ரண்டு தம்பதியர், ஜீவநாடியில் பலன் கேட்க வந்திருந்தனர்.

அவர்களை அமரவைத்து, என்ன காரியமாகப் பலன் கேட்க வந்துள் ளீர்கள் என்று கேட்டேன்.

அந்த நால்வரில் ஒரு பெண்மணி, "ஐயா, அவர் எனது அண்ணன், அந்த அம்மாள் அவரின் மனைவி, எனது அண்ணி. இவர் எனது கணவர். எனது மகளை எனது அண்ணன் மகனுக்குத் திருமணம் செய்துவைக்கலாம் என்று ஆசைப்பட்டு இருவருக்கும் திருமணப் பொருத்தம் பார்க்க ஜோதிடர்களிடம் சென்றோம்.

ஒரு ஜோதிடர், பெண்ணின் ஜாதகம் தோஷமில்லாத சுத்த ஜாதகம். ஆனால் ஆணின் ஜாதகத்தில் தோஷமுள்ளது. அதனால் திருமணம் செய்யக்கூடாது என்றார். மற்றொரு ஜோதிடரி டம் கேட்டபோது, அவர் பத்து பொருத்தத்தில் எட்டு பொருத்தம் உள்ளது, தைரிய மாக திருமணம் செய்யலாம் என்றார். இதனால் குழப்பம் அடைந்த நாங்கள் இன்னும் ஒரு ஜோதிடரை சந்தித்து பலன் கேட்டோம். அவர் தாய் மாமன், மகன், மகளை திருமணம் செய்ய ஜாதகப் பொருத்தம், பத்துப் பொருத்தம் என எதுவும் பார்க்க தேவையில்லை என்று கூறினார்.

Advertisment

ee

இதனால் குழப்பம் அடைந்து நாங்கள் அகத்தியரை நாடி வந்துள்ளோம்'' என்றாள்.

பெண்ணின் தாயார், "ஐயா, எனது மகள் தான் பிறந்த வீட்டில் மருமகளாகச் சென்று வாழவேண்டும் என்று நானும், எனது கணவரும் ஆசைப்படுகின்றோம். என் அண்ணன், அண்ணியும் என் மகளை தங்கள் மகனுக்கு திருமணம் செய்துவைக்க ஆசையுடன் உள்ளார்கள். எங்கள் இருவரின் குடும்ப உறவும் தொடரவேண்டும், நீடித்து இருக்கவேண்டும் என்பதே எங்கள் ஆசை. அகத்தியர்தான், எங்கள் குழந்தைகளின் திருமணத்தை நடத்திமுடிக்க நல்லவழி காட்டவேண்டும்'' என்றார்.

Advertisment

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தி யர் எழுத்து வடிவாகத் தோன்றி, இவர்கள் தங்கள் குழந்தை களுக்கு நிச்சயதார்த்தம் செய்துவிட்டார்கள்.

ஆனால் திருமணம் நின்று விட்டது. அதனால் என்னை நாடிவந்த இவர்கள், ஜாதகம், பொருத்தம் என்று பொய் சொல்லவேண்டிய அவசியம் என்ன? அகத்தியனிடம் எதுவாக இருந்தாலும் உண்மையைக் கூறி பலன் கேட்டால் சரியான பதிலைக்கூறி நல்ல வழிகாட்டுவேன். பொய்களைக் கூறி பலன் கேட்டால் நானும் சரியான வழி கூறாமல் தவறான பலன்களைக் கூறிவிடுவேன்.

ஐயா, "உங்கள் குழந்தை களுக்கு, திருமணம் நிச்சயதார்த்தம் செய்துவிட்டீர்கள். ஆனால் திருமணம் தடைபட்டு நின்றுவிட்டது என்று அகத்தியர் கூறுகின்றார். இதில் எது உண்மை?'' என்றேன்.

