நிழல் கிரக தசையின் விளைவுகள்! -முருகு பாலமுருகன்

/idhalgal/balajothidam/effects-shadow-planet-muscle-murugu-balamurugan

த்திரிகை, தொலைக்காட்சி மற்றும் வலைத்தளங்களில் சொல்லப்படும் பலன்கள் கோட்சாரப் பலன்களாகும். தனிப்பட்ட ஒருவரது பலனைப் பார்க்க அந்த ஜாதகர் பிறந்த நேரத்தைக்கொண்டு கணித்த ஜாதகப்பலனை நிர்ணயம் செய்கிறோம். அதில் குறிப்பாக தசை, புக்திப் பலன்கள் மிகவும் முக்கியமானது.

எந்த கிரகத்தின் தசை ஒருவருக்கு நடக்கி றதோ அந்த கிரகத்தின் ஆதிக்கப் பலனை அடைய முடியும். நவகிரகங்களில் ராகு எப்படிப்பட்ட பலனை அதன் தசை, புக்திக் காலத்தில் தருகிறது என்பதை இங்கு பார்ப்போம்.

நிழல் கிரகமான ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது. ராகு இருக்கும் வீட்டையே சொந்த வீடாகக் கொண்டு பலன்களைத் தரும். ஆங்கிலத்தில் "மய் ல்ழ்ங்க்ண்ஸ்ரீற்ஹக்ஷப்ங் டப்ஹய்ங்ற் ண்ள் தஹட்ன்' என்பார்கள். அதாவது ராகு எப்படிப்பட்ட பலன்களை வழங்கும் என்பதனை நிர்ணயிக் கவே முடியாது என்கிறார்கள். நவகிரகங்களில் மிகவும் வினோதமான கிரகமான ராகு மனித வாழ்வில் பல்வேறு பலன்களை வழங்குகிறார். குறிப்பாக ராகுவைப்போல வாரிவழங்குவதில் வல்லவரான கிரகம் எதுவுமில்லை. அதுமட்டுமின்றி "குஜவத் கேது; சனிவத் ராகு' என்றொரு பழமொழி யும் உண்

த்திரிகை, தொலைக்காட்சி மற்றும் வலைத்தளங்களில் சொல்லப்படும் பலன்கள் கோட்சாரப் பலன்களாகும். தனிப்பட்ட ஒருவரது பலனைப் பார்க்க அந்த ஜாதகர் பிறந்த நேரத்தைக்கொண்டு கணித்த ஜாதகப்பலனை நிர்ணயம் செய்கிறோம். அதில் குறிப்பாக தசை, புக்திப் பலன்கள் மிகவும் முக்கியமானது.

எந்த கிரகத்தின் தசை ஒருவருக்கு நடக்கி றதோ அந்த கிரகத்தின் ஆதிக்கப் பலனை அடைய முடியும். நவகிரகங்களில் ராகு எப்படிப்பட்ட பலனை அதன் தசை, புக்திக் காலத்தில் தருகிறது என்பதை இங்கு பார்ப்போம்.

நிழல் கிரகமான ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது. ராகு இருக்கும் வீட்டையே சொந்த வீடாகக் கொண்டு பலன்களைத் தரும். ஆங்கிலத்தில் "மய் ல்ழ்ங்க்ண்ஸ்ரீற்ஹக்ஷப்ங் டப்ஹய்ங்ற் ண்ள் தஹட்ன்' என்பார்கள். அதாவது ராகு எப்படிப்பட்ட பலன்களை வழங்கும் என்பதனை நிர்ணயிக் கவே முடியாது என்கிறார்கள். நவகிரகங்களில் மிகவும் வினோதமான கிரகமான ராகு மனித வாழ்வில் பல்வேறு பலன்களை வழங்குகிறார். குறிப்பாக ராகுவைப்போல வாரிவழங்குவதில் வல்லவரான கிரகம் எதுவுமில்லை. அதுமட்டுமின்றி "குஜவத் கேது; சனிவத் ராகு' என்றொரு பழமொழி யும் உண்டு. அதாவது கேது செவ்வாயைப் போலவும், ராகு சனியைப்போலவும் பலன் களை ஏற்படுத்துவார்கள் என்னும் கருத் துண்டு.

dd

ராகு ஒரு பாவகிரகம் என்பதால், லக்னம் அல்லது சந்திரனுக்கு உபஜெய ஸ்தானமான 3, 6, 10, 11-ல் அமையப்பெற்று தசை நடத்தினால் ஏற்றமிகு பலன் உண்டாகும். குறிப்பிட்டுச் சொல்வதென்றால் ராகு எந்த இடத்தில் இருக்கிறாரோ அதன் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றோ வலுப்பெற்றோ இருந்தால் நற்பலன் ஏற்படுகிறது.

அதுவே ராகு நின்ற வீட்டதிபதி பலவீனம் அடைந்திருந்தால் ராகு தசை, புக்திக் காலத்தில் கெடுபலன் ஏற்படுகிறது.

அதுபோல உடன் நட்பு கிரகங்கள் அமையப்பெற்றாலும், சுப கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலும் ஏற்றம் மிகுந்த பலன்கள் ஏற்படுகிறது. ராகு சுபர் சேர்க்கைப் பெற்றோ சுபர் பார்வை பெற்றோ இருந்தா லும் நல்லது. பாவிகள் சேர்க்கைப் பெற்றிருந் தால் அதன் தசை, புக்திக் காலங்களில் கடுமை யான பிரச்சினைகளும் தவறான வழியில் செல்லக்கூடிய அவலநிலையும் உண்டாகும்.

ஆக, ராகு சுபர் சேர்க்கை பெற்றிருந்தால் நல்லது. பாவிகள் சேர்க்கை பெற்றிருக்கக் கூடாது. ராகு பகவான் உடனிருக்கக்கூடிய கிரக நிலையைப் பொருத்து பலன்களை வழங்குவதால், உடனிருக்கும் கிரகங்கள் பலமாக இருப்பது மிகமிக நல்லது. கேந்திரங் களில் ராகு பகவான் அமையப்பெற்றால் அந்த பாவத்தை மட்டும் சற்று பாதித்து விட்டு மற்றபடி நற்பலனை வழங்குவார்.

பொதுவாக 3, 6, 10, 11-ல் அமையப்பெற்றால் அபரிமிதமான வளர்ச்சியைத் தரும். அதிலும் குறிப்பாக 3, 6-ல் உள்ள ராகு தசை வெளியூர் மற்றும் வெளிமாநிலம் மூலமும், 9, 12-ல் இருந்தால் வெளியூர், வெளிநாடு மூலமும் அனுகூலத்தை உண்டாக்குகிறது.

ராகு ஒருவருக்கு 2-ல் அமையப்பெற்றால் குடும்ப ஒற்றுமையை பாதிக்கிறது. 4-ல் அமையப்பெற்றால் சுக வாழ்வை பாதிக்கிறது. 5-ல் அமையப்பெற்றால் புத்திரவழி மற்றும் பூர்வீக சொத்துகள்ரீதியாக பிரச்சினைகளை ஏற்படுகிறது. 7-ல் அமையப்பெற்றால் மணவாழ்வில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. 8-ல் அமையப்பெற்றால் கடுமை யான நெருக்கடி, கண்டு பிடிக்கமுடியாத உடல் பாதிப்பு, விபத்துகளை எதிர் கொள்ளக்கூடிய சூழ்நிலை, மனைவிவழி உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு ஆகிய கெடுபலன்களை ஏற்படுத்துகிறது.

மேலே கூறிய கெடு பலன்கள் எப்போது ஏற்படு கிறதென பார்க்கும்போது, எல்லா நேரத்திலும் கெடு பலனை ஏற்படுத்துவ தில்லை. குறிப்பாக, அதன் தசைக் காலங்களில்தான் கெடுபலனை ஏற்படுத்துகிறது.

ராகுவைப்பற்றி விளக்க நிறைய விஷயங்கள் இருந்தாலும், உதாரணமாக, ஜாதகம் பார்க்கும் தற்கால ஜோதிடர்கள் சிலர் 7-ல் ராகு இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்காதென கூறிவிடுகிறார்கள். ஆனால் அப்படியில்லை. ஒரு ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் 7-ல் ராகு இருந்தால் அந்த நபருக்கு திருமண வயது காலமான 25 வயதுமுதல் 40 வயதுவரையுள்ள காலத்தில் ராகு தசை நடந்தால்தான் கெடுதி. அதுவே சிறு வயதில்- அதாவது 25 வயதிற்குள் ராகு தசை முடிந்துவிட்டாலோ அல்லது 50 வயதிற்குப்பிறகு உள்ள காலத்தில் ராகு தசை நடந்தாலோ, 7-ல் உள்ள ராகு எந்த விதத்தி லும் கெடுதியைத் தருவதில்லை. குறிப்பாக மற்ற கிரக தசைக் காலத்தில் ராகு புக்தி நடக்கும் போது மட்டும் சற்று விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

அதுபோல ஒரு ஜாதகத்தில் சாதகமற்ற இடத்தில் ராகு இருந்தால் அதன் தசை, புக்திக் காலத்தில்தான் கெடுதியை ஏற்படுத்துமே தவிர மற்ற காலத்தில் கெடுதியைத் தராது.

ஒருவர் எந்த லக்னம் அல்லது எந்த ராசியில் பிறந்திருந்தாலும், ஜெனன ஜாதகத் தில் சூரியன் வீடான சிம்மத்தில் ராகு இருந்தால் அதன் தசை அல்லது புக்தி நடைபெற்றால் தந்தை, தந்தைவழி உறவினர்கள் அல்லது பணியில் இருந் தால் மேலதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது.

சந்திரன் வீடான கடகத் தில் ராகு இருந்தால் அதன் தசை அல்லது புக்தி நடை பெற்றால் தாய், தாய்வழி உறவினர்கள், மூத்த சகோதரி, வயது மூத்த பெண், மாமியார் அல்லது பணியில் இருந்தால் (வயது மூத்த பெண்) மேலதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. செவ்வாய் வீடான மேஷம், விருச்சிகத்தில் ராகு இருந்தால் அதன் தசை அல்லது புக்தி நடைபெற்றால் இளைய சகோதரர்கள், வயது குறைவான ஆண்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. சுக்கிரன் வீடான ரிஷபம், துலாத்தில் ராகு இருந்தால் அதன் தசை அல்லது புக்தி நடைபெற்றால் மனைவி, இளைய சகோதரி, வயது குறைவான பெண்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

பொதுவாக சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, அஸ்தம், திருவோண நட்சத்திரத் தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை 3-ஆவது தசையாக வருவதால் அவ்வளவு சிறப்பான பலன்களைத் தருவதில்லை.

bala261121
இதையும் படியுங்கள்
Subscribe