கான் ஸ்ரீ ராகவேந்திரர் விரதத் துக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்யவேண்டும். விரதம் தொடங்கும் முதல் வியாழக்கிழமை காலையில் குளித்து, தூய ஆடை அணிந்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

பூஜைக்குமுன் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்துவைத்து, அதற்கு சந்தனம், குங்குமமிட்டு மலர்களால் அலங்கரித்து வணங்கவேண்டும். நிவேதனமாக மங்களப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முத-யவற்றை வைத்தபின் பூஜையைத் தொடரவேண்டும்.

பூஜை செய்யுமிடத்தை சுத்தம்செய்து கோலமிட்டு, பூஜைக்கென்று வைத்திருக்கும் மணைப்பலகையில் மகான் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்கவேண்டும். படத்திற்கு சந்தனம், குங்குமம், துளசி மாலை சாற்ற வேண்டும். அதே போல குத்துவிளக்கிற்கும் சந்தனம், குங்குமமிட்டு, மலர்களால் அலங்கரிக்கவேண்டும்.

Advertisment

rr

பூஜையின்போது மகான் ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்துப் பூஜிக்கவேண்டும். மகான் படத்திற்கு தீப, தூப ஆராதனைகள் காட்டி தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும், கையில் துளசியை வைத்துக் கொண்டு எழுந்து நின்று-

"பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய

சத்ய தர்ம ரதாயச பஜதாம்

கல்ப வ்ருக்ஷாய நமதாம்

ஸ்ரீ காம தேநவே'

என்னும் சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே, படத்தையும் விளக்கையும் பதினோரு முறை வலம்வரவேண்டும். ஒவ்வொரு முறை வலம்வரும்போதும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும். இதுபோல் ஆறு வியாழக்கிழமை வழிபட்டபின் ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யவேண்டும். ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும்.

அன்று ஓரடி உயரத்திற்கு மேலுள்ள ஐந்து முக குத்துவிளக்கு, பூஜைக்கு வேண்டிய வெற்றிலைப் பாக்கு, பழம் படைத்து, மணமிக்க மலர்களால் அலங்கரித்து, தூப தீப ஆராதனைகள் செய்ய வேண்டும். ஸ்ரீராகவேந்திரரை வழிபடும் வியாழக்கிழமையில் பகலில் பானகம், துளசி நீர், பால் இதுபோன்ற திரவ ஆகாரங்களை அருந்த லாம். இரவில் சிறிதளவு பால்சாதம் சாப்பிடலாம். இதுபோல் ஏழு வியாழக்கிழமைகள் விரதம் கடைப் பிடித்தால் நம் மனக்குறைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

செல்: 98425 50844