முற்பிறவி சாப தோஷங்களும் தீர்க்கும் பரிகாரங்களும் -ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்

/idhalgal/balajothidam/early-curses-and-resolving-remedies-cutarcanan

பொதுவாக, குலதெய்வங்கள், தங்கள் குலமக்களைப் பாதுகாப்பவர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் குறிப்பிட்ட ஆண் தெய்வங்கள் சிவாம்சம், விஷ்ணு அம்சமா கவும், பெண் தெய்வங்கள் சக்தி அம்சமாகவும் உள்ளன. ஆனால் இதில் வேறுபாடுண்டு. கன்னி தெய்வ வழிபா டென்பது, சிறுமிகள் ஆராதனை தொடர்புடைய வழிபாடாகும்.

குலதெய்வத்தை எல்லைச் சாமிகள், குடும்ப இஷ்ட தெய்வம் என இருபிரிவாகப் பிரிக்கலாம். இவை இரண்டுமே மிக முக்கியம். எல்லைச் சாமிகள் என்பது மதுரை வீரன், முனீஸ்வரன், சுடலைசாமி, கருப்பண்ணசாமி, சங்கலிக்கருப்பு போன்ற தெய்வங்களைக் குறிக்கும். குடும்ப தெய்வமாக திருச் செந்தூர் முருகன், திருப்பதி வேங்கடாசலபதி, மதுரை மீனாட்சி போன்றவை இருக்கும். இந்த இரண்டு வழிபாடுகளும் மிக முக்கியம்.

குலதெய்வம் என்பது தந்தை வழியில் முன்னோர்கள் தொடர்ந்து வழிபட்ட தெய்வ மாகும். வாழையடி வாழை யாகத் தங்கள் குலத்தைக் காத்துவருபவை. ஆயுதம் ஏந்திய தெய்வங்கள், முரட்டு மீசை, அரிவாள், கத்தியை உயர்த் தியபடி ஆவேசமாக உள்ள தெய்வங்கள் போன்றவை குலதெய்வ வழிபாட்டில் வருபவை. ஒவ்வொரு கிராமத் திற்கும் ஒரு ஊர்த் தெய்வம் இருக்கும். அந்த தெய்வத்திற்கு ஒவ்வொரு வருடமும் வழிபாடு செய்யவேண்டும்.

எதுவும் திட்டமிட்டு நடக்காமல் போனாலும்; விடாமுயற்சி செய்தும் எந்த வெற்றியும் கிடைக்காமல் போனாலும், உழைப்பு, திறமை, அறிவு இருந்தும் தோல்வியைச் சந்தித்தாலும் ஜாதகத்தில் குரு, சனி, ராகு, கேது சரியில்லை என பொதுவாகச் சொல்வோம்.

இதுபோன்ற தடை, தாமதம், தள்ளிப்போதல் போன்றவை தொடர்வதற்குக் காரணம் தெய்வக் குற்றமே. சுபநிகழ்ச் சிகள் துவங்குவதற்கு முன்பு குலதெய்வத்தை வணங்கவேண்டும் என்பது மரபு.

ஒருசிலர் குலதெய்வ வழிபாடு தொடர்ந்து செய்வார்கள். ஆனாலும் தடைகள், தாமதம் ஏற்படும். அத்தகையவர்களுக்கு தெய்வ சாபம் இருக்கலாம். இந்த தெய்வ சாபம் என்பது முற்பிறவியின் தொடர்ச்சியாக இருக்கலாம். குலதெய்வ வழிபாடு செய்தும் நிவர்த்தி கிட்டாமலிருப்பதற்கு பெண் சிசுக்கொலை முக்கிய காரணமாகும். பிரம்மா உருவாக்கும் குழந்தைகளை தேவையில்லாமல் கரு

பொதுவாக, குலதெய்வங்கள், தங்கள் குலமக்களைப் பாதுகாப்பவர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் குறிப்பிட்ட ஆண் தெய்வங்கள் சிவாம்சம், விஷ்ணு அம்சமா கவும், பெண் தெய்வங்கள் சக்தி அம்சமாகவும் உள்ளன. ஆனால் இதில் வேறுபாடுண்டு. கன்னி தெய்வ வழிபா டென்பது, சிறுமிகள் ஆராதனை தொடர்புடைய வழிபாடாகும்.

குலதெய்வத்தை எல்லைச் சாமிகள், குடும்ப இஷ்ட தெய்வம் என இருபிரிவாகப் பிரிக்கலாம். இவை இரண்டுமே மிக முக்கியம். எல்லைச் சாமிகள் என்பது மதுரை வீரன், முனீஸ்வரன், சுடலைசாமி, கருப்பண்ணசாமி, சங்கலிக்கருப்பு போன்ற தெய்வங்களைக் குறிக்கும். குடும்ப தெய்வமாக திருச் செந்தூர் முருகன், திருப்பதி வேங்கடாசலபதி, மதுரை மீனாட்சி போன்றவை இருக்கும். இந்த இரண்டு வழிபாடுகளும் மிக முக்கியம்.

குலதெய்வம் என்பது தந்தை வழியில் முன்னோர்கள் தொடர்ந்து வழிபட்ட தெய்வ மாகும். வாழையடி வாழை யாகத் தங்கள் குலத்தைக் காத்துவருபவை. ஆயுதம் ஏந்திய தெய்வங்கள், முரட்டு மீசை, அரிவாள், கத்தியை உயர்த் தியபடி ஆவேசமாக உள்ள தெய்வங்கள் போன்றவை குலதெய்வ வழிபாட்டில் வருபவை. ஒவ்வொரு கிராமத் திற்கும் ஒரு ஊர்த் தெய்வம் இருக்கும். அந்த தெய்வத்திற்கு ஒவ்வொரு வருடமும் வழிபாடு செய்யவேண்டும்.

எதுவும் திட்டமிட்டு நடக்காமல் போனாலும்; விடாமுயற்சி செய்தும் எந்த வெற்றியும் கிடைக்காமல் போனாலும், உழைப்பு, திறமை, அறிவு இருந்தும் தோல்வியைச் சந்தித்தாலும் ஜாதகத்தில் குரு, சனி, ராகு, கேது சரியில்லை என பொதுவாகச் சொல்வோம்.

இதுபோன்ற தடை, தாமதம், தள்ளிப்போதல் போன்றவை தொடர்வதற்குக் காரணம் தெய்வக் குற்றமே. சுபநிகழ்ச் சிகள் துவங்குவதற்கு முன்பு குலதெய்வத்தை வணங்கவேண்டும் என்பது மரபு.

ஒருசிலர் குலதெய்வ வழிபாடு தொடர்ந்து செய்வார்கள். ஆனாலும் தடைகள், தாமதம் ஏற்படும். அத்தகையவர்களுக்கு தெய்வ சாபம் இருக்கலாம். இந்த தெய்வ சாபம் என்பது முற்பிறவியின் தொடர்ச்சியாக இருக்கலாம். குலதெய்வ வழிபாடு செய்தும் நிவர்த்தி கிட்டாமலிருப்பதற்கு பெண் சிசுக்கொலை முக்கிய காரணமாகும். பிரம்மா உருவாக்கும் குழந்தைகளை தேவையில்லாமல் கருக்கலைப்பு செய்வது கடும் தோஷம் மட்டு மல்ல; கடும் தெய்வக்குற்றம், சாபமுமாகும்.

முற்பிறவி சாபம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஜாதகத்தை ஆராயவேண்டும். கேது ஆன்மிக கிரகம்; கர்மப்பலன்கள் தரும் கிரகம். கர்மப்பலன்களை நடை முறைப்படுத்தும் கிரகம் சனி. ஒரு ஜாதகத்தில் சனி, கேது சேர்க்கை அல்லது கேதுவுக்கு 5 அல்லது 7-ல் சனி இருந்தால் தெய்வ சாபம் இருக்கிறதென்று அர்த்தம். இது முற்பிறவி தொடர்பான சாபம் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

இதற்கு பரிகார நிவர்த்தியுண்டு. இனி, ஜோதிடரீதியான சாபங்கள், தெய்வக்குற்றங் களை அறிந்துகொள்ளும் முறையைப் பார்ப்போம்.

மேஷம்

மேஷத்தில் கேது, சனி சேர்க்கை பெற்றிருந் தால் முற்பிறவியில் பங்காளி தொடர்பான சாபம் உள்ளதாகப் பொருள்.

மேஷத்தில் கேது இருந்து, அதற்கு 5-ல்- சிம்மத்தில் சனி இருந்தால், முற்பிறவியில் தந்தை வழி, சித்தப்பா, பெரியப்பா, பாட்டன் வழி சாபம் இருப்பதாகப் பொருள்.

மேஷத்தில் கேது இருந்து, அதற்கு 7-ல்- துலாத்தில் சனி இருந்தால் முற்பிறவியின் பெண் சாபம் தொடர்கிறதென்று பொருள்.

ரிஷபம்

ரிஷபத்தில் கேது, சனி சேர்க்கை இருந் தால், கணவன் மனைவிக்குச் செய்த துரோகம்; பெண்ணாக இருந்தால் கணவனுக்குச் செய்த துரோகத்தால் ஏற்பட்ட சாபம் என்பது பொருள்.

ரிஷபத்தில் கேது இருந்து, அதற்கு 5-ல்- கன்னியில் சனி இருந்தால், தாயார்வழியில் செய்த சாபம் என்று பொருள்.

ரிஷபத்தில் கேது இருந்து, அதற்கு 7-ல்- விருச்சிகத்தில் சனி இருந்தால், முற்பிறவியில் பங்காளிகள், உடன்பிறந்தவர்கள் சாபம் இருப்பதாகப் பொருள்.

மிதுனம்

மிதுனத்தில் கேது, சனி இருந்தால், முற்பிறவியில் நண்பர்கள்வழியில் சாபம் ஏற்பட்டதாகப் பொருள். தொழில், வியாபாரம், கொடுக்கல்- வாங்கல் குற்றம் ஏற்பட்டதாகப் பொருள்.

மிதுனத்தில் கேது இருந்து, அதற்கு 5-ல் - துலாத்தில் சனி இருந்தால், பெண்ணைக் காதலித்து ஏமாற்றிய குற்றம், பொன், பொருள் திருடிய குற்றம். இதனால் சாபம் ஏற்பட்டதாகப் பொருள்.

மிதுனத்தில் கேது இருந்து, அதற்கு 7-ல் - தனுசுவில் சனி இருந்தால், முற்பிறவியில் கோவில் சொத்தை அபகரித்த குற்றம், திருடிய குற்றம்- பிராமண சாபம் இருப்பதாகப் பொருள்.

கடகம்

கடகத்தில் கேது, சனி இருந்தால் முற்பிறவியில் தாயார் சாபம் இருப்பதாக அர்த்தம்.

கடகத்தில் கேது, அதற்கு 5-ல்- விருச்சி கத்தில் சனி இருந்தால், முற்பிறவியில் சகோதர துரோகம்- அதன்வழியில் சாபம் இருப்பதாகப் பொருள்.

கடகத்தில் கேது இருந்து, அதற்கு 7-ல் -மகரத்தில் சனி இருந்தால், முற்பிறவியில் கொலைப் பாதகம், நம்பிக்கை மோசடியால் ஏற்பட்ட சாபம் இருப்பதாகப் பொருள்.

சிம்மம்

சிம்மத்தில் கேது, சனி சேர்க்கைபெற்றால், முற்பிறவியில் பிதுர் சாபம், மனநலம் குன்றியவர்களுடன் உறவு போன்றவற்றால் ஏற்பட்ட சாபமென்பது பொருள்.

சிம்மத்தில் கேது இருந்து, அதற்கு 5-ல்- தனுசுவில் சனி இருந்தால், முற்பிறவியில் பிராமண சாபம், பசுவதை சாபமாக இருக்கும்.

சிம்மத்தில் கேது இருந்து, அதற்கு 7-ல்- கும்பத்தில் சனி இருந்தால் வழிப்பறி, மோசடி, திருட்டு, கொடிய குற்றங்களால் ஏற்பட்ட சாபமென்பது பொருள்.

கன்னி

கன்னியில் கேது, சனி சேர்க்கை இருந்தால், முற்பிறவியில் துரோகம், பண துரோகத்தால் ஏற்பட்ட சாபம் என்பது பொருள்.

கன்னியில் கேது, அதற்கு 5-ல்- மகரத்தில் சனி இருந்தால், முற்பிறவியில் தகாத செயல் களால் ஏற்பட்ட சாபமாக இருக்கும்.

கன்னியில் கேது, அதற்கு 7-ல்- மீனத்தில் சனி இருந்தால், முற்பிறவியில் பிள்ளைகளை கவனிக்காமல் ஏற்பட்ட குற்றம், பணத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பச் செலுத்தாத குற்றம் போன்றவற்றால் ஏற்பட்ட சாபமென்று கொள்ளலாம்.

துலாம்

vv

துலாத்தில் கேது, சனி சேர்க்கை இருந்தால், முற்பிறவியில் காதலித்து ஏமாற்றிய குற்றம், கணவன்- மனைவி இருவரின் நம்பிக்கை மோசடி, துரோகத்தால் செய்த சாபம்.

துலாத்தில் கேது, அதற்கு 5-ல்- கும்பத்தில் சனி இருந்தால், முற்பிறவியில் பதவி, அதிகாரம், செல்வாக்கைப் பயன்படுத்தி அடாவடிச் செயல்கள், வயதானவர்களை ஏமாற்றிப் பெற்ற பெரும்சாபம் இருப்பதாகப் பொருள்.

துலாத்தில் கேது இருந்து, அதற்கு 7-ல் -மேஷத்தில் சனி இருந்தால், முற்பிறவியில் பணமோசடி, நம்பிக்கை துரோகம், பங்காளி சொத்துகளை அபகரித்துக்கொண்டதால் ஏற்பட்ட சாபம்.

விருச்சிகம்

விருச்சிகத்தில் கேது, சனி இருந்தால், முற்பிறவியில் பசுவதை, நிலத்தை அபகரித்தல், அடுத்தவரின் சொத்தை அபகரித் தல் போன்றவற்றால் ஏற்பட்ட சாபம்.

விருச்சிகத்தில் கேது இருந்து, அதற்கு 5-ல்- மீனத்தில் சனி இருந்தால், முற்பிறவியில் வாயில்லா ஜீவன்களைக் கொன்ற குற்றம், நிந்தித்த குற்றம், ஆலயங்களை சேதப்படுத்திய குற்றம், ஆலய சொத்துகளை வஞ்சித்து, உரிய வரிகளை செலுத்தாத குற்றம் போன்றவற்றால் ஏற்பட்ட சாபம்.

விருச்சிகத்தில் கேது இருந்து, அதற்கு 7-ல் ரிஷபத்தில் சனி இருந்தால், முற்பிறவியில் தன்னிடம் வேலைபார்த்த தொழிலாளர்களுக்கு உரிய கூலி, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றியதால் ஏற்பட்ட சாபம், பெண் சாபம் இருப்பதாக அர்த்தம்.

தனுசு

தனுசுவில் கேது, சனி இருந்தால், முற்பிறவியில் கருவில் குழந்தையை அழித்த பாவம், பணமோசடி, குரு துரோகம் போன்றவற்றால் ஏற்பட்ட சாபம்.

தனுசுவில் கேது இருந்து, அதற்கு 5-ல்- மேஷத்தில் சனி இருந்தால், முற்பிறவியில் பங்காளி வகை, சொந்த பந்தம் வகை, கோவில்களில் சொல்லிய முறை தவறுதல், பில்லி, சூன்யம் போன்றவற்றால் ஏற்பட்ட சாபம்.

தனுசுவில் கேது இருந்து, அதற்கு 7-ல்- மிதுனத்தில் சனி இருந்தால், முற்பிறவியில் நண்பர்களுக்கு செய்த துரோகம், தொழில் போட்டியால் மற்றவர்களைக் கஷ்டப்படுத்துதல், உயிர்வதை போன்ற காரணங்களால் ஏற்பட்ட சாபம்.

மகரம்

மகரத்தில் கேது, சனி சேர்க்கை இருந்தால், பஞ்சமகா பாவத்தில் ஒரு பாவமாக இருக்கும். இதனால் ஏற்பட்ட சாபம்.

மகரத்தில் கேது இருந்து, அதற்கு 5-ல்- ரிஷபத்தில் சனி இருந்தால், முற்பிறவியில் பொன், பொருள் திருடிய குற்றம், பெண் சாபம் இருப்பதாகப் பொருள்.

மகரத்தில் கேது இருந்து, அதற்கு 7-ல்- கடகத்தில் சனி இருந்தால், முற்பிறவியில் நீர்நிலைகள், குடிநீர் ஆதாரத்தை சேதப் படுத்துதல், அசுத்தப்படுத்துதல் போன்ற வற்றால் ஏற்பட்ட சாபம்.

கும்பம்

கும்பத்தில் கேது, சனி சேர்க்கை இருந்தால், முற்பிறவியில் கொலை, கொள்ளை, நோயாளி களைத் துன்புறுத்திய குற்றமாக இருக்கும். இதனால் ஏற்பட்ட சாபம்.

கும்பத்தில் கேது இருந்து, அதற்கு 5-ல்- மிதுனத்தில் சனி இருந்தால், முற்பிறவியில் பொருட்களில் கலப்படம் செய்த பாவம், பசுவதை செய்ய பாவமாக இருக்கும். இதனால் ஏற்பட்ட சாபம்.

கும்பத்தில் கேது இருந்து, அதற்கு 7-ல் சிம்மத்தில் சனி இருந்தால், முற்பிறவியில் குரு துரோகம், தாய்- தந்தையை அநாதையாக விடுதல் போன்ற குற்றத்தால் ஏற்பட்ட சாபமாக இருக்கும் என்பது பொருள்.

மீனம்

மீனத்தில் கேது, சனி சேர்க்கை இருந்தால், முற்பிறவியில் தெய்வ நிந்தனை, கோவில் சொத்தை அபகரித்தல், பொன், பொருள் ஏமாற்றிய குற்றமாக இருக்கும். இதனால் உண்டான சாபம்.

மீனத்தில் கேது இருந்து, அதற்கு 5-ல்- கடகத்தில் சனி இருந்தால், தாய் சாபம் உள்ளதாகப் பொருள்.

மீனத்தில் கேது இருந்து, அதற்கு 7-ல்- கன்னியில் சனி இருந்தால், நண்பர்கள் வழியில் செய்த குற்றம்- அதன்வழியில் ஏற்பட்ட சாபம்.

மேற்கண்ட சாபங்கள் அனைத்தும் இப்பிறவியில் ஏற்பட்டதல்ல. முற்பிறவியில் செய்த பாவத்தால் ஏற்பட்ட- இந்த ஜென்மத்தில் ஜாதகத்தில் சனி, கேது ரூபத்தில் அமைந்த தெய்வக் குற்றமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பரிகாரம்

பொதுவாக, சிவன் கோவில்களில் சிவனை வணங்கிவிட்டு அம்பாளை வணங்கவேண்டு மென்பது வழிபாட்டு விதியாகும். ஆனால், மேற்கண்ட சாபம் உள்ளவர்கள் முதலில் அம்பாளை வணங்கி, "முற்பிறவியில் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு அருள்வாயாக' என்று அம்பாளிடம் மனமுருகி சரணாகதியோடு வேண்டி, அதன்பிறகு சிவனை வணங்க வேண்டும். மாத சிவராத்திரியன்று கருவறை யில் தீபமேற்றவேண்டும். சிவனை பிரதானமாக வணங்குபவர்கள் மேற்கண்ட பரிகாரத் தைச் செய்வது சிறப்பு.

பெருமாளை பிரதானமாக வணங்கு பவர்கள் முதலில் தாயாரை வணங்கி, "முற்பிறவியில் செய்த குற்றத்திற்காக மன்னிப்பு அருள்வாயாக' என்று தாயாரிடம் மனமுருகி சரணாகதியோடு வேண்டி, பிறகு பெருமாளை வணங்க வேண்டும். ஏகாதசியன்று அல்லது சனிக்கிழமைகளில் தாயாருக்கு கருவறை தீபமேற்றுவது சிறப்பு.

இதனால் சாபங்களின் வலிமை குறைந்து, தெய்வ குற்றங்கள் நீங்கி, வாழ்க்கையில் முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச்செல்லும்.

செல்: 98403 69513

bala260620
இதையும் படியுங்கள்
Subscribe