Advertisment

யோக நாளில் பிறக்கும் ஆங்கில வருடம்! -கே. குமார சிவாச்சாரியார்

/idhalgal/balajothidam/english-year-yoga-day-k-kumara-sivacharya

ங்கிலப் புத்தாண்டு ஜனவரி-1 எல்லா வருடங்களிலும், தமிழ் மாதக் காலண்டரின்படி பீடுடைய மாதமாகிய மார்கழியின் நடுவில் வந்து அனைவரையும் குதூகலப்படுத்தும். ஜூலியன் காலண்டர் விதிப்படி ஜனவரிமுதல் டிசம்பர் வரையுள்ள மாதங்களுக்கு தனித்தெய்வங்களை கிரேக்கர்கள் அப்போதே அறிவித்து விட்டார்கள்.

Advertisment

உரோமானியர்கள் காலச்சக்கரத்தைச் சுழலவிட்டு, முதன்முதலில் பதினான்கு மாதங் களைக் கொண்டுவந்து, பின்னர் 12 ஆக்கி வெளியிட்டதைக் காலவரலாற்றில் அறிந்து கொள்ளமுடியும். ஜனவரி என்ற மாதம் ஜனஸ் என்ற கடவுளின் ஆதிக்கமுடைய மாதம். பிப்ரவரிக்கு பெப்ரூயஸ் என்ற கடவுள் வந்தார்.

கடந்த பத்து ஆண்டுகளுக்குமுன்பு, "மாயன் காலண்டர் முடிந்துவிட்டது; இந்த உலகம் அழிந்துவிடப்போகிறது' என்று பயமுறுத் தினார்கள். டிசம்பர் மாதம் வந்தால் இயற்கை நமக்கு மழை, புயல் என்று பேரிடரைக் கொடுத்து விட்டுச் செல்கிறது. அனைத்து இடர்களையும் மறந்து, "ஆண்டவா! வருகிற புத்தாண்டாவது எங்களுக்குச் சுபயோகங்கள் தருகிற ஆண்டாக மலரவேண்டும்' என்று பிரார்த்திக்கவேண்டும்.

newyearr

Advertisment

அதிர்ஷ்ட நாளில் ஆங்கிலப் புத்தாண்டு

இந்த உலகத்தில் பிறந்த எல்லாருக்கும் ஒரு யோகத்தின் பெயர் ஜனன ஜாதகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். 27 யோகங்களில் எந்த யோகம் இறையருளால் வழங்கப்பட்டுள்ளதோ அதன்படிதான் அவரின் வாழ்க்கை அமையும். அதேபோல் ஒரு நாளின் தன்மையை- அதன் செயல்படும் சக்தியை வெளிக்காட்டுவதும் யோகம்தா

ங்கிலப் புத்தாண்டு ஜனவரி-1 எல்லா வருடங்களிலும், தமிழ் மாதக் காலண்டரின்படி பீடுடைய மாதமாகிய மார்கழியின் நடுவில் வந்து அனைவரையும் குதூகலப்படுத்தும். ஜூலியன் காலண்டர் விதிப்படி ஜனவரிமுதல் டிசம்பர் வரையுள்ள மாதங்களுக்கு தனித்தெய்வங்களை கிரேக்கர்கள் அப்போதே அறிவித்து விட்டார்கள்.

Advertisment

உரோமானியர்கள் காலச்சக்கரத்தைச் சுழலவிட்டு, முதன்முதலில் பதினான்கு மாதங் களைக் கொண்டுவந்து, பின்னர் 12 ஆக்கி வெளியிட்டதைக் காலவரலாற்றில் அறிந்து கொள்ளமுடியும். ஜனவரி என்ற மாதம் ஜனஸ் என்ற கடவுளின் ஆதிக்கமுடைய மாதம். பிப்ரவரிக்கு பெப்ரூயஸ் என்ற கடவுள் வந்தார்.

கடந்த பத்து ஆண்டுகளுக்குமுன்பு, "மாயன் காலண்டர் முடிந்துவிட்டது; இந்த உலகம் அழிந்துவிடப்போகிறது' என்று பயமுறுத் தினார்கள். டிசம்பர் மாதம் வந்தால் இயற்கை நமக்கு மழை, புயல் என்று பேரிடரைக் கொடுத்து விட்டுச் செல்கிறது. அனைத்து இடர்களையும் மறந்து, "ஆண்டவா! வருகிற புத்தாண்டாவது எங்களுக்குச் சுபயோகங்கள் தருகிற ஆண்டாக மலரவேண்டும்' என்று பிரார்த்திக்கவேண்டும்.

newyearr

Advertisment

அதிர்ஷ்ட நாளில் ஆங்கிலப் புத்தாண்டு

இந்த உலகத்தில் பிறந்த எல்லாருக்கும் ஒரு யோகத்தின் பெயர் ஜனன ஜாதகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். 27 யோகங்களில் எந்த யோகம் இறையருளால் வழங்கப்பட்டுள்ளதோ அதன்படிதான் அவரின் வாழ்க்கை அமையும். அதேபோல் ஒரு நாளின் தன்மையை- அதன் செயல்படும் சக்தியை வெளிக்காட்டுவதும் யோகம்தான். இந்த வருடம் 2020 ஆங்கிலப் புத்தாண்டு வியதீபாதம் என்னும் யோகமான நாளில் பிறக்கிறது. 27 யோகங்களில் 17-ஆவது யோகமாக இருப்பது வியதீபாதம். இதில் பிறந்த வர்கள் அதிர்ஷ்டசாலியாக ஐஸ்வர்யங்களை அள்ளுவார்கள்.

முடிந்தவரை கேளிக்கைகளைக் குறைத்துக் கொண்டு ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாட்டைச் செய்யுங்கள். ஜனவரி 1-ஆம் நாள் செய்யும் குறிப்பிட்ட இறைவழிபாடும், பாடும் துதிகளும் ஆண்டு முழுவதும் சுபப்பலன்களைக் கொடுக்கும்.

விளங்கச் செய்யும் வியதீபாத தேவதை

மகாபாக்கியங்களைத் தரும் வியதீபாத யோகத்திற்கு அதிதேவதை என்னும் அதிர்ஷ்ட சக்தி உண்டு. ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள தேவதையின் தோற் றத்தை அறியும்போது, சிவப்பு நிறம் கொண்டவராக, எட்டு கண்களோடு, நான்கு பக்கங்களிலும் ஒளிவீசும் சக்தியுடன், வேதங்கள் நான்கையும் சொல்லிக்கொடுக்கும் குரு வடிவினராகத் தோன்றுகிறார். கைகளில் சின்முத்திரையுடன், அழைத்துக்காக்கும் வரத முத்திரையோடு உள்ளார். இவ்வாண்டு ஜனவரி 1-ல் வியதீபாத தேவதை வெளிப்படுவதால், அட்சய திருதியைக்குச் சமமான சக்திகொண்ட தினமாக இந்த நாள் அமைகிறது.

ஒருவர் ஜனன ஜாதகத்தில் குரு, சுக்கிரன், சனி, சந்திரன் யோகம் தருபவர்களாக அமர்வதற்கும், இந்த யோக தேவதைக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று கணக்கிட்டுப் பார்த்தால் இவரின் சக்தி தெரியவரும்.

லட்சுமி, குபேரன் செய்த சிவபூஜை

மார்கழி மாதத்தில் வரும் தனுர் வியதீபாதம் சிறந்த புண்ணியகாலமாக சாஸ்திரத்தில் வர்ணிக்கப் பட்டுள்ளது. பிரும்மாண்ட புராணத்தில் இதற்கான சிறப்புக் கதையும் உள்ளது. மகாலட்சுமி தேவியும் குபேரனும் எந்தப் பொறுப்புமில்லாமல் வலம்வந்த சமயம், மகாவிஷ்ணு லட்சுமி தேவியைவிட்டுப் பிரிந்துவாழ்ந்தபோது, தனியாக இருந்த திருமகளை அரக்கர்கள் துரத்தினர். அப்போது விளக்கொளிக்குள் புகுந்துவிட்டாள். குபேரன் பெண் சபலத்தால், தகுதியிழந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப் பட்டு ஒரு கரையில் ஒதுங்கினார். நோய் பீடிப்பு ஏற்பட்டது. இருவரும் சுபநாளான வியதீபாத புண்ணிய காலத்தில் சிவலிங்கத் திருமேனி செய்து, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டனர். அங்கே இறைவன் ஐஸ்வர்ய சிவனாக எழுந்தருளி, அவர்களுக்கு செல்வங்களை அள்ளிக்கொடுத்து, இந்த உலகில் எவர் தர்மத்தைக் காத்து இறைபக்தியோடு வாழ்கிறார்களோ அவர்களுக்குக் கொடுக்கும்படி பணித்தார். அன்றுமுதல் உலகமக்களுக்கு ஐஸ்வர்யம், நிதிகளைத் தகுதி பார்த்துக் கொடுக்கும் நிதிப் பொறுப்புகளை இருவரும் பெற்றனர்.

இதிலிருந்து வியதீபாத புண்ணிய காலம் சக்தியுடைய அதிர்ஷ்டமான நாள் என அறியமுடியும்.

ஜாதகத்தில் யோகத்தை அதிகப்படுத்த ஒரு நாளின் நிலையை அறிய சித்தயோகம், அமிர்த யோகம், மரணயோகம் ஆகிய மூன்று யோகங்களைக் காணவேண்டும். அத்துடன் 27 யோகங்களில் ஒன்றையும் சேர்த்து நாளின் சக்திநிலையை உணரவேண்டும். யோகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள். 27 யோகங்களுள் ஒன்றில் பிறந்தவர்கள், அவரவர்களுக்கான கிரக நிலைப்படி சமுத்திரயோகம், சத்ரயோகம், கமலயோகம், யவயோகம், வஜ்ரயோகம், கதயோகம், சிரிக்யோகம், நிலயோகம், முசலயோகம் ஆகிய மகாபாக்கிய யோகங்களைப் பெற்று விளங்குவார்கள் என்று பிருஹத் ஜாதகநூல் கூறுகிறது. மார்கழி மாதத்தில் வியதீபாத புண்ணிய காலத்திலும், மற்ற யோகங்களில் பிறந்த வர்களும் இந்த வருடம் புத்தாண்டுடன் சேரும் தினத்தில் அவரவர் யோகத்திற்குத் தொடர்புடைய அதிதேவதையை அதிர்ஷ்ட தேவதையாக நினைத்து வழிபடத் தொடங்குதல் வேண்டும்.

யோகங்கள், அதிர்ஷ்ட தேவதாக்கள் பூஜா சாஸ்திரம்

1. விஷ்கம்பம்- தர்மராஜர்- முக்கோண வடிவம்- ஓம் சௌம் த்ராம் தர்மராஜாய நம:

2. ப்ரீதி- ஸ்ரீமன் நாராயணர்- சக்கரவடிவம்- ஓம் ஸ்ரீம் ஐம் நாராயணாய நம:

3. ஆயுஷ்மான்- ஸ்ரீவீரன்- ஐங்கோணம்- ஸ்ரீம் வம் வீரப்பிரம்ம ரூபினே நம:

4. சௌபாக்யம்- தாதா- சதுராகாரம்- ஓம் த்ரீம் த்ராம் தாத்ருப்யோ நம:

5. சோபனம்- பிருஹஸ்பதி- ஐங்கோணம்- ஓம் ப்ராம் ப்ரீம் ப்ருஹஸ்பதயே நம:

6. அதிகண்டம்- சந்திரன்- வட்டம்- ஸ்ரீம் சாம் சந்த்ராய கலாநாதாய நம:

7. சுகர்மம்- தேவேந்திரன்- நட்சத்திர உள்வட்டம்- ஓம் ஐம் இம் இந்திராதி தேவாய நம:

8. திருதி- ஜலதேவதா- வட்டம்- ஓம் ஐம் வருணப்ரியாய ஜலாதிபதயே நம:

9. சூலம்- நாகராஜர்- தாமரை- ஓம் ரம் ஸ்ரீம் ஸர்ப்பராஜாய நம:

10. கண்டம்- அக்னிதேவன்- இதயம்- ஓம் யம் யாகஸ்வரூபிணே நம:

11. விருத்தி- சூரியன்- கதிர்வட்டம்- ஓம் ஐம் பாஸ்கராய நம:

12. துருவம்- பூமிதேவி- வட்டம்- ஓம் பம் சௌம் பூமி தேவ்யை நம:

13. வியாகதம்- மருத்கணம்- விளைபயிர்- ஓம் ஸ்ரீம் மருத்கண மூர்த்தயே நம:

14. ஹர்ஷணம்- பகர்- வட்டம்- ஓம் ஐம் பகநேத்ராதிபதயே நம:

15. வஜ்ரம்- வருணன்- சதுரம்- ஓம் மகராசனாய வருணாய நம:

16. சித்தி- கணபதி- கஜம்- ஓம் கம் சௌம்யாய கணேசாய நம:

17. வியதீபாதம்- குரு- சதுரம + வட்டம்- ஓம் கம் ஸ்ரீம் ப்ருஹஸ்பதயே நம:

18. வரீயான்- குபேரன்- நட்சத்திர வட்டம்- ஓம் க்லீம் குபேராய நிதிஸாய நம:

19. பரிகம்- த்வஷ்டா- கதிர் + வட்டம்- ஓம் சௌம் ஐம் த்வஷ்டாய மித்ராய நம:

20. சிவம்- மித்ரா- அம்புலி- ஓம் சௌம் பித்ராய சௌபாக்ய வர்தினே நம:

21. சித்தம்- ஸ்கந்தர்- வஜ்ஜிரம்- ஓம் சாம் சௌம் சரஹணபவாய நம:

22. சாத்தியம்- அம்பிகை- திரிசூலம்- ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம் சக்திதேவ்யை நம:

23. சுபம்- மகாலட்சுமி- கமலம்- ஓம் ஸ்ரீம் சௌம் சௌபாக்ய லக்ஷ்ம்யை நம:

24. சுப்பிரம்- கௌரிதேவி- தீபம்- ஓம் சௌம் ஹ்ரீம் கௌர்யை நம:

25. பிராம்யம்- பிரம்மா- கமலம்- ஓம் ஸ்ரீம் சதுர்முகாய பிரம்மதேவாய நம:

26. ஐந்திரம்- பித்ரு- மரங்கள்- ஓம் ஐம் சௌம் பித்ருதேவாய நம:

27. வைதிருதி- அதிதிகள்- தண்டம்- ஓம் ஸ்ரீம் க்லௌம் ஆதித்ய சூர்யாய நம:

27 யோகங்களில் முதலாவது யோகத்தின் பெயரும், 2-ஆவதாக அதிதேவதைகனின் பெயரும், மூன்றாவதாக அவர்களின் வடிவங்களும், நான்காவதாக அந்த யோகம் பெற்றவர்கள் சொல்லவேண்டிய அதிதேவதா மூலமந்திரமும் மூலநூல்களின்வழியே தரப்பட்டுள்ளது.

செல்: 91765 39026

bala030120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe