Advertisment

வக்ர செவ்வாய் ஏற்படுத்தப்போகும் விளைவுகள்! 12 ராசியினருக்கும் பரிகாரங்கள்!

/idhalgal/balajothidam/effects-wakra-mars

ஜோதிடத்தில் சூரியனை அரச கிரகம் என்றும், சந்திரனை அரசி கிரகம் என்றும், செவ்வாயை தளபதி கிரகம் என்றும் கூறுவர். செவ்வாய் ஒரு போர்க்குணம் கொண்ட, வீரம் மிக்க, சமயங்களில் குரூரத்தன்மைகொண்ட கிரகம்.

Advertisment

ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில் குறிப்பிட்ட நாட்கள், மாதங்கள், வருடங்கள் தங்கி பின் அடுத்த ராசிக்குச் செல்வர். செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசி மாறுவார்.

muruganதற்போது செவ்வாய் மகரத்திற்கு மாறியுள்ளார். அவரின் கோட்சார காலம் என்பது 45 நாட்கள்தான். எனினும் அவர் மகரத்தில் வக்ரகதி அடைவதால், சுமார் ஆறு மாத காலம் மகரத்திலேயே தங்கியிருப்பார். 2-5-2018 முதல் 6-11-2018 வரை. (விவரம் தனியே).

வக்ர காலம்: செவ்வாய் சூரியனுக்கு, 120 டிகிரிமுதல் 240 டிகிரிவரை செல்லும்போது வக்ரகதி அடைவார். செவ்வாய் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சுமார் இரண்டு மாத காலம் வக்ரகதி அடைவார்.

Advertisment

தற்போது செவ்வாய் மகரத்தில் உச்ச நிலையில் சஞ்சாரம் செய்கிறார். இதில் வக்ரமடையும் சுமார் இரண்டு மாத காலம், தனது உச்சநிலைக்கு எதிர்விதமாக நீசப்பலனைத் தந்துவிடுவார். எனவே இந்த ஆறு மாத காலத்தில் மகரத்தில் உள்ள செவ்வாய் மாறுபட்ட இருவிதப் பலன்களையும் தரப்போகிறார்.

இதில் இன்னொரு விஷயமும் உள்ளது. செவ்வாயுடன் கேதுவும், 7-ஆமிடத்தில் ராகுவும் உள்ளனர். எனவே இந்த கோட்சாரத்தில் உச்ச செவ்வாய் கேது- ராகு எனும் பாம்பு சம்பந்தம் பெறுகிறார். எனவே உச்ச செவ்வாய் தனது பலன்களை மாறுபாடாகவே தருவார்.

செவ்வாய் சீருடைப் பணிகளைக் குறிப்பார். அதுவும். காலபுருஷனின் 10 -ஆமிடத்தில் உள்ளார்.

இதனால் ராணுவம் பலம் மிக்கதாக ஆகும். அதே நேரத்தில் வெளிநாட்டுத் தீவிரவாதமும் அதிகரிக்கும். எனினும் செவ்வாய் உச்சம் பெற்றதால், புத்திசாலித்தனத்தாலும், தந்திரத்தாலும் எதிரிகளை ராணுவம் அடக்கிவிடும். இது கேதுவுடன் இருப்பதால் ஏற்படும்.

இதேபோல், காவல்துறையினரும் பெரும் ரௌடிகள் மற்றும் தீவிரவாதப் பிரிவினை சக்திகளைக் கண்டுபிடித்து களையெடுப்பார்கள்.

நெருப்புக் கோளான செவ்வாய் உச்சம் பெற்றுள்ளார். அதன் துறையான தீயணைப்புத்துறையும் தனது முழுபலத்துடன் செயலாற்றும். பெரும்போக்கான ராகு உச்ச செவ்வாயைப் பார்க்கும்போது, தீயணைப்புத்துறை அதனை முறியடிக்கும். ஏனெனில் ராகு இருப்பது நீர் ராசியில். எனவே நெருப்பு கட்டுப்படுத்தப்படும். அல்லது வெளிநாட்டு உபகரணங்கள்மூலம் தீயணைப்புத்துறையின் செயல்பாடுகள் மேன்மையடையும்.

செவ்வாய் பூமியைக் குறிப்பார். அதிலும் அவர் உச்சம். உடன் கேது. கேதுவுக்குப் பிரிக்கும் தன்மை உண்டு. எனவே நிலத்தைப் பிரித்து விற்கும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் தொழில் மேன்மை கிடைக்கப்பெறுவர். இதில் ராகுவின் பார்வை. பாகிஸ்தானில் இருக்கும் மனையையும் நம்ம ஊர் மனைதான் என்று விற்கக்கூடும். எனவே இந்த காலகட்டத்தில் மனை வாங்குவோர் கவனமாக இருத்தல் அவசியம்.

செவ்வாய் விவசாயத்தைக் குறிப்பார். 10-ஆமிடத்தில் உச்சம் பெறுவதால், விவசாய வேலைகள் நிறைய நடக்கும். உடனிருக்கும் கேது, இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துவார். கேது பழமைவாதி. ஆனால் பார்க்கு

ஜோதிடத்தில் சூரியனை அரச கிரகம் என்றும், சந்திரனை அரசி கிரகம் என்றும், செவ்வாயை தளபதி கிரகம் என்றும் கூறுவர். செவ்வாய் ஒரு போர்க்குணம் கொண்ட, வீரம் மிக்க, சமயங்களில் குரூரத்தன்மைகொண்ட கிரகம்.

Advertisment

ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில் குறிப்பிட்ட நாட்கள், மாதங்கள், வருடங்கள் தங்கி பின் அடுத்த ராசிக்குச் செல்வர். செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசி மாறுவார்.

muruganதற்போது செவ்வாய் மகரத்திற்கு மாறியுள்ளார். அவரின் கோட்சார காலம் என்பது 45 நாட்கள்தான். எனினும் அவர் மகரத்தில் வக்ரகதி அடைவதால், சுமார் ஆறு மாத காலம் மகரத்திலேயே தங்கியிருப்பார். 2-5-2018 முதல் 6-11-2018 வரை. (விவரம் தனியே).

வக்ர காலம்: செவ்வாய் சூரியனுக்கு, 120 டிகிரிமுதல் 240 டிகிரிவரை செல்லும்போது வக்ரகதி அடைவார். செவ்வாய் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சுமார் இரண்டு மாத காலம் வக்ரகதி அடைவார்.

Advertisment

தற்போது செவ்வாய் மகரத்தில் உச்ச நிலையில் சஞ்சாரம் செய்கிறார். இதில் வக்ரமடையும் சுமார் இரண்டு மாத காலம், தனது உச்சநிலைக்கு எதிர்விதமாக நீசப்பலனைத் தந்துவிடுவார். எனவே இந்த ஆறு மாத காலத்தில் மகரத்தில் உள்ள செவ்வாய் மாறுபட்ட இருவிதப் பலன்களையும் தரப்போகிறார்.

இதில் இன்னொரு விஷயமும் உள்ளது. செவ்வாயுடன் கேதுவும், 7-ஆமிடத்தில் ராகுவும் உள்ளனர். எனவே இந்த கோட்சாரத்தில் உச்ச செவ்வாய் கேது- ராகு எனும் பாம்பு சம்பந்தம் பெறுகிறார். எனவே உச்ச செவ்வாய் தனது பலன்களை மாறுபாடாகவே தருவார்.

செவ்வாய் சீருடைப் பணிகளைக் குறிப்பார். அதுவும். காலபுருஷனின் 10 -ஆமிடத்தில் உள்ளார்.

இதனால் ராணுவம் பலம் மிக்கதாக ஆகும். அதே நேரத்தில் வெளிநாட்டுத் தீவிரவாதமும் அதிகரிக்கும். எனினும் செவ்வாய் உச்சம் பெற்றதால், புத்திசாலித்தனத்தாலும், தந்திரத்தாலும் எதிரிகளை ராணுவம் அடக்கிவிடும். இது கேதுவுடன் இருப்பதால் ஏற்படும்.

இதேபோல், காவல்துறையினரும் பெரும் ரௌடிகள் மற்றும் தீவிரவாதப் பிரிவினை சக்திகளைக் கண்டுபிடித்து களையெடுப்பார்கள்.

