குடும்பம் கோலாகும்! - க. காந்தி முருகேஷ்வரர்

/idhalgal/balajothidam/family-goal-ka-gandhi-murugeshwar

திகாலத்தில் தனித்தனியாய் வாழ்ந்த மனிதன் பாதுகாப்புக்காக ஒன்று சேர்ந்து, ஒத்த கருத்துகள் கொண்டவருடன் குழுக்களாகி, தன் சுயத்தைப் பிடித்த எதிர்பாலினத்தவருடன் இணைந்து இல்லறமாகி, நோயற்ற வாழ்வு வேண்டி குடும்பமுறையை வகுத்து வாழ்ந்தனர்.

family

வருடங்கள் செல்லச்செல்ல பெரிய குடும்பம், தனிக் குடும்பம், சிறிய குடும்பம் என்று மாறி, இன்று சேர்ந்து வாழ்தல் என பரிணாமம் பெற்று, இனி ஒருவரையொருவர் நம்பாதவர்களாய், பழையபடி தனித்தனி மனிதர்களாக வாழப்போகிற மறுசுழற்சிக் காலத்தை நோக்கி சமூகம் சென்று கொண்டிருக்கிறது. சொல்லிப் புரிய வைப்பதைவிட, அதிகமான பாதிப்புகள் ஏற்படும்போது தானாக மீண்டும் குடும்பவாழ்க்கை முறையை நோக்கி, மனிதனின் வாழ்க்கை பயணிக்கத் தொடங்கும்.

தான் எப்படி வாழவேண்டும்; தன்னுடன் வருபவரை எப்படி நடத்த வேண்டும்; தனக்குப் பிறப்பவர்களை எப்படி வழிநடத்தி ஆளாக்கவேண்டும என்பதை உணர்ந்து அடுத்த தலைமுறையைத் தயார்படுத்த குடும்ப வாழ்க்கை அவசியம். யாருக்கு குடும்பம் சரியாக அமையும் என்பதையும், எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டால் குடும்பவாழ்க்கை சிறந்து தழைத்தோங்கும்.

குடும்பம்

குடும்பம் என்பதில் முக்கியமானது- ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் அமைவதைப் பொருத்தே சந்தோஷம்- துக்கம் முடிவுசெய்யப்படும். சந்தோஷமான குடும்ப வாழ்க்கை வாழ ஒருவர் ஜாதகத்தில் இரண்டாமிடம் சுபத்தன்மை பெறுதல் அவசியம். இரண்டாமிடமானது லக்னம், கேந்திர, திரிகோணங்களில் இருப்பது நல்ல துணையையும், நல்ல வருவாயையும், சிறந்த குடும்பத்தையும் தரும்.

இரண்டாமதிபதி 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் நின்றால் நன்மை தராது. இரண்டாமிடத்தில் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது, தேய்பிறைச் சந்திரன் நின்றால், குடும்பக் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் தரும். இரண்டாமிடத்தை பாவக

திகாலத்தில் தனித்தனியாய் வாழ்ந்த மனிதன் பாதுகாப்புக்காக ஒன்று சேர்ந்து, ஒத்த கருத்துகள் கொண்டவருடன் குழுக்களாகி, தன் சுயத்தைப் பிடித்த எதிர்பாலினத்தவருடன் இணைந்து இல்லறமாகி, நோயற்ற வாழ்வு வேண்டி குடும்பமுறையை வகுத்து வாழ்ந்தனர்.

family

வருடங்கள் செல்லச்செல்ல பெரிய குடும்பம், தனிக் குடும்பம், சிறிய குடும்பம் என்று மாறி, இன்று சேர்ந்து வாழ்தல் என பரிணாமம் பெற்று, இனி ஒருவரையொருவர் நம்பாதவர்களாய், பழையபடி தனித்தனி மனிதர்களாக வாழப்போகிற மறுசுழற்சிக் காலத்தை நோக்கி சமூகம் சென்று கொண்டிருக்கிறது. சொல்லிப் புரிய வைப்பதைவிட, அதிகமான பாதிப்புகள் ஏற்படும்போது தானாக மீண்டும் குடும்பவாழ்க்கை முறையை நோக்கி, மனிதனின் வாழ்க்கை பயணிக்கத் தொடங்கும்.

தான் எப்படி வாழவேண்டும்; தன்னுடன் வருபவரை எப்படி நடத்த வேண்டும்; தனக்குப் பிறப்பவர்களை எப்படி வழிநடத்தி ஆளாக்கவேண்டும என்பதை உணர்ந்து அடுத்த தலைமுறையைத் தயார்படுத்த குடும்ப வாழ்க்கை அவசியம். யாருக்கு குடும்பம் சரியாக அமையும் என்பதையும், எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டால் குடும்பவாழ்க்கை சிறந்து தழைத்தோங்கும்.

குடும்பம்

குடும்பம் என்பதில் முக்கியமானது- ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் அமைவதைப் பொருத்தே சந்தோஷம்- துக்கம் முடிவுசெய்யப்படும். சந்தோஷமான குடும்ப வாழ்க்கை வாழ ஒருவர் ஜாதகத்தில் இரண்டாமிடம் சுபத்தன்மை பெறுதல் அவசியம். இரண்டாமிடமானது லக்னம், கேந்திர, திரிகோணங்களில் இருப்பது நல்ல துணையையும், நல்ல வருவாயையும், சிறந்த குடும்பத்தையும் தரும்.

இரண்டாமதிபதி 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் நின்றால் நன்மை தராது. இரண்டாமிடத்தில் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது, தேய்பிறைச் சந்திரன் நின்றால், குடும்பக் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் தரும். இரண்டாமிடத்தை பாவகிரகங்கள் பார்வையிடக்கூடாது. இரண்டாம் வீட்டில் 3, 6, 8, 12-க்குரியவர்கள், பாதகாதிபதி, மாரகாதிபதி நிற்பது நல்லதல்ல. இரண்டுக்குரியவர் நல்ல நிலையிலிருந்து தசை நடந்தால் பேரதிர்ஷ்டம் தரும். இரண்டாமிடத்தின் நிலை நல்லபடி அமைந்தால்தான் குடும்பம் தலையெடுக்கும்.

இரண்டில் சூரியன்

பிதுர் தோஷம். சூடாகப் பேசுவர். தீயகிரகப் பார்வை, இணைவு பெற்றால் கெட்ட வார்த்தைகளைப் பேசுவர். முன் கோபத்தால் குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் அடிக்கடி வாக்குவாதங்கள் உருவாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் வாய்ப்பேச்சால் வம்பு, நஷ்டம் ஏற்படும். தந்தை இல்லாமலோ, தந்தை அனுமதி யில்லாமலோ, தந்தைக்குப் பிடிக்காத இடத்திலோ, தந்தையாலோ திருமணம் தடை அல்லது தாமதப்படும். சூரியன் ஆட்சி பெற்றாலும், குரு பார்வை பெற்றாலும் தந்தையால் தோஷம் குறைந்து, தந்தைக்கு ஆயுள் விருத்தி, வருமானம், தந்தைவழி உறவு களால் திருமணம் நடைபெறும்.

இரண்டில் செவ்வாய்

செவ்வாய் தோஷம். எதெற்கெடுத்தாலும் முன்கோபம், கணவன்- மனைவிக்குள் ரத்த கொதிப்பு வருமளவு வாக்குவாதம் ஏற்படும். ஏதாவது தேவையற்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து கணவன்- மனைவி தாம்பத்திய வாழ்க்கையைக் கெடுக்கும். நிம்மதியில்லா வாழ்க்கையே மிஞ்சும். "செவ்வாய் தோஷ மில்லை; விதிவிலக்கு உண்டு' என ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டாலும் வாய்த் தகராறு குடும்பத்திற்குள் நடக்காமல் இருக்காது. குரு பார்வை, சம்பந்தம் ஏற்பட்டால் குருமங்கள யோகமாகிவிடும். நிலத்தால் லாபம், அரசாங்க வேலை அல்லது நன்மை ஏற்படும். நியாயத்தைக் காக்கும் நீதிபதியாய் நடந்துகொள்வார். பாவகிரகச் சேர்க்கை, பார்வை இருந்தால் சட்டத்திற்குப் புறம்பான, எதிரான காரியங்களில் ஈடுபடுவார்.

இரண்டில் சனி

மனசாட்சி பேசும். அதன்படி வாழ்ந்தால் யோகமுண்டு. வாக்கு தவறுதல், காலதாமதத் திருமணம் இருக்கும். பேசவேண்டிய இடத்தில் மந்தமாகவும், பேசக்கூடாத இடத்தில் அதிகப்படியாகவும் பேசுவர். குட்டிக்கதைகள் சொல்லி தன்னையும் பிறரையும் குழப்புவர். நாக்கில் சனி என்பதால், வீட்டில் கெட்டது சொன்னால் உடனே குடும் பத்திற்குள் நஷ்டம் உண்டாகும். "நான் அப்பவே சொன்னேன்' என பெருமை கொள்வர். பித்தலாட்டக்காரராகப் பெயரெடுப்பர். குரு பார்வை இருந்தால் நல்லபெயரையும், நல்ல வாக்குபலிதத்தையும் ஏற்படுத்தும். சுபகிரகப் பார்வை, இணைவு இருந்தால் குடும்ப மகிழ்ச்சியை உருவாக்கும். எனினும் வார்த்தைகளில் கவனம் தேவை. பாதகாதி பதி, மாரகாதிபதியாக இருந்தால் குடும்ப வருமானத்தையும், வாழ்க்கையையும் பாதிக்கும்.

இரண்டில் ராகு- கேது

நாக தோஷம். ராகு குடும்பத்திற்குள் வாய்ப்பேச்சால் வம்பு, வழக்கைத் தரும்.

பரம்பரை சொத்து பாதிப்புண்டு. சொல்வாக்கு, செயல் பாதிப்புண்டு. விஷமத்தனத்துடன் பேசுவர். பாவகிரகப் பார்வை, தொடர்பு இருந்தால் பலரைப் பேசிப்பேசியே கொல்வர். சுபகிரகப் பார்வை, இணைவானது பேசிமயக்கும் ஆற்றலைத் தரும். ராகு தசையில் திடீர் பணவரவு, அதிஷ்டத்தைத் தரும். சிற்றின்ப சுகம் தரும்.

கேது குடும்பத்தில் கஷ்டத்தை, நஷ்டத்தை வழங்கி "என்னடா வாழ்க்கை' என வெறுக்க வைத்துவிடும். குடும்பத்தைக் கெடுக்கும். இல்லற வாழ்க்கையை பாதிக்கும். பிறர் வேதனையைப் புரிந்துகொள்ளவும் உபதேசம் செய்யவுமே பயன்படும். கேது தசையும் நடந்தால், மனிதன் ஞானியாக வாழ விரும்பிச் செல்வதில்லை. வெறுக்கவைத்து ஞானியாக்கப்படுகிறான்.

இரண்டில் சந்திரன்

குடும்பத்தில் வருமானம் நிலையற்றதாக இருக்கும். வாக்குக் கொடுத்தால் காப்பாற்ற முடியாது. நிலையில்லா புத்தி தரும். இல்லற வாழ்க்கை பாதிக்கப்படும். மௌனமாக இருப்பர் அல்லது "வளவள'வென பேசுவர். சுபகிரகப் பார்வை, இணைவு பெற்றால் "கலகல'வென பேசுவர். சிரித்துப்பழக இனிய வராவர். வளர்பிறைச் சந்திரன் நல்ல குடும்ப வாழ்க்கையைத் தரும். குரு பார்வை, இணைவு இருந்தால் குருச்சந்திர யோகத்தின்மூலம் பணம், புகழ் தருவார். பாவகிரகப் பார்வை சிந்தனையைக் கெடுக்கும்.

இரண்டில் சுக்கிரன்

நல்ல நிலையில் இருந்தால் அன்பான, அழகான களத்திரம் அமையும். வசதியானவராகவும் ஒழுக்கத்துடனும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார். நகைச்சுவை உணர்வுடன், சிரித்த முகத்துடன், குடும்பத்தை வழிநடத்தும் நல்லவராக அமைவார்.

சுக்கிரன் கெட்டிருந்தால் எதிர்மறை எண்ணம், பொறாமை குணம்கொண்டவராக இருப்பார். பாவகிரகப் பார்வை இணைவு பெற்றால் குணக்கேடு தரும். ஆணாக இருந்து சுக்கிரன் கெட்டால், திருமண வாழ்க்கை தடை, தாமதம், தொல்லையையே தரும். இல்லற சுகத்தைக் கெடுக்கும். பெண்களால் வெறுக்கப்படுவார். பெண்ணாக இருந்தால் விரும்பியதை அடையமுடியா துரதிர்ஷ்ட சாலியாவார்.

இரண்டில் குரு

குடும்பம் நடத்தத் தகுதியானவர். சரியான முடிவுகளை எடுக்கும் ஆற்றலும் பேச்சுத் திறனும் கொண்டு குடும்பத்தை நேர்த்தி யாக நடத்துவார். அன்யோன்ய தம்பதி களாகி, குடும்பத்தில் வருமானம் தடை யின்றிக் கிடைக்கும். கணவனால் மனைவிக் கும், மனைவியால் கணவனுக்கும் நன்மை யுண்டு. குரு கெட்டால் எதிர்மறையாகப் பேசக்கூடியவராவார். பேசுவது நியாய மாகத் தோன்றினாலும் நடைமுறைக்கு ஒத்து வராததைப் பேசுவார். வீம்புக்கு வாதாடுபவ ராக இருப்பார். பேச்சால் வம்பு வழக்குகளை உண்டாக்குவார்.

இரண்டில் புதன்

சகலகலா வல்லவர். குடும்பத்திற்கு வருமானம் வந்துகொண்டே இருக்கும். கொடுக்கல்- வாங்கல் தொழில், இன்சூரன்ஸ், கமிஷன் தொழிலால் லாபம் உண்டாகும். விருந்து, உபதேசம் செய்ய வல்லவர். அனுசரித் துப் போகக்கூடியவர். குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து குணங்களும் உண்டு. புதன் கெட்டால் கிறுக்குத்தனமாகப் பேசக்கூடியவர். முன்யோசனையின்றி முடிவெடுத்து, குடும்பத்திற்கு நஷ்டத்தை உண்டாக்குவார். இல்லற வாழ்க்கையில் இடர்ப்பாடுகளை சந்திப்பார்.

சுப- அசுப கிரகங்கள் எதுவாக இருந்தாலும் பாதகாதிபதி, மாரகாதிபதி, மறைவிட அதிபதிகளாக இருந்தால் குடும்ப வாழ்க்கையை நிச்சயம் கெடுக்கும். தாமதத் திருமணம், திருமண வாழ்க்கை பாதிப்பைத் தரும். சிலருக்கு வருமானம் இல்லாததால் கணவன்- மனைவிக்குள் பிரச்சினை தரும். பெண்களுக்கு மாங்கல்ய நஷ்டத்தைத் தந்துவிடும்.

இரண்டில் மறைவிட அதிபதிகள்

இரண்டாமிடத்தில் மூன்றாம் அதிபதி இருந்தால் சகோதர தோஷம். சகோதரரால் நஷ்டத்தைத் தரும். ஆறாம் அதிபதி இருந்தால் குடும்பத்தில் எதிரிகளால் பாதிப்பு, குடும்பமே எதிரியாகி பாதிப்பு, குடும்பத்தில் யாருக்காவது நோய் ஏற்பட்டு அடிக்கடி பாதிப்பு, நோயால் வருமான இழப்பு, நோய்க்கே வருமானத்தை செலவுசெய்தல் நிகழும். எட்டாம் அதிபதி நின்றால் கடன் ஏற்படுதல், கடனால் அவமானப்படுதல், புதிய கடன் வந்துகொண்டே இருத்தல் நடை பெறும். இரண்டு, பன்னிரண்டாம் அதிபதி இருந்தால் வீண் விரயம், நஷ்டங்கள் அதிகம் ஏற்படும். குடும்பத்தைவிட்டுப் பரதேசம்- அதாவது வெளிநாட்டு யோகம் ஏற்படும். மறைவிட அதிபதிகள் இரண்டில் நின்றால் இதுபோன்ற குடும்பத்திற்கு பலவகை பிரச்சினைகள் தோன்றும்.

பரிகாரம்

இரண்டாமிடம் கெட்டவர்கள் நிதானமாக- பொறுமையாக நடக்கவேண்டும். தாமதத் திருமணம் நல்ல பலன் தரும். சேமிக்கும் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். பொறாமை, போட்டி போன்ற கெட்ட குணங்களை விட்டுவிட வேண்டும். வாழ்க்கையில் எதுவும் நிலையில்லை என்பதை உணர்ந்து, யாரையும் காயப்படுத்தாமல் வாழ்ந்தால், தன் குடும்பத்திற்கும், சந்ததியினருக்கும் நல்ல வாழ்க்கையைத் தரும். கூட்டுக் குடும்பங்களைக் கலைக்காமலிருந்தால் வாழ்க்கை அழகானதாய் மாறும். இரண்டா மிட அதிபதியைக் கண்டறிந்து அதற்கான தெய்வத்தை வணங்குவதே மிகச்சிறந்த பரிகாரம்.

செல்: 96003 53748

bala210121
இதையும் படியுங்கள்
Subscribe