குமாரஸ்வாமியம் (முருகனால் அருளப் பட்ட ஜோதிட சாஸ்திரம்) என்ற நூல், திதி களை எவ்வாறு வகைப்படுத்துகிறது என்று பார்ப்போம். வளர்பிறையில் ஒவ்வொரு திதிகளும் தெய்வங்களின் ஆளுமையின்கீழ் வருகின்றன. அவை:
பிரதமை- துர்க்கை, துவிதியை- விசுவதேவன், திரிதியை- சந்திரன், சதுர்த்தி- விக்னேஸ்வரன், பஞ்சமி- தேவேந்திரன், சஷ்டி- சுப்ரமணியன், சப்தமி- சூரியன், அஷ்டமி- லட்சுமி, நவமி- சரஸ்வதி, தசமி- வீரபத்திரன், ஏகாதசி- பார்வதி, துவாதசி- விஷ்ணு, திரயோதசி- பிரம்மா, சதுர்த்தசி- உருத்திரன், பௌர்ணமி- வருணன். இதே திதிகள் தேய்ப்பிறையில் வரும்போது வேறு தெய்வங்களின் ஆதிக்கத்தின்கீழ் இயங்கும். அவை:
பிரதமை- குபேரன், துவிதியை- வாயு, திரிதியை- அக்னி, சதுர்த்தி- அசுரர், பஞ்சமி- தேவர்கள், சஷ்டி- அங்காரகன், சப்தமி- முனிவர்கள், அஷ்டமி- ஆதிசேடன், நவமி- எமன், தசமி- குரு, ஏகாதசி- சனி, துவாதசி- சுக்கிரன், திரயோதசி- நந்தீஸ்வரன், சதுர்த் தசி- மகேஸ்வரன், அமாவாசை- சதாசிவன்.
பஞ்சமியில் ஞாயிறு சேர்ந்து ஹஸ்த நட்சத்திரம் வருவதும், சஷ்டியில் திங்கள், திருவோணம் சேர்வதும், சப்தமியில் செவ்வாயும் அஸ்வினியும் சேர்வதும், அஷ்டமியில் புதனும் அனுஷமும் சேர்வதும், நவமியில் வியாழன் பூசமும், தசமியில் வெள்ளியும் ரேவதியும், ஏகாதசியில் சனியும் ரோகிணியும் சேர்வதும் மகாயோகம் கொடுக்கும் நாட்களாக அமையும்.
இதேபோல் திதிகளுக்கு யோனி, சுக்கிர நிலை மற்றும் விஷநிலைகள் உண்டு. ஏகாதசி திதிக்கு வடகிழக்கில் யோனிநிலை அமையும்.
அதேபோல் வளர்பிறை ஏகாதசிக்கு ஏழாம் சாமத்தில் வடக்கில் விஷ நிலை அமையும். மேலும் திதிகளுக்கும் கண்டாந்தம், பார்வை போன்ற குணங்கள் உண்டு.
ஏகாதசி திதிக்கு கண்டாந்த குணமும், தேய்பிறை ஏகாதசி திதி பார்வையில்லாமல் இருப்பதும் குணங்களாகும். இவ்வாறு திதி யின் தேவதை, யோக சேர்க்கை, விஷநிலை, யோனி, கண்டாந்தம் மற்றும் பார்வை நிலை களைக்கொண்டே ஒருவருடைய ஜாதகம் கணித்துப் பலன்சொல்ல வேண்டும். பரிகாரங்கள் வெற்றிபெறவும் திதியின் மேற்கூறிய கூறுகளை ஆராய்ந்து, சந்திர பலம், தாராபலம், வாரபலம், பக்ஷபலம் மற்றும் அயன பலத்தைக்கொண்டு செய்யும் பரிகாரங்களே உடனடியாக வேலைசெய்யும்.
இனி நாம் மே மாதம் வரும் ஏகாதசியின் மகிமைகளையும் அவை எவ்வாறு பரிகார விரதமாக வருமென்றும் பாப்போம்.
வருதிணீ ஏகாதசி
வருதிணீ ஏகாதசி மே மாதம் 7-ஆம் தேதி, சித்திரை தேய்பிறையில் வரும். இனி இந்தநாளின் மகத்துவத்தைக் காண்போம்.
மாந்தாதா என்ற ஒரு அரசன் நர்மதை நதிக்கரையில் ஒரு நகரத்தை ஆட்சி புரிந்து வந்தான். அவன் நெறி தவறாதவனாகவும், துறவு மனப்பான்மையுடனும் ஆட்சி புரிந்து வந்தான். அரசன் ஒருமுறை தவம் செய்து கொண்டிருக்கும்போது காட்டிலிருந்த ஒரு கரடி அரசனின் காலைக் கடித்து உண்ணத் துவங்கியது. அரசனும் தவம் கெடக்கூடாது என்பதனால் கரடியின்மீது கோபம்கொண்டு கொல்லவில்லை. வ-லி மிகவும் அதிகமாகவே அரசன் மஹாவிஷ்ணுவை நினைக்க, அவர் அரசன்முன் தோன்றினார். அவர் கரடியின் செயல் அரசனின் பூர்வஜென்ம பாவத்தின் பலன் என்றும், அவனை மதுராபுரி சென்று வருதிணீ விரதமிருக்க கால் குணமடையும் என்றும் சொன்னார். அவ்வாறே விரதமிருந்த அரசன் குணமடைந்தான்.
ஜாதகத்தில் நாச திரேக்காணமானது சதுஷ்பாதமாக இருந்து, அந்த இடம் 8-ஆம் பாவம், 10-ஆம் பாவம் தொடர்பு கொண்டு அமைந்து, சிம்மத்தின் தொடர்பு கொள்ளும்போது வன விலங்குகளால் பாதகம் நேரும்.
இதேபோல் ஆரூடத்தில் 10-ஆம் பாவத்தொடர்போடு, நாச திரேக்காணம் சதுஷ்பாதமானாலோ, 8-ஆம் பாவம் சிம்மத் தில் விழுந்து பாதசாரம் நாசமாக அமைந் தாலோ விலங்கு அல்லது வாகனத்தால் உடலி-ல் காயம் ஏற்படும். இவர்கள் வருதிணீ ஏகாதசி விரதம் இருக்க தோஷம் விலகும்.
மோஹினி ஏகாதசி
மோஹினி ஏகாதசி மே மாதம் 22-ஆம் தேதி, வைகாசி வளர்பிறை நாளில் வரும். இந்த ஏகாதசியின் மாண்பு மற்றும் ஜாத கரீதியான தீர்வுகளைக் காண்போம்.
சரஸ்வதி நதிக்கரையில் பத்திராவதி என்ற நகரில் தனபாலன் என்ற வணிகன் வாழ்ந்துவந்தான். அவன் மிகுந்த செல்வந்த னாக இருந்தான். அவனுடைய அநேக மகன் களில் திரிஷ்டபுத்தி என்றவவன் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்து பரத்தையர் இல்லம், குடி, போதைபழக்கம் போன்ற செயல்களில் ஈடுபட்டான். இதனால் வீட்டைவிட்டு வெளியேற்றபட்டபோதும் திருந்தாமல் தன் பாகத்தை எல்லாம் தீய செயல்களில் செலவு செய்தான். அவனுடைய செல்வம் தீர்ந்தபின், அவனை பரத்தையரும் வீதியில் விரட்டினர். அரசாங்க தண்டனையையும் அடிக்கடி அடைந்தான். நாடு கடத்தப்பட்டு காட்டிற்கு சென்றான். ஒரு நாள் காட்டில் விதிவசமாக கவுண்டின்ய முனிவரின் தரிசனம் கிடைக்க, தன் தவறை உணர்ந்து மன்னிப்புகோரி மறுவாழ்வு வேண்டி இறைஞ்சினான். முனிவரும் அவன் மேல் இரக்கம்கொண்டு, வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் மோஹினி ஏகாதசி விரதமிருக்குமாறு கூறினார். அதுபோலவே இருந்த திரிஷ்ட்டபுத்தி தன் ஏகாதசி விரதப் பலனால் துன்பம் நீங்கப்பெற்றான்.
ஜாதகத்தில் 5-ஆம் பாவத்தில் பாவ கிரகங்கள் கூட்டணி இருந்தாலும், 5-ஆம் பாவாதிபதி நீசம், மரண காரக அவஸ்தை போன்ற இடங்களில் அமர்ந்தாலும், 6 மற்றும் 8-ஆம் பாவத்தொடர்பு கொண்டாலும் ஜாதகர் தீய பழக்கத்திற்கு அடிமையாக நேரிடும். மேலும் 12-ஆம் பாவத்தொடர்போ, ஆரூடத்தில் 12-ஆம் பாவ, 8-ஆம் பாவத்தொடர்போ 5-ஆம் பாவத்தில் நிகழ, ஜாதகர் தீய செயலால் தம் சொத்து மற்றும் சொந்தம் இழந்து அவமானத்தை சந்திக்கநேரும்.
இதுபோன்ற அமைப்பிருந்தால் மோஹினி ஏகாதசி விரதமிருக்க தோஷம் விலகி வாழ்வு வளம் பெறும்.
செல்: 77080 20714