வாழ்க்கை எல்லாருக்கும் ஒரேமாதிரி அமைவதில்லை. நிம்மதியான, சுகபோக வாழ்க்கை வாழவேண்டுமென்றுதான் விருப்பமிருக்கும். ஆனால், காலமும் கிரகங்களும் அப்படி இருக்கவிடுவதில்லை. அவரவர் செய்த பாவ- புண்ணியங்களுக்கேற்ப ஏற்ற- இறக்கங்களுடன் வாழ்க்கை அமைகிறது. அவரவர் நிலைக்கேற்ப சிக்கல்களும் பிரச்சினைகளும் அமைகின்றன.
இன்று பெரிதும் மக்களை அவதிக்குள்ளாக்குவது வம்புகளும், அதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதும்தான். "மகன் சொத்துகளைப் பறித்துக் கொண்டான்' என்று பிள்ளைமீது தாய்- தந்தை வழக்குப் போடுவதும்; சொத்தைப் பிரித்துக்கொடுக்கச் சொல்லி பெற்றவர்கள்மீது பிள்ளை வழக்குப் போடுவதும்;
அண்ணன்- தம்பி, அக்காள்- தங்கை சொத்துக்காகவும், சிலசமயம் வாய்ப்பேச்சு முற்றி அடிதடியில் முடிந்து, அதன்காரணமாக கோர்ட் படியேறுவதும்; கணவன் கொடுமை தாங்காமல் மனைவி விவாகரத்து கேட்பதும்; மனைவிமீது கணவன் விவாகரத்து கேட்டு வழக்குப் போடுவதும், பங்காளிகளுக்குள் பிரச் சினை காரணமாக நீதி மன்றப் படியேறுவதும் என இதுபோன்ற பல்வேறு காரணங்களால் வழக்கு களை சந்திக்க நேரிடு கிறது.
சிலருக்கு வழக்குகள் முடியாமல் பல வருடங்கள் இழுபறியாகி, சொத்துகளை விற்கும் நிலை ஏற்படுவதை யும் பார்க்கமுடிகிறது. பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில் வழக்குகள் எளிதில் முடிவதில்லை என்றே கூறலாம். ஒருபக்கம் சாதகமான தீர்ப்பு வந்தால் அடுத்தவர் "அப்பீல்' செய்வதும், கீழ் கோர்ட் டிலிருந்து உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கைத் தொடர்ந்து நடத்தி, எதிரியை சோர்வடையச் செய்து, சலிக்காமல் நீதிமன்றப் படியேறுபவர்களும் உண்டு. சிலர் தங்கள் வருமா னத்தின் ஒருபங்கை வழக் கறிஞருக்கும், நீதிமன்றச் செலவுகளுக்கும் தனியாக ஒதுக்கும் அவலமும் ஏற்படு வதுண்டு.
இன்று பெரும்பாலும்

இன்று பெரும்பாலும் பிற வழக்குகளைவிட, விவாக ரத்து வழக்குகளையே அதிகமாகப் பார்க்கமுடி கிறது. அதிலும் சுமுகமாகப் பிரிவதும் அரிதாகி வருகிறது.
ஆணோ, பெண்ணோ விவாக ரத்துக்கு சம்மதிக்காமல்- மற்றவர் தொடர்ந்த வழக்கை இழுத்தடிப்பது; விவாகரத்து பெற்ற பின்னும் மறுமணம் செய்யப்போகும் நிலையில், வேண்டுமென்றே தன்னை வற்புறுத்தி சம்மதிக்க வைத்ததாகக்கூறி அடுத்தவரை வழக்குத் தொடுத்து அலைக் கழிப்பதும் அதிகரித்துவருகிறது. இதைக் குறிப்பிடுவதன் காரணம், காரணமில்லாமல் வழக்குத் தொடரப்பட்டு அலைக்கழிப்புக்கு ஆளாகி வேதனைப்படுபவர்கள் இதற்கு விடிவே கிடையாதா என்று மனசோர்வுக்கு ஆளாகிறார்கள்.
எந்த வழக்கை சந்திப்பவர்களா னாலும், காரணமில்லாமல் இழுபறியாக வழக்கு நீடித்து அலைக்கழிக்கப்படுபவர்கள் கவலைப்பட வேண்டாம். நம் முன்னோர்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண ஜோதிடம்மூலம் வழிகாட்டியிருக் கிறார்கள். அவரவர் முன்ஜென்ம பாவ- புண்ணியங்களுக்கேற்பவே இப்பிறவியில் இன்ப- துன்பங்கள் உண்டாகின்றன. வழக்குகளால் வேதனைப்படுவதும் அப்படியே. இதற்கு வழக்குகளின் தன்மைக்கேற்ப சத்ருசங்கட நிவர்த்தி ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், ருண நிவிருத்தி ஹோமம் செய்யலாம். மந்திர உபதேசம் பெற்று, ரட்சை ஏற்கலாம். ருணானுகூல விருத்தி ஹோமம் மற்றும் மந்திர உபதேசம் பெற்று ஜெபித்து வரலாம். காரியசித்தி ஹோமம், மந்திரோபதேசம் மற்றும் எந்திரபூஜை போன்றவற்றால், எத்தகைய இழுபறி வழக்காகவோ பிரச்சினையாகவோ இருந்தாலும் நிவாரணம் பெற்று, வெற்றிபெறமுடியும்.
