திதிகள்- சூரியன், சந்திரன் சுழற்சியை உணர்த்தும் துல்லிலியக் கணக்காகும். சூரியனும் சந்திரனும் அருகருகில் வரும்போது அமாவாசை ஏற்படுகிறது. இவர்கள் ஒன்றுக்கொன்று தொலைவில் சஞ்சரிக்கும்போது பௌர்ணமி ஏற்படுகிறது. திதியென்பது சூரியன்- சந்திரனுக்கிடையே உள்ள தூர மாகும். வளர்பிறை, தேய்பிறை ஆகிய வற்றிற்கு தலா 14 திதிகள் உள்ளன.
நவகிரகங்கள், நட்சத்திரங்களுக்கு தேவதைகள் இருப்பதுபோல, ஒவ்வொருவர் பிறந்த திதிக்கும் தேவதைகள் உண்டு.
அவரவர் பிறந்த திதிக்கான தேவதை களை வணங்கிவருவது
திதிகள்- சூரியன், சந்திரன் சுழற்சியை உணர்த்தும் துல்லிலியக் கணக்காகும். சூரியனும் சந்திரனும் அருகருகில் வரும்போது அமாவாசை ஏற்படுகிறது. இவர்கள் ஒன்றுக்கொன்று தொலைவில் சஞ்சரிக்கும்போது பௌர்ணமி ஏற்படுகிறது. திதியென்பது சூரியன்- சந்திரனுக்கிடையே உள்ள தூர மாகும். வளர்பிறை, தேய்பிறை ஆகிய வற்றிற்கு தலா 14 திதிகள் உள்ளன.
நவகிரகங்கள், நட்சத்திரங்களுக்கு தேவதைகள் இருப்பதுபோல, ஒவ்வொருவர் பிறந்த திதிக்கும் தேவதைகள் உண்டு.
அவரவர் பிறந்த திதிக்கான தேவதை களை வணங்கிவருவது அதிர்ஷ்டத்தை வாரிவழங்கும். ஒவ்வொரு திதிக்கான தேவதைகளை அட்ட வணையில் காண்க.
இதேபோல், ஒவ்வொரு கிழமைக்கும் யோக திதிகள் உள்ளன. ஒருவர் யோக திதியில் பிறந்திருந்தால், அவர் யோகப்பலன்களை அனுபவித்தே தீருவார்.
கிழமைகளையும் அதற் குண்டான அதிர்ஷ்ட திதி களையும் பார்ப்போம்.
ஞாயிறு: பிரதமை, சஷ்டி, அஷ்டமி.
திங்கள்: துவிதியை, சப்தமி, நவமி.
செவ்வாய்: சதுர்த்தசி, சஷ்டி.
புதன்: திரிதியை, அஷ்டமி, திரயோதசி.
வியாழன்: நவமி, ஏகாதசி.
வெள்ளி: ஏகாதசி, திரயோதசி.
சனி: சதுர்த்தி, சதுர்த்தசி.
ஒருவர் பிறந்த திதி மேற்கண்டவாறு அதிர்ஷ்ட திதி, கிழமைகளில் வந்தால் யோகப்பலன்கள் கூடிவரும். இதேபோல கோட்சாரத்தில் மேற்கண்ட கிழமைகளில் திதிகள் வந்தால் தாராளமாக சுபகாரியங்கள் செய்யலாம். புதுமுயற் சிகள் மேற்கொண்டால் வெற்றி யடையலாம்.
குறிப்பாக பௌர்ணமியில் வீட்டுமனை, வாகனங்கள், ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். புதிய தொழில் தொடங்கலாம். வேலையில் அமரலாம். அமாவாசை திதியில் குலதெய்வ வழிபாடு கைமேல் பலன் கொடுக்கும். அன்றைய தினத்தில் யாகம் செய்வது மற்றும் பித்ரு தர்ப்பணம் செய்வது பலனளிக்கும். சுபகாரியங்கள் தவிர்ப்பது நலம்.
திதிகளில் பிரதமை, சஷ்டி, ஏகாதசி ஆகியவை நத்தை திதிகளாகும். இந்த நாட்களில் கட்டடங்கள் எழுப்புதல், கோவில் திருவிழாக்கள் நடத்தலாம். கலைகள் கற்கலாம்.
துவிதியை, சப்தமி, துவாதசி ஆகியவை பத்ரை திதிகள் என்றழைக்கப்படுகின்றன. இந்த திதிகளில் பயணங்கள் மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்.
வாகனங்கள் வாங்கலாம்.
திரிதியை, அஷ்டமி, திரயோதசி ஆகிய திதிகள் சபை திதிகள் என் றழைக்கப்படுகின்றன. கோவில் திருப்பணிகள் தொடங்கவும், கொடிமரம் நடவும் மிகவும் உகந்த நாட்களாகும்.
சதுர்த்தி, நவமி, சதுர்த்திசி திதிகள் இருத்தை திதிகள் என் றழைக்கப்படுகின்றன. போருக்குப் புறப்படலாம். நற்காரியங்கள் தவிர்த்து, குரூர செயல்களுக்கான திதிகள்.
பஞ்சமி, தசமி, பௌர்ணமி ஆகியவை பூரண திதிகள் என்றழைக்கப்படுகின்றன. சுபகாரியங்களுக்கு உகந்தவையாகும். திருமண நிச்சயதார்த்தம், சாந்தி ஹோமம், யாகங்கள், தெய்வ வழிபாடுகள் மேற்கொள்ளலாம்.
விதியின் சதியை திதியின்மூலம் முறியடிக்கலாம். திதி தேவதைகளை வணங்கி வாழ்வில் ஏற்றத்தினையும், அதிர்ஷ்டத்தினையும் பெறலாம்.
செல்: 98944 94915