பதினொன்றாமிடத்தின் சிறப்பு! -க. காந்தி முருகேஷ்வரர்

/idhalgal/balajothidam/eleventh-special-ka-gandhi-murugeshwar

தினொன்றாமிடம் லாபம், இளைய தார ஸ்தானம் மட்டுமல்லா மல், உண்மையாக நடத்தல், கற்ற கல்வி யால் உண்டாகும் நிலை, விவசாயம், விலங்குகளால் ஏற்படும் லாபம், அறிவு, சாஸ்திர ஞானம், தாய்மீதான பாசம், இடது காது, கணுக்கால், மகிழ்ச்சி, செல்வாக்கு, வளர்ச்சி ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளலாம். மொத்தத்தில் வாழ்வில் உண்டா கும் நற்பலன்களைத் தருவதே பதினொன்றாமிடத் தின் நிலைதான். மூத்த சகோதரம் மற்றும் நண்பர் களின்மூலம் உண்டாகும் உறவு, பாசம், நட்பின் அளவை அறியலாம்.

நட்பு நிலை

பதினொன்றாமிடம் மூத்த சகோதரத்தைக் குறிக்கும். இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தான் இருக்கிறார்கள். அதனால் மூத்த உடன் பிறந்தவர்கள் நிலையென்பதே தேவையற்றதாகிவிட்டது. ஆனால் அந்த உறவை நண்பர் கள் நிரப்புகிறார்கள். தன்னைவிட மூத்த நண்பர்களால் உண்டாகும் நன்மை- தீமையைப் பற்றியும் பதினொன்றாமிடத் தால் தெரிந்துகொள்ளலாம். பதினொன்றா மதிபதி ஆறில் இருந்தால் நண்பர்களே எதிரியாவர். நண்பர்களால் பலவித தொல்லையை அனுபவிப்பர். எட்டா மிடத்தில் இருந்தால் நண்பர்களால் உயிருக்கு ஆபத்தையும் தரும். நண்பர் களால் எந்த நன்மையும் இல்லை. தொல்லை கள் அதிகமாயிருக்கும். பன்னிரண் டாமிடத்தில் இருந்தால் நண்பர்கள் இல்லை அல்லது நண்பர்களால் நஷ்டம் ஏற்படும். பதினொன்றாமதிபதி 6, 8, 12 ஆகிய மறைவிடங்களில் இருந்தாலும், பதினொன்றில் இருக்கும் கிரகம், சுபர் பார்வை பெற்று சுபத்தன்மை பெற்றாலும் கெடுபலன் குறைந்து நன்மையே நடக்கும்.

dd

பதினொன்றாமதிபதி தசை

சர லக்னமாகிய மேஷம், கடகம், துலாம், மகரத்திற்கு பதினொன்றாமி டம் பாதகமாகும். பதினொன்றா

தினொன்றாமிடம் லாபம், இளைய தார ஸ்தானம் மட்டுமல்லா மல், உண்மையாக நடத்தல், கற்ற கல்வி யால் உண்டாகும் நிலை, விவசாயம், விலங்குகளால் ஏற்படும் லாபம், அறிவு, சாஸ்திர ஞானம், தாய்மீதான பாசம், இடது காது, கணுக்கால், மகிழ்ச்சி, செல்வாக்கு, வளர்ச்சி ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளலாம். மொத்தத்தில் வாழ்வில் உண்டா கும் நற்பலன்களைத் தருவதே பதினொன்றாமிடத் தின் நிலைதான். மூத்த சகோதரம் மற்றும் நண்பர் களின்மூலம் உண்டாகும் உறவு, பாசம், நட்பின் அளவை அறியலாம்.

நட்பு நிலை

பதினொன்றாமிடம் மூத்த சகோதரத்தைக் குறிக்கும். இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தான் இருக்கிறார்கள். அதனால் மூத்த உடன் பிறந்தவர்கள் நிலையென்பதே தேவையற்றதாகிவிட்டது. ஆனால் அந்த உறவை நண்பர் கள் நிரப்புகிறார்கள். தன்னைவிட மூத்த நண்பர்களால் உண்டாகும் நன்மை- தீமையைப் பற்றியும் பதினொன்றாமிடத் தால் தெரிந்துகொள்ளலாம். பதினொன்றா மதிபதி ஆறில் இருந்தால் நண்பர்களே எதிரியாவர். நண்பர்களால் பலவித தொல்லையை அனுபவிப்பர். எட்டா மிடத்தில் இருந்தால் நண்பர்களால் உயிருக்கு ஆபத்தையும் தரும். நண்பர் களால் எந்த நன்மையும் இல்லை. தொல்லை கள் அதிகமாயிருக்கும். பன்னிரண் டாமிடத்தில் இருந்தால் நண்பர்கள் இல்லை அல்லது நண்பர்களால் நஷ்டம் ஏற்படும். பதினொன்றாமதிபதி 6, 8, 12 ஆகிய மறைவிடங்களில் இருந்தாலும், பதினொன்றில் இருக்கும் கிரகம், சுபர் பார்வை பெற்று சுபத்தன்மை பெற்றாலும் கெடுபலன் குறைந்து நன்மையே நடக்கும்.

dd

பதினொன்றாமதிபதி தசை

சர லக்னமாகிய மேஷம், கடகம், துலாம், மகரத்திற்கு பதினொன்றாமி டம் பாதகமாகும். பதினொன்றாமி டத்தில் இருக்கும் கிரங்களாலும் நன்மை குறையும். மேஷ லக்னத் திற்கு பாதகாதிபதி,பதினொன்றாம திபதி சனி தசையில் நன்மைகள் தடைப்பட்டு தீமைகளே அதிகரிக் கும். ஆனால் சுய ஜாதகத்தில் சனி கெட்டுவிட்டால்- அதாவது சனி நீசம், வக்ரம், திதி சூன்யத்தில் சிக்கிக்கொள்ளுதல், சனி திரிகோணமான 1, 5, 9-ல் இருந்தால் தீமைகள் குறைந்து சனி தசையில் நன்மை களே நடக்கும்.

கடக லக்னத்திற்கு சுக்கிர தசை, துலா லக்னத்திற்கு சூரிய தசை, மகர லக்னத்திற்கு செவ்வாய் தசையில் தீமைகள் குறைந்து நன்மையே நடக்கும். பாதகாதிபதி பாதிக்கப் பட்டால் ராஜயோகத்தைத் தந்துவிடும்.

மேஷ லக்னக்காரர்களுக்கு பத்து, பதினொன்றாமிடத்து சனி தசையில் நிலத்தால் நன்மை, நிலம்சார்ந்த தொழில், இரும்பு, மருந்து சம்பந்தப்பட்ட தொழில், நிலக்கரி, பெட்ரோல் பங்க்கால் லாபம் உண்டாகும். ரிஷப லக்னக் காரர்களுக்கு எட்டு, பதினொன்றுக்குடைய குருவால் முழு நன்மை செய்யமுடியாது. குரு தசையில் உபதேசம் சம்பந்தமான தொழில் மற்றும் கலவையான பலனே கிடைக்கும். மிதுன லக்னத்திற்கு ஆறு, பதினொன்றுக்குடையவர் செவ்வாய் என்பதால் நிலம் சார்ந்த தொழிலான ரியல் எஸ்டேட், வீடுகட்டி விற்பனை செய்தல், மனைகளைப் பிரித்து விற்பதில் நல்ல லாபம் பெறுவர். ஆறுக்குடையவராகவும் இருப்பதால் கவனக் குறைவாக இருந்தால் நோய், எதிரி, கடனுக்கு ஆட்பட நேரும்.

கடக லக்னக்காரர்களுக்கு நான்கு, பதினொன்றாமதிபதி சுக்கிரன் பாதகாதிபதியாக வருவார். கலைசார்ந்த தொழிலில் ஈடுபடுத்தும். சுக்கிர தசையில் முழு நன்மை நடக்காது. சுக்கிர பலத்தைப் பொருத்து சில நன்மைகள் நடக்கும்.

சிம்ம லக்னக்காரர்களுக்கு இரண்டு, பதினொன்றுக்கு அதிபதியான புதன், கல்வி, கேள்வி, அறிவுசார்ந்த தொழிலில் ஈடுபடுத்தும். புதன் பலவீனமானால் நன்மைகள் குறையும். சுமாரான பலன்களைத் தருவார். கன்னி லக்னத்திற்கு பதினொன்றாமதிபதி சந்திரன் ஆகிறார். சந்திரன் நீர் சார்ந்த துறைகளில் வெளிநாட்டுத் தொடர்புகளால் லாபத்தைத் தருவார். சந்திரன் பலம் குறைந்தால் தசையில் மனக் குழப்பம், தொல்லைகளை சந்திப்பார்.

துலா லக்னத்திற்கு பதினொன்றாமதிபதி சூரியன்தான் பாதகாதிபதி. சூரியன் பலமானால் பல துன்பங்களைக் கொடுக்கும். சிலருக்கு தந்தை அல்லது ஜாதகருக்கு மாரகத்தைத் தந்துவிடுகிறது. பலம் குறைந்து சூரிய தசை நடந்தால் தீமைகள் குறையும். விருச்சிக லக்னத் திற்கு எட்டு, பதினொன்றுக்குடைய புதன் தசையில் பலவித துன்பங்களையே தருவார். அஷ்டமாதிபதி தசை நல்ல பலன்களைத் தரவிடாது. சிலருக்கு பாதி நன்மை ஏற்படும்.

தனுசு லக்னக்காரர்களுக்கு ஆறு, பதினொன்றுக்குடைய சுக்கிரன் முதல் பாதியில் நன்மை நடந்தால் இரண்டாம் பாதி தொல்லைகளையே தரும். சுப பலம் பெற்றிருந்தால் தசை சுமாராகக் கடந்துவிடும். மகர லக்னத்திற்கு நான்கு, பதினொன்றுக் குடைய செவ்வாய் பாதகாதிபதியாக இருப்பார்.

சர லக்னமாக இருப்பதால் அதிக தொல்லைகள் நிறைந்த தசையாகவே இருக்கும். தாயார், வீடு, வாகனத்தால் துன்பமுண்டு.

கும்ப லக்னத்திற்கு குரு பதினொன்றாமதி பதி. நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடிய தசை. குரு நல்ல இடத்தில் இருந்தால் நன்மைகள் கூடுதலாகும். ஆறில் குரு உச்சம்பெற்றாலும் சுமாரான பலனே கிடைக்கும். மறைவிட ஸ்தானமான ஆறு, எட்டு, பன்னிரண்டில் நன்மை தர இயலாமல் போகும். மீன லக்னத் திற்கு பதினொன்று, பன்னிரண்டாமதிபதி சனி தசையாக வருவதால், நன்மை- தீமை கலந்தே தருவார். சனி நல்ல நிலையில் இருந்தால் நற்பலனை வாரிவழங்குவார்.

பதினொன்றாமிடம் ஆட்சி, உச்சம், சுபகிரகத் தொடர்புடன் வலுவாக இருந்தால், ஜாதகருக்கு பலவிதத்தில் நன்மையே உண்டா கும். நான்காம் அதிபருடன் தொடர்பு கொண்டால் நல்ல வீடு, வாகன யோகம் கிடைக்கும். நண்பர்கள் உதவி, கூட்டுத் தொழிலால் லாபம் ஏற்படும். விலங்குகளால் லாபத்தை அடைவர். நான்காமதிபதியுடன் தொடர்புபெற்ற பதினொன்றாமதிபதி, ஐந்தாமதிபதியுடன் தொடர்புபெற்றால் பிள்ளைகள், ஒன்பதாமதிபதி தொடர்பு தந்தை, நான்காமதிபதி தாய், பத்தாமதிபதி தொடர்பு தன் தொழில், இரண்டாமதிபதி தன் வாக்கு, ஐந்தாமதிபதி புத்தியால் லாபம், வீடு, வாகன யோகத்தைப் பெறுவர். பெரிய கோடீஸ்வரராகவும், புகழ்பெற்று அனைத்து சுகபோகத்தைப் பெற்றுத் திகழ்வர். பதினொன் றாமதிபதி ஐந்தாமதிபதியுடன் சம்பந்தம் பெற்றால் புத்தியால்- அதாவது ஜோதிடம், வாக்கு, மாந்திரீகம், குறி சொல்லுதல் போன்ற முதலீடற்ற தொழிலால் லாபம் பெறுவர். சுக்கிரன் கலைத் துறையையும், சுக்கிரன், குரு துணி வியாபாரத்தையும், புதன் புத்தகம் எழுதுவது, அச்சிடுவது அல்லது புத்தகக் கடை வைத்தலையும் செய்து லாபம் பெறச் செய்வார்.

லக்னாதிபதி, பத்தாமதிபதி நீசம்பெற்று பதினொன்றாமதிபதி இரண்டு, நான்காம் அதிபர்களுடன் இணைந்து இரண்டு, நான்கு, ஒன்பதாம் இடங்களில் இருந்தால் மீன், மாமிசம், தோல் சம்பந்தமான தொழில் செய்வர்.

இரண்டாமதிபதி நான்கில், நான்காமதிபதி பத்தில், பத்தாமதிபதி பதினொன்றில் அமையப் பெற்றவர்கள், பல தொழில்களால் லாபம் பெறுவர். காய்கறி, பழம், அரிசி, பலசரக்கு, உணவு சம்பந்தப்பட்ட தொழில்செய்து லாபத்தை அடைவர். வாக்கு ஸ்தனமான இரண்டில் புதன், சந்திரன், குரு அமர்ந்து, இரண்டாமதிபதி பதினொன்றில் இருந்தால் இசையால் லாபம் பெறுவர். அதோடு நான்கில் சுக்கிரன் பலம்பெற்றால் அந்தத் துறையில் சாதனையாளராக்குவார். பதினொன் றாமதிபதி இரண்டு, ஒன்பதாமதிபதி தொடர்பு பெற்றால், எப்போதும் எதிலும் லாபம் பெறுவர்.

ஒருவருக்கு எந்தவழியில் லாபம் வருமென்பது பதினொன்றில் இருக்கும்- பார்க்கும்- தொடர்பு கொள்ளும் கிரகத்தைப் பொருத்தே அமையும். மேலும் சுப கிரகங்களான குரு, சுக்கிரன் பார்வைகள் அதிக லாபத்தைக் கொடுக்கும்.

எந்த திசையிலிருந்து லாபம் வருமென்பது, லாபாதிபதியான பதினொன்றாமதிபதி கிரகத் தின் திசையிலிருந்து கிடைக்கும். பதினொன் றாமதிபதி சூரியனாக இருந்தால் கிழக்கு திசை யிலிருந்து லாபம் கிடைக்கும். குரு, கேது வட கிழக்கு; சுக்கிரன் தென்கிழக்கு, சனி மேற்கு; சந்திரன் வடமேற்கு; ராகு தென்மேற்கு; செவ்வாய் தெற்கு; புதன் வடக்கு திசையிலிருந்து லாபத்தைத் தரும்.

பரிகாரம்

பதினொன்றாமிடம் என்னும் லாப ஸ்தானத் தில் சுபப் பலன் தரக்கூடிய கிரகங்கள் அமர வேண்டும். பாவப் பலன் தரும் கிரகங்கள் அமர்ந் தால் தொல்லைகளே ஏற்படும். ஆறு, எட்டு, பன்னிரண்டாம் அதிபதி, பாதகாதிபதி, மாரகாதிபதி கிரகங்கள் அமரக்கூடாது.

அவ்வாறு அமர்ந்த கிரகத்தின் தெய்வங்களுக்கு வருடம் ஒருமுறை அர்ச்சனை, அபிஷேகம் செய்யவேண்டும். பதினொன்றாமதிபதி தசை நடந்தால் தசைக்குரிய கிரகக் கோவில்களுக்கு, தசை முடியும்வரை வருடந்தோறும் சென்று வருதல் சிறப்புதரும். பதினொன்றாமதிபதி பெற்ற சாரத்தின் கிரக தெய்வத்தை வழிபடுதல் தசைக்கு மேன்மையான பலன்களைத் தரும்.

bala261121
இதையும் படியுங்கள்
Subscribe