இன்றைக்கு பூர்வீக சொத்துக்கு அடிதடி, போலீஸ் கேஸ், நீதிமன்ற வழக்கு போன்றவை ஏற்படுகிறது. நீதிமன்றம் செல்வதால் ஏற்படும் நன்மையைவிட விட்டுக்கொடுத்துச் செல்வதால் அதிக நன்மை ஏற்படும். முதலில் நீங்கள் பூர்வீகச் சொத்துக்குரியவராக இருக்கிறீர்களா என்று ஜாதகத்தைப் பார்த்துக்கொள்ளவும். அதற்கு மாறாகச் செயல்படுவதால் நம்முடைய உழைப்பும் வீணாகி, நேரமும் பொருளாதாரமும் விரயமாகிறது. தந்தையின் சுயசம்பாத்தியத்தை எது வேண்டுமானாலும் செய்யலாம். பாட்டன்வழி சொத்துகள் மட்டுமே பூர்வீக சொத்தாகக் கருதப்படும்.
உதாரணமாக

உதாரணமாக, மேஷ லக்னத்தில் பிறந்தவருக்கு லக்னத்திற்கு நான்காமிடத்து அதிபதியான சந்திரனும், ஐந்தாமிடத்து அதிபதியான சூரியனும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் பூர்வீக சொத்துகள் வந்துசேரும். அவர்கள் தெய்வபலம் மிக்கவர்களாக விளங்குவர்.
அரசுவழி தொடர்புகளால் ஆதாயம் கிட்டும். நான்கு தலைமுறைகளானாலும், மேற்கண்டபடி ஜாதகம் அமைந்திருக்குமேயானால் வம்சாவழி சொத்துகளையும் வழக்குபோட்டு எடுத்துவிடுவார்.
சிலர் சொந்த ஊரில் இருக்கலாமா அல்லது வெளியூரில் வசிக்கலாமா என்று குழம்பிப் போவார்கள். கேள்விக்கு விடை அவரவர் ஜாதக அமைப்பைப் பொருத்தே அமையும். ஒருசிலருக்கு வெளிநாட்டில் தங்கிவிடும் வாய்ப்பு அமையும். சிலருக்கு உள்ளூரிலேயே வாழும் வாய்ப்பு அமையும். லக்னத்திற்கு 5-ஆம் வீட்டில் குரு நின்றால், அந்த ஜாதகர் பூர்வீகத்தில் வாழும் வாய்ப்பில்லாதவர். இருப்பினும் தனுசு, மீன லக்னத்தாருக்கு 5-ல் குரு நின்றால் 9-ஆம் பார்வையாக தன் சொந்த வீட்டைப் பார்க்கும். எனவே அவர்களுக்கு மட்டும் பூர்வீகம் நிலைத்திருக்கும். ஏனைய லக்னங்களுக்கு 5-ஆமிடத்தில் குரு இருந்தால் பூர்வீகம் நிலைக்காது. பூர்வீகம் இருக்கும்; ஆனால் அனுபவிக்க இயலாது. மற்றவர் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். தலைமுறைகள் மாறும் பொழுது வம்சாவழி சொத்து கிடைக்கும்.
நவாம்சத்தில் குரு நீசம்பெற்றிருந்தாலும், சனியுடன்கூடி பகை வீட்டில் இருந்தாலும் அயலூரில் வாழும் நிலை ஏற்படும். லக்னாதிபதி லக்னத்திலிருந்தாலும், லக்னத்தை சொந்த வீட்டில் அமர்ந்த குரு பார்த்தாலும் சொந்த ஊரில் வாழும் வாய்ப்பு அதிகம். பூர்வீகச் சொத்து கிடைக்க வேண்டுமென்றாலும், நாம் எந்த ஊரில் வாழ்ந்தாலும் நிலம்தான் அஸ்திவாரமானது. சொந்த நிலத்தோடும் சொந்த வீட்டோடும் வாழ்ந்திட கீழுள்ள பரிகாரங்களைச் செய்வதன்மூலம் உன்னத வாழ்வு வாழலாம்.
பரிகாரம்-1
நிலத்துக்கு சொந்தக்காரரான காஞ்சி காமாட்சியை நேரில்சென்று வணங்கினால், ஈஸ்வரன் அருள்பெற்ற காமாட்சியின் அருள்பெற்று வீடு, வாசல், மனை விருத்திகளோடு வாழலாம்.
பரிகாரம்-2
உங்கள் ஊர் அருகிலுள்ள பூமி சம்பந்தப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வேண்டியதை அடையலாம். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பூமிநாத ஈஸ்வரர், திருச்செந்தூர் முருகன், வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அம்மன் ஆலயம் போன்ற தலங்களையும் தரிசிக்கலாம்.
செல்: 94871 68174