Advertisment

பூமி தோஷம் போக்கும் சோழிப் பிரசன்னம்! - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/earth-dying-prasanna-astrologer-i-anandi

"வீட்டைக் கட்டிப் பார் கல்யாணத்தைப் பண்ணிப்பார்' என்ற பழமொழிக்கேற்ப, வீடு மனித வாழ்வில் அவசியமான ஒன்று. வீடு, மனை யோகம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். மானிட வாழ்வில் அவசியத் தேவை மற்றும் கனவு சொந்த வீடு, மனை வேண்டும் என்பதே.

Advertisment

ஜாதகருக்கு வாழ்வில் கிடைக்கும் வீடு, வாகன யோகம், பூமி யோகம், கல்வி நிலை, கால்நடை வளர்ப்பு யோகம், தாயின் நிலை ஆகியவற்றை ஒரு ஜாதகத்தின் 4-ஆம் பாவகம் எனும் சுக ஸ்தானம் மூலமே அறியமுடியும்.

அத்துடன் ஜனன ஜாதகத்தில் பூமி காரகரான செவ்வாய் பெறும் வலிமையே வீடு, வாகன யோகத்தைத் தீர்மானம் செய்கிறது.

4-ஆம் பாவகத்துடன் தொடர்புடைய கிரகங்கள் ஏற்படுத்தும் சொந்த வீடு, மனை யோகங்கள் சூரியன்: 35 வயதிற்குப் பின்பே வீடு யோகம் உண்டு. சுய உழைப்பில் உருவான வீடாக இருக்கும்.

சந்திரன்: சுகபோகம் மிகும். ஆனால் அடிக்கடி இடமாற்றம் ஏற்படும்.

செவ்வாய்: இளம்வயதிலேயே வீடு, மனை யோகமுண்டு.

புதன்: கலைநயமிக்க வீடு வாசல் ஏற்படும்.

குரு: ஐம்பது வயதிற்குமேல் வீடு, மனை யோகம் சிறக்கும்.

Advertisment

சுக்கிரன்: இளம்வயதிலேயே ஆடம்பரமான, அழகான வீட்டில் வாழும் பாக்கியம் உண்டு.

சனி: பழைய வீடு, ஆச்சாரக் குறைவுடைய வீட்டில் வசிக்க நேரும்.

ராகு: பிரம்மாண்டமான வீடு, மனை யோகம் உண்டு. ஆனால் அடிக்கடி வீடு மாற்றும் நிலை, வாஸ்துக் குறை இருந்துகொண்டே இருக்கும்.

கேது: பூர்வீக வீடுகளில் வசிக்க இயலாது. வசித்தாலும் இழப்பு ஏற்படும்.

மாந்தி இருந்தால் செல்வச் செழிப்பு மிகுந்த வீடு, மனை ஏற்படும். அது மயானத்திற்கு அருகிலேயே அமையும்.

இனி 4-ஆம் பாவகத்துடன் சேர்க்கை பெறும் பாவகங்கள்மூலம் உருவாகும் வீடு, மனை யோகங்கள் பற்றிப் பார்க்கலாம்.

லக்னாதிபதி மற்றும் 4-ஆம் அதிபதி சேர்க்கை பெற்றால் நிச்சயம் வீடு, மனை யோகம் சித்தியாகும். பூர்வீக வீட்டில் வசிக்கும் வாய்ப்புண்டு. இத்துடன் ஜனன ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் பலம்பெற்றவர்களுக்கு செல்வச் செழிப்பும் ஏற்படும்.

2-ஆம் அதிபதி 4-ல

2-ஆம் அதிபதி 4-ல் இருந்தால் இளம்வயதிலேயே இயற்கையாகவே நல்ல வீடு, மனை யோகம் ஏற்படும். சொந்த முயற்சி மற்றும் தாய்வழியிலும் வீடு, மனை யோகம் ஏற்படும். நிலம், கட்டடம் போன்றவற்றின்மூலம் வருமானம் ஏற்படும்.

3-ஆம் அதிபதி 4-ல் இருந்தால் சொந்த வீடு, மனை அமைவது சிரமம். பூர்வீகச் சொத்து இருப்பினும் உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு இருக்கும். அந்த சொத்து உடன்பிறந்தோரின் கடன் அடைப்பதிலேயே முடிந்துவிடும். பறிபோகும் அல்லது ஜாதகரே விட்டுக்கொடுக்கும் நிலை உருவாகும். களத்திரத்தின்மூலமும் வீடு இழப்பு ஏற்படலாம்.

4-ஆம் அதிபதி 4-ல் இருந்தால், 4-ஆம் அதிபதியின் தசாபுக்திக் காலத்தில் சுயஉழைப்பினால் வீடு ஏற்படும். ஆனால் பெற்றோருக்கு சிறப்பிருக்காது. முன்னோர் வசித்த வீடாக இருந்தால் பெற்றோரின் காலத்திற்குப்பின் வீட்டைவிட்டு வெளியேற அல்லது இழக்கும் சூழ்நிலை வரும்.

4-ஆம் அதிபதி 5-ல் இருந்தால் பூர்வீகச் சொத்து நிச்சயம் உண்டு. ஆதாயமும் உண்டு.

6-ஆம் அதிபதி 4-ல் இணைவு பெற்றால் சொத்து அடமானத்தில் இருக்கும். சொந்த வீட்டில் குடியிருக்க முடியாமை, உடல்நலக்குறைவு, குடும்ப உறுப்பினர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு.

7-ஆம் அதிபதி 4-ல் சேர்க்கை பெற்றால் திருமணத்திற்குப் பிறகு களத்திரத்தின்மூலம் வீடு, மனை அமையும். 7-ஆம் வீட்டுடன் எத்தனை சுபகிரகங்கள் சம்பந்தப்படுகிறதோ அத்தனை வீடு கிடைக்கும்.

அசுப கிரக இணைவு ஏற்பட்டால் சேதம் ஏற்படும். 8-ஆம் அதிபதி 4-ல் சேர்க்கை பெற்றால் சொத்து பின்னம் ஏற்படும். விபத்து, கண்டம், வம்பு, வழக்கு ஏற்படும்.

9-ஆம் அதிபதி 4-ல் தொடர்பு பெற்றால் பூர்வீகச் சொத்து நிச்சயம் உண்டு. ஆனால் அதை ஜாதகரின் உறவினரே பயன்படுத்துவார்கள்.

10-ஆம் அதிபதி 4-ல் சேர்க்கை பெற்றால் சுயஉழைப்பில்- பெற்றோர், களத்திரத்தின் உதவிமூலம் நிச்சயம் வீடு யோகம் உண்டு. வீடு, கடை, மனை வாடகைமூலம் வருவாய் ஏற்படும்.

11-ஆம் அதிபதி 4-ஆம் அதிபதி சேர்க்கை பெற்றால் அதிக சொத்து சேர்க்கை ஏற்படும். தன் சொத்துக்கணக்கு ஜாதகருக்கே தெரியாது.

12-ஆம் அதிபதி, 4-ஆம் அதிபதி சேர்க்கை, சுப வலிமை பெறின் வீடு, மனை யோகம் உண்டு. அசுப வலிமை ஏற்படின் இழப்பு ஏற்படும்.

1, 2, 4, 10-ஆம் அதிபதியுடன் செவ்வாய் வலிமையாகத் தொடர்பு பெறுபவர்கள் ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டிப் பறப்பார்கள். இதில் ராகு தொடர்பு பெறும்போது ஆடம்பர பங்களா, அப்பார்ட்மென்ட் போன்ற ரியல் எஸ்டேட் தொழிலிலும்; செவ்வாய், புதன் தொடர்பு பெறுபவர்கள் காலிமனை விற்பனையிலும் ஈடுபடுவார்கள்.

வக்ர கிரகங்கள், நீச, அஸ்தமன, பகை கிரகங்கள் தொடர்பு, ராகு- கேது, மாந்தி 4-ஆம் பாவத்துடன் தொடர்புபெறும்போது கட்டிய வீடு பாதியில் நின்றுவிடும். சிலருக்கே பெரும் முயற்சிக்குப்பின் கட்டும் யோகம் ஏற்படும்.

4-ஆம் அதிபதி 3, 6, 8, 12-ஆம் அதிபதியுடன் சேர்க்கை பெறுபவர்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வீடு, மனை அமைத்தல் சிறப்பு.

இத்தகைய வீடு, மனை யோகம் சிறப்பாகக் கிடைக்கப்பெற்றாலும் அதை அனுபவிக்கும்போது பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளை சந்திக்கிறோம். அந்த பிரச்சினையை இடதோஷம் அல்லது பூமி தோஷம் எனலாம்.

நாம் பூமி தோஷம் என்று குறிப்பிடுவதை வெளிநாட்டினர் காந்தசக்தி ஓட்டம் என்று கூறுகிறார்கள். இது உலகிலுள்ள அனைத்து பூமி ஆராய்ச்சி நிபுணர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

நிலத்துக்குக் கீழே உள்ள சாதக- பாதக காந்த ஓட்ட சக்தி நிலத்திற்குமேல் கட்டடங்களில் வசிப்பவர்களை பாதிக்கும். நிலமாக இருந்தால் நில உரிமையாளர் விளைச்சலின்மை, நிலத்தடி நீரின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களில் பலர் கூறும் ஒரு கருத்து, "இது எங்களுடைய இரண்டு தலைமுறை வீடு; முன்னோர்களுக்கு சுபிட்சம் தந்த வீடு. அது எனக்கு ஏன் சிறப்பைத் தரவில்லை? முன்னோர்கள் பூமியை அனுபவிக்கும்போது வராத தோஷம் இப்பொழுது எனக்கு மட்டும் ஏன் வந்தது?' என்பது. நியாயமான கேள்வி.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு திசை உண்டு. பூமியின் காந்தசக்தி ஓட்டம் திசைக்கு திசை மாறுபடும். வீடு, மனையை அனுபவிப்பவருக்கு எந்த தசை நடக்கிறதோ அந்த தசை சார்ந்த திசையிலுள்ள கிரகத்தின் காந்த சக்தி அனுப்பும் சாதக, பாதக அம்சங்கள் ஜாதகரை இயக்கும்.

sivan

இப்பொழுது ஒரு ஜாதகருக்கு ராகு தசை நடப்பில் உள்ளது என்றால், வீட்டின் தென்மேற்கு திசையில் இருந்துவரும் காந்த சக்தி ஒட்டம் 90 சதவிகிதம் வேலை செய்யும். இவருடைய தந்தைக்கோ, தாத்தாவிற்கோ அந்த தசை மிகச் சிறிய வயதில் அல்லது மிக வயோதிகத்தில் வந்திருக்கும் அல்லது வந்தே இருக்காது. ஒரு மனிதன் தன் கர்மவினையை முழுமையாக அனுபவிக்கும் காலம் 17 வயதிலிருந்து 60 வயது வரை மட்டுமே.

ரியல் எஸ்டேட் துறையில் கோடிகோடியாக சம்பாதித்து கரை கடந்தவர்கள்கூட சில மனையைத் தேர்வு செய்யும்போது மீளமுடியாத துக்கத்தை சந்திக்கிறார்கள். பத்து பங்களா வாங்கியபோது ஏற்படாத இழப்பு ஒரு வீட்டைப்போய்ப் பார்த்து வந்ததற்கே உருவாகும்.

மிகப்பெரிய ஆலைகளில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அடிக்கடி விபத்து, உற்பத்தி பாதிப்பு, இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

பூமி தோஷம் என்பது நமது குடியிருக்கும் வீடு மற்றும் நமது தோட்டம், பண்ணை நிலம்.

ஆலைகளின் பூமியில் உள்ள குற்றம் மற்றும் குறைகள்.

