எப்போதும் "பாசிடிவ் தாட்ஸ்' சிந்தனையுடன் பேசவேண்டுமாம். "முடியாது, நடக்காது' என்கிற வார்த்தைகளைக் கேட்டால் "இரிடேட்' ஆகி, "டிப்ரஸ்' ஆகிவிடுகிறார்களாம். இப்படிப் பேசுபவர்கள்தான் ஆபத்தானவர்கள். அதிஷ்டத்தை நம்புபவர்கள். "பாசிடிவ் வைஃப், பாசிட்டிவ் மனிதர்'களிடம் பேசினால்தான் நல்லது நடக்குமென நம்புகிறவர்கள்.

உண்மையில் அனுபவசாலிகள் சொல்வதை ஒரேடியாக "நெகடிவ் தாட்ஸ்' என ஒதுக்கக்கூடாது.

அப்படி ஒதுக்கி கற்பனை உலகத்திலேயே வாழ்ந்தால், நிஜம் தெரியும்போது மனமுடைந்து தவறான முடிவெடுக்கிறார்கள். தான் வென்றே ஆகவேண்டும் என்கிற வெறியில் தற்கொலை செய்வார்கள் அல்லது கொலை செய்வார்கள். இல்லையென்றால் அப்பாவிபோல், "நான்தான் சிறுவன்; நீங்கள் எனக்கு அறிவுரை சொல்லியிருக்கலாமே' என சொல்லித் தவறை மூடிமறைக்க முயல்வார்கள்.

win

Advertisment

பொதுவாக நன்கு கல்வி கற்பவர்களிடம் நல்ல குணங்கள் நிறைந்திருக்கும். கெட்ட பழக்க- வழக்கங்கள் எதிலும் ஈடுபடமாட்டார்கள். ஆழ்ந்து சிந்திப்பவர்களாக இருப்பர். அடுத்தவர் சொல்லும் ஆலோசனையும், சிந்தனையும் எல்லாருக்கும் வெற்றி தராது என்பதைப் புரிந்தவர்கள். ஒரு லட்சியத்தில் ஈடுபட்டு அதிலேயே கவனமாக இருப்பர். அதனால்தான் பெரிய விஞ்ஞானிகளாகி மனிதர்களுக்குத் தேவையானதைக் கண்டறிகிறார்கள்.

அடுத்தவர்கள் என்ன செய்கிறார்களென எட்டிப்பார்க்காமல், தன் வேலையை மட்டும் கவனமுடன் செய்பவர்களால்தான் நினைத்ததை சாதிக்கமுடியும். "நெகடிவ் தாட்ஸ்' எல்லாவற்றையும் கேட்டறிந்து, அதைத் தவிர்த்து எப்படி வெற்றிபெறலாம் என யோசிக்கவேண்டும். வெற்றிபெற்றவர்களிடம் போய் வெற்றிக்கு வழிகேட்டால் சொல்லத் தயங்குவார்கள். அல்லது சொல்லத் தெரியாது. ஆனால் வெற்றிக்கு அருகில் சென்று தோற்றவர்களுக்குதான் துல்லியமாகத் தெரியும்- என்னென்ன தவறுசெய்தால் வெற்றியை இழந்துவிடுவோமென்பது. ஆதலால் "பாசிடிவ், நெகடிவ் தாட்ஸ்' இரண்டையும் தெரிந்துகொண்டு, அதில் தன் வெற்றிக்கு எது வழியென அறிந்து செயல்படுதலே புத்திசாலித் தனம்.

எதையும் வீடியோக்களில் பார்க்கும் கலாச்சாரத்திற்கு அடிப்படைக் காரணம், இன்றைய தலைமுறைக்கு வாசிப்புத்திறன் இல்லாமல் இருப்பதுதான். வெற்றிக்கு முதல்வழி நல்ல கல்வி. கல்வியைப் புரிந்து கற்றுக் கொள்பவர்களால்தான் உடல் ரீதீயான வலுவும், மன பலமும் பெறமுடியும்.

Advertisment

கல்வி

நம் எண்ணம், செயலின் அடிப்படை ஆதாரம் ஆரம்பக் கல்வியால்தான் உருவாக்கப்படுகிறது. ஆரம்பக் கல்வியை ஒருவரது ஜாதகத்தில் இரண்டாமிடத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இரண்டாமிடத்தில் நிற்கும் கிரகங்கள் 6, 8, 12-ஆமிடங்களுக்கு உரியவர்களாக இருத்தல், இரண்டுக் குரியவர் 6, 8, 12-ஆமிடங்களிலோ, இரண்டாம் அதிபதியுடன் 6, 8, 12-க்குரியவர்களோ இணைதல், சுபகிரகப் பார்வை, இணைவு, சம்பந்தம் இல்லையென்றால் அடிக்கடி பள்ளி மாறுதல், பள்ளியில் கெட்டபெயர் எடுத்தல், நோயால் கல்வியில் தடை, பெற்றோரின் பணிக்காக ஊர் மாறிமாறி கல்வி கற்பது, படிக்க விருப்பமில்லாமல் பள்ளிக்குப் போவது, கல்வியைக் கசடறக் கற்காமல் போவதென ஆரம்பக் கல்வியை ஏதாவதொருவிதத்தில் மனநிறைவுடன் கற்க முடியாமல் ஆகிவிடும். பாவகிரகங்கள் சூழ்ந்தால் கல்வி பெற முடியாத மனநோயாளி களாக இருப்பர்.

ஆரம்பக் கல்வி

குடும்பம், தனம், வாக்கு, குடும்ப வாழ்க்கையைக் குறிக்கும் இரண்டாம் வீடு கெட்டு, ஆரம்பக் கல்வி பாதிக்கப்படுவதற்குக் காரணம் குடும்பத்தில் உண்டாகும் கஷ்டங்கள். தாய்- தந்தைக்குள் சண்டை சச்சரவு, பிரிவு, இழப்பு, கடனால் அவதிப்படுதல், குடும்பத்தில் யாராவது நோயால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருத்தல், காரணமே இன்றி மனநிம்மதி இழத்தல் போன்றவை ஏற்படும். ஆரம்பக் கல்வி கெட்டுவிட்டால் உயர்கல்வி தானாகக் கெட்டுவிடும். நல்ல எண்ணம், புத்தி இருக்காது. பிறரை ஏமாற்றும் எண்ணம் தோன்றி வாக்குத் தவறுவார்கள்.

பணமில்லாமல் அவமானப்பட நேரும். பணம் இல்லையென்றாலே பெண் தர யோசிப்பார்கள். தாமதத் திருமணம் ஏற்படும். நினைத்த நல்ல வரனாக அமையாது. பருவத்தில் திருமணம் நடக்கவில்லையென்றால் இளமை சுகத்தை இழப்பார்கள். பணமில்லை என்றால் வாழ்க்கைத் துணையுடன் எப்போதும் சண்டை ஏற்படும். வாக்குத் தவறுவதால் சமூக அந்தஸ்தை இழப்பர். குடும்ப வாழ்க்கை என்னும் இல்லறமும் பாதிக்கப்படுகிறது. மொத்தத்தில் இரண்டாமிடம் கெட்டுவிட்டால் பெற்றோர் வாழ்க்கையும், தன்னுடைய குடும்ப வாழ்க்கை யும் பல வழிகளில் பாதிக்கப்படும்.

"கல்வி பெறாதவர்கள் மக்கள் போற்றும் தலைவராகவில்லையா' என கேட்டால், இரண்டாமிடத்திற்குரிய ஸ்தான பலமான கல்வி, தனம், வாக்கு, குடும்பம் இவற்றில் ஏதாவதொன்றை இழந்து கெட்டுப்போகாமல் இருக்கமாட்டார்கள். புகழ் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் புலம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சமூகத்திற்கு நல்லவராக வாழ்பவர்கள் குடும்பத்தினருக்கு கெட்டவராகவே தெரிவார்கள்.

நான்காமிடம் நன்றாக இருப்பவர்களுக்கு ஆரம்பக் கல்வி போராட்டமாக இருந்தாலும் உயர்கல்வியை நன்றாகப் படிப்பர். சொகுசான வாழ்க்கை கிடைக்கும். நான்காமிடம் கெட்டு, ஏழாமிடம் சுபவலுப் பெற்றால், பெற்றோர் கள் கெட்டுப்போனாலும் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். பத்தாமிடம் சிறப் பாக அமைந்தால் கல்வி கெட்டாலும் தொழிலதிபராக இருப்பார்கள். பதினோரா மிடம் நல்ல நிலையிலிருந்தால் அதிஷ்டத்தால் யோகம் பெறுவர். ஐந்தாமிடம் சுபத்தன்மை யடைந்தால், பிள்ளைகளால் யோகம் கிட்டும். பூர்வபுண்ணிய பலத்தால் கெடுதல் தீர்ந்து நிம்மதியாக வாழ்வர். நான்கு, ஒன்பதாமிடம் கெடாமலிருந்தால் பெற்றோர் வாழ்க்கையும், தன் வாழ்க்கையும்- கல்வி பயிலாமல்கூட மகிழ்ச்சியாக இருக்கும். இரண்டாமிடம் மட்டு மல்லாமல் சுப ஸ்தானங்களும் கெட்டவர்களின் வாழ்க்கைதான் வீணாகப் போய்விடும்.

இரண்டாமிடம் கெட்டவர்களுக்கு இரண்டாமதிபதி தசை வந்தால் ஆரம்பக் கல்வி, தனம், வாக்கு, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றில் வயதிற்கேற்ப தரவேண்டிய சுபப் பலன்களைக் கெடுத்துவிடுவார். வலது கண்ணை பாதிக்கும். கண்ணாடி அணியும் சூழல் உருவாகும். பற்களில் பாதிப்பு, வயதிற்கேற்ப பல் உடைதல், ஓட்டைப் பல், பல்செட் வைத்தல் ஆகியவை ஏற்படும். சிலருக்கு பொக்கை வாயாக மாறும். இரண்டாமதிபதி, சுக்கிரன் சேர்ந்து பாவகிரக பாதிப்பு பலம்பெற்றால் ஊமையாக்கிவிடும்.

பரிகாரம்

இரண்டாமிடம் பாதிக்கப்பட்டவர்கள் பொறுமை, நிதானம், சூழ்நிலையறிந்து வாக்குக் கொடுத்தல், கடன் கொடுக்கல்- வாங்கல் செய்யவேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் மறைமுகமாக அன்பாக நடப்பதைவிட, நேரடியாக அன்பைப் புரியவைத்தல் சிறந்த பரிகாரம். இல்லறம் நடக்க இனியவழி- இல்லாத தைப் பேசுவதைத் தவிர்த்து இருப்பதில் வாழ்வதுதான். அப்போதுதான் சுகமான வாழ்வு கிடைக்கும்.

செல்: 96003 53748