சுமார் 65 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, "என்ன விஷயமாகப் பலன் கேட்க வந்தீர்கள்' என்றேன்.
"ஐயா, எனக்கு இரண்டு மகள்கள், ஆண் குழந்தை இல்லை. இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டேன். இதில் எனது மூத்த மகள் வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு, கணவனை விட்டுப் பிரிந்து என்னுடன் வந்து வசித்துவருகின்றாள்.
அவளுக்கு குழந்தைகள் இல்லை. அவளின் வருங்கால வாழ்க்கை எப்படி அமையுமோ என்று கவலையாக உள்ளது. அவளின் எதிர் கால வாழ்க்கை நிலை என்ன? அவளுக்கு அடுத்து ஒரு குடும்ப வாழ்க்கை அமையுமா? நல்ல வாழ்க்கை அமைய அகத்தியரிடம், வழிகேட்டு வந்துள்ளேன்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
இவன் தன் மகளின் எதிர்கால வாழ்க்கை யின் நிலைபற்றி கேட்கின்றான். மகளுக்கு எந்த வயதில் திருமணம் நடந்தது? இப்போது அவளுக்கு என்ன வயது? எவ்வளவு காலம் கணவனுடன் வாழ்ந்தாள் என்று கேள்.
எனது மகளுக்கு 23 வ

எனது மகளுக்கு 23 வயதில் திருமணம் செய்துவைத்தேன். இப்போது அவளுக்கு 33 வயது. திருமணம் முடிந்து மூன்று மாதகாலம் மட்டுமே கணவன் வீட்டில் வசித்தாள்.
அதுவும் முழுமையாக வாழ்வில்லை என்றார். இந்த மகளுக்கு அவளின் பெற்றவர்கள் விருப்பப்படியும், அவளின் விருப்பத்தின் படியும் திருமணம் நடக்கவில்லை. இவளின் தாயார் தனக்கு வயதாகிவிட்டது. நான் இறப்பதற்குள், என் பேத்திக்கு திருமணம் செய்யுங்கள். பேத்தியின் திருமணத்தைப் பார்த்துவிட்டு இறக்கின்றேன் என்று மிகவும் தொல்லை தந்து, வற்புறுத்தினாள். தன் தாயாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று இவனும், மகளுக்கு திருமணம் செய்ய தீர்மானித்து, இவளின் ஜாதகத்தை ஜோதிடர்களிடம் காண்பித்து இப்போது திருமணம் செய்யலாமா என்று பலன் கேட்டான்.
மகளின் ஜாதகத்தைப் பார்த்து ஜோதிடர் கள், "குருபலம் வந்துவிட்டது. நடப்பு தசையும் யோகமான தசை, உடனடியாக திருமணம் செய்யுங்கள்' என்றார்கள். ஜோதிடர்களின் பேச்சைக் கேட்டு, மாப்பிள்ளை தேட ஆரம்பித்தான். இவளுடன் அலுவலகத்தில் பணிபுரிந்த நண்பர் ஒருவர் சொன்ன, ஒரு பையனின் ஜாதகத்தை, ஜோதிடர்களிடம் காண்பித்து, பொருத்தம் பார்த்தான். இரு வருக்கும் பொருத்தம் உள்ளது திருமணம் செய்யலாம் என்று ஜோதிடர் கூறினார். மேலும் இவன், இருவருக்கும் திருமணம் செய்யலாமா? என்று தன் குலதெய்வக் கோவி லுக்குச் சென்று குலதெய்வத்திடம் உத்தரவு கேட்டான். குலதெய்வமும், திருமணம் செய்யலாம் என்று உத்தரவு தந்தது.
இவன் தன் தாயார் விரும்பியபடி, வேதம் கூறி, சாஸ்திர சம்பிரதாயங்கள், எதுவும் மாறா மல், அனைத்தையும் செய்து திருமணம் செய்து வைத்தான். திருமணம் முடிந்த மூன்றுமாத காலத்திற்குள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவனைப் பிரிந்து, பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டாள்.
அதன்பிறகு இவள் கணவனுடன் வாழ வில்லை. நான் இறந்துவிடுவேன், உடனே பேத்தியின் திருமணத்தை நடத்து என்று பிடிவாதம் செய்த பேத்தியின் பாட்டி இவனின் தாயார், அதற்குமேல் ஆறு வருடம் உயிருடன் வாழ்ந்து இறந்தாள்.
இவன் தன் தாய் சொல்லைத் தட்டாமல், மகளுக்கு திருமணம் செய்துவைத்து தாயின் ஆசையை நிறைவேற்றினான். ஆனால் இவன் நம்பிய குலதெய்வமும், ஜோதிடமும், கிரகங்களும், வேத, சாஸ்திர சம்பிரதாய சடங்கு களும் மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத் துத் தரவில்லை. இன்று மகளின் எதிர்கால நிலையென்னவென்று, தெரியாமல் அகத்திய னைத் தேடி வந்துள்ளான். நான் கூறியபடி தான் நடந்ததா? என்று அவனிடம் கேள்.
அகத்தியர் கூறியதைக் கேட்ட அவர், "ஓலையில் கூறியது அனைத்தும் உண்மை தான். என் தாயின் பிடிவாதமும், தினம் அவர் தந்த தொல்லையால்தான், என் மகளுக்கு அவசர, அவசரமாக திருமணம் செய்து வைத்தேன். இனி என் மகளுக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமைய அகத்தியர்தான் வழி காட்ட வேண்டும்'' என்றார்.
இவனைப் பெற்ற தாயின் வம்சத்தில், அவளின் முன்னோர்கள் வாழ்வில், குடும்பத் தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சாபம், இவள் தாய்க்கு தொடர்ந்துவந்து வம்சத் தைப் பாதிக்கின்றது. இவனுடன் பிறந்த மூத்த அக்காள் ஒருவரின் வாழ்க்கையும் இதே போன்று, அவள் கணவனை இறந்து, பாதியில் முடிந்தது. இப்போது அந்த சாபம், இவன் மூத்த மகளின், அவளின் பேத்தியின் வாழ்வை யும் பாதிக்கின்றது. மூத்த அக்காள், மூத்த மகள் என முதல் பெண் குழந்தையைப் பாதிக் கின்றது.
இவன் மகளுக்கு 28 வயதிற்குமேல் திருமணம் செய்துவைத்து இருந்தாள் இந்த வம்ச சாபம் பாதிப்பை தந்திருக்காது. நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்திருக்கும். இன்னும் மூன்று மாதம் சென்று வரச்சொல், அவளுக்கு அடுத்து ஒரு நல்ல கணவனும், நல்ல குடும்ப வாழ்க்கையும் அமைய வழி கூறுகின்றேன். இவளுக்கு கணவனாக அமையப் போகின்றவன் யார்? என்று கூறுகின்றேன்.
எனக் கூறிவிட்டு, ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் கூறியபடி செய்யுங்கள், உங்கள் மகளுக்கு அடுத்து மாப்பிள்ளை கிடைத்து, நல்ல வாழ்க்கை அமையும் என்று கூறி அனுப்பிவைத்தேன்.
ஒருவரின் பிறப்பு, இறப்பு, திருமணம் இவை மூன்றையும் அவரவர் கர்மவினைப் பதிவுகள்தான் தீர்மானிக்கின்றது. குடும்பப் பெரியவர்களோ, பெற்றவர்களோ, தெய்வங் களோ, கிரகங்களோ, ஜோதிடர்களோ தீர்மானிப்பது இல்லை. வீட்டிலுள்ள பெரிய வர்களின் ஆசையை நிறைவேற்றுகின்றேன் என்று கூறி, உங்கள் குழந்தைகளின் திருமணத் தைத் தீர்மானித்து விடாதீர்கள்.
செல்: 99441 13267