Advertisment

கலவரத்தை உண்டு பண்ணும் களத்திர தோஷம்...! - நையாண்டிச் சித்தர் க. காந்தி முருகேஷ்வரர்

/idhalgal/balajothidam/evil-causes-riots-satirist-siddha-k-gandhi-murugeshwarar

செவ்வாய் 2, 4, 7, 8, 12-ல் இருந்தால்

செவ்வாய் தோஷம்..

எதிலும் வேகம், பிடிவாதம்

அவசர புத்தி, எதிர்வாதம்

குடும்பம் நடத்த ஆகாத

அத்தனை குணங்களும்

அணிவகுத்து நிற்குமப்பா...

ஆணைவிட

பெண்ணுக்குத்தான் பாதிப்பு அதிகம்

ஏனென்றால் பெண்ணுக்கே

செவ்வாய் களத்திரகாரகன்...

உங்களுக்கு

பாசிட்டிவான வார்த்தைகள்

தேவைப்பட்டால் மோட்டிவேஷனல்

ஸ்பீக்கரிடம் செல்லுங்கள்...

தயவுசெய்து

உண்மை சொல்லவரும்

ஜோதிடர்களைக் கெடுக்காதீர்கள்...

தோஷம் என்ற வார்த்தை

பயம் தருகிறதென்று சொன்னதால்..

பல ஜோதிடர்கள்

யோகம் என மாத்தி சொல்கிறார்கள்..

உங்களுக்குத் தேவையான

ஆசை வார்த்தைகளை

சொல்வதற்கு பெயர் ஜோதிடம் அல்ல...

Advertisment

ss

செவ்வாய் தோஷம் என்றாலே

குடும்ப வாழ்க்கையைக் கெடுத்தே தீரும்..

சூரியன், சனி, ராகு- கேது

தேய்பிறை சந்திரன் என

பாவ கிரகங்கள்...

மோசமான செவ்வாயுடன் சேர்ந்தால்

கணவனின் பிரிவு, இழப்பு

நடந்தே தீரும்...

சுப கிரகங்கள் இணைவு

ஓரளவு

செவ்வாய் 2, 4, 7, 8, 12-ல் இருந்தால்

செவ்வாய் தோஷம்..

எதிலும் வேகம், பிடிவாதம்

அவசர புத்தி, எதிர்வாதம்

குடும்பம் நடத்த ஆகாத

அத்தனை குணங்களும்

அணிவகுத்து நிற்குமப்பா...

ஆணைவிட

பெண்ணுக்குத்தான் பாதிப்பு அதிகம்

ஏனென்றால் பெண்ணுக்கே

செவ்வாய் களத்திரகாரகன்...

உங்களுக்கு

பாசிட்டிவான வார்த்தைகள்

தேவைப்பட்டால் மோட்டிவேஷனல்

ஸ்பீக்கரிடம் செல்லுங்கள்...

தயவுசெய்து

உண்மை சொல்லவரும்

ஜோதிடர்களைக் கெடுக்காதீர்கள்...

தோஷம் என்ற வார்த்தை

பயம் தருகிறதென்று சொன்னதால்..

பல ஜோதிடர்கள்

யோகம் என மாத்தி சொல்கிறார்கள்..

உங்களுக்குத் தேவையான

ஆசை வார்த்தைகளை

சொல்வதற்கு பெயர் ஜோதிடம் அல்ல...

Advertisment

ss

செவ்வாய் தோஷம் என்றாலே

குடும்ப வாழ்க்கையைக் கெடுத்தே தீரும்..

சூரியன், சனி, ராகு- கேது

தேய்பிறை சந்திரன் என

பாவ கிரகங்கள்...

மோசமான செவ்வாயுடன் சேர்ந்தால்

கணவனின் பிரிவு, இழப்பு

நடந்தே தீரும்...

சுப கிரகங்கள் இணைவு

ஓரளவு நல்ல வாழ்க்கை உண்டு...

பாவ கிரக தசை, 6, 8, 12 தசை

செவ்வாய்

செவ்வாயுடன் சேர்ந்த கிரக தசை

கஷ்டத்தைக் கொடுத்தே தீருமப்பா...

பக்குவமான பரிகாரம்

என்னவென்றால்

பக்குவமான பிறகு திருமணம் செய்தால்

பல்லாண்டு வாழ யோகமுண்டு...

ராகு- கேதுக்கள் 1, 2, 4, 7, 8, 12

நாகதோஷத்தால் நரக வாழ்க்கை உண்டு..

குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன்

என சுக பலத்துடன் இருக்கும்

சர்ப்பக் கிரக தசையில் மட்டும்

சுகமே சூழுமப்பா...

பாவ பலம்பெற்று

இணைந்த கிரக தசை நடந்தால்

அத்தனையும் வேதனை, சோதனைதான்...

ராகு திருமணத்தைக் கொடுத்து

திருமணத்தில் தொல்லைகளைக் கொடுப்பார்...

கேது திருமணத்தைப் பறித்து

சொல்லமுடியாத துயரத்தைக் கொடுப்பார்...

கேது தொப்புள் கொடி என்றால்

ராகு அதனை வெட்டும் கத்தரிக்கோல்..

ராகு கேதுக்கள்

எந்த இடத்தில் நின்றாலும்

கெடுதலையே செய்கிறார்...

சுப பலம் பெற்று நடக்கும்

ராகு- கேது தசைகள்

எதிர்பாராத அதிர்ஷ்டத்தைக் கொடுத்து

ஆச்சரியப்பட வைக்கிறார்...

மாய கிரகங்கள் மாயாவித்தனத்தைக்

காட்டாமல் விடுவதில்லை...

பிதுர் தோஷம் என்பது

முன்னோர்கள் செய்த

கர்ம வினைகள்தான்...

எந்த மனிதனாக இருந்தாலும்

தனக்கு கஷ்டங்கள் இருப்பதைவிட

தன் வாரிசுகளுக்கு இருந்தால்தான்

கதறி அழுவான்...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

களத்திர தோஷம் ஏற்பட்டு

புத்திர தோஷமாகி

தலைமுறையை பாதிக்கும்...

இன்று நீ ஒருவனைக் கெடுத்தால்

உன்னால் ஒருவன் கதறி அழுதால்

ஒரு நாள் உன் பரம்பரை கதறி அழும்..

ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பது

உண்ண உணவின்றி தவிப்பது

அனாதைகளாவது

குழந்தை பிறக்காமல்

பரம்பரை இத்தோடு நின்று போவது..

பிதுர் தோஷம் இப்படித்தான்

ஆத்மாவை அலற வைக்கும்...

ஏழாம் இடம் கெட்டுப் போனவனுக்கு

அன்பிற்கும் பாசத்திற்கும்

காதலுக்கும் காமத்திற்கும் ஏங்கியே சாவான்..

நன்றி கெட்ட மனைவி

துரோகம் செய்யும் நண்பன்

கேடுகெட்ட கணவன்

உதவி செய்யாத உறவினர்கள்

கண்ணில் படுபவர்கள்

எல்லோரும் எதிரி ஆவார்..

ஏழாமிடம் சுபக் கிரகப் பார்வை

இருப்பவர் மட்டும்தான்

கொடுமைகளை சகித்து

சாதனைகள் செய்வான்..

கடுமையானகளத்திர தோஷம் கொண்டவன்

கடுகளவும் முன்னேற மாட்டான்...

கால சர்ப்ப தோஷம் கொண்டவனுக்கு

கல்லறை போகும்வரை

நிம்மதி இருக்காது..

40 வயதுக்குமேல் தோஷம்

கால சர்ப்ப யோகமாகும்..

பெயர், புகழ், அந்தஸ்து கிடைக்கும்

எண்ணிப்பாராத வளர்ச்சி இருக்கும்..

பிறர் போற்ற வாழ்வான்

தனக்குள்ளே தினம் தினம் சாவான்..

இதற்குமேல் இழக்க ஒன்றும் இல்லை

இளமையில் வறுமை

வாழ வேண்டிய வயதில் வாழாமல்

வாழாவெட்டியாய் வாழ்வான்..

பிறர் போற்றும் பெருமை

ஒரு வெங்காயத்திற்கும் ஆகாது..

நேற்று புகழ் பெற்றவன்

இன்று யார் என்றே

தெரியாதவனாகிவிடுகிறான்...

அழியா புகழ் என்பதெல்லாம்

அர்த்தமற்றது...

நல்ல கணவனோ, நல்ல மனைவியோ

அமையாதவர் வாழ்க்கை நரகம்..

ஒரு ஜென்மம்

அதில் மறு ஜென்மம் என்பதே கிடையாது..

களத்திர தோஷம் கொண்டவன்

கல்யாணம் ஆகாமல் தவித்ததைவிட

திருமணமாகி நொந்தவனே அதிகம்..

கெட்டவன் இவனை திருமணம் செய்யத்தான்

இத்தனை தெய்வங்களை வழிபட்டோமா என

வெறுத்த பெண்கள் நிறைய உண்டு..

நல்லவனுக்கு நல்ல துணை அமையாது

ஏனென்றால் ஏழாம் இடம்

வதை ஸ்தானம் அல்லவா?!..

திருமணம் வரமாய் அமைவது

கொடுத்து வைத்தவர்களுக்கு மட்டுமே..

சுபக் கிரகங்கள் வலுத்துப் பார்த்தால் மட்டுமே

இல்லற வாழ்க்கை இனிப்பாய் இருக்கும்...

பெண்கள் ஜாதகத்தில்

செவ்வாய், ராகு, சனி

ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டால்

மொத்த வாழ்க்கையும் கெட்டுப்போகும்..

களத்திரகாரகன் சுக்கிரன்

பாவிகளோடு சேர்ந்துவிட்டால்

கல்யாண வாழ்க்கை கலவரம்தான்..

மறுமணம் செய்தாலும்

மாறாது உன் வாழ்க்கை..

கள்ளக்காதல் செய்யப்போய்

சிறைச்சாலை செல்ல நேரும்..

களத்திர ஸ்தானம் கெட்டுப் போனால்

வெள்ளை மனம்கூட

கள்ள மனமாகும்..

இங்கு யாரும் குற்றவாளி இல்லை

கிரகங்கள்தான்

நம்மை கிறங்க வைத்துவிடுகிறது..

நல்லது நடக்க வேண்டும் என்றால்

நல்லதை நினை..

செல்: 96003 53748

bala210325
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe