Advertisment

பொருளாதார ஏற்றத்தாழ்வும் தீர்வுகளும்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/economic-inequality-and-solutions-prasanna-astrologer-i-anandhi

"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்'

என்பது வள்ளுவர் வாக்கு.

இதன் பொருள், தகுதியற்ற வரையும்கூட தகுதியுடைய வராக்கிவிடும் தகுதியுடையது பணமேயன்றி வேறொன்றுமில்லை என்பதாகும்.

Advertisment

அதாவது மதிக்கத் தகாதவர் களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத்தவிர வேறெதுவும் இல்லையென்பதாகும்.

செல்வம் வேண்டாமென்று பணத்தை விரும்பாத மனிதர்கள் இவ்வுலகில் மிகச் சிலரே. மனிதர்களாய்ப் பிறந்த அனைவரும் பொருளாதாரத்தில் தங்கள் வாழ்வினை வளப்படுத்திக் கொள்ளவே விரும்புகின்றனர்.

வளமான வாழ்வுக்கு அடிப் படையான தேவை செல்வம் என்பதால், செல்வத்தின் மதிப்பை உணர்ந்தே வள்ளுவர் "பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்றார்.

Advertisment

நிரந்தமற்ற காரணியான பணம் சிலரிடம் தேவைக்கு அதிகமாகக் குவிகிறது. சிலருக்கு தன் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் பணமிருக்கும். சிலருக்கு அடிப்படைத் தேவையைக்கூட சமாளிப்பதில் சிரமமிருக்கும். இன்னும் சிலருக்கு பொருளாதாரத்தில் ஏற்ற- இறக்கம் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். பணமே பிரதான காரணியாக இருக்கும் இந்தக் காலத்தில், பணம் படைத்தவர்கள் ஏதேனும் ஒருவகையில் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவே வாழ்கிறார்கள்.

ராசிகளின் தன்மை, வேகம் மற்றும் செயல்படும் விதத்தின் அடிப்படையில் நிரந்தரப் பொருளாதாரத்தை சமன்செய்யும் சில

"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்'

என்பது வள்ளுவர் வாக்கு.

இதன் பொருள், தகுதியற்ற வரையும்கூட தகுதியுடைய வராக்கிவிடும் தகுதியுடையது பணமேயன்றி வேறொன்றுமில்லை என்பதாகும்.

Advertisment

அதாவது மதிக்கத் தகாதவர் களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத்தவிர வேறெதுவும் இல்லையென்பதாகும்.

செல்வம் வேண்டாமென்று பணத்தை விரும்பாத மனிதர்கள் இவ்வுலகில் மிகச் சிலரே. மனிதர்களாய்ப் பிறந்த அனைவரும் பொருளாதாரத்தில் தங்கள் வாழ்வினை வளப்படுத்திக் கொள்ளவே விரும்புகின்றனர்.

வளமான வாழ்வுக்கு அடிப் படையான தேவை செல்வம் என்பதால், செல்வத்தின் மதிப்பை உணர்ந்தே வள்ளுவர் "பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்றார்.

Advertisment

நிரந்தமற்ற காரணியான பணம் சிலரிடம் தேவைக்கு அதிகமாகக் குவிகிறது. சிலருக்கு தன் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் பணமிருக்கும். சிலருக்கு அடிப்படைத் தேவையைக்கூட சமாளிப்பதில் சிரமமிருக்கும். இன்னும் சிலருக்கு பொருளாதாரத்தில் ஏற்ற- இறக்கம் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். பணமே பிரதான காரணியாக இருக்கும் இந்தக் காலத்தில், பணம் படைத்தவர்கள் ஏதேனும் ஒருவகையில் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவே வாழ்கிறார்கள்.

ராசிகளின் தன்மை, வேகம் மற்றும் செயல்படும் விதத்தின் அடிப்படையில் நிரந்தரப் பொருளாதாரத்தை சமன்செய்யும் சில எளிய பரிகாரங்களைப் பார்க்கலாம்.

காலபுருஷ தத்து வத்தின்படி மேஷத்தில் தொடங்கி மீனம் வரையுள்ள பன்னிரண்டு ராசிகளுக்கும் பல்வேறு தத்துவங்கள், ரகசியங்கள் அடங்கியுள்ளன. கிரகங்களின் நகர்வின் அடிப்படையில் பன்னிரு லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக நமது ஜோதிட முன்னோடிகள் பிரித்திருக்கிறார்கள்.

சரம்

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு லக்னங்களும் சரத்தில் அடங்கும். சரமென்றால் வெகு சலனமுடையது; தடையற்ற இயக்கம்கொண்ட அமைப்பாகும். சர லக்னத்திற்கு சுபமோ அசுபமோ எளிதில் வந்தடையும். ஒருவடைய வாழ்நாளில் சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழிநடத்தும். வந்த தடமும் இருக்காது; போன சுவடும் தெரியாது. சர லக்னம் படைத்தல் தத்துவத்தைத் தன்னுள் அடக்கியது. சர ராசிகள் வலிமைபெற்று, அதில் நின்று ஒரு கிரகம் தசாபுக்தி நடத்தினால் ஜாதகருக்கு நன்மைகள் வேகமாக நடக்கும். இவர்கள் சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருப்பார்கள். கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்துவார்கள். எதிலும் வேகம், விவேகம் என எல்லா விஷயத்திலும் அனுபவம் உடையவர்கள். ஆதாய மில்லாத விஷயத்தை செய்யமாட்டார்கள். குறுகிய காலத்தித் தில் பல நன்மைகளை அனுபவிப்பார்கள்.

ee

அடிப்படை வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்ட சிலர் மிகக் குறுகிய காலத்தில் தேவைக்கதிகமாக சம்பாதித்து வீடு வாசல் என செட்டிலாகி விடுவார்கள். மேலும் இந்த சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகளில் ஒரு கிரகம் அசுப வலிமையுடன் தசை நடத்தினால், கோடி கோடியாக சம்பாதித்தவர்கள்கூட தெருக்கோடிக்கு வந்து விடுவார்கள்.

சர ராசியில் நின்று ஒரு கிரகம் தசை நடத்தி கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளில் இருப்பவர்கள் ஆதிசங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளைகளில், ஸ்ரீ மகாலட்சுமிமுன்பு நெய்தீபம் ஏற்றி தொடர்ச்சி யாக வணங்கிவருவது நல்லதாகும்.

ஸ்திரம்

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கும் ஸ்திர லக்னத்தில் அடங்கும். ஸ்திரம் என்பது சலனமற்றது. அசைவற்ற நிலையைக்கொண்ட தன்மை யாகும். சுபமோ, அசுபமோ எதிர்பாராத விதத்தில் வந்தடையும். வந்தால் நீண்ட காலத்திற்கு நிலையாக இருக்கும். ஏன்- வாழ்நாள் முழுவதும்கூட வழிநடத்தும். ஸ்திர லக்னம் காத்தல் தத்துவத்தை அடக்கியது. கொள்கை மற்றும் லட்சியப் பிடிப்புள்ளவர்கள். இவர்கள் ஒருமுறை எடுத்த முடிவை யாராலும் மாற்ற முடியாது. அதாவது இவர்கள் பேச்சை இவர்களே கேட்கமாட்டார்கள். அது சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும் அதிலிருந்து மாறமாட்டார்கள். எங்கும் எதிலும் நிலைத்து நிற்பார்கள். தாம் எடுத்த முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள். நிலையான வெற்றியைப் பெறுவார்கள். வாழ்க்கையில் ஜெயிக்காமல் ஓயமாட்டார்கள்.

ஸ்திர ராசியில் நின்று ஒரு கிரகம் சுபவலிமை பெற்று தசாபுக்தி நடத்தி னால் நிலையான பல யோகங்கள் ஜாதகரின் வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கும். பொருளாதார வளர்ச்சி தங்கு தடையின்றி இருக்கும். அதே நேரத்தில் அசுபத் தன்மை யுடன் தசாபுக்திகள் நடத்தினால் ஜாதகருக்கு நிலையான பல இன்னல்கள், தீராத- தீர்க்க முடியாத மன பாரம் இருக்கும். பொருளாதாரக் குறைபாடு அதிகரிக்கும்.

ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பத்தி லிருந்து ஒரு கிரகம் தசை நடத்தும்பொழுது எதிர்விளைவு கள் மிகைப்படுத்தலாக இருந் தால் மகாலட்சுமிக்குரிய நாளான வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில், மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவுக்குரிய காயத்திரி மந்திரங்கள் மற்றும் லலிதா சகஸ்ஹர நாமம் படித்துவர நன்மைகள் அதிரிக்கும்.

உபயம்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கும் உபய லக்னத்தில் அடங்கும். உபய லக்னம் சர, ஸ்திர லக்னங் களின் தன்மைமையையும் உள்ளடக்கியது. அதாவது ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு நகரும்போது கிரகத் தன்மை சரம்; மாறியபிறகு ஸ்திரம்; அதிசாரகதியில் அல்லது வக்ரநிலையில் சஞ்சாரம் செய்துவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்புவது உபயம். இந்த லக்னம் அழித்தல் தத்துவத்தைத் தனக்குள் கொண்டுள்ளது.

ஒவருடைய சுய ஜாதகத்தில் உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகள் வலிமைபெற்ற கிரகத்தின் தசாபுக்திகள் நடைபெற்றால் ஜாதகருக்கு தொடர்ந்து பல நன்மைகள் நடைபெறும். கடலலைபோல் மீண்டும் மீண்டும் அவருக்கு தொடர்ந்து பல நன்மைகள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும். செல்வாக்கில் மிதப்பார்கள். இந்த ராசியில் அசுபத் தன்மை பெற்ற கிரகம் தசாபுக்திகள் நடத்தினால் ஜாதகர் ஒரு பிரச்சினையிலிருந்து மீண்டுவருவதற்குள் மீண்டும் ஒரு பிரச்சினை அவர் வீட்டின் கதவைத் தட்டும். ஒரு இழப்பை சமாளித்து மீளும்முன்பு மீண்டும் அடுத்த இழப்பு தயாராகிவிடும்.

மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் வல்லவரான இவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைக்கு அப்படி செய்யலாமா இப்படி செய்யலாமா என யோசித்துக் கொண்டே சொதப்பி, தமக்குத் தாமே சொந்த செலவில் சூனியம் வைக்கும் புத்திசாலிகள். எதிலும் இரட்டை நிலைதான். சொல்லாலும் செயலாலும் ஒன்று படமாட்டார்கள். ஒவ்வொரு நிமிடமும் சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். மனம் மாறிக்கொண்டே இருக்கும். ஏமாற்றம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

உபய ராசியில் நின்று அசுபத் தன்மையுடன் ஒரு கிரகம் தசை நடத்தினால் கோபூஜை, கோதானம் செய்தால் எளிதில் நிலைமை சீராகும். மிகக் கடுமையான நிதி நெருக்கடி நிலையில் இருக்கக்கூடியவர்கள் ஒவ்வொரு புதன்கிழமைதோறும் பசுவுக்கு பச்சைப்புல் வழங்கினால் நெருக்கடி நிலை நீங்கும்.

எனவே ராசிக்கட்டத்திலுள்ள நவகிரகங்களை மட்டும் வைத்துப் பரிகாரம் செய்யாமல், பிரச்சினைக்குத் தகுந்த வழிபாட்டு முறையைக் கடைப்பிடித்தால், நிம்மதியாக சகல ஐஸ்வர்யத் துடன் வாழமுடியும்.

செல்: 98652 20406

bala230922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe