Advertisment

குலதெய்வம் அகத்தியர்! - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/family-deity-agathiyar-siddhardasan-sunderji-jeevanadi-corruption-study

மாலை நேரங்களில் எனது நண்பர் களுடன், எனது வீட்டில் அமர்ந்து, எதை யாவது பேசிக்கொண்டு இருப்போம். ஒருநாள் அதுபோன்று பேசிக்கொண்டு இருக்கும்போது,

Advertisment

ஒரு நண்பர், "எனது குலதெய்வம் எது என்று எனக்குத் தெரிய வில்லை. எனது முன்னோர்களும், அதைப் பற்றிய விவரங்கள் எதையும் கூறவில்லை எனது குலதெய்வம் எது? அது எங்குள்ளது? என்று ஜீவநாடியில் அகத்தியரிடம் கேட்டுச் சொல்' என்றார்.

அன்று உடனிருந்த நண்பர்களும், என்னிடம் அவரும் பல நாட்களாகத் தன் குல தெய்வம் பற்றி விவரம் கேட்கின்றார். நீயும் ஏதேதோ, காரணங்களைக் கூறி மறுத்து வருகின்றாய். மறுப்பு தெரிவிப்பதற்குரிய காரணத்தைக் கூறு. இன்று அவர் குலதெய்வம் பற்றிய விவரங்களை, அகத்தியரிடம் கண்டிப்பாய்க் கேட்டு, கூறவேண்டும்' என்று உரிமையுடன் கூறிவிட்டார்கள்.

நண்பர்களும், நானும்

ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். சிறு வயது முதல் நண்பர்களாக இருக் கின்றோம். எனக்கு எல்லா உதவிகளையும் செய்பவர்கள். இன்று வசமாக அவர்களிடம் மாட்டிக்கொண்டோம் என்பதைப் புரிந்துகொண்டேன்.

Advertisment

இவரின் குலதெய்வம் பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாததற்கு ஒரு காரணம் உண்டு. இந்த ஜீவநாடி ஓலையை நான் படிப்பதற்கு, அகத்தியர் பல கட்டுப்பாடுகளை, எனக்கு விதித்துள

மாலை நேரங்களில் எனது நண்பர் களுடன், எனது வீட்டில் அமர்ந்து, எதை யாவது பேசிக்கொண்டு இருப்போம். ஒருநாள் அதுபோன்று பேசிக்கொண்டு இருக்கும்போது,

Advertisment

ஒரு நண்பர், "எனது குலதெய்வம் எது என்று எனக்குத் தெரிய வில்லை. எனது முன்னோர்களும், அதைப் பற்றிய விவரங்கள் எதையும் கூறவில்லை எனது குலதெய்வம் எது? அது எங்குள்ளது? என்று ஜீவநாடியில் அகத்தியரிடம் கேட்டுச் சொல்' என்றார்.

அன்று உடனிருந்த நண்பர்களும், என்னிடம் அவரும் பல நாட்களாகத் தன் குல தெய்வம் பற்றி விவரம் கேட்கின்றார். நீயும் ஏதேதோ, காரணங்களைக் கூறி மறுத்து வருகின்றாய். மறுப்பு தெரிவிப்பதற்குரிய காரணத்தைக் கூறு. இன்று அவர் குலதெய்வம் பற்றிய விவரங்களை, அகத்தியரிடம் கண்டிப்பாய்க் கேட்டு, கூறவேண்டும்' என்று உரிமையுடன் கூறிவிட்டார்கள்.

நண்பர்களும், நானும்

ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். சிறு வயது முதல் நண்பர்களாக இருக் கின்றோம். எனக்கு எல்லா உதவிகளையும் செய்பவர்கள். இன்று வசமாக அவர்களிடம் மாட்டிக்கொண்டோம் என்பதைப் புரிந்துகொண்டேன்.

Advertisment

இவரின் குலதெய்வம் பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாததற்கு ஒரு காரணம் உண்டு. இந்த ஜீவநாடி ஓலையை நான் படிப்பதற்கு, அகத்தியர் பல கட்டுப்பாடுகளை, எனக்கு விதித்துள்ளார். அதில் ஒன்றுதான் கடவுள், தெய்வம், தேவதை, பரிகாரம், பூஜை, யாகங்கள், ஹோமங்கள் இவைகளைப் பற்றி அகத்தியரிடம் ஓலையில் கேட்கக்கூடாது என்பதும் ஒன்று. அவரின் கட்டளையை மீறி நான் ஓலையைப் படிக்கக்கூடாது என்றேன்.

அகத்தியர் உனக்கு ஓலை படிப்பதற்கு விதித்த கட்டுப்பாடுகள் பற்றி எங்களுக்கு தெரியாது. அது எங்களுக்குத் தேவையும் இல்லை. அது உன்பாடு , அகத்தியர் பாடு, ஓலையைப் படித்துப்பார், அகத்தியர் ஓலையில் எதுவும் கூறவில்லையென்றால் இனி உன்னை தொந்தரவு செய்யமாட்டோம் என்று அனைவரும் ஒருமித்த குரலில் கூறினார்கள்.

நண்பர்கள் கூறியதைக் கேட்ட எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது. அகத்தியர் கட்டளையை மீறி நண்பர்கள் கூறுவதை எப்படி செய்வது? என்நிலையை அகத்தியர், நன்கு தெரிந்துகொண்டு இருப்பார் என்று எண்ணிக்கொண்டு, மனதில் அகத்தியரிடம் பிரார்த்தினை செய்து, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.

aa

ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவாகத் தோன்றி, "உன் நண்பர்களுக்காக உன்னை மன்னித்தேன். அவரவர் வம்சத்தில் பிறந்து, வாழ்ந்து, மறைந்த முன்னோர் களைத்தான் தமிழ்மக்கள், குடும்ப தெய்வமாக வழிபட்டு வந்தார்கள். குலதெய்வம் என்று தனியாக ஏதுமில்லை.

"ஆடுகின்ற தேவதைகள் அப்பா கேளு

அரியதந்தை யினம்சேரு மென்று தோணார்.''

இந்த கலிகாலத்தில், தோளிலும், தேரிலும் தாக்கிக்கொண்டு ஆடுகின்றார்களே, அதுவா தெய்வம், தேவதைகள். அவை தெய்வம் இல்லை. அவரவர் வம்ச தந்தைவழி முன்னோர்கள்தான் அவரவர் குடும்பத்தைக் காக்கும் குலதெய்வம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். வம்ச முன்னோர்களை அகத்தியன் நான் கூறியநாளில், கூறியுள்ள வழிபாட்டுமுறையில் குலதெய்வமாக வணங்கி அவர்கள் அருளையும் ஆசியையும், பாதுகாப்பையும் பெறுங்கள்.

இவனின் வம்சமுன்னோர்கள் வணங்கிய குலதெய்வங்களையும், அவைகள் இருக்கும் இடத்தையும் ஓலையில் கூறமாட்டேன். இவனின் வம்ச முன்னோர்கள் பெயர்களைக் கேட்டும்.

அவனின் பிறப்பு ஜாதகத்தில் உதாரணமாகக் கூறப்பட்டுள்ள கிரக நிலையை அறிந்து கூறு. இதனை உன் உள்ளுணர்வின்மூலம், உனக்கு, உணர்ந்துகின்றேன்'' என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

(நமது முன்னோர்கள் காலத்தில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தங்கள் வம்ச முன்னோர்களின் பெயர்களையோ அல்லது குலதெய்வங்களின் பெயர்களையோ தான் வைப்பார்கள். கொஞ்ச காலத்திற்குமுன்பு, சிவன், பெருமாள், கிருஷ்ணன், முருகன், விநாயகர், இராமன் என்று பெயர்களை வைக்கத் தொடங்கினார்கள். இன்றையநாளில் அர்த்தமே இல்லாத ஏதேதோ பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைத்துக் கொள்கின்றார்கள்)

நண்பரிடம் உங்கள் ஜாதகத்தைக் கொடுங்கள் என்றேன். அவர் அதை எடுத்துவந்து என்னிடம் தந்தார். அவரிடம் உங்கள் வம்ச முன்னோர் களில் எத்தனை தலைமுறையினரைத் தெரியும். தெரிந்தவர்கள் பெயரைக் கூறுங்கள் என்றேன்.

நண்பர் அவருக்குத் தெரிந்த சிலரின் பெயர்களைக் கூறினார். "என் பாட்டனாரின் பாட்டனார் பெயர் மருதை, இவரின் மகன் அதாவது என் தந்தையின் பாட்டனார் பெயர் வேம்படி. இவருக்கு இரண்டு மகன்கள், அதாவது எனது பாட்டனார்கள். ஒருவர் பெயர் பெரியசாமி, மற்றொருவர் பெயர் காத்தமுத்து. இதன்பிறகு எனது தகப்பனார், அடுத்து நான். எனது வம்சத்தில் எனக்குத் தெரிந்தவரை நான் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவன்.''

"உங்கள் குடும்பத்தில் பிறந்த பெண்களின் பெயர்களைக் கூறுங்கள்'' என்றேன். "அத்தை, அக்காள், தங்கை என்று நிறைய பெண்கள் என் வம்சத்தில் அப்போது பிறந்துள்ளார்கள். சிலரின் பெயர்கள்தான் தெரியும். காமாட்சி, கண்ணம்மாள், பிச்சையம்மாள், மாரியாயி- இவைகள்தான் எனக்குத் தெரிந்த பெயர்கள்'' என்றார்.

நண்பரின் ஜாதகத்தை சித்தர்கள் கூறிய தமிழ் ஜோதிட முறையில் ஆய்வு செய்தபோது, அவரின் குலதெய்வம் பற்றிய விவரங்கள் தெரியவந்தது.

இவர் குலதெய்வத்தில் இரண்டு அம்மன்கள் உண்டு. அவை இரண்டும் வேறு வேறு இடங்களிலுள்ளது. கருப்பு (காவல் தெய்வம்) சாமி, ஆண் தெய்வங்கள் நான்கு உண்டு. மொத்தம் ஆறு தெய்வங்கள் இவர் குலதெய்வம் என்றேன். இதைக் கேட்ட எனது நண்பர்கள், அந்த தெய்வங்களின் பெயர்கள் என்ன?

அவைகள் எந்த ஊரில் கோவில் கொண்டுள்ளன என்று கேட்டார்கள்.

ஒரு அம்மன் சந்நியாசி கோலம். அது காமாட்சியம்மன், இவன் முன்னோர்கள் வசித்த ஊரில் இருந்து, வடகிழக்கு திசையில், சுமார் 40 மைல் தொலைவில் அந்த ஊர் உள்ளது.

அந்த இடம் முட்களும், கற்களும் நிறைந்த பகுதி, குறுகிய காட்டுப்பகுதி, அருகில் சிறிய கிராமங்கள் உள்ள பகுதி. காட்டாறு ஓடும் பகுதி என்றேன்.

இந்த இடம் எங்கு இருக்கும் என்று நாங்கள் யோசித்தபோது, ஒரு நண்பர், "நீ கூறிய அடையாளங்கள் உள்ள பகுதி திருச்சி மாவட்டத்திலுள்ள ஒமாந்தூர் காமாட்சி அம்மன்தான்'' என்றார். குலதெய்வம் எது? என்று கேட்ட நண்பரும் "இப்போது கொஞ்சம் ஞாபகம் வருகின்றது. எனக்கு சுமார் 7 வயது இருக்கும்போது என் பாட்டனார் காலத்தில், என் குடும்பத்திலுள்ள அனைவரும், மாட்டு வண்டிக் கட்டிக்கொண்டு, அந்த கோவிலுக்கு அழைத்துச் சென்றதுகளை கண்டதுபோல் ஞாபகத்தில் உள்ளது'' என்றார்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 99441 13267

bala110823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe