மரண பயம் போக்கும் மகா மிருத்யுஞ்ஐயம்! - மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/fear-death-great-miraculousness-mahesh-verma

ரு மனிதர் அகால மரணத்தைத் தழுவும்போது, அவருடைய ஜாதகத்திலிருக்கும் சில விஷயங்களை நாம் பார்க்கவேண்டும். முக்கியமாக, லக்னாதிபதி, அஷ்டமாதிபதி, 12-க்கு அதிபதியின் நிலையைக் காண்பது அவசியம்.

mm

ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி விரய ஸ்தானத்தில் இருந்து, 6, 8-ஆம் பாவங்களில் பாவகிரகங்கள் இருந்து, அவருக்கு மாரகாதிபதி தசை அல்லது ராகு தசையில் 6-ஆம் அதிபதி யின் அந்தரம் நடந்தால் திடீரென்று விபத்தின் மூலம் மரணம் ஏற்படலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியனாக இருந்து, அந்த சூரியன் ராகுவுடன் 12-ல் இருந்தால், அவருக்கு 28 வயதிற்குப் பிறகு மரணம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதிலும் குறிப்பாக விரய ஸ்தானத்திலுள்ள சூரியனை 6-ஆம் பாவத்திலிருந்து சனி பார்த்தால், அவருக்கு சூரிய தசையில் ராகு புக்தி அல்லது ராகு தசையில் சனி புக்தி நடக்கும்போது திடீரென்று மரணம

ரு மனிதர் அகால மரணத்தைத் தழுவும்போது, அவருடைய ஜாதகத்திலிருக்கும் சில விஷயங்களை நாம் பார்க்கவேண்டும். முக்கியமாக, லக்னாதிபதி, அஷ்டமாதிபதி, 12-க்கு அதிபதியின் நிலையைக் காண்பது அவசியம்.

mm

ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி விரய ஸ்தானத்தில் இருந்து, 6, 8-ஆம் பாவங்களில் பாவகிரகங்கள் இருந்து, அவருக்கு மாரகாதிபதி தசை அல்லது ராகு தசையில் 6-ஆம் அதிபதி யின் அந்தரம் நடந்தால் திடீரென்று விபத்தின் மூலம் மரணம் ஏற்படலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியனாக இருந்து, அந்த சூரியன் ராகுவுடன் 12-ல் இருந்தால், அவருக்கு 28 வயதிற்குப் பிறகு மரணம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதிலும் குறிப்பாக விரய ஸ்தானத்திலுள்ள சூரியனை 6-ஆம் பாவத்திலிருந்து சனி பார்த்தால், அவருக்கு சூரிய தசையில் ராகு புக்தி அல்லது ராகு தசையில் சனி புக்தி நடக்கும்போது திடீரென்று மரணம் உண்டாகலாம்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக 6, 8, 12-ல் இருந்து, அந்த சந்திரனுக்கு சனி, செவ்வாயின் பார்வை இருந்தால், அந்த ஜாதகருக்கு எட்டு வயதிலிலிருந்து 32 வயதுவரை திடீர் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

ஒரு ஜாதகத்தில் சந்திரன் நீசமடைந்து 8-ல் இருக்க, லக்னத்தில் செவ்வாய், 6-ல் சனி இருந்தால், அவருக்கு சந்திர தசையில் சனி புக்தி நடக்கும்போது திடீரென்று நீரால் விபத்து நேரிட வாய்ப்பிருக்கிறது.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சனி, ராகு 12-ல் இருந்தால், 20 வயதிலிருந்து 36 வயதிற்குள், அவரது கோபகுணம் காரணமாக வாகனத்தை ஓட்டும்போது அல்லது வேறு சாகச செயல்களின்போது அந்த ஜாதகருக்கு விபத்து உண்டாவதற்கு வாய்ப்பிருக்கிறது.

6, 8, 12-ல் சூரியன், சனி, ராகு இருந்தால், அந்த ஜாதகருக்கு அதிகமான கோபம் வரும்.

சிலருக்கு என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. சிலர் வீண்பேச்சு காரணமாக விபரீதத்தில் சிக்கிக் கொள்வார்கள். அதன் விளைவாக தற்கொலை செய்துகொள்ளும் சூழல்கூட வரலாம்.

ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக இருந்து, 8-ஆம் பாவத்தில் செவ்வாய், சூரியன் அல்லது செவ்வாய், ராகு இருந்தால் அவருக்கு அடிக்கடி விபத்து ஏற்படும்.

செவ்வாய், புதன், சனி லக்னத்தில் இருந்து, 8-ஆம் பாவத்தில் ராகு இருந்தால், அந்த ஜாத கருக்கு வாகனம் ஓட்டும்போது விபத்து உண்டாகலாம்.

ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்து, 6-ஆவது பாவத்தில் சனி இருந்தால் அவருக்கு நீரால் விபத்து உண்டாகக்கூடும்.

11-ல் சந்திரன், 6-ல் சனி இருந்தால், அவர் பனிப் பகுதிக்குச் செல்லக்கூடாது. செவ்வாய் தசை அல்லது சனி தசை நடக்கும்போது பனிப் பிரதேசத்திற்குச் சென்றால் அவருக்கு அங்கு விபத்து ஏற்படும்.

லக்னத்தில் பலவீனமான செவ்வாய், சூரியன், புதன் இருந்து சனி பார்த்தால், அந்த ஜாதகருக்கு செவ்வாய் தசையில் சனி அந்தரம் வந்தால் விபத்து காரணமாக அகால மரணம் உண்டாக வாய்ப்பிருக்கிறது. ஒரு மனிதர் வாழும் வீட்டின் பிரதான வாசல் தென்கிழக்கில் இருந்து, தென்கிழக்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்து, அந்த வீட்டில் ஒரே வாரிசு இருந்தால் அவருக்கு வாகனம் ஓட்டும்போதோ, நீரில் இருக்கும் போதோ விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

ஒரு வீட்டிற்குத் தெற்கு சார்ந்த தென்கிழக்கில் பிரதான வாசல் இருந்து, அங்கு நீர்த் தொட்டி அல்லது கிணறு இருந்து, அங்கு முதல்மாடிக்குச் செல்வதற்குப் படிக்கட்டுகள் இருந்து, அந்த வீட்டின் இளையமகன் வடகிழக்கில் படுத்தால், அவருக்கு மாரகாதிபதியின் தசையில் விபத்து காரணமாக அகால மரணம் ஏற்படலாம்.

ஒரு வீட்டின் வடகிழக்கு துண்டிக்கப்பட்டு, அந்த வீட்டின் தெற்குப்பகுதி காலியாக இருந்து, வீட்டின் மத்தியப் பகுதியில் கிணறு இருந்தால், அங்கிருப்பவர்கள் ஒருவரோடொருவர் சண்டை யிட்டு, தங்களையே அழித்துக் கொள்வார்கள்.

பரிகாரங்கள்

சிவனை, மார்க்கண்டேயர் வணங்கியதைப் போல மனதால் வணங்க வேண்டும். தினமும் சிவனுக்கு நீரால் அபிஷேகம் செய்து வணங்குவது சிறப்பானது. மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தைப் படித்தல் ஆபத்தைத் தவிர்க்கும். குலதெய்வ வழிபாடு இன்றியமையாதது. தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.

வீட்டின் மத்தியப் பகுதியில் நீர்த்தொட்டி, கிணறு இருக்கக்கூடாது. வீட்டின் தென் கிழக்கு, தென்மேற்கு, தெற்கு மத்தியப் பகுதியில் பூமிக்குக் கீழே நீர்த்தொட்டி இருக்கக்கூடாது.

வீட்டில் வாஸ்து சாந்தி ஹோமம், ஆயுஷ் ஹோமம் செய்யவேண்டும்.வீட்டில் மகா மிருத்யுஞ்ஜய எந்திரத்தை வைத்துப் பூஜை செய்வது நன்று. தேவையற்ற பொருட்களை சேர்த்துவைப்பதைத் தவிர்க்கவும்.

செல்: 98401 11534

bala161020
இதையும் படியுங்கள்
Subscribe