Advertisment

திருப்பம் தரும் திங்கட்கிழமை விரதம்!

/idhalgal/balajothidam/fast-turns-monday-morning

திங்கட்கிழமை விரதமிருப்பது என்பது, சிவனுக்கு இருப்பதாக அர்த்தம். இந்த விரதத்தை எல்லாரும் மேற்கொள்ளலாம். இதை வளர்பிறையின் முதல் திங்கட்கிழமை ஆரம்பித்து, பத்திலிலிருந்து 54 வாரங்கள்வரை இருக்கலாம்.

Advertisment

இந்த விரதத்தை இன்னும் திருமணம் ஆகியிராத பெண்கள் மேற்கொள் ளலாம். இதன்மூலம் அவர்களுக்கு திருமணத்தடையிருந்தால் நீங்கும். அவர்களின் விருப்பத்திற்கேற்ற கணவர் கிடைப்பார்.

நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் திங்கட்கிழமை விரதமிருந்தால், நோயிலிலிருந்து விடுபடலாம்.

அரசியல்வாதிகள், உயர் பதவிகளில் இருப்பவர்கள், நீதிபதிகள், அரசாங்க அதிகாரிகள், பித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த நோயுள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மனநோய் உள்ளவர்கள், ஜுரம் உள்ளவர்கள், சீதளம் உள்ளவர்கள், எதுவுமே புரியாமல் பேசிக் கொண்டிருப்பவர்கள், மனதில் பயம் உள்ளவர்கள் என இவர்கள் அனைவரும் திங்கட்கிழமையன்று விரதம் இருக்கவேண்டும்.

Advertisment

ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக

திங்கட்கிழமை விரதமிருப்பது என்பது, சிவனுக்கு இருப்பதாக அர்த்தம். இந்த விரதத்தை எல்லாரும் மேற்கொள்ளலாம். இதை வளர்பிறையின் முதல் திங்கட்கிழமை ஆரம்பித்து, பத்திலிலிருந்து 54 வாரங்கள்வரை இருக்கலாம்.

Advertisment

இந்த விரதத்தை இன்னும் திருமணம் ஆகியிராத பெண்கள் மேற்கொள் ளலாம். இதன்மூலம் அவர்களுக்கு திருமணத்தடையிருந்தால் நீங்கும். அவர்களின் விருப்பத்திற்கேற்ற கணவர் கிடைப்பார்.

நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் திங்கட்கிழமை விரதமிருந்தால், நோயிலிலிருந்து விடுபடலாம்.

அரசியல்வாதிகள், உயர் பதவிகளில் இருப்பவர்கள், நீதிபதிகள், அரசாங்க அதிகாரிகள், பித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த நோயுள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மனநோய் உள்ளவர்கள், ஜுரம் உள்ளவர்கள், சீதளம் உள்ளவர்கள், எதுவுமே புரியாமல் பேசிக் கொண்டிருப்பவர்கள், மனதில் பயம் உள்ளவர்கள் என இவர்கள் அனைவரும் திங்கட்கிழமையன்று விரதம் இருக்கவேண்டும்.

Advertisment

ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால், அவருக்கு மனநோய் இருக்கும். சீதளம் பிடிக்கும். ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். அதனால் அவருக்கு பலவித சிக்கல்கள் இருக்கும். மனபயம் ஏற்படும். சிந்தனை சீராக இருக்காது. உணவு ஜீரணமாகாது. வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். பெற்ற தாயால் சந்தோஷம் இருக்காது. வீடு வாங்குவதில் பிரச்சினை இருக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன், சனியுடன் இருந்தால்- அதுவும் 6, 8, 12-ல் இருந்தால், விஷயோகம் உண்டாகும். அதனால் பலவித பிரச்சினைகள் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும். மனதில் குழப்பங்கள் இருக்கும்.

sivanஅதேநேரத்தில் அவருக்கு சந்திர தசையோ சனி தசையோ நடந்தால் அவர் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பார். சிலருக்கு மரணபயம் ஏற்படும். சிலர் பணக் கஷ்டத்தில் இருப் பார்கள். தற்கொலை செய்துகொள்ள லாமா என்றுகூட நினைப்பார்கள்.

எங்காவது ஓடிவிடலாமா என்று யோசிப்பார்கள்.

ஒரு மனிதரின் ஜாதகத்தில் சந்திரன் 8-ல் பலவீனமாக பாவகிரகத்துடன் இருந்தால், அல்லது பாவகிரகத்தால் பார்க்கப்பட்டால் அவருக்கு மனதில் பயம் உண்டாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்து 6-ல் சனி இருந்தால், அவருக்கு மனபயம் ஏற்படும். உடலில் சிறுசிறு உபாதைகள் உண்டாகும். பித்தநோய் உண்டாகும். நமக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று எப்போதும் பயந்துகொண்டே இருப்பார்கள்.

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், 9-ல் ராகு இருந்தால், அவருக்கு இளம்வயதிலேயே பலவிதமான சிக்கல்கள் உண்டாகும்.

அவருக்கு மாரகாதிபதி தசை அல்லது அஸ்த மன கிரகத்தின் தசை நடந்தால், நம்மால் வாழமுடியுமா என்ற பயம் உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் செவ்வாய், 6-ல் சனி, 9-ல் ராகு இருந்தால், அவர் சரியான நேரத்தில் உணவு சாப்பிட மாட்டார். சிலர் அதிகமாக சாப்பிடுவார்கள். அதனால் உணவு ஜீரணமாகாது.

அதன் காரணமாக வாய்வுத் தொல்லை இருக்கும். தங்கள் வேலைகளைச் சரியாக செய்யமாட்டார்கள்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத் தில் சனி இருந்தால், திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும். திருமணம் நடக்கும் வேளையில், ஏதாவது பிரச்சினைகள் உண்டாகும். அதேபோல ஒரு ஆண் அல்லது ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், ராகு அல்லது செவ்வாய், சனி அல்லது செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள் இருந்தால், திருமண விஷயத்தில் தடை இருக்கும். திருமணம் நடந்திருந்தால், வீட்டில் பலவித சிக்கல்களும் உண்டாகும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்தில் கேது, 7-ல் ராகு, சூரியன், புதன் இருந்தால், அவருடைய கணவர் பலவித சிக்கல்களில் மாட்டிக்கொண்டிருப்பார். வீட்டில் சந்தோஷம் இருக்காது. எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். சில நேரங்களில் வீட்டைவிட்டு ஓடிவிடலாம் என்றுகூட தோன்றும். சில கணவர்களுக்கு மனநோய் இருக்கும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7-ல் சூரியன், கேது, 8-ல் செவ்வாய் இருந்தால், அவருக்குத் தன் கணவனைப் புரிந்து கொள்ளவே முடியாது. பெண் கூறுவதை கணவரால் புரிந்துகொள்ளமுடியாது.

அதனால் வீட்டில் எப்போதும் சண்டை இருக்கும்.

12-ல் சந்திரன், 4-ல் கேது, 7-ல் செவ்வாய் இருந்தால், இல்வாழ்க்கையில் சந்தோஷமே இருக்காது. கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். ஒருவரையொருவர் பிரிந்துவிடலாம் என்றுகூட நினைப்பார்கள்.

பரிகாரங்கள்

வளர்பிறையின் முதல் திங்கட்கிழமை யன்று காலையில் குளித்து முடித்து, வெளிர்நிற ஆடையணிந்து சிவனுக்கு நீர், பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யவேண்டும். பூ, பழம் வைத்து பூஜை செய்யவேண்டும்.

வீட்டில் பால்பாயசம் அல்லது தயிர் தயார் செய்து அதை ஒருவேளை சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு, அதில் ஒரு பகுதியை படிக்கும் குழந்தை அல்லது பெண்களுக்குத் தரவேண்டும்.

சிவ பூஜை செய்யும்போது "ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்லோ ஷ: சந்திர மஸே நமஹ' என்ற மந்திரத்தைக் கூறலாம். அல்லது உங்களுக்குத் தெரிந்த சிவமந்திரத்தைக் கூறலாம்.

திட்டமிட்டபடி முழுமையாக விரதத்தை முடித்தபிறகு, வீட்டில் ஹோமம் நடத்தி, வெண்ணிற ஆடை, வெள்ளி ஆகியவற்றை தானமளிக்க வேண்டும். இதனால் துன்பங்கள் விலகி மகிழ்ச்சி காணலாம்.

செல்: 98401 11534

bala010219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe