சிம்மம்
ப்ளஸ் பாயின்ட்ஸ்: ராசிநாதன் சூரியன் அதிர்ஷ்ட இடத்தில் உச்சம். இதுவொரு நல்ல அமைப்பு. அரசு வகை யோகமும் ஆதாயமும் தேடிவரும்.
4-ஆம் அதிபதி 10-ல் அமர்வு. இவர்களின் சொந்த ஊர் அபிமானிகளும், தனிப்பட்ட வாழ்க்கை வழிகளும் பதவி கிடைக்க உதவி செய்யும் ஏழாம் அதிபதி 5-ல். 7-ஆம் வீடு என்பது இவர்கள் சந்திக்கும் வாக்காளர்களைக் குறிக்கும். அந்த அதிபதி 5-ல் அமர்வது, மக்களுக்கு இவர்கள்மீது ஒரு ஈர்ப்பை உண்டாக்கும்.
சனி 6-ஆம் அதிபதியாகி, தன் வீட்டுக்கு 12-ல் மறைவது, இவர்களின் எதிரிகள் ஓடுவதைக் குறிக்கும். இதன்மூலம் எதிரிகள் இல்லா நிலை ஏற்படும்.
9-ஆம் அதிபதி செவ்வாய் 10-ல். தர்மகர்மாதிபதி யோகம். எளிதான வெற்றி கிடைக்கும்.
11-ல் ராகு. இதுதான் சிம்ம ராசிக்கு முக்கியமான அமைப்பு. வெற்றிபெற எத்தனை வழிகள் உண்டோ- அது குறுக்குவழிகள் என்றாலும் அத்தனையை யும் கைக்கொண்டு, நினைத் ததை சாதித்துவிடு வார்கள்.
10-ஆம் அதிபதி சுக்கிரன் 8-ல் உச்சம். இந்த அமைப்பு, இவர்கள் வெற்றிக்கான வேலைகளை யாருக்கும் தெரியாமல்கமுக்கமாக முடித்து வெற்றியடை வார்கள் என்பதைக் குறிக்கும்.
மைனஸ் பாயின்ட்ஸ்: இரண்டாம் அதிபதி 8-ல் நீசபங்கம். இதனால் இவர் களின் வாக்கு, பேசும் பேச்சு போன்றவை பின்னடைவைக் கொடுக்கும். 12-ஆம் அதிபதி 2-ல் இருப்பது, மிக அதிக பண விரயத்தைக் கொடுக்கும். செலவு கட்டுக்கடங்காமல் இருக்கும். அத்தனைப் பணமும் முறையற்ற வழி களில் செலவழியும்.
குரு எட்டாம் அதிபதி யாகி 5-ல் அமரும்போது, இவர்கள் பரம்பரை குறித்த வேண்டத்தகாத நிகழ்வுகளை எதிரிகள் ஞாபகப்படுத்தி பரப்பிவிடுவர். இளம்பெண்களை அதிகம் அருகில் சேர்க்கவேண்டாம்.
இந்த தேர்தலில் சிம்ம ராசிக்காரர்கள் அதிகம் பேசாமல் இருந்தாலே நல்லது. அதுவே வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த தேர்தலிலில் இவர்களின் வெற்றி 80 சதவிகிதம் ஆகும். குலதெய்வத்தை நன்கு வேண்டிக் கொள்ளவும். தேர்தலில் நிற்கும் ஊரிலுள்ள பெருமாள், தாயாருக்கு பச்சை மற்றும் வெண் பட்டுகளை காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொள்ளவும். மேலும் நிறைய இனிப்புகளையும் இனிப்பான பானங் களையும் வினியோகிக்கவும். ‘
கன்னி
ப்ளஸ் பாயின்ட்ஸ்: ராசியாதிபதி புதன் நீசபங்கமாகி மக்களை அணுகும் இடத்தில் உள்ளார். எனவே இவர்களை முதலில் மக்களுக்குப் பிடிக்காது. ஆனால் பார்க்கப் பார்க்கப் பிடித்துவிடும்.
புதன் 10-ஆம் அதிபதியாகி 7-ல் அமர்வது தொழில், தேர்தல் பற்றிய வெற்றியைக் குறிக்கிறது.
சுக்கிரன் 2, 9-ன் அதிபதியாகி 7-ல் உச்சம்.
இவர்களின் இனிமையான, அர்த்தமுள்ள பேச்சினால் அதிர்ஷ்டத்தை இழுத்துக் கொண்டு வந்து விடுவார்கள். மேலும் 9-ஆம் அதிபதி 7-ல் உச்சமடைவது, மக்களுக்கு இவர்கள்மீது சொல்லத்தெரியாத அபிமானத்தை உண்டாக்கும்.
12-ஆம் அதிபதி 8-ல் மறைவு. விபரீத ராஜயோகம் தரும்.
10-ல் உள்ள ராகு தொழில் மேன்மையைக் குறுக்குவழிகளில் தருவார்.
11-ஆம் அதிபதி ராசியில். நினைத்தை நினைத்தவண்ணம் செய்துகாட்டுவார்கள்.
மைனஸ் பாயின்ட்ஸ்: 6-ஆம் அதிபதி 4-ல். இவர்களுக்கு எதிரிகள் வெளியில் இருக்கமாட்டார்கள். இவர்களின் சொந் தங்கள், சொந்த ஊர்க்காரர்கள், தெரிந்த நண்பர்கள் என சுற்றியுள்ளவர்களே இவர்களுக்கு எதிராக நடந்துகொள்வர். கவனமாக இருக்கவும்.
செலவுக்குரிய அதிபதி சூரியன் உச்சமாகி 8-ல் அமர்வதால், ஒன்று செலவு அதிகரிக்கும் அல்லது பண விநியோகத்தின்போது அரசுத்துறையால் கண்டறியப்பட்டு அவமானம் நேர வாய்ப்புள்ளது. கவனம் தேவை. கன்னி ராசியினரின் வெற்றி வாய்ப்பு 70 சதவிகித அளவில் உள்ளது. தேர்தலிலில் நிற்கும் ஊரிலுள்ள சிவபெருமானை நன்கு வணங்கவும். சிவன் கோவிலுக்கு விளக்கு வாங்கிக்கொடுப்பதாக வேண்டிக்கொள்ளவும். கோவில்களில் விளக்கேற்ற எண்ணெய் வாங்கிக் கொடுக்கவும். வயது முதிர்ந்தவர்களுக்கு உதவிகள் செய்யவும்.
துலாம்
ப்ளஸ் பாயின்ட்ஸ்: துலா ராசி அதிபதி 6-ல் உச்சம். 6-ஆம் அதிபதி 3-ல். எதிரிகளைவிட இவர்கள் பலம் மிகுந்திருக்கும். மேலும் சுக்கிரன் 8-ஆம் அதிபதியாகி 6-ல் மறைவது, விபரீத ராஜயோகம் எனும் அமைப்பில் எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடிவரும்.
11-ஆம் அதிபதி சூரியன் 7-ல் உச்சம். எனவே, இவர்கள் அரசு சார்ந்த, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் வாக்காளர்களைக் கவரும் வகையில் தங்கள் வாக்கு சேகரிப்பை அமைத்துக்கொள்ள வேண்டும். அவை அத்தனையும் ஓட்டாக மாறி, வெற்றி விகிதத்தை அதிகரிக்கும்.
துலா ராசியின் 12-ஆம் அதிபதி 6-ல் மறைவு. இதுவும் ஒரு விபரீத ராஜயோகம்தான். இவர்களின் அதிர்ஷ்ட வீடான 9-ஆம் வீட்டை யோகாதிபதி சனி பார்க்கிறார். பாவர்கள் பார்வை நேர்மையற்ற யோகத்தைத் தரும்.
மைனஸ் பாயின்ட்ஸ்: துலா ராசியின் இரண்டாம் அதிபதி 8-ல் மறைவு. ஒருவகையில் இவர்களது பேச்சே இவர்களுக்கு அவமானத் தைத் தேடித் தரும். மேலும் பண விநியோகத்தில் இவர்களும், இவர்கள் தரப்பினரும் சிக்கிக்கொண்டு மதிப்பிழக்கக் கூடும்; கவனம் தேவை.
அதிர்ஷ்ட அதிபதி 6-ல் நீசபங்கம். இது சற்று யோகக்குறைவைக் காட்டுகிறது.
இந்தத் தேர்தலில் இவர்கள் செலவளிக்கும் பணம் வாக்காளர்களை சென்று சேராது. இதனால், பணத்தை எதிர்பார்த்துக்காத்திருக்கும் வாக்காளப் பெருமக்களின் சொல்லொணா கோபத்திற்கு உள்ளாகக்கூடும்.
துலா ராசிக்கு எதிர்பாராமல் வெற்றி கிடைத் தால்தான் உண்டு. மற்றபடி வெற்றிக்கான வாய்ப்பு 40 சதவிகிதம்தான். 10-ஆம் அதிபதி 12-ல் உள்ளதால், சில துலா ராசியினர் கௌரவத்தை இழக்க நேரிடும். எனவே இந்த தேர்தலில் அதிகம் செலவழித்து வீண்விரயம் செய்ய வேண்டாம். இவர்கள் தேர்தலில் நிற்கும் ஊரிலுள்ள, வள்ளி- தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை நன்கு வேண்டிக்கொள்ளவும். முடிந்த கோவிலுக்கு மின்விளக்கு உபயம் செய்யவும். இளம்வயது ஆண்களுக்கு நல்ல அசைவ உணவு வாங்கிக்கொடுங்கள்.
விருச்சிகம்
ப்ளஸ் பாயின்ட்ஸ்: விருச்சிக ராசி அதிபதி 7-ல். இதனால் மக்களைப் பலமுறை சந்திக்கும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கும். ஆனாலும் அவரே 6-ஆம் அதிபதியாக அமைவதால், இவர்கள் சென்றபின் மக்கள் ஏளனமாகவும் எதிராகவும் பேசக்கூடும். அதனால் அதிக வாக்காளரிடம் ஒட்டாமல், ஒரு அடி பின்னால் இருப்பது நல்லது.
9-ஆம் அதிபதி சந்திரன் 11-ல். இது ஒரு நல்ல அமைப்புதான். யோகாதிபதி லாபத்தில். லாபப் பெருக்கம் உண்டு.
மைனஸ் பாயின்ட்ஸ்: விருச்சிக ராசிக்கு 2-ஆமிடத்தில் வக்ர குரு- சனி, கேதுவுடன். இவர்கள் நல்ல எண்ணங்களையும் பேசும் போது தடுமாறிக் குழப்பிவிடுவார்கள். இவர்கள் என்ன பேச வருகிறார்கள் என புரியாமல் வாக்காள மக்கள் விழிப்பார்கள்.
8-ஆம் அதிபதி புதன் நீசபங்கம்- அதுவும் 5-ஆமிடத்தில். இவர்கள் தங்களின் பழம் பெருமைகளைப் பட்டியலிடும்போது, மக்கள் மோசமான பழைய கதைகளை ஞாபகப் படுத்திக் கொள்வர். இதனை 8-ஆமிட ராகு செய்வார்.
இவர்களின் 10-ஆம் அதிபதி உச்சமாகி 6-ல் மறைவு. இவர்கள் முன்னர் செய்த நல்ல சேவை செயல்கள்கூட ஏனோ மறைக்கப்பட்டுவிடும். மேலும் விரயாதிபதி உச்சமாகி 5-ல் இருப்ப தால், இதன் காரணமாகவும் இவர்களின் நற்செயல்களைக் கூற இயலாமல் போகும்.
