Advertisment

முயற்சியில் தளர்ச்சியா?

/idhalgal/balajothidam/effort

லர் தாங்கள் செய்யும் தொழிலில் முழுமையான அக்கறை காட்ட இயலாமல், வேறுபல விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி, தங்களின் தொழிலை வீழ்ச்சி யடையச் செய்கிறார்கள்.

Advertisment

ஒருவர் மேற்கண்டவாறு இருப்பதற்கு ஜாதகத்தில் இருக்கும் கிரகங்கள்தான் காரணம். முக்கியமாக 7-க்கு அதிபதி பாவகிரகத்துடன் இருந்து அல்லது பாவகிரகத்தால் பார்க்கப்பட்டு, லக்னாதிபதி, சுக்கிரனுடன் அல்லது லக்னாதிபதியும் சுக்கிரனும் 6, 8, 12-ல் இருந்தால், அந்த மனிதர் தன் வேலையில் முழு கவனத்துடன் இருக்கமாட்டார். தேவையற்ற விஷயங்களைப் பேசிக்கொண்டு வேலையில் அக்கறையில்லாமல், தவறுகளைச் செய்துகொண்டிருப்பார்.

Advertisment

ஜாதகத்தில் லக்னத்தில் லக்னாதிபதி, 12-ல் சூரியன், செவ்வாய், 4-ல் குரு, சனி இருந்தால், அவர் அதிகமாகப் பேசுவார். தேவையற்ற விஷயங்களில் மனதைச் செலுத்தி தன்

லர் தாங்கள் செய்யும் தொழிலில் முழுமையான அக்கறை காட்ட இயலாமல், வேறுபல விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி, தங்களின் தொழிலை வீழ்ச்சி யடையச் செய்கிறார்கள்.

Advertisment

ஒருவர் மேற்கண்டவாறு இருப்பதற்கு ஜாதகத்தில் இருக்கும் கிரகங்கள்தான் காரணம். முக்கியமாக 7-க்கு அதிபதி பாவகிரகத்துடன் இருந்து அல்லது பாவகிரகத்தால் பார்க்கப்பட்டு, லக்னாதிபதி, சுக்கிரனுடன் அல்லது லக்னாதிபதியும் சுக்கிரனும் 6, 8, 12-ல் இருந்தால், அந்த மனிதர் தன் வேலையில் முழு கவனத்துடன் இருக்கமாட்டார். தேவையற்ற விஷயங்களைப் பேசிக்கொண்டு வேலையில் அக்கறையில்லாமல், தவறுகளைச் செய்துகொண்டிருப்பார்.

Advertisment

ஜாதகத்தில் லக்னத்தில் லக்னாதிபதி, 12-ல் சூரியன், செவ்வாய், 4-ல் குரு, சனி இருந்தால், அவர் அதிகமாகப் பேசுவார். தேவையற்ற விஷயங்களில் மனதைச் செலுத்தி தன் வேலையில் கவனமில்லாமல் இருப்பார்.

லக்னத்தில் சூரியன், செவ்வாய், 2-ல் ராகு, 12-ல் புதன், சுக்கிரன் இருந்தால், அவர் எந்த காரியத்தையும் ஒழுங்காகச் செய்யமாட்டார். பெண் மோகத்துடன் பேசிக்கொண்டிருப்பார்.

oldage

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் நீசமாக இருந்து, லக்னத்தில் செவ்வாய், சனியுடன் இருந்தால், அவர் எந்த வேலையையும் உரிய நேரத்தில் முடிக்க மாட்டார். அடிக்கடி கோபப்படுவார்.

லக்னத்தில் செவ்வாய், 7-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், அந்த மனிதர் எந்த வேலையைச் செய்தாலும், அதில் குறை இருப்பதாகக் கருதுவார். அதை மற்றவரிடம் கொடுத்துவிடலாம் என்று நினைப்பார். ஆனால், மற்றவர்கள் செய்வதையும் குறைகூறுவார். தன் வேலையை ஒழுங்காக முடிக்கவே மாட்டார்.

விரய ஸ்தானாதிபதி 9-ல் பாவ கிரகத்துடன் இருந்து சந்திரன் நீசமாக இருந்தால் அவர் நிறைய பேசுவார். தான் செய்யும் செயலிலில் முழுமையான கவனம் இல்லாமல் இருப்பார்.

12-ல் சந்திரன், 4-ல் கேது, 7-ல் செவ்வாய் இருந்தால், அவர் தேவையற்ற விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பார். அந்த ஜாதகத் தில் 2-ஆவது வீட்டில் குரு அல்லது சூரியன் இருந்தால், அவர் எதையும் ஒழுங்காக முடிக்கமாட்டார். பிறகு செய்து கொள்ளலாம் என்று சோம்பேறித்தனத்துடன் இருப்பார். அதிகமாக சாப்பிட்டு, அடிக்கடி தூங்கிக் கொண்டிருப்பார். அதனால் அவருக்கு வெற்றிகிடைக்காது.

12-ல் ராகு, 6-ல் செவ்வாய், புதன், சுக்கிரன், கேது இருந்து, 7-ஆம் வீட்டில் சனி இருந்தால், அவர் வேலைக்குச் செல்லும்போது சுறுசுறுப்புடன் செல்வார். ஆனால், ஏதாவது பெண்ணுடன் பேச நேர்ந்தால், அவர் அதில் மூழ்கி வேலையை மறந்துவிடுவார். எப்போதும் அந்தப் பெண்ணைப் பற்றிய சிந்தனையிலேயே இருப்பார். அதனால் பண இழப்பு உண்டாகும். பெண் மோகத்தால் தன் சொத்துகளை இழப்பார். அவமானப்படும் சூழல் உண்டாகும்.

லக்னத்தில் புதன், 9-ல் சனி, 11-ல் செவ்வாய், சுக்கிரன் இருந்தால், அவர் தன் காரியத்தில் முழு அக்கறையுடன் இருக்கமாட்டார். தன் சொத்தை அழித்துவிடுவார். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி, தன் வேலை யைச் சரியாக முடிக்கமாட்டார். அதனால் நஷ்டத்தைச் சந்திப்பார். தான் எந்த வேலையைச் செய்தாலும், அதில் நஷ்டம் உண்டாகும் என்று மனதில் நினைத்துக் கொண்டு பின்வாங்கிவிடுவார்.

வீட்டின் தென்மேற்கு திசை காலியாக இருந்தால் அல்லது ஒரு வீட்டின் பிரதான வாசல் தென்மேற்காக இருந்தால் அங்கிருக் கும் மனிதர் தன் செயலில் கவனமில்லாமல் இருப்பார். வீண்பேச்சு பேசி, சொத்து களை இழந்துவிடுவார்.

வீட்டின் வடக்கு திசையில் குப்பைகள் இருந் தால் அல்லது வடக்கு திசையில் பொருட்கள் வைக்கப்படும் அறை இருந்தால், அங்கிருக்கும் மனிதர் எந்த காரியத்திலும் கவனமில்லாமல் இருப்பார். தேவையற்ற காரியங்களில் ஈடுபட்டு, தன் பெயரைக் கெடுத்துக்கொள்வார். சிலருக்கு தான் பார்க்கும் வேலையை விட்டுவிட வேண்டிய நிலைகூட உண்டாகும்.

பரிகாரங்கள்

தினமும் படுக்கும்போது சிறிது வெல்லம் சாப்பிட வேண்டும்.

வறுத்த உணவுப் பொருட்களைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.

தினமும் அரச மரத்திற்கு தீபமேற்றி வணங்குதல் நல்லது.

தினமும் ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றிவரவேண்டும்.

வீட்டில் பச்சை நிறம் இருந்தால், அதை மாற்றுவது நல்லது.

படுக்கையறையின் வடக்கு திசையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தால் அதை இடமாற்றம் செய்வது நல்லது.

வீட்டில் தென்மேற்கு திசையில் வாசல் இருந்தால், அதை மேற்கு மத்திய பகுதி அல்லது தெற்கு மத்திய பகுதிக்கு மாற்றி விடவேண்டும்.

செல்: 98401 11534

bala071218
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe