ஒவ்வொருவரும் தூங்கும்பொழுது கனவு காண்பார்கள். அதிலும் பகலில் கனவு காண்பது பலிக்காது என்பார்கள். பகல் தூக்கம் கூடாது. அதேநேரத்தில் விடியும் தறுவாயில் காணும் கனவுகள் உடனே பலித்துவிடும். கனவு காண்பதை பதினாறு விதங்களாகப் பிரித்து வைத்துள்ளார்கள் முன்னோர்கள். பின்னிரவு 3.00 மணிக்கு முன்பு காணும் கனவுகள் பலிக்காதவை. அதுபற்றி சிந்திக்க வேண்டாம். இனி கனவுப் பலன்கள் என்னென்ன வகை என்பதைக் காண்போம்.
பின்னிரவு மூன்று மணிக்குமேல் வரும் கனவுகள்
● கனவில் அரசன், யானை, குதிரை, பசு, எருது, தங்கம் ஆகியவற்றைக் கண்டால் உறவினர் வருகை, தனலாபம், புத்திரலாபம் இம்மூன்றில் ஒன்றைப் பெறுவார்கள்.
● கனவில் எருது, யானை, மலை, மரம் ஆகியவற்றின்மீது ஏறினாலும் அல்லது எச்சில், அசுத்தம் ஆகியவை உடல்மீது பட்டாலும் அல்லது ரத்தம், பிணம், சேரத்தகாத பெண் சேர்க்கையைக் கண்டாலும் விசேஷ லாபம், தேக சௌக்கியம், புதிய வஸ்து கிடைத்தல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று நடைபெறும்.
● கனவில் தாழ்ந்த வகுப்பினர், மிலேச்சர் போன்றவர்கள் ஆயுதந்தாங்கி சண்டைக்கு வந்தால் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு உடல்நலம் குன்றும்.
● கனவில் வீட்டை சாணத்தால் மெழுகிக் கோலம்போட்டால் திருடர் பயம் ஏற்படும்.
● கனவில் மடியாக இருக்கும் பிராமணரைக் கண்டால் அக்னியால் பயம் ஏற்படும்.
● கனவில் பூக்களும் பழங்களும் நிறைந்த மரத்தில் ஏறினால் நினைத்த காரியம் கைகூடும்.
● கனவில் நாகம் வலது தோளில் ஏறினால் பொன் அல்லது புத்திர லாபம் கிடைக்கும்.
● கனவில் சுவர்மேல் உட்கார்ந்து சாப்பிட்டாலும், சமுத்திரத்தைத் தாண்டி னாலும் விசேஷ உத்தியோக லாபம்.
● கனவில் பாம்பு அல்லது தேளைக் கண்டால் ஜெயம், பணப் பலன்கள் உண்டாகும்.
● கனவில் தாமரை இலையில் பாயசம் சாப்பிட்டால் ஒரு மாதத்திற்குள் பிரபு ஆவார்.
● கனவில் பறவைகளை வலைபோட்டுப் பிடித்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.
மேலும் புதிய பெண்ணிடம் போகம் உண்டாகும்.
● கனவில் ரத்தம், மதுபானம் அருந்து தல் போன்றவற்றைக் கண்டால், கண்டவர் பிராமணரானால் கல்வி லாபமும், மற்ற இனத்தவரானால் தனலாபமும் உண்டாகும்.
● கனவில் தீபம், அன்னம், குடை, சாமரம், உயிரினங்களைக் கண்டால் காரியம் அனுகூலமாகும்.
● கனவில் மனிதக் குடலை கழுத்தில் சுற்றிக்கொண்டு கிராமத்தின் நடுவில் நின்றால் பல கிராமங்களுக்கு அல்லது தேசத்திற்குத் தலைவனாவார்.
● கனவில் கழுதை, ஒட்டகம், கடா பூட்டிய வண்டியில் ஏறினால் குடும்பத்தில் ஒருவருக்கு மரணம் ஏற்படும்.
● கனவில் தாம்பூலம், சந்தனம், தயிர், முத்துகள், மலர்களைக் கண்டால் தனலாபம் கிடைக்கும்.
இவை தவிர ஏனைய காரணங்கள் காட்டி கனவுகள் வந்தால் பலிக்காது. கனவுகள் வராமலிருக்க- எப்பொதும் நல்லதே நடக்க கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்துகொள்ளவும்.
பரிகாரம்
கனவுகள் வராமலிருக்கவும், நல்ல கனவுகள் வரவும் வணங்கவேண்டிய தெய்வம் பைரவர். ஆஞ்சனேயரையும் மனதில் நினைத்து வணங்கிக் கொண்டால் போதும். மேலும் படுக் கைக்குச் செல்லும்முன்பு கால்களை- குதிங்கால்களும் நன்கு நனையும்படி கழுவிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால் நன்மையே நடக்கும். இது ஒரு அனுபவப் பரிகாரம்.
செல்: 94871 68174