Advertisment

எளிதில் வெற்றி பெற 27 நட்சத்திர மலர்கள்!

/idhalgal/balajothidam/easily-win-27-star-flowers

ரங்கள் உயிரோடு இருக்கும்போதும் ஆயிரக்கணக்கான பொருட்களை அள்ளித் தருகின்றன. அவை நிலநடுக்கம், புயல் காற்று, பேய் மழை போன்ற இயற்கைச் சீற்றத்தால் மண்ணுக்குள் புதைந்தாலும் நிலக்கரியாகவும் பெட்ரோலியமாகவும் நம்மை நாடிவருகின்றன.

Advertisment

இறைவன் நஞ்சுண்டு அமுதளித்தான் என்பர். அதைப்போன்றே மரங்கள் உயிர் வாழினங்களின் கரியமிலக் காற்றைத் தாமுண்டு, உயிர்வளியை வெளியிட்டு உலகைக் காக்கின்றன.

தெய்வீக மரங்களுக்கும் கிரகங்களுக்கும் என்ன தொடர்பு என ஆய்வு செய்வோம்.

உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் தன்னகத்தே வைத்து வழிநடத்துபவர்கள் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், ஒன்பது கிரகங்கள் மற்றும் சாஸ்திரங்களை வழிநடத்தும் தெய்வங்களும்தான். நுட்பங்களை அறிந்து செயல்பட்டால் நன்மைதனை அனுபவிக்கலாம். ஜாதகரீதியாக உருவாகும் பல

ரங்கள் உயிரோடு இருக்கும்போதும் ஆயிரக்கணக்கான பொருட்களை அள்ளித் தருகின்றன. அவை நிலநடுக்கம், புயல் காற்று, பேய் மழை போன்ற இயற்கைச் சீற்றத்தால் மண்ணுக்குள் புதைந்தாலும் நிலக்கரியாகவும் பெட்ரோலியமாகவும் நம்மை நாடிவருகின்றன.

Advertisment

இறைவன் நஞ்சுண்டு அமுதளித்தான் என்பர். அதைப்போன்றே மரங்கள் உயிர் வாழினங்களின் கரியமிலக் காற்றைத் தாமுண்டு, உயிர்வளியை வெளியிட்டு உலகைக் காக்கின்றன.

தெய்வீக மரங்களுக்கும் கிரகங்களுக்கும் என்ன தொடர்பு என ஆய்வு செய்வோம்.

உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் தன்னகத்தே வைத்து வழிநடத்துபவர்கள் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், ஒன்பது கிரகங்கள் மற்றும் சாஸ்திரங்களை வழிநடத்தும் தெய்வங்களும்தான். நுட்பங்களை அறிந்து செயல்பட்டால் நன்மைதனை அனுபவிக்கலாம். ஜாதகரீதியாக உருவாகும் பல ஏற்றத்தாழ்வுகளை, இயற்கை நமக்காகப் படைத்துள்ளவற்றை முறையோடு அணுகி செயல்பட்டால் நிவாரணம் பெறலாம்.

உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனுக்கும் தனியே குணம் உண்டு. நல்லதோ கெட்டதோ- அவைதான் நம்மை வழிநடத்தும். மரங்களையும் செடிகொடிகளையும் சாஸ்திரங்கள்தான் துணைநின்று நிலைத்து வளரச்செய்யும்.

27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள்

அஸ்வினி- எட்டி மரம்.

பரணி- நெல்லி.

கார்த்திகை- அத்தி.

ரோகிணி- நாவல்.

மிருகசிரீடம்- கருங்காலி.

திருவாதிரை- செங்காலி.

புனர்பூசம்- மூங்கில்.

பூசம்- அரசு.

ஆயில்யம்- புன்னை.

மகம்- ஆல்.

பூரம்- பலாசு.

உத்திரம்- இத்தி.

ஹஸ்தம்- அத்தி. சித்திரை- வில்வம்.

சுவாதி- மருதம்.

விசாகம்- கடுக்காய்.

அனுஷம்- மகிழம்

கேட்டை- பராய்.

Advertisment

guru

மூலம்- மாமரம்.

பூராடம்- வஞ்சி.

உத்திராடம்- பலா.

திருவோணம்- எருக்கு.

அவிட்டம்- வன்னி.

சதயம்- கடம்பு.

பூரட்டாதி- தேமா.

உத்திரட்டாதி- வேம்பு.

ரேவதி- இலுப்பை.

தாய் தன் குழந்தைகள்மீது அன்பு செலுத்துவதுபோல், கிரகநாதர்களும் தெய்வீக மரங்களின்மீது அன்பைச் செலுத்துவார்கள். நாமும் நமக்குரிய செடி, கொடி, மரங்கள்மீது பற்று வைத்தால் அவை நிச்சயம் நல்வழிப்படுத்தும்.

கிரகங்கள் மரங்கள்

சூரியன்- ஆலமரம்.

சந்திரன்- வேப்பமரம்.

செவ்வாய்- அத்திமரம்.

புதன்- பூவரசுமரம்.

குரு- மருதமரம்.

சுக்கிரன்- நாவல்மரம்

சனி- வில்வமரம்.

ராகு- மாமரம்.

கேது- இலுப்பை மரம்.

வீடு கட்ட உகந்த மரங்கள்

தேக்கு, கருங்காலி, நூக்கமரம், வேங்கை, மாமரம், வேம்பு, பனங்கழிகள் இவை நீண்டகாலம் இருக்கும்.

ஈச்ச மரம்- சிவாம்சம்.

தென்னை மரம்- விஷ்ணு அம்சம்.

பனை மரம்- சக்தி அம்சம்.

ஈச்சமரம் வீடுகட்ட பெரிதும் பயன்படாவிட்டாலும், "பேரீச்சம்பழம்' பெரிதும் பயன்படுகிறது.

மரத்திலும் ஆண் மரம், பெண் மரம், அலி மரம் என்று மூன்று வகையாகப் பிரித்து வைத்துள்ளனர். ஒவ்வொரு பணிக்குப் பயன்படுகின்றன.

ஆண் மரம்: தூண்போல் நீண்டு ஒழுங்காக இருக்கும்.

இவை பந்தக்கால்களுக்கும் தூண்களுக்கும் பயன்படும்.

பெண் மரம்: அடி பெருத்து, நுனி சிறுத்திருக்கும். இது உத்திரத்திற்கும், வண்டிச்சக்கர வளையத்திற்கும், பொதிகைக்கும் பயன்படும்.

அலி மரம்: அடி முதல் நுனி வரை சிறுத்து, தலை பருத்திருக்கும்.

பண்டைய செய்தி

ஆலயங்களுக்கு மாமரமும், அந்தணருக்கு வேப்ப மரமும், க்ஷத்திரியர்களுக்கு தேக்கு மரமும், வைசியர்களுக்கு இலுப்பை மரமும், வேளாளர்களுக்கு வேங்கை மரமும் என அக்காலத்தில் முக்கியம் கொடுத்துள்ளனர்.

காட்டு மரங்களில் தேவதைகள் உறைந்திருக்கும்.

அதனை வேரோடு சாய்த்து, பலகைகள், தண்டுகள் உருவாக்கி வீடுகளில் வைத்துக்கொள்வதால், தேவதைகளின் அச்சுறுத்தலுக்கு உட்பட நேரிடும்.

ஆகவே, தச்சுக்கழித்தல் என்ற பூஜை விஸ்வகர்மாவால் நிறைவேற்றப்பட்டு, அக்காலத்தில் மரங்களுக்கு மரியாதை செலுத்துவது உண்டு.

சில மரங்கள் உபயோகத்திற்கு உதவாதவை

காற்றில் அகப்பட்டு விழுந்த மரம், ஆலயத்தில் முளைத்து வளர்ந்த மரம், மயானத்தில் தோன்றி வளர்த்த மரம் ஆகியவற்றை வீடு கட்டப்பயன்படுத்தக்கூடாது. செல்வம் குறையும்; ஆயுள் க்ஷீ ணம டையும்; வம்சம் வளர்ச்சியடையாதாம்.

ஆலமரம், அத்திமரம், இச்சி மரம், அரச மரம், இலவம்பஞ்சு மரம், பூவரசு மரம், இலந்தை மரம், பீலி மரம், மகிழ மரம், விளா மரம் போன்றவற்றைப் பயன்படுத்தினால் செல்வம், செல்வாக்கை அடியோடு விரட்டிவிடும்.

செல்: 93801 73464

தொடச்சி அடுத்த இதழில்...

bala280918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe