Advertisment

எதிரிக்கு எதிரி நண்பன்! -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/enemy-enemy-friend-r-mahalakshmi

லகில் ஒரு பழமொழி உண்டு. "எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன்' எனக்கூறுவர். எதிரிக்கு எதிரியை நண்பனாக் கிக்கொண்டால், எதிரியின் பலம், பலவீனமறிந்து எளிதாக வெற்றியடைய லாம்.

ஜோதிடத்திலும் ஒவ்வொரு கிரகத்துக்கும் எதிரி, பகை கிரகம் உண்டு.

சூரியன் x சனி

Advertisment

சூரியனுக்கும் சனிக்கும் ஆகவே ஆகாது. தீராப் பகையுண்டு. சனியின் தந்தைதான் சூரிய பகவான். இவர் சனியையும் அவரது தாயையும் அவமதித்தார். எனவே, சனிக்கு சூரியனுடன் மிகப்பகை உண்டாகிவிட்டது. இருவரின் காரகங்களுமே எதிரெதிராக இருக்கும். சூரியன் வெப்பமான கிரகமாக உள்ளபோது, சனி குளிர்ச்சி யான கிரகமாக உள்ளது. சூரியன் கம்பீரத்தைக் குறிக்க, சனி தாழ்மையைக் குறிப்பார். சூரியன் கண்டிப்பு மற்றும் சுறுசுறுப்பு. சனியோ தோழமை மற்றும் சோம்பேறி. சூரியன் தெளிவான மனநிலை. சனி குழப்ப குணமுடையவர். சூரியன் ஆரோக்கியத்தைக் குறிப்பவர். சனி நோய்க்காரகர்.

சூரியன் மிகப்பெரும் குறிக்கோளுக்கு சொந்தக்காரர். சனியோ "சித்தம் போக்கு சிவம் போக்கு' என்றிருப்பார். சூரியன் மலையைக் குறிக்க, சனி பொந்துகளைக் குறிப் பார். சூரியன் மிகப்பெரும் மரங்களைக் குறிக்க, சனி முட்புதர்களைக் குறிப்பார். சூரியன் ரத்தச் சிவப்பு நிறத்தைக் குறிக்க, சனி நல்ல கருமை நிறத்தைக் குறிப்பார். இவ்விதம் இந்த இரு கிரகங்களின் பகை காரகங்களை சொ

லகில் ஒரு பழமொழி உண்டு. "எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன்' எனக்கூறுவர். எதிரிக்கு எதிரியை நண்பனாக் கிக்கொண்டால், எதிரியின் பலம், பலவீனமறிந்து எளிதாக வெற்றியடைய லாம்.

ஜோதிடத்திலும் ஒவ்வொரு கிரகத்துக்கும் எதிரி, பகை கிரகம் உண்டு.

சூரியன் x சனி

Advertisment

சூரியனுக்கும் சனிக்கும் ஆகவே ஆகாது. தீராப் பகையுண்டு. சனியின் தந்தைதான் சூரிய பகவான். இவர் சனியையும் அவரது தாயையும் அவமதித்தார். எனவே, சனிக்கு சூரியனுடன் மிகப்பகை உண்டாகிவிட்டது. இருவரின் காரகங்களுமே எதிரெதிராக இருக்கும். சூரியன் வெப்பமான கிரகமாக உள்ளபோது, சனி குளிர்ச்சி யான கிரகமாக உள்ளது. சூரியன் கம்பீரத்தைக் குறிக்க, சனி தாழ்மையைக் குறிப்பார். சூரியன் கண்டிப்பு மற்றும் சுறுசுறுப்பு. சனியோ தோழமை மற்றும் சோம்பேறி. சூரியன் தெளிவான மனநிலை. சனி குழப்ப குணமுடையவர். சூரியன் ஆரோக்கியத்தைக் குறிப்பவர். சனி நோய்க்காரகர்.

சூரியன் மிகப்பெரும் குறிக்கோளுக்கு சொந்தக்காரர். சனியோ "சித்தம் போக்கு சிவம் போக்கு' என்றிருப்பார். சூரியன் மலையைக் குறிக்க, சனி பொந்துகளைக் குறிப் பார். சூரியன் மிகப்பெரும் மரங்களைக் குறிக்க, சனி முட்புதர்களைக் குறிப்பார். சூரியன் ரத்தச் சிவப்பு நிறத்தைக் குறிக்க, சனி நல்ல கருமை நிறத்தைக் குறிப்பார். இவ்விதம் இந்த இரு கிரகங்களின் பகை காரகங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இதனால்தான் அரசு அதிகாரிகளைக் குறிக்கும் சூரியனை அமைதிப்படுத்த, அதன் எதிர் கிரகமான சனியின் அம்சமான, அவரின் கீழ்நிலை ஊழியர்களை அணுகி, செயல்களை வெற்றிகரமாக முடித்துக்கொள்கிறோம். உடல் உஷ்ணத்தை சூரியன் அதிகரிக்க, சனியின் எண்ணெய்யைத் தேய்த்துக் குளித்து உஷ்ணத்தை சமன் செய்கிறோம்.

Advertisment

இவ்விதம் சூரியன், சனி சேர்க்கையுள்ள ஜாதகர்கள், கும்பகோணம்- திருவலஞ்சுழி ஆலயம் சென்று வணங்கவும். நவகிரக சந்நிதியில் சூரியனுக்கு அபிஷேக எண்ணெய் வாங்கிக்கொடுப்பதும், சனிக்கு விளக்கேற்றுவதும் நல்லது.

ee

செவ்வாய் x சனி

இந்த இரு மிக பாவர்களும் ஒருவருக்கொருவர் பகை. சனியின் மகர வீட்டில் செவ்வாய் உச்சம். செவ்வாயின் மேஷத்தில் சனி நீசம்.

செவ்வாய் நல்ல பிரகாசமும், வீரமும், நேரிடையாக மோதும் தன்மையையும், மந்திரியைப்போல கம்பீரமும், உறுதியான நிலைப்பாட்டையும், சகோதரனையும் குறிப்பார். சனி இருட்டையும், பயத்தையும், பின்னா லிருந்து பேசும் தன்மையையும், கீழ்மட்ட ஊழியரின் பவ்யத்தையும் தருவார். ஒரு அதிக கோபமும், ஒரு அதிக கோழையும் எதிரிகளாகத்தான் இருக்க இயலும்.

செவ்வாய் கோபமான, முட்டாள்தனமான கிரகம். இவரை அமைதிப்படுத்த, அனேகமாக, இவரின் டிரைவர்மூலம் காரியம் சாதித்துக் கொள்வர். நிறைய காய்ச்சல் இருக்கும்போது, நெற்றியில் ஈரத்துணியால் ஒற்றி எடுப்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள். சனியினால் உடல் பலவீனப்படும்போது, செவ்வாயின் காரக மான உடல்பயிற்சியால் அதனை சீர்செய்ய இயலும். செவ்வாய் விபத்தைக் கொடுக்க, சனியின் காரகமான ஓய்வு அதனை சரியாக்கும். செவ்வாய் ரௌடித்தனம் தர, சனி சிறையில் தள்ளி சரியாக்கும். செவ்வாயின் நெருப்பை, சனியின் குளிர்ச்சி தணிக்கும். செவ்வாய் அனைவரும் அறிய கொடூரத்தன்மையான செயல்கள் புரிவார். சனி அப்படியல்ல. அமைதியாகக் கழுத்தையறுப்பார். செவ்வாய் உடல்பலம் தருவார். சனி சற்று பலமற்றிருப்பார். செவ்வாயின் வெப்பத்தையும், சனியின் குளிர்ச்சியையும் இடம், பொருள், ஏவல் அறிந்து பயன்படுத்த, இரு பாவ பகைக் கிரகங்களின் கொடுமையிலிருந்து தப்பிக்கலாம். பைரவரை வணங்கவும். ஆஞ்சனேயர் வழிபாடு நல்லது.

குரு x சுக்கிரன்

குருவை தேவர்களின் ஆச்சார்யன், தேவ குரு என்பர். சுக்கிரன் அசுரர்களின் ஆசிரியர், அசுர குரு என்பர். ஆக, ஒரு தேவர்களின் தர்மத் தலைவனும், ஒரு அசுரர்களின் பொல்லா ஆசிரியரும் பகையானதில் ஆச்சரியமில்லை.

குரு ஒழுக்கத்துக்குரியவர். சுக்கிரன் ஜாலியான கிரகம். இரண்டும் எதிரெதிர் செயல்கள். மிகக் கட்டுப்பாடான பழக்கம் உள்ளவர்களால்தான் கோவில், நீதி போன்ற இடங்களில் பணிபுரிய இயலும். அதிக கண்டிப்புடன் இருந்தால் கலையுலகில் காலந்தள்ள முடியாது. மேன்மையான தொழில்களில் ஒழுக்கக் கேடும், நீக்கு போக்கான இடங்களில் நேர்மறையாகவும் இருந்தால் கதை கந்தல்தான்.

