வக்ர கிரகங்களின் விளைவுகள்! -முருகு பாலமுருகன்

/idhalgal/balajothidam/effects-crooked-planets-muruku-balamurugan

வகிரகங்கள் இயல்பாகத் தங்கள் சுற்றுப் பாதையில் சென்று கொண்டிருக்கும். அவை சில நேரங்களில் பின்னோக்கிச் செல்லும். ஜோதிடரீதியாக இதை வக்ர காலங்கள் என்கிறோம்.

ஜாதகங்களைக் கணிக்கும்போது சில கிரகங்களின் பக்கத்தில் (வ) என குறிக்கப்பட்டிருக்கும். ஆங்கிலத்தில் (R) என குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு தமிழில் வக்ரம் என்றும், ஆங்கிலத்தில் Retrograde என்றும் பொருளாகும்.

நவகிரகங்களில் சூரியனும் சந்திரனும் எப்பொழுதுமே நேர்கதியில்தான் சஞ்சரிக்கும். சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் எப்பொழுதுமே பின்னோக்கிதான் சஞ்சரிக்கும். செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்கள் சில நேரங்களில் வக்ரம் பெறும். மாத கிரகங்களான புதன், சுக்கிரன் ஆகியவை சூரியனை ஒட்டியே சஞ்சரிக்கும் கிரகங்களாகும். பொதுவாக சூரியன் அமைந்திருக்கும் வீட்டிற்கு முன், பின் வீடுகளில்தான் புதனும் சுக்கிரனும் அதிகபட்சம் சஞ்சரிக்கும்.

dd

சூரியனை ஒட்டியே சஞ்சரிக்கும் புதன், சூரியனுக்கு 14 டிகிரியில் சஞ்சரிக்கும்போது வக்ரம் பெற்று, 20 டிகிரியில் சஞ்சரிக்கும்போது வக்ர நிவர்த்தியடையும். சுமார் 24 நாட்கள் வக்ரநிலையில் சஞ்ச

வகிரகங்கள் இயல்பாகத் தங்கள் சுற்றுப் பாதையில் சென்று கொண்டிருக்கும். அவை சில நேரங்களில் பின்னோக்கிச் செல்லும். ஜோதிடரீதியாக இதை வக்ர காலங்கள் என்கிறோம்.

ஜாதகங்களைக் கணிக்கும்போது சில கிரகங்களின் பக்கத்தில் (வ) என குறிக்கப்பட்டிருக்கும். ஆங்கிலத்தில் (R) என குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு தமிழில் வக்ரம் என்றும், ஆங்கிலத்தில் Retrograde என்றும் பொருளாகும்.

நவகிரகங்களில் சூரியனும் சந்திரனும் எப்பொழுதுமே நேர்கதியில்தான் சஞ்சரிக்கும். சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் எப்பொழுதுமே பின்னோக்கிதான் சஞ்சரிக்கும். செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்கள் சில நேரங்களில் வக்ரம் பெறும். மாத கிரகங்களான புதன், சுக்கிரன் ஆகியவை சூரியனை ஒட்டியே சஞ்சரிக்கும் கிரகங்களாகும். பொதுவாக சூரியன் அமைந்திருக்கும் வீட்டிற்கு முன், பின் வீடுகளில்தான் புதனும் சுக்கிரனும் அதிகபட்சம் சஞ்சரிக்கும்.

dd

சூரியனை ஒட்டியே சஞ்சரிக்கும் புதன், சூரியனுக்கு 14 டிகிரியில் சஞ்சரிக்கும்போது வக்ரம் பெற்று, 20 டிகிரியில் சஞ்சரிக்கும்போது வக்ர நிவர்த்தியடையும். சுமார் 24 நாட்கள் வக்ரநிலையில் சஞ்சரிக்கும். சுக்கிரன், சூரியனுக்கு 29 டிகிரியில் வக்ரம்பெற்று 26 டிகிரிக்கு வரும்போது வக்ர நிவர்த்தியாகும். சுமார் 42 நாட்கள் வக்ரம் பெறும்.

ஒரு ராசியில் ஒன்றரை மாதங்கள் தங்கும் செவ்வாய் சூரியனுக்கு 228 டிகிரியில் வரும்போது வக்ரம் பெற்று, 132 டிகிரியில் சஞ்சரிக்கும்போது வக்ர நிவர்த்தியடையும். சுமார் 80 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிந்துகொள்ள- சூரியனுக்கு 8-ல் செவ்வாய் சஞ்சரிக்கும்போது வக்ரம்பெற்று, சூரியனுக்கு 6-ல் செவ்வாய் வரும்போது வக்ர நிவர்த்தியடையும்.

ஆண்டுக் கோளான குரு, சூரியனுக்கு 245 டிகிரியில் இருக்கும்போது வக்ரம் பெற்று, 115 டிகிரியில் வரும்போது வக்ர நிவர்த்தியடையும். சுமார் 120 நாட்கள் வக்ர நிலையில் இருக்கும். இதனை எளிதாக அறிய- ராசி சக்கரத்தில் சூரியனுக்கு 9-ல் குரு சஞ்சரிக்கும்போது வக்ரம்பெற்று, சூரியனுக்கு 5-ல் சஞ்சரிக்கும்போது வக்ர நிவர்த்தியடையும்.

ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய சனி, சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும்போது வக்ரம்பெற்று, 109 டிகிரியில் சஞ்சரிக்கும்போது வக்ர நிவர்த்தியடையும். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிய சூரியனுக்கு 9-ல் சனி சஞ்சரிக்கும்போது வக்ரம்பெற்று, சூரியனுக்கு 5-ல் சஞ்சரிக்கும்போது வக்ர நிவர்த்தியடையும்.

இப்படி பின்னோக்கிச் செல்லும் கிரகங்கள் இக்காலங்களில் எதிர்மறையான பலன்களை உண்டாக்கும். ஜனன ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்ரம் பெற்றிருந்தால் என்ன பலன்களை ஏற்படுத்துகிறது என பார்க்கும்போது, அந்த கிரகம் காரகத்துவரீதியாக எந்த வீட்டின் அதிபதியாக இருக்கிறாரோ, அந்த பாவப் பலன்கள் சிறப் பாக நடைபெற தடைகள், சில எதிர்மறையான பலன்கள் ஏற்படுகின்றன.

எந்த கிரகம் வக்ரம் பெற்றிருக்கிறதோ அந்த கிரகத்தின் காரகப்பலன் மற்றும் அந்த கிரகம் எந்த பாவத்தின் அதிபதியோ அந்த பாவகப் பலன் பாதிக்கப்படுகிறது.

ஒரு ஆண் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம் பெற்றால் இளைய சகோதரரிடம் கருத்து வேறுபாடு, பூமி, மனை வாங்குவதில் சிக்கல், அப்படி வாங்கினாலும் அதனை அனுபவிக்க இடையூறு ஏற்படும்.

அதுபோல ஒரு பெண் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம் பெற்றால் மாதவிடாய்ப் பிரச்சினை, வயிற்றுக் கோளாறு ஏற்படுகிறது. பெண்களுக்கு செவ்வாய் களத்திர காரகன் என்பதால் இல்லற வாழ்வில் மகிழ்ச்சிக் குறைவு ஏற்படுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் புதன் வக்ரம் பெற்றால் தாய்மாமன் வழியில் பகை உண்டாகும். நல்ல அறிவாற்றல் இருந்தாலும் படித்த படிப்பிற்கும் அவர்கள் எதிர்கால வாழ்வுக்கும் சம்பந்தமில்லாமல் வேறொரு துறைக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது.

ஒருவருக்கு சுக்கிரன் வக்ரம் பெற்றால் சுகவாழ்வு பாதிக்கும் நிலை, இருப்பதை அனுபவிக்க இடையூறு, இளைய சகோதரி வழியில் நிம்மதிக் குறைவு ஏற்படும். ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் களத்திர காரகன் என்பதால் திருமண வாழ்வில் மகிழ்ச்சிக் குறைவு ஏற்படுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் குரு வக்ரம் பெற்றால் பணம் கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினை, அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது. குரு புத்திர காரகன் என்பதால் குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் இடையூறுகள், ஆண் குழந்தை இருந்தால் மன நிம்மதிக்குறைவு ஏற்படுகிறது.

சனி வக்ரம் பெற்றால் உடலில் எதிர்ப்புசக்தி குறைவாக இருந்து, அடிக்கடி உடல் பாதிப்பு, வேலையாட்களால் பிரச்சினை, கடன் வாங்கினால் அதனை அடைக்கமுடியாத அளவுக்கு இடையூறு ஏற்படும்.

ஒரு கிரகம் வக்ரம்பெற்றால் எப்படி எதிர்மறையான பலனை ஏற்படுத்துகி றதோ, அதுபோல ஒரு பாவாதிபதி வக்ரம்பெற்றால் அந்த பாவகப்பலனை அடைய இடையூறு ஏற்படுகிறது.

நீசம்பெற்ற கிரகங்கள்கூட ஒருசில தடைகளுக்குப்பிறகு நற்பலனைத் தருகின்றன. ஆனால் வக்ர கிரகம் அப்படி பலனைத் தருவதில்லை.

உதாரணமாக, ஒரு ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி வக்ரம் பெற்றால், பூர்வீக சொத்து வழியில் பிரச்சினை, குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் சிக்கல் உண்டாகிறது. இன்னும் ஆராய்ச்சி பூர்வமாகப் பார்க்கும்போது, ஒரு ஆண் ஜாதகத்தில் 3-ஆம் அதிபதி வக்ரம் பெற்றால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது. 3-ஆம் அதிபதி வக்ரம் பெற்று, குரு, சூரியனும் பலவீனமாக இருந்தால் கண்டிப்பாக பிரச்சினை மேலும் வலுப்பெறுகிறது.

ஒரு ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி வக்ரம் பெற்றால் திருமண வாழ்வில் நிம்மதிக் குறைவு, வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சிக் குறைவு ஏற்படுகிறது. அப்படிப் பட்ட ஜாதகருக்கு வரும் வரனுக்கும் 7-ஆம் அதிபதி வக்ரம் பெற்றால் ஓரளவுக்கு ஒற்றுமை உண்டாகிறது. அதுபோல சொந்தத்தில் திருமணம் செய்யாமல் கலப்புத் திருமணமாகவோ, மாறுபட்ட கலாச்சாரத்தில் வளர்ந்த வரனையோ திருமணம் செய்யும்போது வாழ்க்கை நன்றாக இருக்கிறது.

வக்ர கிரகங்கள் ஏற்படுத்தும் பலன் களைப் பற்றி ஒருசில கருத்துகளை இங்கு கூறியுள்ளேன். மேலும் விவரங்களை அவ்வப்போது காண்போம்.

bala121121
இதையும் படியுங்கள்
Subscribe