இனி, வழக்குகளில் ஒருவர் சிக்க நேர்வதற்கும்; வழக்குகளால் சொத்தை இழப்பதற்கும்; வழக்குகளால் வேதனைப் படுவதற்கும் உரிய கிரக அமைப்புகளைக் காண்போம்.
பொதுவாக 6-ஆமிடம் என்னும் ருண, சோக, சத்ருஸ்தானம், 8-ஆமிடம் என்னும் ஆயுள் ஸ்தானம் மற்றும் 12-ஆமிடம் என்னும் விரய ஸ்தானம் ஆகிய இம்மூன்றும் "துர்ஸ்தானங்கள்' என்று ஜோதிடம் கூறுகிறது. இந்த இடங்களின் அதிபதிகளாக வரும் கிரகங்கள் லக்னத் திலிருந்து எண்ணவரும் "கர்மஸ்தானம்' என்னும் பத்தாமிடத்தில் அமரும் நிலையைப் பெற்ற ஜாதகர்- ஜாதகி வம்பு, வழக்குகளை சந்திக்கநேரும்.
லக்னத்துக்கு இரண்டாவது வீட்டை தன ஸ்தானம், வாக்கு ஸ்தானம் மற்றும் குடும்ப ஸ்தானம் என்பார்கள். இந்த வீட்டின் அதிபதியாக வரும் மன்னவனாம் குருவுடனும், சௌம்யனாம் புதனுடனும், அசுர குருவாம் சுக்கிரனுடனும் இணைந்து காணப்பெறும் நிலையினை ஒரு ஜாதகர் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் பொருளாதாரம் சார்ந்த வழக்குகளையோ குடும்பப் பிரச்சினை காரணமாகவோ, வாய்த் தகராறு முற்றி கைகலப்பில் முடிந்து, அதன்காரண மாகவோ வழக்குகளை சந்திக்கும் அவல நிலை ஏற்படும்.
சிலருக்கு மனைவிமூலம் பிரச்சினைகள் ஏற்பட்டு (குறிப்பாக விவாகரத்து விஷயமாகவும் இருக்கலாம்) தீராத வழக்குகளை சந்திக்கும் சூழ்நிலை காணப்படும். இதற்குப் பல கிரக அமைப்புகள் இருந்தாலும் உதாரணத் திற்கு ஒன்றிரண்டைக் கூறுகிறேன். கரும்பாம்பாம் ராகுவும், அனலியாம் சூரியனும் களத்திர பாவம் என்னும் 7-ஆமிடம் ஏறியிருக்கப் பிறந்தவருக்கு பெண்கள் விஷயமாக கோர்ட் படி ஏறி அலைக்கழிக்கப்படும் வகையில் வழக்குகள் ஏற்படும்.
சிலருக்கு ஜனன ஜாதகத்தில் மனோ காரகன் சந்திரனுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருக்க, அவர்களை பாவகிரகங்கள் பார்க்கும் நிலை காணப்படும். இவர்கள் நிலை பரிதாபமானது. இவர்கள் பெரும் செல்வம் சேர்த்தாலும் அதை வழக்குகளில் செலவழிக்கும் நிலை ஏற்படும். இவர்களுக்கு மனக்கவலையும், குழப்பமும் வாட்டும்.
வழக்குகளை சந்திக்கும் கிரக அமைப்பு அந்தந்த கிரகங்களின் தசாபுக்திக் காலங்களில் தன் வேலையைச் செய்யும். தேவையில்லாமல், சம்பந்தமில்லாமல் சிலர் வழக்குகளில் சிக்கிச் சீரழிவதும் அவ்வப்போது நிகழ்வதுண்டு. இதற்கு ஒருவரது லக்னாதிபதி வலுவில்லாமல் இருந்து- அதாவது லக்னத்துக்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தோ அல்லது மேற்படி இடங்களின் அதிபதிகளுடன் சேர்ந்தோ அல்லது பார்க்கப்பெற்றோ அல்லது தங்களின் பகைகிரகங்களின் சம்பந்தம் பெற்றோ காணப்பட்டாலும் அந்த ஜாதகர்- ஜாதகி சம்பந்தமில்லாமல் வழக்குகளில் சிக்கி- அதனால் அவமானம், மனவுளைச்சல், உடல்நல பாதிப்பு போன்றவற்றை சந்திக்கநேரும்.
3-ஆமிடத்தின் அதிபதி பகைகிரகங்களின் வீட்டிலிருப்பது; பகைவர்களால் பார்க்கப்படுவது; பகைகிரகங்களுடன் சேர்ந்திருப்பது போன்ற வகையில் பலமிழந்திருந்தால் உடன்பிறந்தவர்களே விரோதிகளாவார்கள். அவர்களுடன் சொத்து விஷயமாகப் பிரச்சினைகளும், அதனால் தகராறுகளும் ஏற்பட்டு, வழக்குகளை சந்தித்து அவதிக்கு ஆளாக நேரும். இந்த நிலை மூன்றுக்குடைய கிரகத்தின் தசாபுக்திக் காலங்களில் ஏற்படும்.
சிலருக்கு தாயார், தாய்வழி உறவினர்கள், நிலம், வீட்டு வகையான வழக்குகள் ஏற்படுவதுண்டு. இத்தகைய வழக்குகளை ஒருவர் சந்திப்பதற்கு அவரது ஜாதகத்தில் 4-ஆமிடம் என்னும் சுக ஸ்தானத் தின் அதிபதி நலம் கெட்டிருப்பதே காரணம். அவரது தசை நடக்கும் காலங்களில் ஜாதகர் வழக்குகளில் சிக்கி அவதிப்பட நேரும்.
சிலருக்கு அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் போன்றவர்களால் வழக்கு களை எதிர்கொண்டு, அலைக்கழிப் புக்கு ஆளாகும் நிலை ஏற்படுவதுண்டு. இதற்கு கர்ம ஸ்தானாதியான 10-க்குடையவர் பலமிழந்திருப்பதோடு, துர்ஸ்தானங் களான 6, 8, 12 ஆகிய இடங்களில் ஏதாவதொன்றில் இருப்பதைக் காரணமாகக் கூறமுடியும்.
சிலர் வழக்குகளுக்கு பயந்து தலை மறைவாக வெளிநாடுகளுக்கோ, கண்காணாத மறைவான இடங்களுக்கோ செல்லும் நிலை ஏற்படுவதுண்டு. இதன்காரணமாக வழக்கில் எதிரிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வருவதும், தங்கள் சொத்துகளை இழக்கும் பரிதாப நிலையும் ஏற்படுவதுண்டு.
இத்தகைய நிலை ஏற்படுவதற்கு விரயாதிபதி எனப்படும் 12-ஆமிடத்தின் அதிபதி ஜாதகத்தில் பலமிழந்து காணப்படுவதைக் காரணமாகக் கூறலாம்.
சிலர் தம் சொத்தின் ஒருபகுதியை விற்று வழக்கு நடத்தும் சூழ்நிலை ஏற்படுவதையும் பார்க்கமுடிகிறது. பொதுவாக பாக்கிய ஸ்தானம் எனப்படும் 9-ஆம் வீட்டின் அதிபதி மறைவு ஸ்தானங் களான 6, 8, 12-ல் ஏறியிருந்து, பாவிகளின் பார்வையோ, சம்பந்தமோ பெற்றிருந்தாலும் மேற்கூறியபடி தங்கள் சொத்தைக் காப்பாற்ற ஒருபகுதியை விற்று வழக்காடும் நிலை ஏற்படும்.
எந்தச் சூழ்நிலையிலும் மனம் கலங்காமல் துணிவோடு எதிர்கொள்ளும் பண்பு ஒவ்வொருவருக்கும் அவசியம். இதற்கு அவரவர் லக்னாதிபதியின் நிலை நன்றாக அமைந்திருப்பது அவசியம். லக்னாதிபதி கெடாமல்- அதாவது பாவகிரகச் சேர்க்கை, பார்வை பெறாமலிருப்பது; 6, 8, 12 ஆகிய இடங்களில் இல்லாமலிருப்பது அல்லது இந்த வீட்டதிபதிகளின் சம்பந்தம் எவ்வகையிலும் இல்லாமலிருப்பது அவசியம். இத்துடன் லக்னாதிபதி சுபர் சேர்க்கை அல்லது பார்வை அல்லது எவ்வகையிலாவது சுபர் சம்பந்தம் பெற்றிருந்தால் ஜாதகர் எத்தகைய வழக்குகளிலும் சிக்காமல், எந்தச் சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொண்டு வாழ்க்கையை நடத்துவார் என்று ஜோதிடப் பெரியோர் கூறுகின்றனர்.
வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாத வர்களே இருக்கமுடியாது. எதுவாக இருந்தாலும் சரி; மந்திர சாஸ்திரரீதியான ஹோம சாந்திப் பரிகாரங்களைச் செய்வது, உரிய மந்திரோபதேசம் பெற்று ரட்சை ஏற்பது, உரிய தேவதா எந்திரப் பிரதிஷ்டை செய்து முறைப்படி பூஜிப்பது போன்ற வற்றால் நிச்சயமாக நிவாரணம் பெறமுடியும்.
செல்: 95660 27065