நெருப்புக் கோளான செவ்வாய் உச்சம் பெற்றுள்ளார். அதன் துறையான தீயணைப்புத்துறையும் தனது முழுபலத்துடன் செயலாற்றும். பெரும்போக்கான ராகு உச்ச செவ்வாயைப் பார்க்கும்போது, தீயணைப்புத்துறை அதனை முறியடிக்கும். ஏனெனில் ராகு இருப்பது நீர் ராசியில். எனவே நெருப்பு கட்டுப்படுத்தப்படும். அல்லது வெளிநாட்டு உபகரணங்கள்மூலம் தீயணைப்புத்துறையின் செயல்பாடுகள் மேன்மையடையும்.

செவ்வாய் பூமியைக் குறிப்பார். அதிலும் அவர் உச்சம். உடன் கேது. கேதுவுக்குப் பிரிக்கும் தன்மை உண்டு. எனவே நிலத்தைப் பிரித்து விற்கும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் தொழில் மேன்மை கிடைக்கப்பெறுவர். இதில் ராகுவின் பார்வை. பாகிஸ்தானில் இருக்கும் மனையையும் நம்ம ஊர் மனைதான் என்று விற்கக்கூடும். எனவே இந்த காலகட்டத்தில் மனை வாங்குவோர் கவனமாக இருத்தல் அவசியம்.

செவ்வாய் விவசாயத்தைக் குறிப்பார். 10-ஆமிடத்தில் உச்சம் பெறுவதால், விவசாய வேலைகள் நிறைய நடக்கும். உடனிருக்கும் கேது, இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துவார். கேது பழமைவாதி. ஆனால் பார்க்கும் ராகு, சிலரை செயற்கை கெமிக்கல் உரத்தைப் போட்டு வளர்க்க வைத்துவிட்டு, பின் மாற்றி பேசச் செய்வார். செவ்வாய் அறுவை சிகிச்சைகளைக் குறிப்பார். உச்சம்பெற்று 10-ல் இருக்கும் செவ்வாய், அறுவை சிகிச்சைத்துறையில் நிறைய வேலை நடக்கச் செய்வார்.

செவ்வாயைப் பார்க்கும் ராகு அறுவை சிகிச்சைகளில் புதுமையைப் புகுத்துவார்.

செவ்வாய் ரத்தத்தைக் குறிப்பார். ரத்தப் பரிசோதனை நிலையங்களில் விரைவாக செயல்பட புதுமையான முறைகள் தோன்றும். வேலை இருந்துகொண்டே இருக்கும்.

செவ்வாய் பல்லைக் குறிப்பார். கேது பல்லை உடைப்பார். எப்படியோ, பல் டாக்டர்கள் காட்டில் மழைதான்.

செவ்வாய் மின்சாரத்தைக் குறிப்பார். மின்சாரத்துறையில் நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கப் போகிறது. உடனிருக்கும் கேதுவும், பார்க்கும் ராகுவும் வெளியே தெரியாமல் லஞ்சப் பணத்தை வாங்கிக்கொண்டு வேலையை வாரி வழங்கும்.

அதேபோல் காவல், தீயணைப்புத்துறையிலும் நிறைய ஆட்களுக்கு வேலை கிடைக்கும். இதில் நிறைய ஜாதகர்கள் தங்கள் தந்தை பார்க்கும் துறையில் வேலை கிடைக்கப்பெறுவர். அனேகமாக அவர்களின் திறமை அல்லது லஞ்சம் காரணமாகக் கிடைக்கும்.

உச்ச செவ்வாய், சனி வீட்டில் உள்ளார்.

எனவே கெமிக்கல்ஸ், இயந்திரம், வேளாண்மைக் கல்வி, தொழிற்கல்வி, வாகனக் கல்வி போன்றவற்றில் பட்டம் பெற்றவர்கள் இந்த காலகட்டத்தில் வேலை கிடைக்கப் பெறுவர். அனேகர் வெளிநாட்டு வேலை கிடைக்கப் பெறுவர்.

செவ்வாயின் காரகங்களான அடுப்பு, கத்தரிக்கோல், கத்தி, ஊசி, ஆயுதங்கள், கருவிகள், செம்புப் பாத்திரம், மின்சாதனப் பொருட்கள், பூண்டு, கடுகு, கொத்தமல்லி, புகையிலை, தொன்மையான பொருட்கள், மட்பாண்டப் பொருட்கள், அசைவ உணவுகள், காடுகள் சம்பந்தமானவை, நிலம் சம்பந்தமானவை என இவை தொடர்பான தொழிலில் உள்ளோர் நல்ல ஏற்றம் காண்பர். மேற்கண்ட பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும். அல்லது வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து இங்கு விற்பனை செய்வர். இதனை ராகு கவனித்துக்கொள்வார்.

செவ்வாய் தலைமைப் பதவியைக் குறிப்பார். உச்சமடைந்த செவ்வாய் ஒரு தலைவரைக் கொண்டு வந்து ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்வார். எதிரில் இருக்கும் ராகு, இதற்கான அத்தனை குறுக்குவழிகளையும் கண்டுபிடித்துச் சொல்லிக் கொடுப்பார். உடனிருக்கும் கேது பிரிக்க வேண்டியவர்களைப் பிரித்து, வேண்டாதவர்களைச் சேர்த்து, ஏதோ ஒருவழியில் தலைமைப் பதவிக்கு ஆளைத் தேர்ந்தெடுத்துவிடுவார். இது திடீரென்று நடக்கும். ஏனெனில் செவ்வாய் காலபுருஷனின் 8-ஆம் அதிபதி.

செவ்வாய் இளம்வயது ஆண்களைக் குறிப்பார். எனவே இளைஞர்கள் வீறுகொண்டு எழுவர். எதிரே இருக்கும் ராகு புதுப்புது காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லி, இளைஞர்களை குதியாட்டம் போடச் செய்வார்.

செவ்வாய் தீப்பெட்டி, பட்டாசு தொழிலுக்கு உரியவர். உச்ச செவ்வாய் இந்தத் தொழில்களை மேம்படுத்துவார். இதில் வெளிநாட்டு சம்பந்தம் அதிகமிருக்கும்.

செவ்வாய் அணைக்கட்டுகளைக் குறிப்பார். அணைக்கட்டுகள் குறித்த தொழில், வேலைகள் நிறைய நடக்கும்.

எப்போதுமே செவ்வாய்- ராகு அல்லது கேது போதைப் பொருட்களைக் குறிப்பர். எனவே மது விற்பனை அதிகரிக்கும். அல்லது போதைப் பொருட்கள் நடமாட்டம் மிகும்.

வெடி மருந்துகள், வெடிக்கும் பொருட்கள் ஆங்காங்கே தென்படும்.

செவ்வாய், பெண்களின் களஸ்திரகாரகன். எனவே இதுவரையில் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டிருந்த பெண்களுக்குத் திருமணம் கூடிவரும். எதிரே இருக்கும் ராகு சற்றே கலப்பு மணத்தைக் கொண்டுவந்து விடுவார். செவ்வாயுடன் கேது இருப்பதால், வயது சென்ற பெண்ணுக்கும் திருமணம் நடக்கும்.

அங்கஹீனம் உள்ளவர்கள், நெறிபிறழ்ந்தவர்களுக்கும் திருமணம் நடக்க வாய்ப்புண்டு.

இளம்வயது தொழிலதிபர்கள் நிறைய தோன்றுவர். செவ்வாய் உச்சமடைந்து 10-ல் இருப்பதால், இதுவரையில் சொந்தத்தொழில் ஆரம்பிக்க முயற்சி எடுத்த இளம்வயது ஆண்கள் இப்போது முயற்சித்தால் பலிதமாகும். செம்புப்பாத்திரம், துவரை, குங்குமம், பவளம், சேவல், மோர் என ஏதாவது தானம் செய்துவிட்டு தொழிலை ஆரம்பிக்கவும். செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் போன்ற நாட்களில் முயற்சி செய்யவும்.

பிற மதத்தினரின் உதவி கிடைக்கும்.

செவ்வாய் உச்சத்தில் இருக்கும்போது, எல்லா விஷயங்களுக்கும் நல்லபடியாக, விரைவாக நடக்க கூறவேண்டிய மந்திரங்கள்:

ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாசேநாய தீமஹி

தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்.

அங்காரக காயத்ரி

ஓம் வீரத்வஜாய வித்மஹே

விக்ந ஹஸ்தாய தீமஹி

தந்நோ பௌம ப்ரசோதயாத்.

கந்த சஷ்டிக் கவசம் படிப்பது மிகுந்த நற்பலனைப் பெற்றுத் தரும்.