பூமி தோஷத்தை உறுதி செய்யும் நம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகள்:

தீராத மன உளைச்சல்; தீராத கடன்; உழைப்பிற்கேற்ற ஊதியமின்மை; குடும்ப உறுப்பினர்களிடம் மனக்கசப்பு; பல தலைமுறையாக முன்னேற்றமின்மை; சொந்த பூமியை பல தலைமுûயாகப் பயன்படுத்தவும், விற்கவும் முடியாமை; வாங்கிய நிலத்தில் வீடுகட்ட முடியாமை; வீடு கட்டும்பொழுது தொடர் அசம்பாவிதம்; பாதி கட்டிய நிலையில் வீட்டுவேலை நின்றுவிடுவது; பேய், பிசாசு, பில்லி, சூன்யம் இருப்பது போன்ற உணர்வு; வீட்டில் யாரோ நம்முடன் இருப்பது போன்ற உணர்வு; நீங்காத நோய், தலைமுறையாகத் தொடர் நோயால் அவதி, கலப்பு, காதல் திருமணம், வாஸ்துக் குற்றமுள்ள வீட்டில் குடியிருக்கும் நிலை; பூமியில் நீராதாரம் இன்மை; கட்டிய வீடு தலைமுறையாக அடமானத்திலேயே இருப்பது (குறைந்தது முப்பது வருடம்) போன்றவற்றைச் சொல்லலாம்.

இடதோஷத்தின் வலிமை அதிகமாக இருந்தால் தொடர் விபத்து, துர்மரணங்களை சந்திக்க நேரும். பல இடங்களில் பூமிக்குக்கீழ் மனித, மிருக எலும்புகள்கூட இருக்கும்.

ஒருசில வாடகை வீடுகளில் குடிபுகும்போது அன்றாடத் தேவைக்குக்கூட கஷ்டப்பட்டவர்கள், குடிபுகுந்தபிறகு மனநிம்மதி, தொழில் முன்னேற்றம், வீடு, வாகன யோகம் போன்ற மனமகிழ்வு நிகழ்வுகள் சிறப்பாக இருக்கும்.

ஒருசிலர் குடிபுகும்போது ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவித்து, வீட்டைவிட்டு வெளியேறும்போது உடம்பில் உயிர் மட்டும்தான் இருக்கும். வீட்டை காலிசெய்ய முடியாத நிலைகூட ஏற்படும்.

இட தோஷத்தை ஜனன ஜாதகம் மற்றும் பிரசன்னம்மூலம் கண்டறியலாம். இட தோஷத்தை நிர்ணயம் செய்யும் ஜோதிடரீதியான காரணிகள்:

● 4-ல் வக்ர, நீச, அஸ்தமன, பகை, சூன்ய கிரக அமர்வு, சேர்க்கை.

● 4-க்கு ராகு- கேது, மாந்தி ஆகியவை தொடர்பு.

பூமி தோஷத்தை சரிசெய்ய முடியுமா என்ற கேள்வி பலருக்கு வரும்.

வீட்டு மனையைத் தேர்வு செய்யும்போது சில குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் முடிந்தவரை பூமி தோஷத்தைக் குறைக்க முடியும்.

தொழிற்சாலை அருகில் இல்லாமல் இருக்கவேண்டும். ஆலையிலிருந்து வரும் கதிர்வீச்சு ஆரோக்கியத்தை பாதிக்கும்.

நீர்த்தேக்கம், ஆற்றுப்படுகை, குளம், குட்டைகள் இருந்த இடத்தின் மனையைத் தேர்வுசெய்யக்கூடாது.

கல்லறைக்கு அருகில் இலவச மனையாக இருந்தால்கூட வாங்கக்கூடாது.

முடிந்தவரையில் கோவில் அருகில் இருக்கும் மனையைத் தவிர்த்தல் நலம்.

பெரிய மருத்துவமனைகள் அருகில் இருக்கக்கூடாது.

உயர் அழுத்த மின் வயர்கள் செல்லும் இடத்திலுள்ள மனை ரத்தப் புற்று நோயை உண்டுசெய்யும்.

தெருக்குத்து உள்ள மனையைத் தவிர்த்தல் சிறப்பு.

மனை செவ்வகம், சதுரமாக மட்டுமே இருக்கவேண்டும்.

இதற்கும்மேல் சோழிப் பிரசன்னம்மூலம் பூமியில் எந்த வகையான தாக்கம் உள்ளது என்பதைக் கண்டறிந்து, அதற்குரிய சாந்திப் பூஜை செய்யவேண்டும்.

செல்: 98652 20406

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe