Advertisment

பொறாமைத் தீ! 12 லக்னத்திற்கு எப்படிப் பொங்கும்? -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/fire-jealousy-12-how-get-laknath-r-mahalakshmi-0

சென்ற இதழ் தொடர்ச்சி...

1, 5, 9-ஆம் அதிபதிகளுள் ஒரு கிரகம் கெட்டாலும் வாழ்க்கையே பிரச்சினைகளுக்குள்ளாகும். கடந்த இதழில் விருச்சிக லக்னம் வரையிலான அமைப்பைப் பார்த்தோம். மற்ற லக்னங்கள் இங்கே...

தனுசு லக்னம்

Advertisment

தனுசு லக்னாதிபதி குரு. ஐந்தாமதிபதி செவ்வாய். ஒன்பதாமதிபதி சூரியன். லக்னாதிபதி கெடுநிலையில் அமைந்தால் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு, நல்ல சுகம் என எதுவுமே கைக்கு எட்டாமல் கனவாகவே இருக்கும். பணப்புழக்கம் இல்லாமல் மனமும் கையும் காய்ந்துவிடும். ஐந்தாமதிபதி செவ்வாய் கெட, எப்போதும் ஆரோக்கியம் குறித்த தொல்லையும், உயிர் பயமும் இருந்துகொண்டே இருக்கும். ஒன்பதாமதிபதி சூரியன் அசுபநிலை பெற்றால், எந்த எண்ணமும் நிறைவேறா மல் எதிர்மறைச் செயல்களாக நடக்கும். அரசு, அரசியலில் கீழ்நிலையில் இருக்கும்படியாகும். இதனால் பொறாமை கொண்ட மனதினராய் இருப்பர்.

ssa

மகர லக்னம்

மகர லக்னாதிபதி சனி. ஐந்தாமதிபதி சுக்கிரன். ஒன்பதாமதிபதி புதன். லக்னாதி பதி சனி ஏற்கெனவே சற்று இறுக்கமான குணத்தைக் கொடுப்பார். இந்த நிலையில் சனி அசுபத்தன்மை அடைந்தால், ஜாதகர் வாழ்வில் எல்லா நிலைகளிலுமுள்ள மனிதர்களை உதறித் தள்

சென்ற இதழ் தொடர்ச்சி...

1, 5, 9-ஆம் அதிபதிகளுள் ஒரு கிரகம் கெட்டாலும் வாழ்க்கையே பிரச்சினைகளுக்குள்ளாகும். கடந்த இதழில் விருச்சிக லக்னம் வரையிலான அமைப்பைப் பார்த்தோம். மற்ற லக்னங்கள் இங்கே...

தனுசு லக்னம்

Advertisment

தனுசு லக்னாதிபதி குரு. ஐந்தாமதிபதி செவ்வாய். ஒன்பதாமதிபதி சூரியன். லக்னாதிபதி கெடுநிலையில் அமைந்தால் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு, நல்ல சுகம் என எதுவுமே கைக்கு எட்டாமல் கனவாகவே இருக்கும். பணப்புழக்கம் இல்லாமல் மனமும் கையும் காய்ந்துவிடும். ஐந்தாமதிபதி செவ்வாய் கெட, எப்போதும் ஆரோக்கியம் குறித்த தொல்லையும், உயிர் பயமும் இருந்துகொண்டே இருக்கும். ஒன்பதாமதிபதி சூரியன் அசுபநிலை பெற்றால், எந்த எண்ணமும் நிறைவேறா மல் எதிர்மறைச் செயல்களாக நடக்கும். அரசு, அரசியலில் கீழ்நிலையில் இருக்கும்படியாகும். இதனால் பொறாமை கொண்ட மனதினராய் இருப்பர்.

ssa

மகர லக்னம்

மகர லக்னாதிபதி சனி. ஐந்தாமதிபதி சுக்கிரன். ஒன்பதாமதிபதி புதன். லக்னாதி பதி சனி ஏற்கெனவே சற்று இறுக்கமான குணத்தைக் கொடுப்பார். இந்த நிலையில் சனி அசுபத்தன்மை அடைந்தால், ஜாதகர் வாழ்வில் எல்லா நிலைகளிலுமுள்ள மனிதர்களை உதறித் தள்ளிவிடுவார். அவர் களும் இவரைப் புறந்தள்ளி விடுவர். இருக்க இடமின்றித் தவிப்பார்கள். நாளாவட்டத்தில் வாழ்க்கையில் தனி மனிதராகி விடுவார். சுய பச்சாதாபத்தால் மனம் பொறாமை, குரோதம் கொள்ளும். ஐந்தாமிட சுக்கிரன் கெட்டால் தொழில் மந்தமாகும். பிள்ளைகளால் மேன்மை கிடைக்காது. கௌரவமில்லாத வாழ்க்கை அமையும். இவர்களது முயற்சிகள் அனைத்தும் தோல்வியாகும். வாழ்க்கைத் துணையும் அவ்வளவு சிலாக்கியமாக இருக்காது. ஒன்பதாமதிபதி புதன் கெட்டால் மிகக் கோழையாக உணர்வார்கள். எந்த வேலையும் சரியாக வராது. தந்தையின் அனுசரணை கிடைக்காது. தாய்மாமனும் தொல்லை தருவார். இவர்களை எல்லாரும் கோமாளி என்னும் லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள். எனவே இவர்கள் மனம் குன்றி, மனதில் பொறாமை நிறையும்.

கும்ப லக்னம்

Advertisment

கும்ப லக்னாதிபதி சனி. ஐந்தாமதிபதி புதன். ஒன்பதாமதிபதி சுக்கிரன். லக்னாதிபதி சனி நல்ல நிலையில் இல்லாமலிருந்தால், ஜாதகர் நிற்க நேரமில்லாமல், காரண காரியமில்லாமல் அலைந்துகொண்டே இருப்பார். அல்லது ஒரு அங்குலம் கூட நகரமுடியாத நிலை ஜாதகருக்கு ஏற்பட்டிருக்கும். இதன்காரணமாக அவருக்கு மன வெதும் பல் ஏற்பட்டு பொறாமை ஊற்றெடுக் கும். ஐந்தாமதிபதி புதன் கெட, எப்போதும் ஏதாவது அடிபட்டு அல்லது விபத்தில் சிக்கி உடல்நலமின்றி இருப்பார். இதனால் பணச் செலவும் இருந்துகொண்டே இருக்கும். அல்லது காதல்வயப்பட்டு, அதில் மிக அவமானம் பெற்று, மற்ற காதல்களைப் பார்த்து மிகவும் பொறாமை கொள்வர். பங்கு வர்த்தகத்தில் திடீரென்று பணத்தை இழந்து துயரமும் பொறாமையும் கொள்வர். ஒன்பதாமதிபதி சுக்கிரன் அசுபத் தன்மை பெற, வீடு, வாகனம், நிலம் போன்றவை எதிர்பாராத விதமாக கைநழுவிப் போகும். இதேபோல பெற்றோரும் உதவிசெய்ய இயலாத நிலை பெறுவர். எதிர்பாராத தாக்குதலால் மன இறுக்கம் ஏற்பட்டு, அதனின்று பொறாமை ஏற்படும்.

மீன லக்னம்

மீன லக்னாதிபதி குரு. ஐந்தாமதிபதி சந்திரன். ஒன்பதாமதிபதி செவ்வாய். லக்னாதிபதி குரு நல்ல நிலை பெறாவிடில், தொழில், கௌரவம், அரசியல் என எதை எடுத்தாலும் எல்லாமே தோல்விதான். எண்ணியவை எண்ணியாங்கு நடக்காமல் போகும். ஒரு விஷயமாவது நாம் நினைத்த படி நடக்கிறதா என மனம் அல்லாடும். "மற்ற அனைவருக்கும் நினைத்தது நடக்கிறது; நமக்கு மட்டும் ஒன்றுமே நடக்கமாட்டேன் என்கிறதே' என தன்னிரக்கம் ஏற்பட்டு, அது பொறாமையாக மாறும். ஐந்தாமதி பதி சந்திரன் கெட, பீடை பிடித்துக் கொண்டாற்போல தரித்திரமாக அமையும். வருகின்ற அதிர்ஷ் டம் இவர்களைப் பார்த்தவுடன் அடுத்த தெரு வழியாக ஓடி விடும். போன ஜென் மத்துப் பாவம் என நொந்து வெந்து பொறாமை கொள்வர். ஒன்பதாமதிபதி அசுபத்தன்மை பெற, இவர்கள் ஒரு விஷயமாக ஓரிடத்திற்குச் செல்ல, இவர்களுக்கு முன்னால் இவர் களது தீவினை சென்று நிற்கும். எதை முயற்சித்தாலும், எதை ஆரம்பித்தாலும் அதில் தடை விழுந்து பயனற்றுப் போகும். எப்போதும் தடைகளை மட்டுமே சந்திப்பதால் மனம் சிதறிப்போய் பொறாமை ஒட்டிக் கொள்ளும்.

விதி விலக்குகள்

1, 5, 9-ஆம் அதிபதிகள் அசுபத்தன்மை யோடு இருந்தால் பொறாமை குணம் பொங்கும். எனினும் இவ்வாறு கெட்ட கிரகங் களை சுப கிரகங்கள் பார்த்தால் பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரியாது. மேலும் கெடுபலன் உள்ள கிரகங்களை சுபர் பார்த்தா லும், சுபர் சாரம் ஏறிநின்றாலும், அம்சத்தில் உயரிய நிலை பெற்றாலும் இந்த பொறாமை குணம் அகன்று, அது முன்னேற்றத்தைத் தூண்டும் தூண்டுகோலாக விளங்கி, நன்கு சிந்திக்கவும் திட்டமிடவும் செய்து வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும். ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு "ஆரா' என்னும் எண்ண அலைகள் பரவியிருக்கும். நல்ல எண்ணமுடைய வர்களைச் சுற்றி நல்ல ஆரா பரவிக் கொண்டிருக்கும். இதனால்தான் சித்தர்கள், சாதுக்கள், நல்ல பெரியவர் கள் முன்நின்று, அவர்களை தரிசிப்பது மிக நன்று எனக் கூறுவர். அவர்கள் ஒரு சொல் பேசாவிட்டா லும், அவர்களது தெய்வீக அலையில் நாம் நிற்கும்போது, நமது கெடுபலன் கள் அகன்று நன்மை உண்டாகும்.

அதுபோலவே தீயவர்களைச் சுற்றி எப்போதும் கெட்ட ஆரா பரவியிருக்கும். அந்த தீய எண்ண அலைகள் நம்மைப் பொசுக்கிவிடும். அதனால் நாமும் நம் குடும்பமும் மிகத் துன்பங்களை எதிர்கொள்ள நேரும். எனவேதான் நல்லாரோடு பழகுதல் வேண்டும் என்றும், தீயவரோடு பழகுதல் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

பொறாமை குணம் கொண்டோர் அதிலிருந்து படிப்படியாக மீண்டுவர வேண்டும். இல்லையெனில் அது அவர்களை மட்டுமல்லாது, அவர் களது குடும்பத்தையும் விளங்க விடாமல் செய்துவிடும்.

பொறாமை குணத்திலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பவர்கள், பௌர்ணமிதோறும் விரதமிருந்து அவர்களுக்குப் பிடித்தமான அம்பாளை முழுமனதோடு வணங்க வேண்டும். இதனால் அன்னையின் கருணையால் பொறாமை குணம் நீங்கும். குடும்பமும் வாழ்வு பெறும். பொறாமையின்றிச் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு முழுப்பலன் கிடைக்கும்.

செல்: 94449 61845

bala160421
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe