ஒரு மனிதர் தன் பேச்சுத் திறமையால் வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கு அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியும் 2-க்கு அதிபதியும் நல்ல நிலைமையில் இருக்கவேண்டும்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியும், 2-க்கு அதிபதி யும் 11-ல் இருந்தால், அவர் சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும், தன் 25 வயதிற்குப்பிறகு பல பெரிய காரியங்களைச் செய்வார். சிலர் கலைத் துறையில் பேச்சை வைத்துப் பிழைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த பேச்சு காரணமாக நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி உச்சமாக 11-ல் இருந்து, 2-ல் ராகு, 4-ல் உச்ச சனி, 5-ல் குரு இருந்தால், அவர் தன் வாழ்க்கையின் பிற்பகுதியில் பேச்சாற்றலால் பல காரியங்களை சாதிப்பார். அதன்மூலம் பெரிய மனிதராவார்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி 4-ல் சூரியன், புதனுடன் இருந
ஒரு மனிதர் தன் பேச்சுத் திறமையால் வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கு அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியும் 2-க்கு அதிபதியும் நல்ல நிலைமையில் இருக்கவேண்டும்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியும், 2-க்கு அதிபதி யும் 11-ல் இருந்தால், அவர் சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும், தன் 25 வயதிற்குப்பிறகு பல பெரிய காரியங்களைச் செய்வார். சிலர் கலைத் துறையில் பேச்சை வைத்துப் பிழைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த பேச்சு காரணமாக நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி உச்சமாக 11-ல் இருந்து, 2-ல் ராகு, 4-ல் உச்ச சனி, 5-ல் குரு இருந்தால், அவர் தன் வாழ்க்கையின் பிற்பகுதியில் பேச்சாற்றலால் பல காரியங்களை சாதிப்பார். அதன்மூலம் பெரிய மனிதராவார்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி 4-ல் சூரியன், புதனுடன் இருந்து, 10-ல் குரு இருந்தால், அவர் தன் 32 வயதிற்குப்பிறகு நல்ல பேச்சாளராக இருப்பார்.
லக்னாதிபதி புதன், சூரியனுடன் இருந்து, 2-ஆம் பாவத்தில் கேது, 7-ல் சனி, 9-ல் உச்ச சந்திரன் இருந்தால், ஜாதகர் தன் பேச்சுத் திறமையால் அனைவரையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார். அந்த பேச்சுத் திறமையின் மூலம் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்.
லக்னத்தில் உச்ச சந்திரன், 5-ல் சூரியன், புதன், 7-ல் செவ்வாய், 11-ல் சனி இருந்தால், அவர் தன் கண்களாலும் பேச்சாலும் பிறரை வசீகரம் செய்து, தன் காரியத்தை சாதித்துக்கொள்வார். எந்த நேரத்தில் யாருடன் எப்படிப் பேசவேண்டுமென்ற விஷயம் அவருக்கு நன்றாகத் தெரியும்.
லக்னத்தில் கேது, 5-ல் சூரியன், குரு, 6-ல் புதன், சுக்கிரன், 7-ல் ராகு, 8-ல் செவ்வாய், 11-ல் சனி, 12-ல் சந்திரன் இருந்தால், அவருக்கு அருமையான பேச்சுத் திறமை இருக்கும். அந்தத் திறமையைப் பயன்படுத்தி பிறரை எப்படி ஏமாற்றலாம்- எப்படி பணத்தைச் சுருட்டலாம் என்பதிதேலயே கவனமாக இருப்பார்.
ஒரு ஜாதத்தில் 6-ல் ராகு, 7-ல் செவ்வாய், சுக்கிரன், 8-ல் சந்திரன், புதன், 9-ல் சூரியன், 10-ல் குரு, 11-ல் சனி, 12-ல் கேது இருந்தால், அந்த ஜாதகர் மற்றவர்களுக்கு நல்ல காரியங்களைச் செய்யவேண்டுமென்று நினைப் பார். பிறருக்கு அறிவுரைகள் கூறி, தன் வாழ்க்கையைப் பயனுள்ள தாக்குவார். அவரின் பேச்சுக்கு நல்ல மதிப்பிருக்கும். 10-ல் இருக்கும் குரு 2-ஆம் பாவத்தைப் பார்ப்பதும், 9-ஆவது பார்வையால் ராகுவைப் பார்ப்பதும்தான் அதற்குக் காரணம்.
லக்னத்தில் சந்திரன், 4-ல் சூரியன், புதன், சுக்கிரன், 6-ல் கேது, 9-ல் குரு, 10-ல் செவ்வாய், 11-ல் சனி, 12-ல் ராகு இருந்தால், அவர் மற்றவர்களுக்கு நன்மைகள் கிடைக்கவேண்டும் என் பதற்காக நிறைய தர்ம உபதேசங்கள் செய்வார்.
லக்னாதிபதி லக்னத்தில் இருந்து, அத்துடன் 9-க்கு அதிபதியும் இருந்து, புதன் உச்சமாக இருந்தால், அந்த ஜாதகர் தன் பேச்சுத் திறமையால் பலரையும் வசீகரித்து, தன் காரியங் களை முடித்துக்கொள்வார்.
லக்னத்தில் சந்திரன், செவ்வாய், 4-ல் குரு, 5-ல் ராகு, 10-ல் சனி, 11-ல் சூரியன், புதன், கேது இருந்தால், அவர் தன் வாழ்க்கையின் முற்பகுதியில் பல பிரச்சினைகளை சந்திப்பார். ஆனால், பிற்பகுதியில் தன் பேச்சுத் திறமையால் பலரையும் வசீகரிப்பார். அதன்மூலம் உயர்ந்த நிலையை அடைவார்.
சந்திரன், செவ்வாய் சேர்ந்து லக்னதில் அல்லது 3-ல் இருந்து, அதை குரு பார்த்தால், அந்த ஜாதகர் நல்ல பேச்சுத்திறமை கொண்டவராக இருப்பார்.
அந்த ஆற்றலால் அனைவரையும் ஈர்த்து, தன் காரியங்ளை சாதித்துக் கொள்வார்.
ஒருவரின் ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் சனி, 3-ல் சந்திரன், செவ்வாய், 5-ல் கேது, 7-ல் குரு 9-ல் சூரியன், புதன், 10-ல் சுக்கிரன், 11-ல் ராகு இருந்தால் அவர் மிகவும் தைரியசாலியாகவும், நிறைய விஷயங்கள் தெரிந்தவராகவும் இருப்பார். நல்ல பேச்சுத்திறன் இருக்கும். அதை வைத்து அனைவரையும் கவர்ந்து புகழுடன் இருப்பார்.
லக்னத்தில் உச்ச புதனுடன் சூரியன், 2-ல் செவ்வாய், சுக்கிரன், 3-ல் கேது, 6-ல் சனி, 9-ல் ராகு, 10-ல் குரு, 11-ல் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் கடவுளின் அருளால் பல நன்மைகளைச் செய்ய நினைப்பார். 2-ஆம் பாவத்திற்கு குருவின் பார்வை இருந்தால், அவர் தன் பேச்சாற்றலால் பலருக்கும் நன்மைகள் செய்வார். பலரும் பலனடையும் வகையில் நூல்களை எழுதுவார். நிறைய தர்மச் செயல்களைச் செய்வார்.
செல்: 98401 11534