உச்ச செவ்வாயின் வக்ர காலப் பலன்

வாக்கியப்படி: செவ்வாய் 8-7-2018-ல் வக்ர ஆரம்பம். 6-9-2018-ல் வக்ர நிவர்த்தி.

திருக்கணிதப்படி: செவ்வாய் 26-6-2018 முதல் வக்ர ஆரம்பம். 27-8-2018-ல் வக்ர நிவர்த்தி.

ஜோதிட மூல நூல்களில், ஒரு உச்ச கிரகம் வக்ரமடையும் காலம், அவர் நீசமடைந்துவிடுவார் என கூறப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட காலங்களில் வக்ரமடையும் செவ்வாய் நீசப்பலன்களைத் தருவார். உடன் கேது, எதிரில் ராகு.

வக்ர செவ்வாய்க் காலத்தில் தீவிரவாதம், ரௌடிகளின் அட்டகாசம், ஆங்காங்கே வெடிப்பொருட்களால் சேதம், திருடர்களால்- அதுவும் வெளி மாநில, வெளிநாட்டுத் திருடர்களால் தொல்லை என காவல்துறை பலவித நெருக்கடிகளுக்கு ஆளாகும். செவ்வாயின் பலம் மங்கியிருக்கும் காலகட்டம் ஆதலால், காவல்துறை திணறிப்போகும்.

செவ்வாய் காலபுருஷனின் 8-ஆம் அதிபதி. அவரின் தீய காரகங்களான கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, தற்கொலைகள், விபத்துகள், நஷ்டங்கள், போர்ச்சூழல், பொது மரணங்கள், நில நடுக்கம், வெள்ளம், நெருப்பு, நோய்த் தாக்கம் என இம்மாதிரி கொடுஞ்செயல்கள் தலைவிரித்தாடும்.

செவ்வாய் இளைஞர்களைக் குறிப்பதால், நீச வக்ர செவ்வாய்க் காலத்தில் இளம்வயது ஆண்கள் பாதுகாப்புடன் இருத்தல் அவசியம். அதுவும் தொழில் செய்யும் இடங்களில் கண்டிப்பாக கவனம் தேவை.

வக்ர செவ்வாய், நிறைய நில மோசடிகளைச் செய்யச் செய்வார்.

வக்ர செவ்வாய், ராகு- கேது இணைவு, தனிமனித ஒழுக்கக்கேடுகளை நடத்தும். எங்கும் ஒருவிதப்பதட்டம், படபடப்பு நிறைந்திருக்கும்.

பாதுகாப்புத்துறையிலுள்ள வெட்கக்கேடான செயல்கள் வெளிவரும்.

செவ்வாய் மக்கள் தலைவர்களைக் குறிப்பார். வக்ர செவ்வாய்க் காலத்தில், சில தலைவர்களுக்கு சூழ்ச்சி, காழ்ப்புணர்ச்சியால் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. அதில் வெளிமாநில அல்லது வெளிநாட்டு சதி இருக்கக்கூடும். எனவே இந்த காலகட்டத்தில் பிரபலமான மக்கள் தலைவர்கள் பாதுகாப்பாக- கவனமாக இருத்தல் அவசியம்.

நெருப்பு, மின்சாரம் சம்பந்தமாகப் பணிபுரிவோர் கவனமாக இருக்க வேண்டும்.

வக்ர செவ்வாயின் காலத்தில், தயவுசெய்து திருமணம் சம்பந்தமான முடிவுகளை யோசித்துச் செய்யவும்.

இதுபோல, யாராவது "பணம் கொடுத்தால் வேலை வாங்கித் தருகிறேன்' என்று சொன்னாலும் சற்றே யோசிக்கவும். வக்ர செவ்வாய் காலம் முடிந்தபின், நன்கு விசாரித்துவிட்டு முடிவெடுக்கவும்.

இந்த காலத்தில் கூடியமட்டும் அறுவை சிகிச்சைகளைத் தவிர்க்கவும். முடியாதபட்சத்தில், அருகிலுள்ள காளிக்கு அரளி மாலை, சிவப்பு வஸ்திரம், புளியோதரை, மிக இனிப்பான சர்க்கரைப் பொங்கல் படைத்துவிட்டு, ஆபரேஷன் செய்து கொள்ளவும். அல்லது நரசிம்மரை நன்கு வேண்டிவிட்டு, செய்து கொள்ளவும்.

ரத்தம் சிந்தும் நிகழ்வு நிறைய நடக்கக்கூடும். யாருக்கெல்லாம் செவ்வாய் தசை, ராகு அல்லது கேது தசை நடக்கிறதோ, அவர்கள் துர்க்கைக்கு எலுமிச்சை மாலை, குங்கும அர்ச்சனை செய்யவும். ஆஞ்சநேயருக்கு செந்தூரம் சாற்றி வழிபடவும்.

செவ்வாய் பட்டாசு, தீப்பெட்டி, வெடிமருந்துகளைக் குறிப்பதால், வக்ர செவ்வாய்க் காலத்தில் இத்தொழில் முடங்கிப் போகும் வாய்ப்புண்டு.

வக்ர செவ்வாய் காலகட்டத்தில் பரிகாரம்

கண்டிப்பாக காளி வழிபாடு அவசியம். துர்க்கைக்கு செவ்வரளி மாலை மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சிக்கவும்.

செவ்வாய்க்கிழமை விரதமிருக்கவும். அருகிலுள்ள முருகர் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை கண்டிப்பாக சென்று வணங்கவும்.

உங்கள் வீட்டில் இளம்வயதுப் பையன்கள் இருந்தால் அவர்கள் பெயரில் செவ்வாய்க்கிழமை தோறும் அர்ச்சனை செய்யவும். (வக்ர காலத்தின் இரண்டு மாதங்கள் மட்டும் போதும்).

செம்பால் செய்யப்பட்ட சிறு வேல் வாங்கி காணிக்கை செலுத்தவும்.

விழுப்புரம் அருகேயுள்ள திருவக்கரை அம்மனை சிவப்பு வஸ்திரம், சிவப்பு மலர்கள் சாற்றி வழிபடவும்.

செவ்வாய் பலம் குறைந்தும், ராகு- கேது இணைவுடனும், சனி வீட்டிலும் இருப்பதால், பைரவர் வழிபாடு நன்று.

செவ்வாய்க்குரியவர் ஸ்ரீ சண்டபைரவர்.

ஸ்ரீ சண்ட பைரவர் காயத்ரி

ஓம் சர்வ சத்ரு நாஸாய வித்மஹே

மஹா வீராய தீமஹி

தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்.

இதனை பைரவரின் முன்னால் கூறி வணங்கவும்.

27 முறை ஜெபிக்கலாம்.

இனி 12 ராசிக்காரர்களும் செய்யவேண்டிய பரிகாரம்

முக்கியமாக இளைஞர்கள் என்ன ராசியோ, அதற்குரிய பரிகாரம் செய்யவும். அருகிலுள்ள சிவன் கோவிலில் பைரவர் இருப்பார். அவருக்கு கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்யவும். நிவேதனங்களை கோவிலிலேயே விநியோகித்து விடவும்.

மேஷ ராசி

செவ்வாய்க்கிழமைதோறும் மண் அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி, சிவப்புத் துணியில் 27 மிளகை வைத்து பொட்டலம் கட்டி அதில் வைத்து தீபம் ஏற்றவும். பருப்புப் பொடி சாதம் அல்லது சாம்பார் சாதம் படைத்து, அங்கேயே விநியோகம் செய்து விடவும்.

ரிஷப ராசி

வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று சாம்பல் பூசணி அல்லது தேங்காயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, வெள்ளைத்துணியில் 24 மிளகை வைத்துப் பொட்டலம் கட்டி தீபமேற்றவும். வெண்பொங்கல் போன்ற வெள்ளை நிற நிவேதனம் படைக்கவும்.

மிதுன ராசி

புதன்கிழமையன்று விளாம்பழ ஓட்டில் நெய் அல்லது இலுப்பை எண்ணெய் ஊற்றி, பச்சைநிறத் துணியில் 23 மிளகை வைத்து தீபமேற்றவும். பாசிப்பருப்பு பொங்கல் அல்லது பாயசம் நிவேதனம் செய்யவும்.

கடக ராசி

திங்கட்கிழமையன்று சாத்துக்குடி பழ மூடியில் நெய் விட்டு, சந்தன வண்ணத் துணியில் 20 மிளகை வைத்து பொட்டலம் கட்டி அதில் வைத்து, தாமரைத் தண்டு திரியிட்டு விளக்கேற்றவும். ஜவ்வரிசிப் பாயசம் நிவேதனம் நன்று.

