பொறாமைத் தீ! 12 லக்னத்திற்கு எப்படிப் பொங்கும்? -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/fire-jealousy-12-how-get-laknath-r-mahalakshmi

சில ஜாதகர்கள் தொழில் மற்றும் வேலையில் கடும் உழைப்பைக் கொட்டுவர். ஆயினும் அவற்றில் முன்னேற்றமோ, பதவி உயர்வோ இன்றி திண்டாடுவர். சில பெண்கள் தங்கள் குடும்ப மேன்மைக்காக கோவில்களுக்குச் செல்வதும், பிரார்த்தனைகள் செய்வதும், விரதம் மேற்கொள்வதுமாக இருப்பர். ஆயினும் அவர்கள் குடும்பம் முன்னேற்றமின்றி இருக்கும்.

இதற்குக் காரணம் அவர்களது மனம் தான். மனம்போல் வாழ்வு என்பர். நீங்கள் எதுவாக நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறிவிடுவீர்கள் என்று மனோதத்துவம் கூறுகிறது. இதையே நாம் "நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்; கெட்டது நினைத்தால் கெட்டதே நடக்கும்' என்று கூறுகிறோம். வினை விதைத்துவிட்டு தினையறுக்க ஆசைப் படலாமா?

233

ஒரு மனிதன் எப்போதும் தன் வாழ்வின் முன்னேற்றம் குறித்து யோசிப்பது இயற்கை. இது தவறல்ல. ஆனால் தன் முன்னேற்றம் குறித்து மட்டும் சிந்திக்காமல், அடுத்தவர் முன்னேறுவது கண்டு மனம் குமைந்து, வயிறு எரியும்போதுதான் தவறாகிறது. இந்த பொறாமைத் தீ அடுத்தவரை அழிக்கிறதோ இல்லையோ- அது கொண்டவரையே பொசுக்கிவிடும். ஜோதிடம் இந்த பொறாமையைப் பற்றி பொறுமையாகப் பகர்கிறது.

லக்னம் என்பது ஜாதகரைக் குறிக்கும். ஐந்தாமிடம் எண்ணங்களையும், ஒன்பதாமிடம் தர்மத்தையும் குறிக்கும். சனி கிரகம் தீய சிந்தனைகளைத் தரும். இதன்படி மேற்கண்ட இடங்களில் நீச கிரகம் இருந்தால் தர்ம சிந்தனை குறைந்து பொறாமை எண்ணம் மேலோங்கும்.

லக்னாதிபதி, ஒன்பதாம் அதிபதி, ஐந்தாம் அதிபதி ஆகியோர் அசுபத் தன்மையுடன் இருப்பின் நல்ல எண்ணங்கள் வர வாய்ப்பே இல்லை. லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோர் 6, 8, 12-ல் மறைந்தாலும் பொறாமை குணம் மிகும். மேற்கண்ட அதிபதிகளின் சாரநாதர் நீசம், மறைவு பெற்றா லும் பொ

சில ஜாதகர்கள் தொழில் மற்றும் வேலையில் கடும் உழைப்பைக் கொட்டுவர். ஆயினும் அவற்றில் முன்னேற்றமோ, பதவி உயர்வோ இன்றி திண்டாடுவர். சில பெண்கள் தங்கள் குடும்ப மேன்மைக்காக கோவில்களுக்குச் செல்வதும், பிரார்த்தனைகள் செய்வதும், விரதம் மேற்கொள்வதுமாக இருப்பர். ஆயினும் அவர்கள் குடும்பம் முன்னேற்றமின்றி இருக்கும்.

இதற்குக் காரணம் அவர்களது மனம் தான். மனம்போல் வாழ்வு என்பர். நீங்கள் எதுவாக நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறிவிடுவீர்கள் என்று மனோதத்துவம் கூறுகிறது. இதையே நாம் "நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்; கெட்டது நினைத்தால் கெட்டதே நடக்கும்' என்று கூறுகிறோம். வினை விதைத்துவிட்டு தினையறுக்க ஆசைப் படலாமா?

233

ஒரு மனிதன் எப்போதும் தன் வாழ்வின் முன்னேற்றம் குறித்து யோசிப்பது இயற்கை. இது தவறல்ல. ஆனால் தன் முன்னேற்றம் குறித்து மட்டும் சிந்திக்காமல், அடுத்தவர் முன்னேறுவது கண்டு மனம் குமைந்து, வயிறு எரியும்போதுதான் தவறாகிறது. இந்த பொறாமைத் தீ அடுத்தவரை அழிக்கிறதோ இல்லையோ- அது கொண்டவரையே பொசுக்கிவிடும். ஜோதிடம் இந்த பொறாமையைப் பற்றி பொறுமையாகப் பகர்கிறது.

லக்னம் என்பது ஜாதகரைக் குறிக்கும். ஐந்தாமிடம் எண்ணங்களையும், ஒன்பதாமிடம் தர்மத்தையும் குறிக்கும். சனி கிரகம் தீய சிந்தனைகளைத் தரும். இதன்படி மேற்கண்ட இடங்களில் நீச கிரகம் இருந்தால் தர்ம சிந்தனை குறைந்து பொறாமை எண்ணம் மேலோங்கும்.

லக்னாதிபதி, ஒன்பதாம் அதிபதி, ஐந்தாம் அதிபதி ஆகியோர் அசுபத் தன்மையுடன் இருப்பின் நல்ல எண்ணங்கள் வர வாய்ப்பே இல்லை. லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோர் 6, 8, 12-ல் மறைந்தாலும் பொறாமை குணம் மிகும். மேற்கண்ட அதிபதிகளின் சாரநாதர் நீசம், மறைவு பெற்றா லும் பொறாமை பொங்கியெழும்.

இவ்வாறு மூன்று அதிபதிகளும் கெடா விடினும், ஒரு அதிபதி அசுபத் தன்மையுடன் இருந்தாலே அவர்கள் மனதில் நல்ல எண்ணங்கள் ஏற்படுவது சந்தேகமே. இவ்விதம் பொறாமை கொண்டவர்களின் வீட்டில் மகாலட்சுமி தங்கமாட்டாள். இதனை ஸ்ரீசூக்தம் உறுதிபட உரைக்கிறது. எத்தனை உழைத்தாலும் எல்லாம் விழலுக்கிறைத்த நீராகி வீணாகும். பார்த்த இடம், பார்வை பட்ட மனிதர்கள் பஸ்பமாகிவிடுவர். ஏங்கும் பொருள் இல்லாது போய்விடும். முக்கியமாக இவர்களின் பிள்ளைகளின் வாழ்வு எதிர்மறையாகிவிடும்.

1, 5, 9-ஆம் அதிபதிகளுள் ஒரு கிரகம் கெட்டாலும், ஒரு குடம் பாலில் ஒருதுளி விஷம் கலந்தாற்போல் வாழ்வே கெட்டுவிடும். இனி 12 லக்னங்களுக்குமுள்ள அமைப்புகளைக் காண்போம்.

மேஷ லக்னம்

மேஷ லக்னாதிபதி செவ்வாய். ஐந்தாமதிபதி சூரியன். ஒன்பதாமதிபதி குரு. இவர்களுக்கு செவ்வாய் அசுபத் தன்மையோடு இருந்தால் வீடு, சுகம் சம்பந்தமாக ஒரு ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும். சூரியன் சுபமாக இல்லாவிடில் வாழ்க்கைத்துணை, வியாபார விஷயமாக ஒரு மனக்குறை இருக்கும். குரு கெட்டால் வியாபாரம், வெளிநாட்டு மோகம், பெருமை, தந்தை விஷயமாக மனம் பேதலித் துக்கொண்டே இருக்கும். இதனால் பொறாமை பொங்கும்.

ரிஷப லக்னம்

இவர்களின் லக்னா திபதி சுக்கிரன். ஐந்தாமதிபதி புதன். ஒன்பதாமதிபதி சனி. இவர்களுக்கு சுக்கிரன் கெட்டால் இவர்களது பிள்ளைகள் வேலை, பிறந்த குலம் என இவற்றைப் பற்றி புலம்பிக்கொண்டே இருப்பார்கள். புதன் அசுபத் தன்மையுடன் இருந்தால், எண்ணியவை எண்ணியாங்கு நடக்காது. முக்கியமாக பணத்தட்டுப்பாடு இருந்துகொண்டே இருக்கும். அதனால் எப்போதும் மனம் விசனப்பட்டுக்கொண்டே இருக்கும். சனி கெட்டால், இவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்யவேண்டும்- வெளிநாடுகளைச் சுற்றிப்பார்க்கவேண்டும்- தூசி படாமல் எளிதாக வேலை பார்க்க வேண்டும் என்னும் பேரவா இருக்கும். இதில் கொடுமை என்னவென்றால், இவர்கள் அடுத்த ஊருக்குக்கூட போக இயலாது. இதன் காரணமாக மிகுந்த பொறாமை கொள்வர். சனியே ஒன்பதாமதிபதியாவதால் பொறாமையின் அளவு அதிகமாக இருக்கும்.

மிதுன லக்னம்

மிதுன லக்னாதிபதி புதன். ஐந்தாமதிபதி சுக்கிரன். ஒன்பதாமதிபதி சனி. இவர்களின் புதன் பலம் குறைந்திருந்தால், இவர்களுக்கு கல்வி கற்கமுடியவில்லையே எனும் ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும். பெரிய படிப்பு படித்திருந்தால் பெரிய வேலைக்குப் போயிருக்கலாமே எனும் மன அரிப்பு எப்போதுமிருக்கும். ஐந்தாமதிபதி சுக்கிரன் கெட்டிருந்தால், "எல்லாருக்கும் பரம்பரை சொத்து இருக்கிறது; நமக்கு மட்டும் கைவிட்டுப் போய்விட்டதே' எனும் ஏக்கம் இருக் கும். ஒன்பதாமதிபதி சனி கெட்டிருந்தால், தன்னிச்சையாக இவர்களுக்கு தீர்க்காயுள் பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். மேலும் தனது துரதிர்ஷ்டத்தை நினைத்து நினைத்து மனம் குமைந்து போவர். இவையே இவர்களது பொறா மைக்குக் காரணமாக இருக்கும்.

கடக லக்னம்

கடக லக்னாதிபதி சந்திரன். ஐந்தாமதிபதி செவ்வாய். ஒன்பதாமதிபதி குரு. பொதுவாக சந்திரன் நீசமானாலும், அசுபத் தன்மையுடன் இருந்தாலும், ராகுவுடன் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதகர்கள் மனப்போராட்டத்தில், மன மாறுதல்களுடன் திரிவர். இதில் லக்னாதிபதி சந்திரனாக இருந்து, அவர் சுபத்தன்மை பெறாவிடில் ஜாதகர் மிக மன மாத்சர்யங்களுடனும் மிக ஏக்கத்துடனும் நடந்துகொள்வர். ஐந்தாமதிபதி செவ்வாய் அசுபத் தன்மையுடன் கெட்டிருந்தால், தொழில் தொல்லையுடன், ஈடேறாத ஆசைகளுடன், தொழில் சார்ந்த அறிவுக் குறைவுடன், மந்தமான புத்தியும்கொண்டு, அது சார்ந்து பொறாமை கொள்வர். குரு கெட்டிருந்தால் திருமண வாழ்வில் திருப்தியற்றும், கிடைத்த வேலையில் நிராசையுடனும், சரியான வேலை கிடைக்காமலும் இருப்பர். இவை சார்ந்த பொறாமை இருந்துகொண்டே இருக்கும்.

சிம்ம லக்னம்

சிம்ம லக்னாதிபதி சூரியன். ஐந்தாமதிபதி குரு. ஒன்பதாமதிபதி செவ்வாய். சூரியன் அசுபத் தன்மையுடன் அமைந்தால், இவர்களது முயற்சி, புகழ், பிறரின் இகழ்ச்சி என எல்லா விஷயங்களும் தாழ்மையான நிலையில் அமையும். எல்லா நிகழ்வுகளிலும் கடைசி நிலையில் இருக்கும் துர்பாக்கியம் ஏற்படும். இதனால் மனம்நொந்து போவர். ஐந்தாமதிபதி குரு பாழ்பட்டால் ஆரோக்கியக் குறைவும், அடிக்கடி அடிபடுவதும், அவமானப்படுவதுமாக நாட்கள் செல்லும். இதன்காரணமாக மனம் சுருங்கிப் போவர். ஒன்பதாமதிபதி செவ்வாய் கெடுநிலையில் அமைய, மனை, வீடு, தந்தையின் சொத்து என அத்தனையும் கைநழுவும். இதனால் மனம் குமைந்து, எப்போதும் மனம் பொறா மையால் துடிக்கும்.

கன்னி லக்னம்

கன்னி லக்னாதிபதி புதன். லக்னாதிபதி அசுப நிலைபெற, இவர்கள் யாருக்கு நன்மை செய்தாலும் அது பன்மடங்கு தீமையாகத் திரும்பிவரும். வியாபாரம், தொழிலில் முன்னேறாமல் தடுமாறும் நிலை ஏற்படும். இவர்கள் தன்னைத்தானே நொந்துகொள்ளும் நிலை உண்டாகும். ஐந்தாமதிபதி சனி கெட்டால், இவர்களது யோசனைகளும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளும், வேலையில் தளர்வையும் தடையையும், மிகுந்த அவமானத்தையும் தேடித்தரும். ஆரோக்கியக் குறைவும், அதன் பாதிப்பும் உண்டு. அதனால் எண்ணங்கள் சிதறும். ஒன்பதாமதிபதி சுக்கிரன் அசுப நிலைபெற, அதிர்ஷ்டக் குறைவும் அதனால் பணப்புழக்க சுருக்கமும் ஏற்படும். இதனால் மிகவும் மனம் ஏங்கிப்போவர். கண்களில் கண்ணீர் எப்போதும் திரண்டு நிற்கும். இதனால் மனம் பொறாமை வசப்படும்.

துலா லக்னம்

துலா லக்னாதிபதி சுக்கிரன். ஐந்தாமதிபதி சனி. ஒன்பதாமதிபதி புதன். இவர்களுக்கு லக்னாதிபதி கெடுநிலை பெற, எதைத் தொட்டாலும் விரயமென்றிருக்கும். இல்வாழ்க்கையும் இவர்கள் நினைத் ததுபோல அமையாது. இதனால் மனக் குமுறல் இருந்துகொண்டே இருக்கும். ஐந்தாமதிபதி சனி மோசமான நிலையிலிருந்தால் வீடு அமையாது. வாகனம் கிடைக்காது. பிள்ளைகளால் மேன்மை இராது. இவர்கள் காதல்வயப்பட்டால் கண்டிப்பாக அது நிறைவேறாது. கொடுப்பினை இல்லாத நிலை உண்டாகும். இவர்களது ஒன்பதாமதிபதி கெட்டால், நினைத்த வேலை நினைத்த இடத்தில் அமையாது. வெளிநாட்டுக் கனவு கைகூடாது. எப்போதும் கடன் இருந்துகொண்டே இருக்கும். கடன்காரர்களிடமிருந்து தப்பி ஓடுவதே பெரும்பாடாகிவிடும். எதில் முதலீடு செய்தாலும் அது திரும்ப வராது. இந்நிலையில் ஜாதகர் பொறாமைப்படாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

விருச்சிக லக்னம்

விருச்சிக லக்னாதிபதி செவ்வாய். ஐந்தாமதிபதி குரு. ஒன்பதாமதிபதி சந்திரன். இவர்களது லக்னாதிபதி அசுபப் பலன் பெற, எப்போதும் ஒரு துரதிர்ஷ்டம் துரத்திக்கொண்டே இருக்கும். இதனால் மனம் நொந்து பொறாமை குணம் வந்துவிடும். ஐந்தாமதிபதி குரு கெட்டால் இவர்களது சொல் அம்பலம் ஏறாது. வார்த்தைகள் நிராகரிக்கப்படும். குழந்தைகளால் மேன்மை இராது. இவர்களுக்கு எப்போதும் ஒரு பய சிந்தனை இருந்து, இவர்களைக் கோழையாகக் காட்டும். இவர்களது தாழ்வுணர்ச்சி பொறாமை கொள்ளச் செய்யும். ஒன்பதாமதி பதி சந்திரன் நீசமானால், தொட்டது துலங்காது; பட்டது விளங்காது என்ற கதையாக இருக்கும். இவர்களது பெற்றோர்களாலும் பெரிதாக நன்மை இராது. இக்காரணங்களால் பொறாமை குணம் மனதில் உழன்றுகொண்டே இருக்கும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 94449 61845

bala090421
இதையும் படியுங்கள்
Subscribe