மரர் என்.நடராஜன் எழுதிய விசித்திர ஜோதிடத்தில் (ய.ஓ. சிஸ்டத்தில்) சுக்கிரன் 27 நட்சத்திரங்களில் நிற்கும் பலன்களைக் கூறியுள்ளார். அதன் விவரங்களை இங்கு காண்போம்.

d

ஒரு கிரகம் எந்த நடசத்திரத்தில் உள்ளதோ அதன் குணபாவம் இணைந்தே பெயர் அமைப்புகளும் மாறும். சுக்கிரன் அஸ்வினியில் இருந்தால் வித்யாலட்சுமியாக செயல்படுவார். பரணியில் இருந்தால் அன்னலட்சுமியாக செயல்படுவார். கிருத்திகையில் இருந்தால் ஜோதி லட்சுமியாகவும், ரோகிணியில் இருந்தால் தனலட்சுமியாகவும், மிருகசீரிடத்தில் இருந்தால் முத்து லட்சுமியாகவும், திருவாதிரையில் இருந்தால் வீரலட்சுமியாகவும், புனர் பூசத்தில் இருந்தால் ராமலட்சுமியாகவும் செயல்படுவார்.

பூசத்தில் இருந்தால் குருலட்சுமியாகவும், ஆயில்யத்தில் இருந்தால் நாகலட்சுமியாகவும், மகத்தில் இருந்தால் தான்யலட்சுமியாகவும், பூரத்தில் இருந்தால் சந்தான லட்சுமியாகவும், உத்திரத்தில் இருந்தால் சீதாலட்சுமியாகவும், அஸ்தத்தில் இருந்தால் கானலட்சுமியாகவும், சித்திரையில் இருந்தால் சுபலட்சுமியாகவும், சுவாதியில் இருந்தால் தீபலட்சுமியாகவும், விசாகத்தில் இருந்தால் சுப்புலட்சுமியாகவும் செயல்படுவார்.

Advertisment

அனுஷத்தில் சுக்கிரன் இருந்தால் ஆனந்தலட்சுமியாகும். கேட்டையில் இருந்தால் யோக லட்சுமியாகும். மூல நட்சத்திரத்தில் இருந்தால் வசந்தலட்சுமி. பூராடத்தில் இருந்தால் மகாலட்சுமி. உத்திராடத்தில் இருந்தால் ராஜலட்சுமி. திருவோணத்தில் இருந்தால் மகாலட்சுமி. அவிட்டத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி. சதயத்தில் இருந்தால் விஜயலட்சுமி. பூரட்டாதியில் இருந்தால் பாக்கியலட்சுமி அல்லது அதிர்ஷடலட்சுமி உத்திரட்டாதியில் இருந்தால் வெங்கடலட்சுமி. ரேவதியிலுள்ள சுக்கிரன் கஜலட்சுமியாகவும் செயல்படுவார். இதுபோன்று ஒன்பது கிரகங்களையும், நட்சத்திரத்தையும் இணைத்துப் பலன்கள் காணவேண்டும்.

பாவகரீதியாகப் பார்க்கும்பொமுது லக்ன பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஆதிலட்சுமியாகவும், 2-ஆம் பாவத்தில் தனலட்சுமியாகவும், 3-ஆம் பாவத்தில் தனலட்சுமி யாகவும், 4-ஆம் பாவத்தில் இருந்தால் வித்யாலட்சுமியாகவும், 5-ஆம் பாவத்தில் விஜய லட்சுமியாகவும், 6-ஆம் பாவத்தில் தைரியலட்சுமியாகவும், 7-ஆம் பாவத்தில் விஜயலட்சுமியாகவும், 8-ஆம் பாவத்தில் யோகலட்சுமியாகவும், 9-ஆம் பாவத்தில் பாக்கிய லட்சுமியாகவும், 10-ஆம் பாவத்தில் ராஜலட்சுமியாகவும், 11-ஆம் பாவத்தில் ஜெயலட்சுமியாகவும், 12-ஆம் பாலத்தில் வசந்தலட்சுமியாகவும் செயல்படுவார்.

விசித்திர ஜோதிட விதிப்படி தேங்காய் என்பது மிருகசீரிடம். இதை எண்ணெயாகச் செய்தால் சதயம். இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்தால் அஸ்வினியாகும். தேங்காய்சாதம் செய்தால் பரணி. வறுத்தால் கிருத்திகை. தேங்காய் பர்பி செய்தால் ரோகிணி. மட்டையோடு இருப்பின் மிருகசீரிடம். தென்னைமரம் திருவாதிரை. தேங்காய்ப் பிரசாதம் புனர்பூசம். தேங்காய் வழிபாடு பூசம். சிதறுதேங்காய் ஆயில்யம்.

Advertisment

fg

வீட்டில் ஒருபக்கமாகவுள்ள தட்டில் தேங்காய் இருந்தால் மகம். குவியலாக வீட்டில் இருந்தால் பூரம். தேங்காய்த் நீர் உத்திரம். கலசத் தேங்காய் சித்திரை. குண்டத்தில் தேங்காய் சுவாதி. பழத்துடன் தேங்காய் விசாகம். மட்டை மட்டும் அனுஷம். கடைத்தேங்காய் கேட்டை. தேங்காய் மண்டி மூலம். தென்னங் கீற்று பூராடம். தேங்காய் கலந்த சுண்டல் உத்திராடம். இளநீர் திருவோணம். தேங்காய்த் துருவல் அவிட்டம். தேங்காய் எண்ணெய் சதயம். தென்னந்தோப்பு பூரட்டாதி. தேங்காய் சட்னி உத்திரட்டாதி. கொப்பரைத் தேங்காய் ரேவதி.

இவ்விதமாக பல்வேறு பொருட்களையும் 27 விதமாகவே பிரித்து நட்சத்திரம், பாவகம் இணைத்து வாழ்க்கை சம்பவங்களை சாட்சிகளுடன் இணைத்து தீர்க்கமாய் எடுத்துச் சொல்வதுதான் விசித்திர ஜோதிடம்.

தூத்துக்குடியில் உப்பு தயாராகிறது. உப்பு கிரகம் சந்திரனின் அவதார நட்சத்திரம் மிருகசீரிடம் என்பதால், இதையே தூத்துக் குடியாக பாவிக்கவேண்டும். தூத்துக்குடியில் முத்தெடுப்பதால் முத்துக்கு அதிபதி சந்திரனாகும். இதனால் தூத்துக்குடியை மிருகசீரிடம் நட்சந்திரம் குறிக்கும். மஞ்சள் என்றாலே ஈரோடு என்று பிரபலமாய் சொல்வார்கள். மஞ்சளுக்கு அதிபதி குரு. இந்த குருபகவானின் அவதார நட்சத்திரம் பூசம். எனவே கடகராசி, பூச நட்சத்திரம் ஈரோடு என மாறும்.

மல்லிகை என்றால் மதுரை என்பார்கள். மதுரை பாண்டிய நாட்டின் தலைநகரம். பாண்டியநாட்டின் அடையாளம் மீன்கொடி என்பதால், மீன ராசியே. மதுரை. அதிலுள்ள ரேவதிக்கு பூஞ்சோலை இருப்பிடம் என்பதால், ரேவதி, மீன ராசி மதுரையாக மாறும். வெண்ணெய்க்கு ஊத்துக்குளி என்பார்கள். நவநீதம் என்றால் வெண்ணெய்- கிருஷ்ணருக்குப் பிரியமானது. கிருஷ்ணர் பிறந்த நட்சத்திரம் ரோகிணி ரிஷப ராசியாக மாறும். பூட்டு என்றால் திண்டுக்கல் நினைவு வரும். பூட்டு திறப்பது, மூடுவது என்பதால், இது துலாராசியைக் குறிக்கும். சாவி ஆண்மையாகவும், துவாரமுள்ள பூட்டு பெண்மையாகவும் கருதுவதால், கன்னி என்னும் பெண் ராசியையும், துலாம் என்னும் ஆண் ராசியையும் இணைக்கும் தன்மை சித்திரைக்கு உள்ளதால், பூட்டு சித்திரை ஆயிற்று. திண்டுக்கல் என்ற ஊர் சித்திரையாக மாறியது.

பழனிக்கும் மதுரைக்கும் நடு வடபகுதி துலாம்; தென்பகுதி கன்னி. பட்டு என்றால் காஞ்சிபுரம் நினைவுக்கு வரும். பட்டுப்புழுவில் உருவாகிறது. தேனீக்கள் இறந்தபின் தேன் கிடைப்பதுபோல் பட்டுப்புழு இறந்தபின் பட்டுநூல் கிடைக்கிறது. இதனால் சுவாதி நட்சத்திரமாகும். சுவாதிக்கு தேனீ காலபுருஷ தத்துவ மேஷத்திற்கு ஏழாம் இடம் துலாம். இது திருமண பாவகம். திருமணத்திற்கு பட்டு ஜவுளி வாங்குவர். இதனால் காஞ்சிபுரம் துலா ராசி, சுவாதியாக மாறும்.

லட்டு என்றால் திருப்பதியின் எண்ணம் வரும். திருப்பதி பெருமாளின் நட்சத்திரம் உத்திரட்டாதி. இதனை அக்னிமூலை கிரகம் அல்லது மடப்பள்ளி என்பர். பெரிய அளவில் மடப்பள்ளி திருப்பதியில்தான் உண்டு. லட்டு குருவின் அம்சம் என்பதால், குருவின் வீடு மீனம். இதனால் திருப்பதி என்ற ஊர் மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரமானது.

பாட்டுக்கு திருவையாறு என்பர். பாட்டின் சின்னம் வீணை. சரஸ்வதி வீணையை ஏந்தியிருப்பாள். குரல்வளையில்தான் சாரீரம் வரும். இது திருவாதிரை- சிவன் அம்சமான நடராஜராகும். நாட்டியமும் பாட்டும் சிவனுக்குரியது. இதனால் திருவையாறு மிதுன திருவாதிரையாகும். சீவல் என்றால் கும்பகோணம் நினைவிற்கு வரும். சீவல்பாக்கு பாக்குமரம்- திருவோணம். திருவோணம் கோவிலைக் குறிக்கும். கோவில்கள் நகரம் கும்பகோணம். முக்கியமாக மகாமகக் குளம் உள்ளது. கும்பகோணம் திருவோணம், மகரத்திலுள்ளது. மகரத்தையும் கும்பத்தையும் ஆட்சிசெய்வது சனி. இதனால் சீவல் திருவோணம்- கும்பகோணம் திருவோணம் மகர லக்னமாகியது.

பஞ்சாமிர்தம் பழனி- பழனி முருகன் என்பதால், முருகன் விசாகம் என்பதால், விசாகம் 4-ஆம் பாதம் விருச்சிக ராசி பழனியாக மாறும். அல்வா என்றால் திருநெல்வேலி. பொதுவாக அல்வா கோதுமையில் செய்யப்படுகிறது. கோதுமைக் குரிய கிரகம் சூரியன். சிம்மம் சூரியனுக்குரிய ராசியாகும். மக நட்சத்திரம் நெல்லுக்குரியது என்பர். இதனால் அல்வா மக நட்சத்திரம், சிம்ம ராசி. இதுவே திருநெல்வேலியாக மாறும்.

தஞ்சைப் பெரிய கோவிலில் சிவலிங்கம் பெரியதாக உள்ளது. லிங்கம் என்பது வில்வத்தைக் குறிப்பதால் இது சித்திரையைக் குறிக்கும். ஆண்- பெண் ராசியை இணைப்பது சித்திரை. இது புலியின் நட்சத்திரம். இந்தப் புலிதான் சோழர்களின் கொடி. இதனால் தஞ்சாவூர் சித்திரை மற்றும் துலா ராசியாகும்.

இவ்வாறு நட்சத்திரரீதியாக இணைப்பு செய்து ராசி, குணம், நட்சத்திர இயல்பு ஆகியவற்றுடன் கிரகத்தையும் ஊரையும் சேர்த்துத் துல்லியமாகப் பலன் சொல்ல முடியும்.

அனுமான ஜோதிடம்போல் இல்லாமல், விசித்திர ஜோதிடத்தில் பல கோணங்களில் சிந்தித்துச் சொன்னால் ஆயிரங்கணக்கான பலன்கள் சொல்லமுடியும்.

செல்: 98403 69513