ஒரு மனிதன் 24 மணி நேரமும் முகத்தை "உம்' மென்று வைத்துக்கொண்டு, இறுக்கமாக, கண்டிப்புடன் இருக்கமுடியாது. அவ்வப் போது கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தால் தான் மனம் இலகுவாகும். அதுபோல் கலையார்வம் உள்ளவர்களும் நிறைய ஆன்மிக வழிபாடுகள் செய்வதன் மூலம், தங்கள் வாழ்க்கையை உயர்நிலைக்குக் கொண்டுசெல்ல முடியும். குரு, சுக்கிரன் பகை கிரகங்கள் என்றாலும், இருவரின் காரகப்பயன்பாடு, வாழ்வை இனிமையாகவும், சமநிலையிலும் வைத்திருக்க உதவும். கணவன்- மனைவிக்கிடையே அதிக ஒழுக்கத்தை எதிர்பார்த்தால், அங்கு குழந்தை பிறப்பிற்கு இடமில்லாமல் போய்விடும்.

குருவும், சுக்கிரனும் சேர்ந்து வழிபட்ட தலம்- விழுப்புரம், வில்லியனூர் அடுத்துள்ள திருப்புவனை வரதராஜர் ஆலயம். அங்கு சென்று வழிபட குரு, சுக்கிர தோஷம் விலகும்.

செவ்வாய் x புதன்

செவ்வாயும் புதனும் பகை என்பதை இராமாயணமே கூறுகிறது. செவ்வாய் முரட்டு, முட்டாள் கிரகம். புதன் புத்திசாலியான, குயுக்தி கிரகம். இரண்டும் பகையாக இருப்பதில் வியப்பென்ன! அதனால்தானோ

என்னவோ, காவல்துறைக்கும், அறிவு சார்ந்த வேலை செய்பவர்களுக்கும் முட்டல் மோதல் வருகிறது. செவ்வாய் நெருப்பு, புதன் காற்று. நெருப்பு பிடித்துக் கொண்டால், காற்று அதனை அதிகமாக்கி அழிவை நிறைய கொடுத்து விடுகிறது. செவ்வாய் வீட்டை கட்டுமானம் செய்ய, புதன் அதனை விற்கும் தரகுத் தொழிலைச் செய்கிறார். செவ்வாய் காவல்துறை, புதன் நீதித்துறை. செவ்வாய் திருட்டைக் குறிக்க, புதன் உளவுத்துறையைக் குறிப்பார். வீரமும் புத்தியும் சற்று பகைதான். கல்வித்தடைகள் கண்டிப்பாக உண்டு. எதிர்வாதம் வரும். கபடம் நிறையும். நிலப்பிரச்சினை வரும். செவ்வாய் பூமியைக் குறிக்க, புதன் வழக்கைக் குறிப்பதால் நிலப்பிரச்சினை உண்டு. புதன் தாய்மாமனைக் குறிக்க, செவ்வாய் சண்டையைக் குறிப்பிட, தாய்மாமனுடன் சண்டை உண்டு. செவ்வாய் தீயைக் குறிக்க, புதன் தோலை சுட்டிக்காட்ட, தோலில் தீப்புண் அல்லது தோல் வியாதி வரும். எனவே செவ்வாய், புதன் சேர்க்கையுள்ளவர்கள், வீரமும், விஷ்ணுவும் இணைந்த நரசிம்மரை வழிபடவேண்டும்.

இன்னும் கிரகங்களின் பகைப் பட்டியல் வந்துகொண்டேயிருக்கும். எனினும் கடுமையான பகை கிரகங்கள் இவைதான். கோதுமை உண்பவர்கள் கொழுப்பை அதிகமாக உணர்வர். "இளைத்தவனுக்கு எள்ளு' என்பர். மிகவும் பலமற்றிருப்பவர்கள் எள்ளை உட்கொண்டால் உடம்பு சீக்கிரம் தேறும். அதுபோல் விவசாயத்தில் நொடித்த வர்களும் எள் பயிரிட்டால் முன்னேற்றம் உண்டு எனக் கூறுவர்.

ஆக, பகை கிரகங்களை அறிந்து அவர் களின் பொருட்களைப் பயன்படுத்த, எதிரிக்கு எதிரி நண்பனாகிவிடுவான்.

செல்: 94449 61845

bala100622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe