உலகத்தில் மக்கள், "தங்கள் விதி எப்படியோ அதன் படியே எல்லாம் நடக்கும்; விதியை யாரால் மாற்ற முடியும்?' என்றெல்லாம் பேசக் கேள்வியுறுகிறோம். அந்த விதி எவ்வாறு அமைகிறதென்பதை ஜோதிடரீதியாகக் காண்போம்.
பிரபஞ்சமானது 12 ராசிகளால் ஆனது. இந்த பன்னிரு ராசிகளும் பன்னிரு பெரிய ராட்சத மேகக் கூட்டங்களால் இணைக்கப்பெற்றுள்ளன. இந்த ராசி மண்டலங்களில்தான் பால்வெளி என்று சொல்லப்படும் நட்சத்திரக் கூட்டங்களும் இருக்கின்றன. இவற்றில் ஒன்பது கிரகங்களுக்கான 27 நட்சத்திரங்களும் அமைந்துள்ளன. இந்த ராசி அமைப்புகள்தான் பாவங்களாகப் பிரிக்கப்படுகின்றன. இந்த பாவங்களில் அதிவேகமாகச் செல்லக்கூடிய சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் மிகவும் துல்லியமாக பாவப் புள்ளிகளில் நகர்ந்துகொண்டிருக்கின்றன. இவற்றைவிட, லக்னபாவம் என்பது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பாவம்வீதம் இன்னும் வேகமாக நகர்ந்துசெல்கிறது. இவ்வாறு லக்னபாவம் நகரும்போது, அதற்குத் தகுந்தாற்போல் அதனுடன் மற்ற பதினோரு பாவங்களும் வேகமாக நகர்ந்துசெல்கின்றன.
பாவங்களில் பாவ புக்திநாதன், பாவ நட்சத்திரங்கள், பாவ உப நட்சத்திரங்கள் என்று அமைந்திருக்கின்றன. இவை ஒன்பது கிரகங்களுக்குரிய நட்சத்திரங் கள்தான். உதாரணத்திற்கு, பால் வெளியிலுள்ள ஐந்தாம் பாவத்தை எடுத்துக்கொள்வோம்.
ஐந்தாம் பாவம்; பாவ புக்திநாதன் (கிரகம் குறிக்கும் நட்சத்திரம்): மிருகசீரிடம். (செவ்வாய்). பாவ புக்திநாதன் நின்ற நட்சத்திரம் (கிரகம் குறிக்கும் நட்சத்திரம்):
அஸ்வினி. (கேது).
இங்கு ஐந்தாம் பாவ புக்திநாதன் மிருகசீரிடம் என்பது செவ்வாய் கிரகத்தின் நட்சத்திரம். அஸ்வினி என்பது கேதுவின் நட்சத்திரம். இதையே நாம் ஐந்தாம் பாவ புக்திநாதன் செவ்வாய் நின்ற நட்சத்திரம் (கேது) என்று சொல்கிறோம். இவ்வாறு 12 பாவங்களும் பிறந்த ஜாதகத்தில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு குழந்தை பூமியில் ஓரிடத்தில் பிறக்கும்போது, பாவமுனைகள் ஒன்றிலிருந்து 12 வரை தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன. இந்த விதியானது ஒருவர் பிறக்கும் போதே தீர்மானமாகி குறிக்கப் பட்டுவிடும். இந்த 12 பாவங்கள் தொடர்புகொண்ட நட்சத்திரங்கள், உப நட்சத்திரங்கள் கொண்ட அமைப்பையே "பாவமுனை விதித் தொடர்புகள்' என்று கூறுகிறோம்.
கிரகங்கள் தங்களுக்கே உரிய வேகத்திலும் திசையிலும் பயணித்துக் கொண்டிருக்கும்பொழுது, பால்வெளியிலுள்ள நட்சத்திரங்களைத் தொடர்புகொண்டோ, தொடர்பு கொள்ளாமலோ நகர்ந்துகொண்டிருக் கின்றன. நட்சத்திரங்களைத் தொடர்பு கொள்ளும்பொழுது தங்களுடைய சொந்த நட்சத்திரங்களையும், மற்ற கிரகங்களின் நட்சத்திரங்களையும் தொடர்புகொள்ளும். சொந்த நட்சத்திரங்களைத் தொடர்பு கொள்ளும் கிரகம் அதிக வலிமையடைகிறது. இதையே பலம்பெற்ற கிரகம் என்று கூறுகிறோம். சில சமயங்களில் சில கிரகங்கள் எந்தவொரு நட்சத்திரத்தையும் பாவம் மூலம் தொடர்பு கொள்ளாமல் அண்ட வெளியில் நகர்ந்து கொண்டிருக்கும். அதுவும் ஒரு நட்சத்திர சாரத்தில் தான் இருக்கும். ஆனால் அந்த கிரகம் பாவத் தொடர்புகளைப் பெறாமலிருக்கும். அது அந்த நட்சத்திர சாரத்தில் இருந்தாலும் பாவகரீதியாகத் தொடர்புபெறாததால் பொதுப்பலன்களையே கொடுக்கும் நிலையில்தான் இருக்கும். வலிமையான- துல்லியமான பலன் களை அந்த கிரகத்தால் கொடுக்க இயலாது. இதை ஒரு உதாரணம்மூலம் காண்போம்.
உதாரண ஜாதகத்தில் சுக்கிரன் மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் உள்ளார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அஸ்வினி நட்சத்திரத்திற்கான எந்த பாவத்தையும் தொடர்பு கொள்ளவில்லையென்றால், கேது தானிருக்கும் பாவத்தின்மூலம் அதிக ஆற்றலுடன் செயல்பட முடியாது.
இங்கு சுக்கிரன் நான்காம் பாவ புக்திநாதனாக அமைந்து அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்தாலும், அஸ்வினியானது எந்த பாவத்தின் தொடர்புகளையும் பெறாததனால் அதனுடைய கிரகம் கேதுவால் ஜாதகருக்கு வலிமையான நன்மைகளோ தீமைகளோ உண்டாகாது. கேது எட்டாம் பாவத்தில் அமைந்துள்ளதால், அந்த பாவத்திற்கான பொதுப்பலன்களையே கொடுக்கும். எத்தகைய பலன்களைக் கேது தருமென்பது, கேது அமைந்திருக்கும் பாவத்துடைய காலச்சக்கரச் சூழலைப் பொருத்தது. இங்கு சிம்ம ராசியினுடைய காலச் சக்கரச் சூழலின் பலன் களையே கொடுக்கும்.
கேதுவால் ஏன் வலிமையான பலன்களைக் கொடுக்க இயலாது என்பதை சிறு உதாரணம்மூலம் காணலாம். சுமார் 100 வீடுகளுடைய ஒரு சிறிய ஊர் உள்ளதென்று வைத்துக் கொள்வோம். அங்குள்ள மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, மின்சாரம், பஸ் போக்குவரத்து, பள்ளிக்கூடம், வடிகால் வசதி போன்றவற்றை அரசு செய்துகொடுக்கும். அந்த ஊருக்கு 20 கிலோமீட்டர்களுக்கு அப்பால் இரண்டு வீடுகள் உள்ளதாகக் கொள்வோம். அந்த இரு வீடுகளுக்கு இதுபோன்ற வசதிகளை அரசாங்கத்தால் செய்ய இயலாது. இங்கு இரண்டு வீடுகள் அமைந்துள்ளதுபோல், கேதுவானது பாவத் தொடர்புகளற்றுத் தனியாக அமைந்துள்ளதால், பாவத் தொடர்புகளின் வலிமையை இழந்து பலன்களைக் கொடுக்க இயலாத நிலையில் உள்ளது. மற்றபடி பொதுவான பலன்களைக் கொடுக்கத் தவறுவதில்லை.
ஒரு ஜாதகத்தில் விதி என்பது மேற்கூறியபடி அமையும்.
செல்: 91767 71533