"ஜாதகரின் ஜீவனத்திற்கு, ஜாதக அமைப்பின்படி சிலருக்கு நெல் வயலும், வேறுசிலருக்கு உருளைக்கிழங்குத் தோட்டமும் அளிக்கப்படுகிறது. நெல் வயலில் செல்வம் பூமிக்கு மேலேயும், உருளைக்கிழங்குத் தோட்டத்தில் பூமிக்குக் கீழேயும் இருக்கிறது' என்பதை உணர்ந்தவனே ஞானி.
பயிர்த்தொழில் செய்யத் தேவையான தண்ணீரில்லாத பாலைவனத்தில் பூமிக்குக் கீழே எரிபொருள் கிடைப்பதுபோல், எல்லா ஜாதகருக்கும் கிடைக்க வேண்டிய பொருள், ஆசை நிறைவேறுதல், செய்யவேண்டிய பரிகாரங்கள் போன்றவற்றை எட்டாம் பாவத்தைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்.
பொதுவாக எட்டாம் பாவம் என்றாலே மறைவு ஸ்தானம்- கெட்ட பாவம் என்று ஒதுக்கப்படுகிறது.
மதிப்புமிக்க பொருளைத்தான் மறைத்துவைப்பது வழக்கமென்பதால் மறைவு ஸ்தானமே (8-ஆம் பாவம்) பிரதானமாக ஆய்வு செய்யப்படுகிறது.
எட்டாம் பாவம் மிகவும் முக்கியமான பாவம். இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான அதிர்ஷ்டம்- பொருளாதார நிலை போன்றவற்றை எட்டாம் பாவமே முடிவுசெய்யும். அஷ்டலட்சுமி, அஷ்டமங்களப் பிரசன்னம், அஷ்டபந்தனம், எட்டுத் திக்குகள் போன்ற சொற்களால் "எட்டு' என்பதன் உயர்வு புரியும். உலகிலுள்ள எல்லாரும் அவர்கள் கையால் எட்டு ஜாண் உயரம்தான் இருப்பார்கள்.
எட்டாம் பாவம்- ஆறாம் பாவத்திற்கு (ஜீவனத்திற்கான தொழில்) மூன்றாம் பாவமாகவும், பத்தாம் பாவத்திற்கு (அதிகாரம், அந்தஸ்து, அங்கீகாரம்) பதினோராம் பாவமாகவும் இருப்பதால், தொழில் மற்றும் மரியாதை போன்றவற்றை விளக்கும் பாவங்களுக்கு சகோதர பாவமாகிறது.
உலகில் நாம் அனுபவிக்கும் நன்மை- தீமைகளுக்குக் காரணம் நம் ஊழ்வினை என்ற கருத்தே ஜோதிடத்தின் அடித்தளம். ஒன்பதாம் பாவத்திற்கு (கடவுள் அருள்) விரய பாவமாகும் எட்டாம் பாவம் மட்டுமே ஊழ்வினை, சாபம், சாப நிவர்த்தி போன்றவற்றை எடுத்துக்காட்டமுடியும்.
எதிர்பாராத விபத்துகள், நீண்டகால நோய், தீராத கடன், மனநோய், பிறர் செய்யும் மறைமுகக்கெடுதல், கணவன்- மனைவி உறவிலுள்ள பிரச்சினை, பிரிவு போன்ற மனதை வாட்டும் பிரச்சினைகளின் தன்மையையும், தீர்வையும் எட்டாம் பாவத்தால் மட்டுமே அறியமுடியும்.
மாறுபட்ட சிந்தனையுடைய பெரும் சாதனையாளர்கள் ஜாதகத்தில் எட்டாம் பாவம் வலுத்திருக்கும்.
எட்டாம் பாவத்துடன் சம்பந்தப்பட்ட ராசி, நட்சத்திரங்கள், அவற்றின் அதிபதிகளின் பலத்தைக்கொண்டு, இதுவரை தீராத பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, எல்லாரும் எல்லா நன்மையும் அடையலாம்.
செல்: 63819 58636