Advertisment

பிறவிதோறும் தொடரும் பெண் சாபம்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/female-curse-continues-every-birth-chithardasan-sunderji-jeevanadi-corruption

சுமார் 60 வயதுடைய பெண் ஜீவநாடியில் பலன் கேட்க வந்தார்.

அந்த அம்மையார் தன்னைப் பற்றிய சில விபரங்களைக் கூறிவிட்டு, "எனது வம்சத்தில், ஒவ்வொரு தலைமுறையிலும் பிறக்கும் பெண்களில் யாராவது ஒரு பெண் முதல் குழந்தை கர்ப்பமடைந்த வுடன் கணவனைப் பிரிந்து, பிறந்த வீடு வந்து விடுகிறாள். எனது தாய் நான் கர்ப்பத்தில் இருக்கும்போதே, கணவனைப் பிரிந்து தன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டார். அதனால் என் தந்தையின் முகத்தை நான் பார்த்ததே இல்லை. எனது தாய்வழி பாட்டிதான் என்னை வளர்த்து, படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தார்.

Advertisment

நான் பெற்ற மகள், எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஒருவனைக் காதலித்து, அவள் விர

சுமார் 60 வயதுடைய பெண் ஜீவநாடியில் பலன் கேட்க வந்தார்.

அந்த அம்மையார் தன்னைப் பற்றிய சில விபரங்களைக் கூறிவிட்டு, "எனது வம்சத்தில், ஒவ்வொரு தலைமுறையிலும் பிறக்கும் பெண்களில் யாராவது ஒரு பெண் முதல் குழந்தை கர்ப்பமடைந்த வுடன் கணவனைப் பிரிந்து, பிறந்த வீடு வந்து விடுகிறாள். எனது தாய் நான் கர்ப்பத்தில் இருக்கும்போதே, கணவனைப் பிரிந்து தன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டார். அதனால் என் தந்தையின் முகத்தை நான் பார்த்ததே இல்லை. எனது தாய்வழி பாட்டிதான் என்னை வளர்த்து, படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தார்.

Advertisment

நான் பெற்ற மகள், எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஒருவனைக் காதலித்து, அவள் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டாள். அவள் முதல் கர்ப்பம் தரித்த உடன், கணவனைப் பிரிந்து எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டாள். அவள் பெற்ற குழந்தைக்கு இப்போது ஒன்றரை வயதாகிறது. என் தாயின் வாழ்க்கையைப் போன்று, இப்போது என் மகள் வாழ்க்கை அமைந்துவிட்டது. என் பேத்தியும், அவள் தந்தை முகம் பார்க்க முடியாமலேயே வாழவேண்டிய நிலை உண்டாகிவிட்டது. வம்சத்தை தொடரும் இந்த நிலைக்குக் காரணம் தெரிந்து கொள்ளவும், இனி என் வம்சத்தில் பிறக்கும் பெண் குழந்தைகள் வாழ்வில் இதுபோன்ற நிகழ்வுகள் உண்டாகாமல் வழிகேட்டும் அகத்தி யரை வாடி வந்துள்ளேன்'' என்றார்.

Advertisment

ss

ஜீவ நாடி ஓலையைப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி பலன் கூறத் தொடங்கி னார்.

"இவள் வம்ச முன்னோர்கள் வீட்டிற்கு வாழவந்த மருமகளை, அவள் கணவனின் தாயாரும் (மாமியார்) கணவனுடன் பிறந்த சகோதரிகளும் சேர்ந்து கொடுமைப்படுத்தி. அவள் கணவனுடன் சேர்ந்து வாழ முடியாமலும் பிறந்த வீட்டிற்கு துரத்தி விட்டார்கள்.

அந்தப் பெண்தான் பெற்ற கைக்குழந்தை யைத் தூக்கிக்கொண்டு, வியறெரிய, கண்களில் வழியும் நீருடன் ஒரு சாபத்தையிட்டாள். "வாழ வந்த என்னை, என் கணவனுடன் சேர்ந்து வாழவிடாமலும், பெற்ற பிள்ளை தந்தை பாசம் அறியமுடியாத நிலையிலும் எங்களைத் துரத்திவிட்டீர்கள். என்னுடைய வேதனையை இந்த வம்சத்தில், பிறக்கும் பெண்களும் அனுபவிக்க வேண்டும்.

இந்தக் குடும்பத்தில் பிறக்கும் பெண்கள், திருமணம் முடிந்து கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து, கர்ப்பமடைந்த உடன், அவளுக் கும், கணவனுக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவனை விட்டுப் பிரிந்து, தான் பிறந்த வீட்டிற்கு வந்து சித்தாள். சிறிது காலத்திற்குப் பிறகு, தனது குழந்தை யைத் தன் தாய்- தந்தையிடம் வளர்க்கச் சொல்லிவிட்டு, வேறொருவனை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.

இவள் வீட்டில் வாழ வந்த பெண்ணை, எவள் வீட்டைவிட்டு வெளியேற்றினாளோ, அந்தப் பெண்ணின் ஆத்மா, தான் பிறக்கும் ஒவ்வொரு பிறவியிலும், முற்பிறவியில் தான் செய்த பாவத்தின் காரணமாக பெற்ற சாபத்தை அடுத்த பிறவிகளில் அனுபவிக்கிறது. திருமணம் முடிந்து கர்ப்பம் தரித்தவுடன் கணவனைப் பிரியச் செய்கிறது'' என்றார்.

"இந்த சாபம் இனி என் குடும்பத்தில் பிறக் கும் பெண்களைத் தொடர்ந்து பாதிக்காமலிருக்க நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்றார் அந்தப் பெண்மணி.

பெண் சாபம் நிவர்த்தியாக சில வழிமுறைகளையும், சில பிரார்த்தனைகளையும் கூறிவிட்டு அகத்தியர் ஓலையிலிருந்து மறைந்தார்.

ஒரு பிறவியில் தனது குடும்பத்து, உறவுகளுக்கு என்ன பாவத்தைச் செய்து சாபம் உணடானதோ, அவர்கள் எத்தனைப் பிறவியெடுத்தாலும் அந்த சாபம் அவர்களை மட்டுமே பாதிக்கும்; குடும்பத்தில் ஒரே தாய்- தந்தைக்குப் பிறந்த மற்றவர்களை பாதிக்காது என்பதை நானும் அறிந்து கொண்டேன்.

செல்: 99441 13267

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe