Advertisment

சனியின் வக்ரம் பாதிப்பு தருமா? - அம்சி கோ. விவேகானந்தன்

/idhalgal/balajothidam/does-saturns-curve-affect-it-amsi-go-vivekananda

ற்போது சனிபகவான் கும்பத்திலிருந்து மகர ராசிக்கு வக்ரமாகி 12-7-2022 முதல் 22-10-2022 வரை சஞ்சாரம் செய்கிறார். பொதுவாக பாவ கிரகங்களான சனி, செவ்வாய் வான்வெளியில் வக்ரம்பெற்று சஞ்சாரம் செய்யும் வேளையும், சுப கிரகங்கள் அதிசாரமாக சஞ்சாரம் செய்யும் காலமும், உலகமக்களுக்கு இன்னல்கள் தரும் காலமாக ஜோதிட சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக கொரோனா வைரஸ் தோன்றுவதற்கு முன்பாக குருபகவான் அதிசாரத்தில் மூன்று ராசிகளைக் கடந்திருந்தார். ஒரு வருடத்தில் மூன்று ராசி களை குருபகவான் கடந்தால் ஏழு கோடி பிணங்கள் புவியில் விழும்

ற்போது சனிபகவான் கும்பத்திலிருந்து மகர ராசிக்கு வக்ரமாகி 12-7-2022 முதல் 22-10-2022 வரை சஞ்சாரம் செய்கிறார். பொதுவாக பாவ கிரகங்களான சனி, செவ்வாய் வான்வெளியில் வக்ரம்பெற்று சஞ்சாரம் செய்யும் வேளையும், சுப கிரகங்கள் அதிசாரமாக சஞ்சாரம் செய்யும் காலமும், உலகமக்களுக்கு இன்னல்கள் தரும் காலமாக ஜோதிட சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக கொரோனா வைரஸ் தோன்றுவதற்கு முன்பாக குருபகவான் அதிசாரத்தில் மூன்று ராசிகளைக் கடந்திருந்தார். ஒரு வருடத்தில் மூன்று ராசி களை குருபகவான் கடந்தால் ஏழு கோடி பிணங்கள் புவியில் விழும் என்பது ஜோதிட சாஸ்திரம் சொல்லும் செய்தியாகும். இதனை சபரி பஞ்சாங்க ஆசிரியர் பதிவு செய்திருந்தார்.

Advertisment

தமிழ் ஜோதிட நூல்களில் வீரவ நல்லூர் குமாரசாமி தேசிகர் எழுதிய "குமாரசுவாமியம்' என்னும் நூல், சனிபகவானின் வக்ர பெயர்ச்சி யால் ஏற்படும் இன்னல்கள் குறித்துக் கூறுவது மிக்க கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். அந்த நூலில் "உலகியல் படலம்' என்னும் பகுதியில், "மானிடர் மடிவு- உலக அழிவு' என்னும் தலைப்பில் ஒரு பாடல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பாடல் சொல்லும் செய்தி என்னவென்றால், ஆடி மாதத்தில் உத்திராடத் தில் தென்திசையில் காற்றடித்தாலும், உதய காலத்தில் ரவியை பரிவேடம் என்னும் வளையம் சூழ்ந்தாலும், மகரம், கும்பம், கடகம், மேஷம், மிதுனம், கன்னி, துலாம் ஆகியவற்றில் சனி, செவ்வாய் கூடி வக்ரம் பெற்றாலும், அதுபோன்று சந்திர கிரகணத்தின்போது பரிவேடன் சந்திரனைச் சுற்றித் தோன்றினாலும்- இவையெல்லாம் உலகம் அழிவதற்குமுன்பாகத் தோன்றும் முன்னறிவிப்பென்று இந்தப் பாடல் தெரிவிக்கிறது.

இங்கே நன்றாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, கன்னி ராசி மற்றும் துலாம், மிதுனம், கும்பம், மகரம், மேஷம் ஆகிய ராசிகளில் சனியும், செவ்வாயும் கூடி வக்ரமடையும் காலம் உலகமக்களுக்கு பெரும் துன்பம் தோன்றுமென்றால், தற்போது மகர ராசியில் தனியாக வக்ரம் பெறுகின்ற சனியும் உலகமக்களுக்கு இன்னல் கள் தரக்கூடும் என்பது ஜோதிட சாஸ்திரம் நமக்குச் சொல்லும் செய்தியாகும்.

Advertisment

தற்போது மகர ராசியில் வக்ரமாக சஞ்சரிக்கும் சனிபகவான் மூலமாக உலகில் சிறு போர்கள்மூலம் உயிரிழப்பு, கால்நடைகளுக்கு புதிய நோய்கள், பேரளவில் கால்நடைகளை இழப்பது அல்லது கால்நடைகள்மூலமாக வரும் வியாதிகள், ஏவுகணைத் தாக்குதல் மற்றும் இராணுவ ஆட்சி, அதிபர் ஆட்சி நடைபெறும் நாடுகளில் மக்கள் கிளர்ச்சி, அதன்மூலமாக உயிரிழப்பு, பெரும் வாகன விபத்துகளால் உயிரிழப்பு, குதிரைச் சின்னத்தை அடையாள மாகக் கொண்ட நாடுகளில் புரட்சி, பலவிதமான துன்பங் கள், மக்கள் பேரளவில் உயிரிழத்தல் போன்றவையெல்லாம் நிகழ் வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்நிகழ்வானது மகர ராசியில் நிகழ்வ தால், மகர ராசிக்குரிய நிலப்பரப்பாகிய இந்தியா, பஞ்சாப், சிர்க்கராம், மாசி டோனியா, மேசிகன், இஸ்ரேலியா, திரேஷ் போஸ்னியா, மொரியா, பல்கேரியா, ரொமண்டிபோலா, ஹெல்மெக்ஸிகோ, ஒர்னி தீவுகள், கிக்ஸி, ஆக்ஸ்போர்டு, ம விரடன்பர்க், டொரோண்டோ, மேயன்ஸ் போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் பாதிப்படையலாம் என உணர்ந்து கொள்ளமுடிகிறது.

செல்: 94438 08596

bala220722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe