சுப நிகழ்ச்சிகளுக்கு விலக்கப்பட வேண்டியவை!

/idhalgal/balajothidam/excluded-auspicious-events

நாம் ஒரு செயலைத் தொடங்கும்போது அது நீண்ட நாட்கள் நீடித்து நிலைக்கவும், அதனால் பல்வேறு நன்மைகளை அடையவும் முதலில் நல்ல நாளைத் தேர்வுசெய்ய வேண்டும்.

நாம் எந்த செயலைத் தொடங்கப்போகிறோமோ அதற்கு பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டுள்ள உகந்த நட்சத்திரம், ஏற்ற திதி, சரியான லக்னம் மேலும் மற்ற சிறப்பு விதிகள் என்று குறிக்கப்பட்டுள்ள அம்சங்களை நன்கு ஆராய்ந்து, அதற்குத் தகுந்தாற்போல் நல்லநாளைத் தேர்வுசெய்ய வேண்டும்.

events

அவரவர் பிறந்த கிழமையில் சுபநிகழ்ச்சிகளை செய்யக்கூடாது. மேலும் ஞாயிறு, தேய்பி

நாம் ஒரு செயலைத் தொடங்கும்போது அது நீண்ட நாட்கள் நீடித்து நிலைக்கவும், அதனால் பல்வேறு நன்மைகளை அடையவும் முதலில் நல்ல நாளைத் தேர்வுசெய்ய வேண்டும்.

நாம் எந்த செயலைத் தொடங்கப்போகிறோமோ அதற்கு பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டுள்ள உகந்த நட்சத்திரம், ஏற்ற திதி, சரியான லக்னம் மேலும் மற்ற சிறப்பு விதிகள் என்று குறிக்கப்பட்டுள்ள அம்சங்களை நன்கு ஆராய்ந்து, அதற்குத் தகுந்தாற்போல் நல்லநாளைத் தேர்வுசெய்ய வேண்டும்.

events

அவரவர் பிறந்த கிழமையில் சுபநிகழ்ச்சிகளை செய்யக்கூடாது. மேலும் ஞாயிறு, தேய்பிறைத் திங்கள், செவ்வாய், சனிக்கிழமைகளில் செய்யக்கூடாது.

அதுபோல ஜென்ம திதியில் சுபநிகழ்ச்சி தவிர்க்கப்பட வேண்டும். மேலும் அமாவாசை (பித்ரு பூஜைக்கு மட்டும் உரியது அமாவாசை), பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி ஆகிய ஆறு திதிகளில் எந்த சுபகாரியமும் செய்யக் கூடாது. அன்னப்பிராசனம், உபநயனம் தவிர்த்து மற்ற சுப நிகழ்ச்சிகளை ஜென்ம நட்சத்திரநாளில் செய்யக்கூடாது.

பரணி, கார்த்திகை, ஆயில்யம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் எந்த சுப நிகழ்ச்சிகளையும் விலக்கவேண்டும். சந்திராஷ்டமம் வரும் நட்சத்திர நாட்களையும் தவிர்க்கவேண்டும்.

அவரவருக்கு தாராபலம் உள்ள நாட்களைத் தேர்வுசெய்ய வேண்டும்.

திருமணத்திற்கு நாள் குறிக்கும்போது மணமகன்- மணமகள் இருவருக்கும் தாராபலம் வரும்படி தேர்வுசெய்ய வேண்டும். சுப நிகழ்ச்சி களுக்கு ஆகாத யோகங்கள்:

விஷ்கம்பம், அதி கண்டம், சூலம், கண்டம், வியாகதம், வச்சிரம், வியதீபாதம், பரிகம், வைதிருதி முதலிய ஒன்பதும் கூடாது.

சகுனி, நாகவம், சதுஷ்பாதம், கிம்ஸ்துக்கினம், வணிசை ஆகிய ஐந்து கரணங்களும் சுபகாரியங் களுக்கு ஆகாதவை.

மேலும் நாம் வசிக்கும் பகுதியிலுள்ள ஆலய விசேஷ தினங்களிலும் நம் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை வைக்கக்கூடாது. ஆலயத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா முடியும்வரையில் எந்த நிகழ்ச்சியும் கூடாது. கோவில் கும்பாபிஷேக தினத்தன்றும் செய்யக்கூடாது. சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், வைகுண்ட ஏகாதசி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற ஆலய விசேஷ தினங்கள் தவிர்க்கப்படவேண்டும். விஜயதசமி தினத்தில் வித்யாரம்பம் மட்டும் செய்யலாம்.

முன்னோர் திதி நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்க்கவேண்டும். கிரக ஆரம்பத்திற்கு பூமி யோகினி கூடாது. கிரகப்பிரவேசத்திற்கு யோகினி எதிரிலும், சுக்கிரன் எதிரிலும் இருக்கக்கூடாது. விமானப் பயணத்திற்கு ஆகாச யோகினி கூடாது.

நாம் நல்லநாள் குறிக்கும்போது, அந்த நாள் நேத்திரம், ஜீவனுள்ள நாளாக இருக்கவேண்டும்.

இவ்வாறாக பல்வேறு காரணிகளை ஆராய்ந்து நல்லநாள் குறித்தபிறகு, அவரவரு டைய லக்னத்திற்கு ஏற்றவாறும், கிழமைக்கு ஏற்ற வாறும் நல்ல நேரத்தைக் குறித்து சுப நிகழ்ச்சி களைத் தொடங்கினால் அவை என்றென்றும் நீடித்து நல்லபலன் தரும்.

-ஏ.எஸ்.கே. கடம்பவன சுந்தரம்

செல்: 98421 62703

bala190321
இதையும் படியுங்கள்
Subscribe