நம் முன்னோர்கள் மனிதனின் உளவியல் தெரிந்து, மனநிலையையும் உடல்நிலையையும் சரியாக வைத்து நீண்ட ஆயுளுடன் வாழ வழிகாட்டியுள்ளனர். இன்று நம்மில் பலர், "என்ன வாழ்ந்தோம்... பிள்ளைகளைப் படிக்க வைத்து ஆளாக்கி, நல்ல வேலை வாங்கிக் கொடுத்து, வீடுகட்டி, வசதியான வரனை அமைத்துக்கொடுத்து, பேரப்பிள்ளைகளைப் பார்த்துவிட்டு, பிள்ளைகளுக்கு சிரமம் தராமல் கஷ்டமில்லாமல் இறந்துபோகவேண்டும்' என ஆசைப் படுகிறோம். எல்லாரும் அதற்கான முயற்சியும் எடுக்கிறார்கள். அதில் வெற்றி- தோல்வி ஏற்படுகிறது.
நினைத்தது நடந்து வெற்றி பெற்றவர்கள் "திட்டமிட்டு செய்தேன்; நடந்தது' என்கிறார்கள். சிலர், "கோவில்களுக்குத் தொடர்ந்து சென்றேன். என் பக்தியால் கடவுள் நினைத்த எல்லாவற்றையும் கொடுத்தார்' என்பார்கள். திட்டமிடுகிறவர்கள் ஒவ்வொன்றையும் யோசித்து முயன்று செயல்படுத்துகிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fridayfasting_0.jpg)
தெய்வத்தின்மீது முழு நம்பிக்கைகொண்டு, வழிபாட்டு முறைகளை சரியாகப் பின்பற்றி, எடுத்த காரியத்தைக் குழப்பமில்லாமல் செயல்படுத்தி வெற்றி காண்கிறார்கள்.
இந்த இரண்டையும் விட்டு, "ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒரு கால்' என்பதுபோல், அரைகுறை திறமையை வைத்துக்கொண்டு, வழிபாட்டு முறைகளைவிட்டு, கோவிலுக்குச் சென்று கடவுளிடம், "நான் வேண்டிய தைக் கொடுத்துவிடு' என விளக்குபோட்டு கெஞ்சி, உத்தரவிட்டு வருவார்கள். சிலர், "நான் என்ன செய்தாலும் தோல்விதான். சாமி இல்லை. சாமியைக் கும்பிட்டும் பயனில்லை' என புலம்புவார்கள்.
வெள்ளிக்கிழமை
சில குறிப்பிட்ட நாட்களை மட்டுமே நம் முன்னோர்கள் கடவுளை வழிபட உகந்த நாளாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் சைவ, அசைவ உணவுப் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களுக்கு, அவரவர் குணநலன்களைக் கணித்து அதற்கேற்றபடி தெய்வம், வழிபாட்டு முறைகளையும் மாற்றியுள்ளனர். ஆனால் வெள்ளிக் கிழமையை மட்டுமே அனைவருக்கும் உகந்தநாளாகக் குறிப்பிட்டுள்ளர். அதற்குப் பல காரணங்கள் உண்டு.
கோவிலுக்கு செல்லுதல்
பொதுவாக எல்லா பெண்களையும் வாரம் ஒருமுறை கோவிலுக்குச் சென்றுவரச் சொல்வதன் காரணம், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெண்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்காகதான். திருமண மானதும் பெண்கள் குடும்பப் பிரச்சினைகளைப் புதிதாக- விதவிதமாக சந்திக்கத் தொடங்கும்போது அதனைக் கையாளத் தெரியாமல் தவிப்பார்கள். கடும் மன உளைச்ச லுக்கு ஆளாவார்கள்.
அப்படிப்பட்ட மன வேதனையுடன் கோவிலுக்குச் செல்லும்போது, பெண்கள் ஒருவருக்கொருவர் அவரவர் குடும்பத்திலிருக்கும் இன்ப- துன்பங்களைப் பகிர்ந்து கொண்டு, குடும்பப் பிரச்சினைகளை விவாதித்து, வயது முதிர்ந்த அனுபவமான முன்னவர்களுடன் கலந்துரையாடி, பிரச்சினைக்கு வழி கண்டறிந்து கொள்வதற் காகதான் கோவிலுக்குச் செல்லும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினர். யாராக இருந்தா லும் யாரிடமாவது சொல்லி அழுதால்தான் மனதிலிருக்கும் பாரம் இறங்கும். ஏழரைச் சனியாக இருந்தால் நவகிரக வழிபாடு, புத்திர பாக்கியத்திற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு என, ஒரே பிரச்சினையுள்ள பெண்களை ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபட சிபாரிசு செய்து, அவர்களை ஒருங்கிணைத்து, அவர் களுக்குள் கலந்துபேசி நல்ல முடிவெடுக்க வழிசெய்தார்கள்.
தனக்கு மட்டுமே பிரச்சினை என்றால்தான் ஒவ்வொருவரும் வருந்துவார்கள். தன்னைப் போல் இதே பிரச்சினையில் இத்தனைப் பேர் இருக்கிறார்கள் எனப் பார்த்ததும் பலர் பாதி நிம்மதியடைந்துவிடுவர்.
இன்று மனிதர்கள் நிறையவே மாறி விட்டனர். "நம் குடும்பப் பிரச்சினைகளை வெளியே சொன்னால் கேவலமாக நினைத்து விடுவார்களோ' என மறைக்க முயற்சிக்கி றார்கள். அதனால் பெண்கள் பலருக்கு மனக் கஷ்டங்கள் அதிகமாகி நோயாளியாகி விடுகின்றனர். "நம்மைக் கெடுத்தவர்கள் முன்பு நாம் அழுதுவிடக்கூடாது' என நினைத்து அடக்கி வைப்பதால், அதிக மன உளைச்ச லால் பெரும் பாதிப்படைகின்றனர்.
பலர் தான் பட்டதை பக்கத்தில் இருப்ப வரும் படவேண்டும் என ஆசைப்பட்டு, மன நோயால் தானும் கெட்டு, மற்றவர்களையும் மனநோயாளியாக மாற்றிவிடுகின்றனர். சிலர் எளிதாக முடியக்கூடிய பிரச்சினையை ஊதிப் பெரிதாக்க நினைக்கின்றனர். அறிவுரை, ஆலோசனை பெறுவதற்கான தகுதியில்லா மனிதர்கள் அதிகமாகிவிட்டனர்.
சிலர், "எதற்கு பொல்லாப்பு... என்ன சொன்னா லும் கேட்கப் போவதில்லை. நம் வேலையைப் பார்க்கவே நேரமில்லை. யாரோ எப்படியோ போகட்டும்' என்கிற மனநிலைக்கு வந்து விடுகின்றனர். அதனால்தான் பலர் மனநல மருத்துவமனையை நோக்கிச் செல்ல நேர்கிறது.
முன்னோர்கள் சொன்ன கோவிலுக்குச் செல்லலாம் என்றால், இன்று பல கோவில்கள் வியாபார ஸ்தலங்களாகிவிட்டன. பணக் காரருக்கும் தெரிந்தவருக்குமே சாமி தரிசனம் என்னும் நிலை வந்துவிட்டது. அதெல்லாம் சகஜமென சகித்துக்கொண்டு போனாலும், நமக்குப் பிடிக்காதவர்களை- நம் குடும்பத் தைக் கெடுத்தவர்களை கோவிலில் பார்க்கும் போது மனம் வெறுப்பாகிறது. "நம்மைக் கெடுத்தவர்களுக்கு இந்த சாமியும் துணை போகிறதே' என எண்ணி மனவேதனை அதிகரித்துவிடுகிறது. தாங்கமுடியாமல் சிலர் சாமி சிலையைப் பார்த்து கண்ணீர் விட்டவாறே உள்ளுக்குள்ளே பேசிக் கொண்டிருப்பார்கள். கோவில், கடவுள்மேல் நம்பிக்கையே போய்விடுகிறது. இதனால் வெறுத்து, "மதம் மாறினாலாவது நம் பிரச் சினை தீருமா' என மாறியவர்கள் ஏராளம்.
அதனால்தான் உள்ளூரில் பிரசித்தபெற்ற கோவில் இருந்தாலும், தெரியாத வெளியூர் கோவில்களுக்குப் பலர் செல்கின்றனர். அங்கு சென்றால் ஆறுதலும், நல்ல மாற்றங்களும் ஏற்படுகின்றன. முகம் தெரியாதவர்களிடம் மனம்விட்டுப் பேசும் சூழல் ஏற்படுகிறது. ஒரே இடத்திலிருந்து மன உளைச்சல் அடைவதற்கு, புதிய இடத்திற்குச் சென்று வருதல் மிகப்பெரிய மருந்தாகிறது.
விரதம்
வாரம் ஒருமுறை விரதமிருப்பது உடலுறுப்புகளுக்கு ஓய்வு வழங்குவதற் காகதான். வாரம் முழுவதும் உழைப்பவர்கள் அன்று கடின வேலைகள் செய்வதைத் தவிர்ப்பர். ஆன்மிக வழிபாடு, சிந்தனைகள், குறைவாக நீர் பருகுதல், பழம் சாப்பிடுவது, எண்ணெய் தேய்த்துக் குளித்து உடல்சூடு தணிப்பது போன்றவை மனநிலை யையும், உடல்நிலையையும் இலகுவாக்கும். மந்திரங்கள் நரம்புகளுக்கு வலுதந்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். தினமும் தம்பதியருக்குள் மனஸ்தாபம் உண்டானாலும் விரதம், ஆன்மிகம் எனும்போது தானாகக் கோபம் குறையும். அந்த நேரத்தில் மனம்விட்டுப் பேசி பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்.
நிலப்பரப்பிலுள்ள கோவில்களைவிட, மலைக்கோவில்கள் நல்ல பலன் தரும். உடல் வலுப்பெறும். குறிப்பாக வெள்ளிக்கிழமை விரதமிருந்தால் நல்லது. அதிகம் சாப்பிட்டு மலச்சிக்கலுடன், மலம் குடலில் இருக்கும்போது உறவு கொண்டால் குழந்தை திருநங்கையாகப் பிறக்கும். அல்லது ஆரோக்கியமற்ற குழந்தை யாகவே உருவாகும்.
வெள்ளிக்கிழமை சுக்கிரனின் நாள். ஆணுக்கும் பெண்ணுக்கும் விந்து, அண்டக வளர்ச்சிக்கு உகந்த நாள். மனம் வேறு பாரத்தைச் சுமந்தபடி இருந்தால் சுகமான உறவுபெற முடியாது. உடலுறவில் ஈடுபாடு குறைந் தால் அத்தனை குடும்பப் பிரச்சினையும், பிணி பீடையும் வந்துவிடும். எவ்வளவுதான் மனஸ்தாபம் இருந்தாலும் அதை மறந்து, தெய்வ நம்பிக்கையை வளர்த்து, விட்டுக்கொடுத்து ஆறுதலாகப் பேசி உறவு கொள்பவர்களின் இல்லற வாழ்க்கை இனிதே செல்லும். கணவன்- மனைவிக்கிடையே உடலுறவில்லாமல் போகும்போதுதான் மனவுறவும் நின்றுவிடும். பெண்கள் வெள்ளிக்கிழமை உடலுறவுக்குமுன் நல்லெண்ணெய் தேய்த்துத் தலை குளிப்பதுபோல், ஆண்கள் உறவு முடிந்தபின்பு சனிக்கிழமை குளித்தால் உடலுக்கு நல்லது.
வெள்ளிக்கிழமை பெண் தெய்வங்களை வழிபடவும், பெண் தெய்வங்களின் குடும்பக் கதைகளைப் படிக்கச் சொல்வதும் ஏனென் றால், குடும்பத்தில் கணவரோடு எப்படி அனுசரித்து வாழவேண்டுமென்னும் மனவளக் கலையைக் கற்றுத்தருவதற்காகதான். இன்று நாம் புதுப்புதுக் கடவுள்களைத் தேடிக் கண்டுபிடித்து வழிபட விரும்புகிறோமே தவிர, நம் மரபணுகளுக்கேற்ற உணவு, உடல், மனதிற்கேற்ற பழக்கவழக்கங்களைத் தொடர்வதில்லை. அதனால்தால்தான் தோல்வி அடைகிறோம். சைவ, அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களின் விரத நாட்களிலும், மந்திரங்களிலும் அதற்கேற்ப முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதைத்தான் சிவ கோத்திரம், விஷ்ணு கோத்திரம் என வைத்தனர்.
ஆண் என்பவன் உலகில் எந்த ஒரு நாட்டிலும் இருக்கும் பெண்ணோடும் உறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமென்றால், மனித இனம் என்பதும் ஒன்றுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எல்லாரும் ஒரே இனம்தான்; அதில் மாற்றுக் கருத்தே இல்லை.
ஆனால் ஜாதி அமைப்பை முன்னோர் கள் உருவாக்கக் காரணம், உணவு, உறவு, அணுகுமுறை, பழக்க வழக்கம், கலாச்சாரம் மற்றும் ஒத்த கருத்து கொண்டவர்கள் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தால்தான் அன்யோன்ய தம்பதிகளாய் வாழமுடியும். தன் உடலுக்குத் தகுந்த, மற்றொரு உடல் தகுதியானவர்களைத் தேர்வுசெய்தே ஆகவேண்டும் என்பதால் ஜாதிய விதிமுறைகளை வகுத்தனர். ஆனால் இன்று மனிதர்களுக்குள் ஒவ்வொருவரும் வெவ்வேறு இனமாகப் பிரிந்து, உயர்வு- தாழ்வு பேசி ஆதாயத்திற்காக அரசியலாக்கிவிட்டனர். மொத்தத்தில் மனைவியாக, துணையாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் தன்னோடு உடலாலும் மனதாலும் ஒத்திருந்தால்தான் இல்லறமும் குடும்பமும் தழைத்தோங்கும். எனவே வெள்ளிக்கிழமைகளில் விரதமிருப்பது குடும்பத்திற்கு மிகவும் நல்லது.
செல்: 96003 53748
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/fridayfasting-t.jpg)