ரு ஜாதகத்தில் 9-ஆம் பாவகம் எனும் பாக்கிய ஸ்தானú பதில்லையே. 100-க்கு 25 சதவிகிதத்தினரே வெற்றியடைகின்றனர். மற்றவர்களுக்குப் பணவிரயம், ஆரோக்கியக் கேடு மட்டுமே மிஞ்சுகிறது. இதன் வலியும் வேதனையும் குழந்தை இல்லாதவர்களுக்கு மட்டுமே தெரியும். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், பிரபஞ்சம் ஒருவரின் தலைவிதியை (பாக்கிய ஸ்தானத்தில்) எழுதும்போது, அதில் எழுதப்படாத எந்த சம்பவத்தையும் நடத்தவே நடத்தாது. இதையே வேறுவிதமாகச் சொன்னால் வினைப்பதிவில் இருக்கும் சம்பவங்கள் மட்டுமே நடக்கும். வினைப்பதிவுடன் தொடர்பு பெறாத சம்பவங்கள் யாருக்குமே நடக்க வாய்ப்பில்லை.

இது ஒருபுறமிருக்க, குழந்தை பிறந்த வுடன் ஜோதிடரை அணுகி, குழந்தை பிறந்த நேரம் எப்படி இருக்கிறது? பிறந்த குழந் தையின் நேரத்தால் பெற்றோர், தாத்தா- பாட்டிக்கு ஏதேனும் பாதிப்பிருக்கிறதா என்று கேட்கின்றனர். மேலும் சிலர், ஏற்ற- இறக்கம் நிறைந்த வாழ்வில், ஏதேனும் இடர்கள் ஏற்பட்டால் குழந்தைகளால் தான் பாதிப்பா என்பதையறிய ஜோதிடரை அணுகுகிறார்கள்.

இன்னும் ஒருசாரார், தந்தையின் நட்சத் திரத்திலோ தாயின் நட்சத்திரத்திலோ அல்லது வீட்டுப் பெரியவர்களின் நட்சத் திரத்திலோ "குழந்தை பிறந்தால், ஏதேனும் தோஷமாகுமோ என பயப்படுகிறார்கள்.

அத்துடன் பாலாரிஷ்டம் குறித்தும் பல்வேறு கருத்து நிலவுகின்றன. இவர்களெல்லாரும் சுற்றிவளைத்துக் கேட்கவிரும்பும் கேள்வி யாதெனில், குழந்தையின் கர்மா பெற்றவர்களை- பெரியவர்களை பாதிக்குமா' என்பதே. குழந்தையின் கர்மா, பெற்றோரை பாதிக்கிறதா என்பதைத் தெளிவுபடுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

Advertisment

முதலில் கர்மவினை என்றால் என்னவென்பதைக் காண்போம்.

கர்மா என்றால் வினைப்பயன். ஒருவர் செய்த நல்ல தீயசெயல்களின் பிரதிபலன். லக்னத்திற்கு 10-ஆம் இடமான கர்ம ஸ்தா னமே ஜாதகரின் பாவ- புண்ணியங்களைக் குறிக்கும் இடமாகும். காலபுருஷ 10-ஆம் அதிபதியான சனியே கர்மக்காரகன். ஒருவரின் நல்ல- தீய வினைகளைத் தன்னுள் முழுமையாகப் பதிவுசெய்து, தக்கசம யத்தில் சுப- அசுப விளைவுகளை வெளிப் படுத்தி கர்மவினைப்பயனை முழுமையாக அனுபவிக்க வைப்பவர்.

முன்ஜென்மத்தில் ஒருவர் செய்த கர்மா என்னவென்பதை கேதுவை வைத்தும், கர்மாவிற்கு என்ன பலன் என்பதை ராகுவை வைத்தும் அறியமுடியும்.

Advertisment

ஒரு குழந்தையின் பிறப்பு என்பது சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாமிய கர்மா என்ற மூன்று விதமான கர்மவினையின் கூட்டணியே.

இந்த மூன்றும், மூன்றுநிலைகளில் உருவா கிறது.

1. தந்தைவழி கர்மவினை (ராகு- தந்தைவழி).

2. தாய்வழி கர்மவினை (கேது- தாய்வழி).

3. சுய கர்மா.

தந்தை- தாய் என இருவழி முன்னோர்கள் மூலம் கர்மவினை வந்தாலும், தந்தைவழி முன்னோர்கள்மூலம் வரும் கர்மவினைத் தாக்கத்திற்கு வலிமை அதிகம்.

பாலாரிஷ்டம்

ஒருவரின் ஜாதகத்திற்கு பலன் சொல்லும்போது ஆயுள் பற்றிதான் முதலில் கூறவேண்டும் என்றாலும், உண்மையான ஆயுட்காலத்தைக் கூறினால் மன வேதனை அதிகரிக்கும் என்பதால், ஆயுள் கண்டத் தைக்கூறி பயமுறுத்துபவர்கள் (பிரபஞ்ச ரகசியத்தை) இறைவனால் தண்டிக்கப் படுவார்கள் என சப்த மகரிஷகள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு மனிதனின் ஆயுட்காலம் 120 வருடம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. தற்காலத்தில் 75 வயதுவரை வாழ்ந்தாலே பெரிதாக இருக்கிறது. மனிதனின் ஆயுட் காலத்தை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

ddd

12 வயதிற்குள் ஆயுள்- பாலாரிஷ்டம்.

27-33 வயது ஆயுள்- அற்பாயுள்.

50-68 வயது ஆயுள்- மத்திம ஆயுள்.

68 வயதிற்குமேல் வாழ்வது தீர்க்காயுள்.

புத்திர சோகம் உள்ளவர்களுக்கே பாலாரிஷ்ட தோஷமுள்ள குழந்தைகள் பிறக்கும். பாலாரிஷ்டத்தால் சங்கடங்களை சந்திக்கும் பெற்றோர்கள் கீழ்க்காணும் பரிகாரங்களைச் செய்ததால் நல்ல பலன் கிடைக்கும்.

1. குழந்தையின் 12 வயதுவரை, வருடம் ஒருமுறை மகாமிருத்யுஞ்சய ஹோமம் செய்தால் குழந்தையின் ஆயுள், ஆரோக் கியத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

2. ஹோமம் செய்ய வசதியில்லாதவர்கள் அல்லது செய்யமுடியாதவர்கள்

"ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம்

உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீ ய மாம்ருதாத்'’

என்ற மிருத்யுஞ்சய மந்திரத்தை தினமும் 108 முறை பாராயணம் செய்ய வேண்டும் அல்லது ஒலிக்கச்செய்து கேட்கவேண்டும்.

3. ஏழை எளியவர் மற்றும் ஆதரவற்றவர்களின் மருத்துவச் செலவிற்கு உதவவேண்டும்.

தாய்- தந்தை அல்லது தாத்தா- பாட்டியின் நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் குழந்தையின் கர்மா வீட்டுப்பெரியவரைத் தாக்குமா?

பூமியில் ஜனனமான ஒரு உயிருக்கு, முதல் நான்கு வயதுவரை தாய்செய்த கர்மவினைப் பயனும், நான்குமுதல் எட்டு வயதுவரை தந்தைசெய்த கர்மவினைப் பயனும், எட்டு முதல் 12 வயதுவரை குழந்தையின் பூர்வஜென்ம கர்மமும் வேலைசெய்யும். 12 வயதிற்குப் பிறகு தசாபுக்திப் பலன்கள் குழந்தையை இயக்கும். எனவே ஒரு குடும்ப உறுப் பினர்கள் அனைவரின் கர்மாக்களுக்கு ஒன்றோடொன்று தொடர்புடையவையே. பெற்றவர்களால் குழந்தைக்கும், குழந்தை களால் பெற்றோருக்கும் பாதிப்பிருக்கும் வாய்ப்பு மிகமிகக் குறைவு.

குடும்பத்தில் இறந்துவிட்ட பெரிய வர்களின் நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால், இறந்த பெரியவர் வயோதிகம் காரணமாக இறந்திருந்தால் எந்த பாதிப்பும் இருக்காது. மனவருத்தம், துர்மரணம் அல்லது கொடிய நோயால் இறந்திருந்தால் முறையான திதி, தர்ப்பணம் செய்தல், மோட்ச தீபம் இடுதல்மூலம் முழு பாதிப் பையும் நீக்கமுடியும்.

பல குடும்பங்களில் ஒரே நட்சத்திரத்தில் பலர் இருப்பதை நடைமுறையில் காணலாம். மிகக்குறிப்பாக ராகுவின் நட்சத்திரம், கேதுவின் நட்சத்திரத்தில் மட்டுமே குழந்தை பிறக்கும் அல்லது லக்னப் புள்ளி ராகு- கேதுவின்மேல் இருக்கும் அல்லது சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷ அமைப்பிலேயே ஜாதகம் இருக்கும்.

இந்த அமைப்பிருந்து, பரம்பரை பரம்பரை யாகப் பெரும் வளர்ச்சியடைந்த குடும்பத் தினரும் இருக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக வறுமை, கடன், நோய் என முன்னேற்றமே இல்லாத குடும்பங்களும் இருக்கின்றன. பொதுவாக தாயின் நட்சத்திரத்தில் ஆண் குழந்தையும், தந்தையின் நட்சத்திரத்தில் பெண் குழந்தையும் பிறந் தால் சுபப் பலனே மிகும். தந்தையின் நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அல்லது தாயின் நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் தோஷமே.

தந்தை, தாயின் கர்மவினைகளைத் தீர்க்கவே குழந்தைகள் பிறக்கின்றன. பெற்றவர்களின் கர்மாக்களைத்தான் குழந்தைகள் அனுபவிக்கின்றன. பிறந்த குழந்தை தெய்வம்.

பெற்றோரின் கர்மவினைக்கேற்ப குழந்தை களுக்கு சுப- அசுபப் பலன்கள் நடக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. பெற் றோரின் ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி, 5-ல் நின்ற கிரகம், புத்திரக்காரகன் குரு, காலபுருஷ புத்திர ஸ்தானாதிபதிகள் சுபத்தன்மை யுடன் இருந்தால் பயப்படவேண்டிய அவசியமில்லை. குழந்தையின் 12 வயதுவரை முக்கியமான தேவை இருந்தால் மட்டுமே ஜாதகம் பார்க்கவேண்டும். மற்றபடி, அடிக்கடி பல ஜோதிடர்களிடம் ஜாதகம் பார்த்து மன உளைச்சலை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது.

கடுமையான பாதிப்பு இருந்தால் தினமும்-

1. சிவ வழிபாடு செய்யவேண்டும்.

2. பட்சிகள், விலங்குகளுக்கு உணவிட வேண்டும்.

3. உடம்பையும், உயிரையும் வளர்ப்பது உணவு. உங்களின் ஜென்ம நட்சத்திர நாளில், பசித்தவருக்கு அன்னதானம் தொடர்ந்து செய்துவர, பிரச்சினை பனிபோல் விலகும்.

4. சித்தர்கள் ஜீவசமாதி வழிபாடு செய்வது கைமேல் பலன் தரும்.

செல்: 98652 20406