2-ல் இருக்கும் சனியும் கேதுவும் மக்களுக்கு இவர்கள்மீது வெறுப்பை ஏற்படுத்தலாம். இவர்களின் ஈர்ப்புசக்தி குறைவுபடலாம்.
இந்த தேர்தலில் விருச்சிக ராசியினர் வீணாக பணத்தைச் செலவழிக்க வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் கிடைக்கிற பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். நாளை அது குடும்பத்திற்கு உதவும்.
தனுசு
ப்ளஸ் பாயின்ட்ஸ்: தனுசு ராசியின் அதிர்ஷ்ட வீட்டு அதிபதி சூரியன் 5-ஆமிடத்தில் உச்சம். எனவே, இவர்களின் யோகம் பூர்வபுண்ணியப் பலனாகவே கிடைக்கும். மேலும் இவர்கள் வெற்றிக்கு தந்தையின் பங்களிப்பும் அதிகமாக இருக்கும்.
12-ஆம் அதிபதி 6-ல். விரயாதிபதி மறைவுத்தன்மை அடைகிறார். எனவே குறைவான அலைச்சல், அளவான பணப்பங்கீடு என இவர்களின் வெற்றி விபரீத ராஜயோக அமைப்பில் கிடைக்கும். குறைந்த அலைச்சல், நிறைந்த வெற்றி.
தொழிலுக்குரிய 10-ஆம் அதிபதி புதன் 4-ல் நீசபங்கம். மேலும் அதே 4-ஆமிடத்தில், 11-ஆம் அதிபதி சுக்கிரனும் உச்சம். 4-ஆமிடம் என்பது பிறந்த வீட்டை, தாயாரை, சொந்த மண்ணைக் குறிக்கும். எனவே இவர்கள் வெற்றிக்கு சொந்த ரத்தபந்தங்கள் நன்கு உழைப்பர்.
மைனஸ் பாயின்ட்ஸ்: இவர்களின் ராசிநாதன் குரு வக்ரம் பெற்றதோடு அல்லாமல், சனி, கேதுவுடன் ஒரே ராசியில் அமர்ந்திருக்கிறார். இது சற்று பலவீனமான அமைப்பு. மேலும் இவர்களின் எதிரி கிரகமான 6-ஆம் அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று பலமாக அமர்ந்துள்ளார். இதனால் ராசியாதிபதி பலங்குன்றுவதால், இவர்களின் பெருமை, புகழ் குறையவும்; 6-ஆம் அதிபதி உச்சமாவதால் எதிரியின் கை ஓங்கவும் ஏதுவாகிறது. கவனம் தேவை.
வாக்கு அதிபதி தன் வீட்டிற்கு 12-ல். இதனால் பேசும்போது இவர்களுக்கே ஒரு சந்தேகம் வந்து பேச்சு தடைபடும். இதனை கேது செவ்வனே செய்ய, 7-ஆமிட ராகு, மக்கள் இவர்களைப் பார்த்து ஏளனம் செய்யவைப்பார். பேச்சில் நிதானம் அவசியம்.
இவர்களது தொழில் வீட்டில் 8-ஆம் அதிபதி சந்திரன். ஏனோ இந்த தேர்தலில் ஒரு அவமானத்தை சந்திக்க நேரலாம்.
இந்த நேரத்தில் பண விநியோகத்தையும் மற்றவரைவிட குறைவாகச் செய்வார்கள்.
அல்லது சேர வேண்டியவர்களுக்கு பணப் பலன் கிடைக்காமல் போகக்கூடும்.
தந்தை மற்றும் சொந்தபந்தங்கள் கடுமை யாக உழைத்து, வெற்றியைக் கொண்டு வந்து விடுவர் என ஒருவித கற்பனையில் இருப் பார்கள். ஆனால் நிஜத்தில், இவர்களது எதிரி வெற்றிக்கனியைப் பறித்துக்கொண்டு போகலாம். எனவே அதிக கற்பனையைத் தவிர்க்கவும். நிதானம் தேவை.
பண விஷயமும் காலை வாரக்கூடும். தனுசு ராசியினருக்கு இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு 60 சதவிகிதம்.
குலதெய்வத்தின் கால்களை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். குலதெய்வக்கோவிலுக்கு பித்தளை விளக்கு, மின்விளக்கு, விளக்கெரிக்க நெய், எண்ணெய் வாங்கிக் கொடுங்கள். மேலும் தேர்தலில் நிற்கும் ஊரிலுள்ள அம்பாளுக்கு அபிஷேகம் செய்யவும். அங்குள்ள பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு முடிந்த உதவி செய்யவும்.
7-ல் ராகு இருப்பதால், பிற மத, இன வாக்காளர்களை நன்கு கவரும் விதமாக உழைக்கவும்.
மகரம்
ப்ளஸ் பாயின்ட்ஸ்: இவர்கள் தொழில், கௌரவத்துக்குரிய அதிபதி 3-ல் உச்சம். அதே சுக்கிரன் இவர்களுக்கு 5-ஆம் அதிபதியும்கூட. எனவே இந்தத் தேர்தலில் இவர்கள் பரம்பரைப் பெருமையை வைத்தே வாக்கு வங்கியை வளைத்துவிடலாம் என அதீத தைரியத்தைக் கொண்டிருப்பார்கள்.
எண்ணியது எண்ணியவாறே நிறைவேற்றும் தகுதியுடைய 11-ஆம் அதிபதி 5-ஆம் வீட்டில். 5-ஆம் வீடு மந்திரி ஸ்தானத்தைக் குறிக்கும். எனவே ஏற்கெனவே மந்திரியாகப் பதவி வகித்துக்கொண்டிருந்தால், அதன் பொருட்டு ஒரு மனதைரியம் இவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். ஆக சாதாரண மாகவே இந்த தேர்தலைக் கையாள்வார்கள்.
7-ஆம் அதிபதி 9-ல். இவர்கள் சந்திக்கும் வாக்காளர்கள், இவர்களை மரியாதையாக நடத்துவார்கள்.
அதிர்ஷ்டத்துக்குரிய 9-ஆம் அதிபதி 3-ல் நீசபங்கம். இந்த அமைப்பும் இவர்களுக்கு ஒரு துணிச்சலைக் கொடுக்கும்.
மைனஸ் பாயின்ட்ஸ்: இவர்கள் ராசி நாதன் சனி தன் வீட்டிற்கு 12-ல் விரய வீட்டில். கூடவே கேது. எனவே இவர்களுக்கு மனதில் தைரியம் இருக்கும் அதே அளவுக்கு சந்தேகமும் இருக்கும். எல்லார்மீதும் ஒரு நம்பிக்கையின்மை ஏற்படும். "இவர்கள் நம்மிடம் காசை வாங்கி விட்டு ஓட்டு போடுவார்களா' என மிக யோசிப் பார்கள். அதுபோலவே நடக்கவும் கூடும்.
வாக்கு அதிபதி சனி 12-ல். இதனால் பேசிப்பேசியே இவர்களுக்காக உழைக்க வருபவர்களையும், ஓட்டுப்போடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களையும் விரட்டிவிட நேரும். பண விஷயத்திலும் அதிகம் யோசிப்பார்கள் 8-ஆம் அதிபதி சூரியன் 4-ல் உச்சம். இதனால் இவர்களின் சொந்த, தனிப்பட்ட விஷயங்கள் பற்றிய விஷயங்கள் வெளியே வரக்கூடும். இவர்களின் அசையா சொத்து பற்றிய ரகசிய விஷயங்களும் வெளியே தெரியவரலாம். இவ்விஷயங்கள், இவர்கள் ஓட்டுக்களைப் பிரிக்கக்கூடும்.
இந்தத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என எண்ணிக் கொண்டிருப்பார்கள். எதிரியை மிகக்குறைவாக மதிப்பிடுவார்கள். இவர்களின் அலட்சி யம் தோல்வியைத் தந்துவிடும். இவர்களின் வெற்றி 50 சதவிகிதம் ஆகும்.
தேர்தலில் நிற்கும் ஊரிலுள்ள ஆஞ்சனேயர் கோவிலுக்கு வெள்ளியாலான பொருள் காணிக்கை செலுத்தவும். குலதெய்வ வழிபாடு அவசியம்.
கும்பம்
ப்ளஸ் பாயின்ட்ஸ்: ராசியாதிபதி சனி 11-ல். இது ஒரு நல்ல அமைப்பு. இவர்கள் இந்தத் தேர்தலில் வெற்றிபெற நினைத்தது நிறைவேறியே தீரும்.
2-ஆம் அதிபதி குரு 11-ல். இவர்கள் ஆன்மிகம் சம்பந்தமாகப் பேசிப்பேசியே வாக்குகளை அள்ளிவிடுவார்கள்.
இவர்களின் வாக்காளர்களுக்குரிய 7-ஆம் அதிபதி 3-ல் உச்சம். எனவே இவர்களின் வாக்கு சேகரிக்கும் திட்டம் மக்களை நன்கு சென்றடை யும். இதனால் இவர்கள் முக்கியமாக, அரசு சார்ந்த வாக்காளர்களைக் கவரும்விதமாக திட்டமிடுதல் நன்று. மேலும் இத்திட்டங்களை வடிவமைப்பதற்கு இவர்களின் வாழ்க்கைத் துணையின் பங்கு அதிகமிருக்கும்.
கும்ப ராசியின் 4, 9-ஆம் அதிபதி சுக்கிரன் 2-ல் உச்சம். எனவே இவர்களின் பேச்சு சாமர்த்தியமும், இனிமையும் வாக்காளர்களை நன்கு வசீகரிக்கும். ஒருவிதத்தில் இவர்களின் தாய்- தந்தையின் அதிர்ஷ்ட ஆசிர்வாதமும் ஒரு காரணமாக இருக்கும்.
6-ஆம் அதிபதி சந்திரன் 8-ல் மறைவு.
இதனால் இவர்கள் எதிரிகள் பலவீனமடைந்து விடுவர். இதுவொரு விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கும்.
10-ஆம் அதிபதி 4-ல். இவர்களின் தேர்தல் பயண திட்டம் நன்கு அமைக்கப்படும். இது இவர்களின் தேர்தல் வெற்றிக்கு அனுகூலமா யிருக்கும்.
11-ஆம் அதிபதி 11-ல் ஆட்சி, வக்ரம். இந்த குரு 2-ஆம் அதிபதியாகவும் இருப்பதால், வாக்கு லாபமும் பண லாபமும் உண்டு.
மைனஸ் பாயின்ட்ஸ்: 5-ல் ராகு. பிற மத, இனத்தவர் மனம் புண்படும்படி எதுவும் பேசிவிடக்கூடாது. மேலும் அவர்களின் பாரம்பரியம், பழக்க- வழக்கத்துக்கு மதிப்பு கொடுக்கவும். உதாரணமாக, பள்ளி வாசலில் முஸ்லிம் மதத்தினர் "துஆ' ஓதும்போது, அவ்விடத்தை சத்தமில்லாமல் அமைதியாகக் கடந்துசெல்லுங்கள்.
8-ஆம் அதிபதி 2-ல் நீசபங்கம். எனவே பண விநியோகம் அவ்வப்போது பிரச்சினையைக் கொடுக்கும். கவனம் தேவை.
கும்ப ராசியினரின் வெற்றி உறுதியாகத் தெரிகிறது. 80 சதவிகித வெற்றி கிடைக்கும். பிற மதத்தினரிடமும், பணவிஷயத்திலும் கவனமாக இருந்தால் போதும். குலதெய்வத் திற்கு நன்கு வேண்டிக்கொள்ளுங்கள். பிற மதத்தினருக்கும் விதவைப் பெண்களுக்கும் உதவி செய்யுங்கள். தேர்தலில் நிற்கும் ஊரில் சித்தர் சமாதிகள் இருந்தால், அதனை நன்கு சீரமைத்து விளக்கேற்றி அனைவரும் வணங்கும்படி சிறப்பான வசதியைச் செய்துகொடுங்கள். வெற்றியின் அளவீடு அதிகரிக்கும்.
மீனம்
ப்ளஸ் பாயின்ட்ஸ்: ராசியாதிபதி குரு வக்ரமானாலும், 10-ஆம் இடம் எனும் தொழில் ஸ்தானத்தில். எனவே இந்த தேர்தல் கௌரவம் பாதிக்காத அளவில் இருக்கும். மேலும் லாபாதிபதி சனியும் உள்ளதால், இவர்கள் எண்ணிய இலக்கத்தில் வாக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
வாக்காளர்களின் இடமான 7-ஆம் அதிபதி, புதன் ராசியில் நீசபங்கம். இதன்படி, வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்குமுன் மிகவும் யோசித்து, பின் இவர்களுக்கே வாக்களிப்பர்.
இவர்களின் வாக்கு ஸ்தானத்தில் 6-ஆம் அதிபதி சூரியன் உச்சம். இதில் இருவிதப் பலன் சொல்லலாம். இவர்கள் எதிரிகள் இவர்களைவிட பணபலம் மிக்கவர்கள். இன்னொரு விதத்தில் இவர்கள் எதிரிகளைத் திட்டி அல்லது அதிகமாகப் பொய் சொல்லி வாக்கு சேகரிப்பார்கள்.
9-ஆம் அதிபதி 3-ல். இவர்களது தந்தை தேர்தலுக்குரிய திட்டம் வகுத்துக்கொடுத்து, நல்ல மன தைரியத்தைக் கொடுப்பார்.
7-ஆமிடத்தில் 5-ஆம் அதிபதி. பரம்பரையாக இவர்கள் கட்சிக்கே வாக்களிக்கும் மக்கள், பழக்க தோஷத்தால் இவர்களுக்கே ஓட்டுப் போடுவார்கள். மேலும் மக்களுக்கும் இவர்கள் கட்சியின்மீது ஒரு ஈர்ப்பு இருக்கும்.
மைனஸ் பாயின்ட்ஸ்: சுக்கிரன் 8-ஆம் அதிபதியாகி ராசியில் உச்சம். முன்பு எப்போதோ நடந்த பெண்கள் சார்ந்த சம்பவம் பற்றிய செய்திகள் வெளியாகி அவப்பெயரை ஏற்படுத்தலாம். மேலும் வாக்கு சேகரிப்பின்போது இளம்வயதுப் பெண்களை அருகிலேயே வைத்துக்கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது.
12-ஆம் அதிபதி சனியாகி, இவர் 10-ஆமிடத்தில் கேதுவுடன் இருப்பது சிலசமயம் மிகுந்த அலைச்சலையும், சிலசமயம் மனச்சோர்வையும் ஏற்படுத்தும்.
மீன ராசியினரின் வெற்றி 55 சதவிகிதம் இருக்கும். 2-ஆமிடத்தில் ஆறாம் அதிபதி அமர்ந்துள்ளதால், மக்களுக்கு இவர்கள்மீது காரணம் தெரியாத கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தலாம். மேலும் தேர்தல் முடியும்வரைக்குமாவது பெண்களிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்வது மிகவும் முக்கியம். தற்போதைய கிரக அமைப்பு அவ்வாறு உள்ளது. கவனம் தேவை. இதுவே பரிகாரம்!
செல்: 94449 61845