அகத்தியர் கூறுவதுதான் உண்மை. நாங்கள் உண்மையை மறைத்து பொய் கூறியது தவறுதான். அகத்தியரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம் என்று கூறி, அகத்தியரை வணங்கி மன்னிப்பு கேட்டார்கள்.

மகனைப் பெற்றவர்கள், அவன்மீது உள்ள நம்பிக்கையில், அவனைக் கேட்காமலேயே, தங்கை மகளை நிச்சயம் செய்துவிட்டார்கள். அந்த மகன் இவர்கள் வசிக்கும் ஊருக்கு அருகிலுள்ள, மற்றொரு ஊரில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் பழக்கம் கொண்டுள்ளான். அதனால் தன் அத்தை மகளை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டான். உறவு தொடர வேண்டும் என்ற ஆசைப்பட்ட இந்த இரண்டு குடும்பங்களுக்கிடையே இப்போது, பகையும், பிரிவும் உண்டாகும் நிலை ஏற்பட்டுவிட்டது.

பெற்றவர்கள் நாங்கள் கூறுவதை எங்கள் மகன் மறுக்கமாட்டான் என்று, எங்கள் மகன்மீது நம்பிக்கை கொண்டு, நாங்களே தீர்மானித்து நிச்சயதார்த்தம் செய்தது உண்மைதான். இந்த நிகழ்விற்கு காரணம் என்ன? எங்கள் குழந்தைகள் இருவருக்கும் நாங்கள் விரும்பியபடி திருமணம் நடக்குமா? என்றார் மகனின் தந்தை.

எந்த ஒரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. எந்த ஒரு காரியத்திற்கும், ஒரு காரணம் நிச்சயம் இருக்கும். உங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த இந்த திருமணத் தடைக்கு, மகனைப் பெற்ற தாயின் வம்சத்தில், பிறந்த ஒரு பெண்ணிற்கு இவளின் முன்னோர் கள் கால வாழ்வில் செய்த பாவச் செயல்தான் காரணம் எனக்கூறிய அகத்தியர், முன்னோர் கள் காலத்தில் பெண்ணிற்கு செய்த கொடுமைகளையும் பாதிக்கப்பட்ட பெண்விட்ட சாபத்தையும் விளக்கமாகக் கூறிவிட்டு, உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் விரும்பியபடி இப்போது திருமணம் நடக்காது. ஆனால் உங்கள் விருப்பப்படி திருமணம் நடக்கும் என்று ஓலையில் பலன் கூறினார்.

ஐயா, அகத்தியர் எங்களை மேலும் குழப்புகின்றாரே, திருமணம் நடக்காது என்கின்றார். மேலும் எங்கள் விருப்பம்போல் திருமணம் நடக்கும் என்று கூறுகின்றார். ஒன்றுமே புரியவில்லையே என்றார்கள். உண்மையில் ஓலை வாசித்த எனக்கும் எதுவும் புரியவில்லை.

ஓலையை மறுபடியும் படித்தேன். ஒரு மனிதனின் பிறப்பு, இறப்பு, திருமணம் இவை மூன்றும் எங்கே? எப்படி? நடக்கவேண்டும் என்று, விதிக்கப்பட்டுள்ளதோ அதன்படி தான் நடக்கும். கிரகமோ, தெய்வமோ, பெற்றவர்களோ, ஜோதிடர்களோ தீர்மானித்து செய்து வைக்கமுடியாது. இப்போது நான் கூறுவதுபோல், மகனைப் பெற்றவர்களைச் செய்யச்சொல், இப்போது சென்றுவிட்டு, இன்னும் ஆறுமாத காலம் சென்றபிறகு அவர்களை வரச்சொல், ஏன், அவர்களே என்னைத்தேடி வருவார்கள் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

அகத்தியர் ஓலையில் கூறியதை அவர் களுக்கு கூறி அனுப்பிவைத்தேன்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

செல்: 99441 13267