சிம்ம ராசி

ஞாயிற்றுக்கிழமையன்று அகல் விளக்கில் புங்கம் எண்ணெய் ஊற்றி, சிவப்புத்துணியில் 19 மிளகை வைத்துப்பொட்டலம் கட்டி தீபமேற்றவும். கோதுமை சார்ந்த நிவேதனம் செய்யவும்.

கன்னி ராசி

புதன்கிழமையன்று விளாம்பழ ஓட்டில் நெய் ஊற்றி, பச்சைநிறத் துணியில் 23 மிளகை வைத்துப் பொட்டலம் கட்டி அதில் வைத்து தாமரைத்தண்டு திரியில் விளக்கேற்றவும். பால் பாயசம், தயிர் சாதம் நிவேதனம் செய்யவும்.

துலா ராசி

சனி அல்லது வெள்ளிக்கிழமை மாவிளக்கில் நெய் ஊற்றி, சிவப்புநிறத் துணியில் 24 மிளகைக் கட்டி தீபமேற்றவும். தேனுடன் பேரீச்சை, செவ்வாழை ஏதேனும் ஒன்றைக் கலந்து நிவேதனம் செய்யவும்.

விருச்சிக ராசி

செவ்வாய்க்கிழமை சிவப்புத் துணியில் 25 மிளகைப் பொட்டலம் கட்டி அகல் விளக்கில் வைத்து, நெய் அல்லது இலுப்பை எண்ணெய் ஊற்றி விளக்கேற்றவும். வேகவைத்த கொள்ளு, சுண்டல், பால் பாயசம் நிவேதனம் செய்யவும்.

தனுசு ராசி

வியாழக்கிழமையன்று, ஆரஞ்சுப் பழ மூடியில் விளக்கெண்ணெய் ஊற்றி, மஞ்சள்நிறத் துணியில் 21 மிளகை வைத்துக் கட்டி அதில் வைத்து தீபமேற்றவும். சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யவும்.

மகர ராசி

சனிக்கிழமையன்று, இரும்பு அல்லது அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, நீலநிறத் துணியில் 26 மிளகை வைத்துக் கட்டி அகலில் வைத்து தீபமேற்றவும். எள்ளுருண்டை, கறிவேப்பிலை சாதம் நிவேதனம் செய்யவும்.

கும்ப ராசி

சனிக்கிழமையன்று எலுமிச்சம்பழ விளக்கில் 22 மிளகை கருநீலத் துணியில் கட்டி. தீபமேற்றவும். உளுந்து வடை, எள்ளுருண்டை நிவேதனம் நல்லது.

மீன ராசி

ஞாயிற்றுக்கிழமையன்று தேங்காயில் நெய்விட்டு, மஞ்சள் நிறத்துணியில் 21 மிளகைக் கட்டி அதிலிட்டு தீபமேற்றவும். ஆரஞ்சுப்பழம், கடலை உருண்டை நிவேதனம் நன்று.

மேற்கண்ட பரிகாரங்களை வாலிப வயது இளைஞர்களின் பெற்றோர் அவரவர் ராசிப்படி இரண்டு மாத காலம் மட்டுமே செய்தால் போதும். அதாவது 2018 ஜூன் கடைசி வாரத்திலிருந்து, செப்டம்பர் முதல் வாரம் வரை பரிகாரம் செய்தால் போதும். இதே பரிகாரங்களை 8-ஆமிட தசை, புக்தி நடப்பவர்கள், அஷ்டமச்சனி நடப்பவர்கள், 8-ல் ராகு அல்லது கேது இருந்து அதன் தசை நடப்பவர்கள் முடிந்தமட்டும் செய்யவும்.

மற்றவர்கள் இந்தப் பரிகாரங்களைச் செய்தல் அவ்வளவு சிலாக்யமல்ல. ஏனெனில் பைரவர் மிகவும் உக்ரமான தெய்வம்.

அதனால் மிக மோசமான தசா புக்தி, கோட்சாரம் நடக்கும்போது மட்டும் பைரவ வழிபாடு ஏற்புடையது. மற்றவர்கள் அனைவரும் துர்க்கையை வணங்குங்கள்!

செல்: 94449 61845

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe